THE SPY NEXT DOOR | U.S | 2010

9:01:00 AM

PVR ல் கிரெடிட் கார்ட் மட்டுமே அக்சப்டட் என்கிற ரூலை மாற்றி டெபிட்/நெட்பேங்கிங் மூலம் டிக்கெட் புக்கிங் பண்ணும் வசதி வந்து விட்டதால் என்னை போல் கிரெடிட் கார்ட் இல்லா புத்திசாலிகளுக்கு ஆன்லைன் புக்கிங் சுளூவாகிவிட்டது. ியேட்டரில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். ஸ்கூல் டூர் போல அவர்களை பத்திக்கொண்டு வாத்தியார் பெருமக்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும், பெப்ஸி டோக்கன் கொடுத்துக்கொண்டுமிருந்தனர். நான் ஸ்கூல் படிக்கும் போது முருகன் தியேட்டருக்கு எங்க காசில் 'காட்ஸில்லா' கூட்டி்கொண்டு போனதாக ஞாபகம். இந்த ஊர் குழந்தைகளை PVR ருக்கு பெப்சி/பாப்கார்ன் 'காம்போ' கொடுத்து ஃப்ரீயா கூட்டிக்கொண்டு வருவதைப் பார்க்கும் போது...

சரி விஷயத்திற்கு வருவோம். போன வாரம் 'ஆயிரத்தில் ஒருவன்' இரண்டு முறை அடுத்தடுத்துப் பார்த்ததில், Toy Story 1&2 3D ஒன் வீக் லிமிடட் ரிலீசை மிஸ் பண்ணிவிட்டேன். இந்த வாரமும் ஆயிரத்தில் ஒருவனே போகலாம் என்று நண்பர்கள் சொன்னபோது "இல்ல மச்சி, கொஞ்சம் கேப் விடுவோம். . பத்திப் பேசிப்பேசித் தொண்ட தண்ணி வத்திப்போச்சு. நல்ல படம் டா போய் பாருங்க. யார் பேச்சையும் கேட்காதீங்கனு ரெக்கமண்ட் பண்ணி பண்ணி வாயே சுளுக்கிருச்சு. அடுத்த வாரம் போவோம்" என்று அவர்களை 'ஆப்' செய்துவிட்டு நான் மட்டும் போய் பார்த்த படம் The SPY Next Door.1999 ம் ஆண்டு அர்னால்ட், 2005 ஆம் ஆண்டு வின் டீசல், இப்போது 2010 ல் நம்ம ஜாக்கி. படுபயங்கர கில்லாடி போலீஸ்/ஸ்பய்/சீக்ரட் ஏஜெண்ட் ஏதாவது ஒரு சமயத்தில் மூன்று நான்கு குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் 'பேபி ஸிட்டர்' களாவார்கள். குழந்தைகளுக்கு நம் ஹீரோவை பிடிக்கவே பிடிக்காது. அப்போது வில்லன் குரூப் திடீரென்று அட்டாக் பண்ணும். அதற்குள் ஹீரோ குழந்தைகளுடன் ராசியாகி அவர்கள் உதவியுடன் வில்லங்களை ஜெய்ப்பார்.

இந்தப் படத்திலும் அதே கதைதான். ஜாக்கியின் பழைய படங்களான போலீஸ் ஸ்டோரி, டக்சீடோ போன்ற படங்களிலிருந்து சில கிளிப்பிங்களை முதலில் காட்டுகிறார்கள். சீனாவிலிருந்து அமேரிக்காவிற்கு வந்து வேலை செய்யும் சீக்ரெட் ஸ்பய் ஜாக்கி ன். தன் வேலையிலிருந்து ரிடயர்ட் ஆக நினைக்கும் ஜாக்கி, கடைசியாக உலகத்தில் உள்ள ஒட்டு ொத்த எண்ணெய் வளத்தை காலி செய்யும் பயோ பிளானிலிருக்கும் ஒரு ரஷ்ய நாட்டு பயங்கரவாதியை (அமெரிக்கக்கர்களுக்கு பயங்கரவாதிகள் எப்பவுமே ரஷ்யர்களாகத்தன் இருக்கிறார்கள்) பிடித்துக்கொடுத்து தன் வேலைக்கு ுட் பை சொல்கிறார்.

ஜாக்கியின் அடுத்த வீட்டில் கணவனைப் பிரிந்து மூன்று குழந்தைகளுடன் வசிப்பவள் கில்லியன். ஜாக்கிக்கும் கில்லியனுக்கும் ரொம்ப நாளாக டிராக் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு ஜாக்கியை சுத்தமாகப் பிடிக்கவில்லை. கில்லியனின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று போன் வருகிறது. "இதுதான் குழந்தைகளுடன் பழக சரியான சந்தர்ப்பம். நானே அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன்" என்கிறார் ஜாக்கி. என் குழந்தைகளைச் சமாளிப்பத்து நீ நினைப்பது போல் சாதாரண்மானதல்ல, ரொம்ப சிரமம் என்கிறாள் காதலி."ஹும்ம்...நாங்கெல்லாம் யாரு. இதெல்லாம் சப்ப மேட்டரு" என்று ஜாக்கி சொல்ல, "அப்ப ஓகே. நீயே பாத்துக்கோ. இன்னொரு முக்கியமான விஷயம். ஹாலோவீன் வருது. ஷாப்பிங் பண்ணனும்னு சொல்வாங்க. பாத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டு அவளும் கிளம்பிவிடுகிறாள்.

அதற்குப்பிறகு நடப்பவை எல்லாம் டிப்பிக்கல் ஜாக்கி அதகளங்கள். முதலில் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணருவதும், பின் ஸ்பய் கேட்ஜட்ஸ்களை வரவழைத்து அதன் மூலம் அவர்களை சாமாளிப்பதும் சிரிப்பு வேட்டுகள். கடைசியில் வில்லன் என்ட்ரி, பைட், சுபம்.

"ஹாலோவீன் எனது பேவரிட். அசத்திரலாம்" என்று சொல்லும் ஜாக்கி, அந்தப் பக்கம் போனவுடன், நண்பனுக்கு போன் போட்டு "ஆமா ஹாலோவீனா என்ன?" என்று கேட்பதிலிருந்து ஆரம்பமாகிறது ஜாக்கியின் சேட்டைகள். அந்த 4 வயதுக் குட்டிப் பாப்பா எது செய்தாலும் அழகாக இருக்கிரது. அந்த 8 வயதுப் பையன் பொண்ணுங்களை கவர் பண்ணுவதற்காக படிய தலை வாரி நல்ல பையன் எபெக்ட் கொடுக்க, "கலைந்த தலை, தூக்கிவிட்ட காலர், டக்கின் பண்ணாத சட்டை தான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும். அது தான் பேஸன்" என்று சொல்லும் ஜாக்கியிடம், " பேஸன் பத்தி உனக்குத் தெரியுமா? " என்று அவன் கேட்க, "பேஸன் பத்தி தெரியாது ஆனா பொண்ணுங்க பத்தி தெரியும்" என்று சொல்லும் ஜாக்கி, 14 வயசுப் பொண்ணு குட்டைப்பாவாடை, மினி ஸ்கர்ட் சகிதம் அலய விரும்புவது, ரஷ்ய காமெடி வில்லன், பெல்ட் கத்தி கேட்ஜட் என்று படம் ெம ஜாலியாகப் போகிறது.

ஆனால் என்னவோ ரொம்ப நாள் முன்னாடியே எடுத்து லேட் ரிலீஸ் செய்வது போல் படம் கொஞ்சம் 'பழசாக' தெரிகிறது. ஜாக்கி சான் இருக்கும் போது படம் எப்படியிருந்தால் என்ன? ஜஸ்ட் கோ அண்ட் எஞ்சாய்ய்ய்ய்...

You Might Also Like

8 comments

  1. இந்தப் படம் டாப் 10-ல் இந்த வாரம் இருக்கறதே (பத்தாவது இடம்) ஆச்சரியம் ப்ர்தீப்.

    இந்த வருஷம் பூரா.. தியேட்டரில் பல்ப் வாங்கினதால்.. இந்தப் படத்துக்கு போற ஐடியாவில் இல்லை.

    ReplyDelete
  2. எங்க தலைவர் ஜாக்கி படத்தை முதல் ஷோ பார்ப்வன் நான்... ஆனால் இப்போது நீங்கள் முதலில் பார்த்து விட்டீர்கள்..

    நன்றி விமர்சனத்துக்கு

    அன்புடன்
    ஜாக்கிசேகர்...

    ReplyDelete
  3. நானும் நண்பர்களுடன் பார்த்தேன். நம்ம ஊர் தமிழ் படம் போல் கலகலப்பாக போனது

    ReplyDelete
  4. நல்லா சொல்லியிருக்கீங்க. ஜாக்கிசான் உண்மையாகவே ரிடையர் ஆயிரலாம். அம்புட்டு வயசான மாதிரி தெரிகிறார் இப்பொழுது...:) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. hello... hapi blogging... have a nice day! just visiting here....

    ReplyDelete
  6. பாலா,ஜாக்கி,கோவி.கண்ணன், mayilravanan, Dinesh, மகா, Hapi: வருகைக்கு நன்றி...:)

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...