THREE COLORS TRILOGY - BLUE | 1993 | FRANCE

9:11:00 AM

இந்தப் படம் பல நாட்களாக நான் எழுத வேண்டுமென்று ஆரம்பித்து பாதியிலேயே டிராப்டில் தூங்கிக்கொண்டிருந்தது. நல்ல வேளை ஒரு வழியாக இன்று போஸ்ட் செய்துவிட்டேன்.

இயக்குனர் Krzysztof Kieślowski, பிரான்ஸ் நாட்டு தேசியக்கொடியிலிருக்கும் மூவர்ணங்களின் பெயரிலேயே வெளியிட்ட Three Color Trilogy யின் முதல் படம் தான் Blue. படத்தின் தீம் Liberty - விடுதலை. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, தீய சக்திகளிடமிருந்து விடுதலை போன்ற நாம் கேளிவிப்பட்ட விடுதலை சமாச்சாரங்கள் சம்பந்தப்பட்டதல்ல இந்தப் படம். படத்தின் நாயகி ஜூலீ மூலம் இயக்குனர் நமக்கு சொல்ல நினைக்கும் விடுதலை முற்றிலும் வித்யாசமானது. கணவன், குழந்தை இருவரையும் இழந்து தன்னந்தனியாக நிற்கும் ஜூலீக்கு தேவைப்படுவது - உறவுகளிருந்து விடுதலை, உணர்வுகளிலிருந்து விடுதலை, நினைவுகளிலிருந்து விடுதலை. சுற்றி வளைக்காமல் நேரடியாக கதைக்குச் செல்வோம்.

முதல் ஸீனிலேயே ப்ளு பேக்டிராப்பில், பனிப்புகை மூடிய ஒரு நீண்ட சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருக்கிறது. காரை ஓடிச் செல்வது பிரபல இசையமைப்பாளர் Patrice de Courcy. அவரது மனைவி ஜூலீயும் மகளும் உடனிருகின்றனர். கொஞ்ச தூரம் போனதும் கார் ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகிறது. மருத்துவமனையில் கண் விழிக்கும் ஜூலீயிடம் விபத்தில் அவளது கணவன், குழந்தை இருவரும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் ஜூலீக்கு கணவனின் இறுதிச் சடங்குகள் கையடக்க வீடியோ டிஸ்ப்ளேயில் காட்டப்படுகிறது. விரக்தியில் வாழப் பிடிக்காமல் அன்று இரவு தற்கொலைக்கு முயற்சி செய்யகிறாள். அது தோல்வியில் முடிகிறது.

மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் ஜூலீ, தன் கணவன், குழந்தை சம்பந்தமான எல்லாவற்றையும் அப்புறப்படுத்துகிறாள். அவர்களை நினைவு படுத்தும் அனைத்தையும் தூக்கி எறிகிறாள். தன் கணவன் கடைசியாக Council of Europe ற்காக இசையமைத்த The unity of Europe என்னும் இசைத்தொகுப்பையும் அழித்துவிடுகிறாள். கணவனின் நினைப்பிலிருந்து மீளமுடியாமல், தன்னைக் காதலிக்கும் தனது கணவரின் உதவியாளன் ஆலிவருடன் உறவுகொள்கிறாள். என்ன செய்தும் பழைய நினைவிகளிருந்து மீள முடியாததால், வீட்டை பூட்டிவிட்டு யாரிடமும் சொல்லாமல் பாரீஸில் குடியேறுகிறாள்.

பாரீஸிலும் யாருடனும் பேசாமல் தனிமையிலேயே பொழுதைக் கழிக்கிறாள். யாருக்கும் தன்னைத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள். அந்தச் சமயத்தில் ஆலிவர் ஒரு தொலைக்காட்சி நேரலையில், ஜூலீயின் கணவன் மிச்சம் வைத்துவிட்டுப் போன The unity of Europe இசைத்தொகுப்பை தான் முடிக்கப்போவதாகக் பேட்டியளிக்கிறான். உண்மையில் அந்தத் தொகுப்பிற்கு இசையமைத்ததே ஜூலீ தான். மேலும் தன் கணவனைப் பற்றிய ஒரு மிகப்பெரிய உண்மை ஜூலீக்குத் தெரியவருகிறது. நினைவுகள், உறவுகள், உணர்வுகள் என்று ஜூலீ விடுபட நினைக்கும் எதுவும் அவளை விடத் தயாராகயில்லை.

அடுத்தடுத்த சம்பவங்களால் ஏதோ ஒரு வகையில் அவளது பழைய வாழ்க்கை திரும்பிக்கொண்டேயிருக்கிறது. ஜூலீ என்ன செய்தாள், அவளுக்கு விடுதலை கிடைத்ததா என்று மனதை உருக்கும் The unity of Europe இசையுடன் படத்தின் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

படம் முழுக்க சீன் பை சீன் ஜூலீயாக நடித்திருக்கும் Juliette Binoche மட்டும்தான். அசத்தியிறுக்கிறார். விரக்தியான அந்தச் சிரிப்பை மறக்கவே முடியாது. தன்னால் பழைய நினைவுகள் இல்லாமல் வாழ முடியும் என்று கராராகக் கிளம்பி, பின் தோற்கும் ஒவ்வொரு இடத்திலும் அழுகையை மறைக்க நீச்சல் குளத்தில் குளிப்பதும், வீட்டிலிருக்கும் எலிக்குஞ்சுகள் தன் மகளை நினைவுபடுத்த, பக்கத்து வீட்டுக்காரன் பூனையை வாங்கி வீட்டிற்குள் விட்டுவிட்டுப் பின் குமுறுவதும், ஆலிவருடன் உறவுவைத்துக்கொண்டு தான் செய்தது தவறு என்று தனக்குத் தானே தண்டனை கொடுத்துக்கொள்வதும்... படம் முழுவதும் ஜூலீ தான்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. படம் நெடுக ப்ளு டோன் நிறைந்திருக்கிறது. கேமரா கோணங்களும் அற்புதம். இசை. ஒரு காட்சியில், தன் கணவன் இசைக் குறிப்பை ஜூலீ பார்த்துக்கொண்டிருப்பாள். ஜூலீ தன் கைவிரலை அந்தக் குறிப்பின் மீது வைத்தவுடன் ஆரம்பிக்கும் அந்த அதியற்புத இசை அவள் விரல் வழியே அப்படியே தொடர்வது... யப்பா... அன்று தான் என் 1300 ரூ சோனி இயர்போன்ஸ் தன் மதிப்பைச் சரியாகக் காட்டியது. கண்ணைமூடி மெய்மறக்க வைத்த இசை அது.

Three Color Trilogy யின் அடுத்தடுத்த படங்களும் உறவுகள் ஊடே பின்னப்பட்டவையே. முன்பு கேபிள் சங்கரது பதிவில் Three Color Trilogy யின் இரண்டாவது படமான White பற்றிப் படித்ததாக ஞாபகம். தனித்தனியே பல விருதுகளை குவித்திருக்கும் இந்தப்படங்கள் இன்று வரை ப்ரான்ஸ் நாட்டின் முக்கியமான படைப்புகளாகப் போற்றப்படுகிறது.

படத்தின் லிங்க் இதோ


http://rapidshare.com/files/75808096/Trois_Couleurs_Bleu__1993__Upload_by_Lost.part1.rar
http://rapidshare.com/files/75819105/Trois_Couleurs_Bleu__1993__Upload_by_Lost.part2.rar
http://rapidshare.com/files/75986977/Trois_Couleurs_Bleu__1993__Upload_by_Lost.part3.rar
http://rapidshare.com/files/75994275/Trois_Couleurs_Bleu__1993__Upload_by_Lost.part4.rar
http://rapidshare.com/files/76001484/Trois_Couleurs_Bleu__1993__Upload_by_Lost.part5.rar
http://rapidshare.com/files/76009329/Trois_Couleurs_Bleu__1993__Upload_by_Lost.part6.rar
http://rapidshare.com/files/76017609/Trois_Couleurs_Bleu__1993__Upload_by_Lost.part7.றார்

http://rapidshare.com/files/77281170/_38732_Trois_couleurs_Bleu_23.976fps_1CD_English_SubRip_DiVXPlanet.rar

PASS: imajteam

You Might Also Like

3 comments

 1. படத்தை டவுண்லோட் செய்து திறந்தால் கடவுச்சொல் கேட்கின்றது அய்யா. தயவு செய்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். நன்றி.

  ReplyDelete
 2. அருமை

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. @Dinesh: ஸாரி தினேஷ்... பாஸ்வேர்ட் ஆட் பண்ணிட்டேன்...வருகைக்கு நன்றி. அப்புறம் ஆணாளப்பட்ட ஆங்கிலத்தை இப்படி 'தமிழில்' எழுதினாலும் அது தமிழுக்கு பெருமை தான் என்பது என் கருத்து...

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...