KAMELEON | HUNGARY | 2008

11:03:00 AM

பச்சோந்தி - தனக்கு வரும் ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தன் நிறத்தை மாற்றும் சக்தி உடைய ஒரு உயிரினம். இருக்கும் இடத்திற்கு ஏற்றார்போல் தன் நிறத்தை மாற்றிக் கொண்டு தன் மேல் கவனம் விழாமல் தன்னைக் காத்துக்கொள்ளும். அதேபோல் தனக்கு வேண்டிய காரியத்தை சாதித்துக்கொள்ள அந்த இடத்திற்கேற்றார்போல் மாறிக்கொள்பவர்களை பச்சோந்தி என்கிறோம். காரியம் நடக்க என்ன வேண்டுமானாலும் செய்யும், எப்படி வேண்டுமானாலும் நடிக்கும் மனிதர்கள் தான் நாம் சொல்லும் பச்சோந்திகள். ஆனால் உண்மையில் ஆபத்தில் மட்டுமே தன் நிறத்தை மாற்றிக் காட்டும் நிஜ பச்சோந்திகள்.

இந்தப் படமும் ஒரு பச்சோந்தி மனிதனைப் பற்றிதான். நம் 'நான் அவன் இல்லை' டைப் கதை. கேபார் (Gábor) ஒரு ஆபீஸ் க்ளீனர். பெரிய க்ளீனர்கோட்டும், தொப்பியுமாக அவனது அடையாளமே யாருக்கும் தெரியாதபடி நடந்துகொள்பவன். எப்போதும் நைட் சிப்ட் மட்டுமே வரும் இவனை அவன் முதலாளிகள் உட்பட அங்கு வந்து போகும் யாருக்கும் சரியாகத் தெரியாது. ஆனால் அவர்களைப் பற்றி கேபாருக்கு நன்றாகத் தெரியும். அவ்விடத்தில் வேலை செய்பவர்களது குப்பைகள், அவர்கள் வீசியெரியும் வேஸ்ட் பொருட்களை வைத்தே அவர்களைப் பற்றி தெரிந்து கொள்பவன். யாருக்கும் இவனை பற்றித் தெரியாது. ஆனால் இவன் தான் சேகரிக்கும் விஷயங்களை வைத்து தன் வலையை விரிப்பான். பெரும்பாலும் அவனது குறி, தனிமையில் வாடும், மனம் உடைந்திருக்கும், வாழ்க்கை வெறுத்து போயிருக்கும் பெண்கள். அவர்களிடம் அவர்கள் விரும்புவது போல் பேசி மயக்கி, "உனக்காகத் தானே இந்த உயிருள்ளது" என்று பாடி, அசந்த நேரம் மொத்தப் பணத்தையும் லவட்டிக் கொண்டு போய்விடுபவன்.

அவனது ஆறடி உயரமும், கண்களும், வசீகரமான தோற்றமும், மயக்கும் பேச்சும் கண்ணகியையே ஒரு நிமிடம் திரும்பிப்பார்க்க வைக்கும்; மனமுடந்த நிலையிலிருக்கும் பெண்களை என்னென்ன செய்யும்... அவன் யார் என்ன என்ற விபரம் யாருக்குமே தெரியாது. அவனை பற்றிய பொய்யான விபரமே எல்லா இடத்திலுமிருக்கும். அபார அறிவு, நடிப்பு, பேச்சுத் திறமையுடைய கேபாரால் இருக்கும் இடத்திற்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். இவன் சொல்லும் பொய்களை கண்டுபிடிப்பதற்க்குள் இவனது அடையாளமே மாறியிருக்கும். பெண், காதல், வேலை எதுவும் தேவைல்லை. தேவையானது பணம் மட்டும் தான். பணமிருந்தால் மற்றதனைத்தும் பின்வரும் என்று கூறுபவன். பலே ஜகஜாலக் கில்லாடி இந்த கேபார்... அப்படிப்பட்டவன் காதல் வயப்பட்டால்...?

ஒரு சைகேட்ரிஸ்ட் மருத்துமனையில் இரவு வேலைக்குச் சேர்கிறான் கேபார். சைகேட்ரிஸ்டிடம் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இவனக்கு இரையாகும் தகுதியுடையவர்கள். அவர்களை பற்றிய குறிப்புகள், வீடியோக்களைப் பார்த்து தனது புது டார்கெட்டைத் தேந்தெடுக்கிறான் கேபார். அவளது பெயர் ஹன்னா. அவளொரு டான்ஸர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டான்ஸ் ஆட முடியாமல், பிஸினஸ் பக்கம் இழுக்க நினைக்கும் அப்பாவின் வற்புறுத்தலால் மனமுடைந்து சைகேட்ரிஸ்டிடம் வரும் பணக்கார, நடனத்தை மட்டுமே உயிராக நினைக்கும், வேறு எதையுமே பொருட்படுத்தாத பெண். டாக்டர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவளுடன் பழக ஆரம்பிக்கிறான் கேபார்.

அதன் பின் அவனது செயல்கள், ஹன்னாவை மயக்கும் விதம், அத்றகாக அவன் போடும் வேஷங்கள், நடத்தும் நாடகங்கள்... யப்பா சாமீ...அவன் பொய் சொல்கிறான் என்று தெரித்தால் கூட அவனை வெறுக்க வைக்க முடியாத அளவிற்கு இருக்கும். பிரபல ஆர்தோ டாக்டரிடம் ஹன்னாவிற்கு அப்பாய்ன்மெண்ட் வாங்குவதற்கு அவன் நடத்தும் நாடகம், அவன் சொல்லும் பொய்கள்... சூப்பர்ப். அவனது பேச்சில் யாராக இருந்தாலும் மயங்கிப் போவது உறுதி.

எனது உலகத் திரைப்பட விழா அனுபவத்தில் முதல் நாள் பார்த்த படம். தமிழில் ரீமேக்கினால் நம் ஜீவனை விட்டால் படத்திற்கு பொருதமான ஆள் இல்லை. அப்படியே நான் அவன் இல்லை போலிருப்பதாகத் தெரிந்தாலும், இது கொஞ்சம் வித்யாசமான திரைக்கதை தான்.

எங்கு தேடியும் படத்தின் லிங்க் கிடக்கவில்லை. படத்தைப் பற்றிய விவரங்களைக் கொடுக்கிறேன். டாரெண்டோ, ரேபிட்ஷேரோ, எது கிடைத்தாலும் பின்னூட்டமிடவும்...

Kaméleon / Chameleon

Release Year: 2008

Directed by: Krisztina Goda

Country: Hungary

Language: Hungarian

Official Entry of Hungary for Academy Awards 2010, for the Best Foreign Language Category


http://kameleonfilm.hu/

You Might Also Like

6 comments

  1. நானும் தேடி பார்க்கிறேன். நல்ல இருக்கு விமர்சனம். :)

    ReplyDelete
  2. நீங்க ஏன் தமிலிஷ் லிங்க் கொடுக்கக்கூடாது? நல்ல ப்ளாக். . தமிலிஷ் குடுத்தா, நிறைய பேரு பாக்க முடியுமே . . நானு இப்பதான் பார்த்தேன் . .என்னோட ப்ளாக் லிஸ்ட்ல உங்க ப்ளாக் ஏட் பண்ணியாச்சு . .என்னால முடிஞ்சுது . . கண்டிப்பா தமிழிஷ் போடுங்க . .

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ரகுனாதன்...

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி கருந்தேள். நான் உங்க வலைபதிவோட சீக்ரெட் ஃபாலோயர். இதுவரை பின்னூட்டமிட்டதில்லையென்றாலும், அத்தனை பதிவுகளையும் வாசித்திருக்கிறேன்... பார்த்திராத படங்களை தேடிப் பிடித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
    தமிழிஷ் பற்றி நான் யோசிக்கவேயில்லை. கண்டிப்பாக இந்த வாரம் சேர்த்துவிடுகிறன். உங்கள் தளத்தில் என்னையும் இணைத்ததற்கு நன்றி... (கொஞ்ச கொஞ்சமா நானும் ரவுடியாய்ட்டு வரேன்...|:-)

    ReplyDelete
  5. அருமை பிரதீப்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி பட்டாம்பூச்சி ஸார்...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...