சென்ற வாரம் - டைரி குறிப்புகள்
6:09:00 AMசென்ற வாரம் என்ற தலைப்பில் போன மாதம் வாராவாரம் எழுதலாம் என்று ஆரம்பித்தேன். வீடு மாற்றிய காரணத்தால் கொஞ்ச நாள் சரியான 'நெட்' வசதியில்லை. ஆபீஸில் Alt+Tab உதவிஉடன் கஷ்டப்பட்டு ஒரு பதிவை ஒரு வாரம் எழுதினாலும், அதை போஸ்ட் செய்ய முடியவில்லை. மற்ற பதிவுகளைப் படிக்க முடியும்; ஆனால் பின்னூட்டமிடமுடியாது. எனது பதிவுகளையே 'டிராப்ட்' செய்து பின் நண்பர்கள் வீட்டிற்குப் போகும் போதோ, அக்கா வீட்டிற்கு போகும்போதோ போஸ்ட் செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் யார் பதிவிற்கும் நான் பின்னூட்டமிடுவதில்லை. இப்போது பிரச்சனை இல்லை. AIRTEL BROADBAND வந்துவிட்டது. இனி வாரம் இரண்டு சினிமா பதிவுகள், ஒரு 'சென்ற வாரம்', அவ்வபோது ஒரு புத்தக அறிமுகம், ஒரு சிறுகதை, ஒரு தொடர்கதை என்று எழுதாலாமென்று இருக்கிறேன்.
"தொடர்ந்து சினிமா சம்பந்தமான பதிவாகவே எழுதாதே, மற்ற இடங்களையும் கொஞ்சம் கவனி" என்று நண்பர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் நான் என்ன செய்ய முடியும். கதை, கவிதை, கட்டுரை, புத்தகம், டெக்னாலஜி, அரசியல், சமூகம் என்று வேறு எந்த சைடிலும் எனக்கு அனுபவமோ, மிகுந்த விருப்பமோ கிடையாது. நான் நிறைய சினிமா பார்ப்பேன், சினிமா பற்றி நிறைய பேசுவேன், இப்போது சினிமா பற்றி கொஞ்சம் எழுதுகிறேன். அவ்வளவுதான். நமக்கு எது வருகிறதோ அதை மட்டும் சரியாகச் செய்தால் போதும் என்பது என் பாலிசி. கதை, கவிதை, கட்டுரை என்று நானும் முயற்சி செய்து பல்ப் வாங்கியதுதான் மிச்சம். இதுவரை சும்மர் 7,8 சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். அதை ஒரு 20 பேர் இதுவரை படித்திருந்தால் அது பெரிய விஷயம். இன்னும் நிறைய சிறுகதைகள் இருக்கிறது, நேயர் விருப்பம் அறிந்து தொடரலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். கவிதை பற்றி எனது கருத்து எப்போதும் "இருக்கிற கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே" தான். புத்தகங்கள் பற்றி இனி கொஞ்சம் எழுதலாமென்று இருக்கிறேன். நான் எழுதிய முதல் புத்தக விமர்சனம் "சிலுக்கு ஒரு பெண்ணின் கதை". அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. மற்றபடி வழக்கம் போல முழுக்க முழுக்க சினிமா தான். எல்லா சினிமா பதிவர்களும் சொல்வது போலத் தான் நானும் சொல்கிறேன் - "முடிந்த வரை இதுவரை யாரும் எழுதாத படங்களை அறிமுகம் செய்ய முயற்சி செய்கிறேன்.
சரி சென்ற வார விஷயங்களுக்கு வருவோம். வழக்கம் போல படங்களிலிருந்தே ஆரம்பிப்போம்
சென்ற வாரம் நான் பார்த்த படங்கள் மொத்தம் 6
1) கோவா
2) நாணயம்
3) குட்டி
4) Up in the Air
இதில் 'கோவா' திங்கட்கிழமை ஆபீஸிலிருந்து பொய் சொல்லி சீக்கிரமே வந்து நேரம் சரியாகத் தெரியாமல் (பெங்களூர் - மஹேஸ்வரி தியேட்டர்) ஒரு மணி நேரம் முன்னமே தியேட்டருக்குப் போய் கூட்டமே இல்லாததால் முதல் ஆளாக டிக்கெட் வாங்கிப் பார்த்தோம், நானும் நண்பன் சுரேந்தரும். பிரேம்ஜி வரும் இடங்கள் மட்டும் கொஞ்சம் கடுப்படிக்கிறது. கண்கள் இரண்டால் பாடலை இன்னும் எத்தனை இடங்களில் எத்தனைப் படங்களில் பயன்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை. படம் பார்த்த வேரொறு நண்பன் கோவா American Pie போலிருக்கிறது என்றான். சரிதான், ஜாலியாக ரஜினி மகள் காசில் கோவா டூர் போய்விட்டு எஞ்சாய் பண்ணியதை படமாக வெளியிட்டு இருக்கிறார்கள். வெங்கட் பிரபு... இனி கஷ்டம் என்று நினைகிறேன். படம் பார்துவிட்டு விமர்சனம் எழுதத் தோன்றவேயில்லை. காரணம், வர வர பதிவுலகில் விமர்சன வேகம் படு ஸ்பீடாகிக்கொண்டே போகிறது. படம் வெளியான முதல் வாரத்திற்குள் குறைந்தது 100 பேராவது விமர்சனம் எழுதிவிடுகிறார்கள். முதல் ஆளாக படம் பார்த்து விமர்சனம் எழுதினால் என்ன கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை. ஜாஸ்தி ஹிட்ஸ் கிடைக்கும் போல... அந்த வியாபார உக்தி சைடு நான் இன்னும் போகவில்லை.
'நாணயம்' தியேட்டரில் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டு முடியவில்லை. ஒரு வாரத்திலேயே தூக்கிவிட்டார்கள். இங்கு தமிழ் படங்கள் இப்போதெல்லாம் தியேட்டரில் இரண்டு வாரம் ஓடினாலே பெரிய விஷயமாயிருக்கிறது. படம் ரிலீஸான அடுத்த நாளே டிவிடி கிடைக்கிறது. அதிலும் மற்ற மொழிப் படங்களைக் விட தமிழ் பட திருட்டு டிவிடிகள் அதிக அளவில் விற்கப்படுகிறது. படம் பாராட்டவேண்டிய ஒரு நல்ல முயற்சி. கிளைமாக்ஸில் மட்டும் The Bank Job சாயல் தெரிந்தாலும், படம் நன்றாகவே இருக்கிறது. டுவிஸ்ட்டு மேல் டுவிஸ்ட்டு வைத்து அருமையான ஒளிப்பதிவுடன் நிறைவாக இருக்கிறது.
குட்டி படம் பெரிதாக இம்ப்ரஸ் செய்யவில்லை. தனுஷ், அல்லு அர்ஜுன் அளவிற்கு வரவில்லை. "I am Soooo Expressive" டயலாக் தனுஷைவிட அல்லுவிற்கு பக்காவாக பொருந்தியது. 'Jab We Met' பார்க்காதவர்களுக்கு 'கண்டேன் காதலை' பிடிப்பது போல, தெலுங்கு 'ஆர்யா' பார்க்காதவர்களுக்கு குட்டி கண்டிப்பாக பிடிக்கும். தனுஷின் அடுத்தடுத்த படங்களில் ரீமேக்குகள் அதிகமிருக்கிறது. தலைவரின் 'மாப்பிள்ளை' ரீமேக், கன்னட படமொன்றின் ரீமேக் என்று போய்க்கொண்டிறுக்கிறார் தனுஷ்... தமிழ் நாட்டில் கதைப்பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது போல.
Up in the Air படத்தைப் பற்றி ஹாலிவுட் தல பாலா எழுதியிறுக்கிறார். அருமையான படம். ஜார்ஜ் க்ளூனி படம் முழுவதும் ஆண்டிருக்கிறார். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
அசல் - 05 ஆம் தேதி ரிலீஸ். 06 தேதி நான் படம் பார்க்க கிளம்பும் போதே என் வீட்டிற்கு அருகில் உள்ள டிவிடி ரோட்டுக்கடையில் அசல் இருந்தது. ஆனால் 04 ஆம் தேதி மதியமே விமர்சனங்கள் வந்துவிட்டது. யப்பா...சாமீ ஏன் இந்த கொலவெறி... படம் நல்லா இல்ல போகாதீங்கன்னு மக்களை காப்பாற்றும் பொறுப்பை கொஞ்சம் ஹெவியா ஃபீல் பண்ணிடீங்க... ஏறக்குறைய 500 திரையரங்குகளில் ரிலீஸாகிறது அசல். பில்லாவை விட அதிகம். விட்ருங்க..அவிங்க பாவம்... ரிலீஸ் முதல் நாளே விமர்சனம், அதுவும் நெகடிவ் சமாச்சாரங்களைப் பற்றி மட்டுமே விமர்சனமெல்லாம் கொஞ்சம் ஓவர்... பழைய கதையாக இருந்தாலும் படம் பரவாயில்லாமல் தான் இருக்கு. தல செம மேன்லி, ஸ்டைலிஷ்... நாங்கெல்லம் வேட்டைக்காரனுக்கே அசராதவனுக... எங்கள ஒன்னும் பண்ண முடியாது.
இந்த மாதம் 5 ஆம் தேதி அசல் ரிலீஸாகிவிட்டது. அதைத் தவிர 12 ஆம் தேதி தீராத விளையாட்டுப் பிள்ளை,
19 ஆம் தேதி விண்ணைத்தாண்டி வருவாயா, பையா,26 ஆம் தேதி கச்சேரி ஆரம்பம் ரிலீசாகிறது.
தமிழ் சினிமா உலகம் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறது. கூட சீக்கிரம் கலைஞர் டீவியில் வரும்...
சிம்பு - கே.வி ஆனந்தின் 'கோ' படத்திலிருந்து விலகிவிட்டதாகவும், பூபதி பாண்டியன் படத்தில் நடிக்கவிருந்தவர், இப்போது லிங்குசாமியுடன் சேர்கிறாராம். ஒரு பக்கம் கௌதம் மேனன் வேறு புகழ்ந்து தள்ளுகிறார். வாலிபன் போஸ்டர் வேறு வந்துவிட்டது. அதை விட அதி முக்கிய செய்தி, மணிரத்னதின் அடுத்த படத்தில் நடிக்கிறாரம் சிம்பு! என்ன சிம்பு இது நாமெல்லாம் யாரு...என்ன இப்புடி நல்ல பையன்னு கெட்ட பெயர் எடுக்குறீங்க?
சுறா படத்தில் விஜய் சுனாமிக்கு நடுவே படகோட்டி வருவது போல் இன்ட்ரோ வைத்திருக்கிறார்களாம் (அட நெசமாத்தாங்க)
கமல் அடுத்து நடிக்கும் படம் 'யாவரும் கேளிர்', கே.எஸ். ரவிக்குமார் இயக்கம், த்ரிஷா ஜோடி, இசையமைப்பாளரை அறிவித்துவிட்டார்கள் - நம்ம 'குண்டு பாய்ஸ்' தமன்!
சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சிக்கு என்னால் போகமுடியவில்லயென்றாலும், சென்னை நண்பன் முத்துராஜ் உதவியுடன் சில புத்தகங்கள் வாங்க முடிந்தது. வாங்கிய பத்து புத்தகங்களில் முதலில் படித்தது, எஸ்,ராவின் 'அயல் சினிமா'. இன்றைய காலக்கட்டத்திலுள்ள பிரபல இயக்குனர்களைப் பற்றியும் அவர்களது ஸ்டைல், இயக்கிய படங்களைப் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு. Quentin Tarantino, Wong Kar-Wai, Walter Salles, Zhang Yimou, Giuseppe Tornatore, Pedro Almodovar, Alexander Sokurov, Jane Campion, Jean-Pierre Jeunet, Kim Ki-Duk என்று பத்து முக்கிய இயக்குனர்களைப் பற்றிக் கூறுகிறது இந்தப் புத்தகம். நல்ல படைப்பு. என்ன விலை தான் கொஞ்சம் அதிகமாயிருக்கிறது. 75 ரூ... பரவயில்லை.
மீண்டும் அடுத்த வாரம் கண்டிப்பாக 'சென்ற வாரம்' உண்டு
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...