Butterfly on a Wheel | Canada | 2007

10:52:00 PM

OLD BOY படத்தை பற்றிப் பேசிக்குக்கொண்டிருக்கும் போது, அலுவலக நண்பர்ஒருவர் இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னார். OLD BOY படத்தின் கதை யார், ஏன், எதற்கு என்று தெரியாமல் அடத்து வைப்பது. BUTTERFLY ON A WHEEL (U.S Title: Shattered) படத்தின் கதை யார், ஏன், எதற்கு என்று தெரியாமல் ஓட விடுவது. இவ்வகை சைக்கலாஜிக்கல் த்ரில்லர்/ லாஸ்ட் மினிட் டுவிஸ்ட் படங்களை நான்மிஸ் செய்வதே இல்லை. முடிவு என்ன என்ன என்கிற பிபி-எகிற் உணர்வு எனக்குமிகவும் பிடிக்கும். தமிழிலில் 'அதே கண்கள்' படம் தொடங்கி இது போன்றபடங்கள் நிறைய வந்திருந்தாலும் சலிப்பு தட்டுவதில்லை.

Mike Barker இயக்கத்தில் வெளிவந்த BUTTERFLY ON A WHEEL படத்தின் கதைஇதுதான்:
Neil Randall (Gerard Butler), தான் வேலை செய்யும் அட்வர்டைஸிங் கம்பனியில்கூடிய விரைவில் ப்ரமோஸன் எதிர்பார்க்கும் ஒரு சக்ஸஸ்ஃபுல் ஆசாமி. அவனது மனைவி Abby Randall (Maria Bello). அருமையான வேலை, செக்ஸியான + அன்பான மனைவி, அழகான குழந்தை என்று ஒரு அக்மார்க் அமெரிக்க கனவுவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன் நீல். கம்பெனி மேனேஜர் தன்னுடையகாட்டேஜில் ஒரு வாரம் தங்க நீலை அழைக்க, அந்த சமயத்தில் தன் அக்காவைப்பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று அபியும் கிளம்ப தனியாக இருக்கும்குழந்தைக்கு ‘பேபி ஸிட்டர்' ஒருத்தியை நியமித்து விட்டு கணவனும்மனைவியும் காரில் கிளம்புகின்றனர்.
இங்கிருந்து தான் 'தலைவன்' என்ட்ரியுடன் கதை ஆரம்பமாகிறது. காரில்ஹாயாக' பேசிக்கொண்டே போகும் போது பின்ஸீட்டிலிருந்து தூப்பாக்கியோடுஎழுந்து உட்காருகிறார் நம்ம Pierce Brosnan. பிராஸ்னனை யாரென்றேதெரியவில்லை நீலிற்கு. "உன் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நீநியமித்திருக்கும் வேலைக்காரி என் ஆள். நான் சொல்வதை நீகேட்கவில்லையென்றால்… ஸிம்பில், குழந்தையைக் கொன்னுடுவேன்" என்றுகூறி நீல் வீட்டிற்குப் போன் போட்டுத் தர, "இது ஒரு கேம் டா செல்லம். பயப்படாத, அந்த ஆன்ட்டி என்ன சொன்னாலும் கேளு" என்று குழந்தையிடம்கூறிவிட்டு கதறி அழுகிறாள் அம்மா அபி. என்ன வேண்டுமென்று நீல் கேட்கபணம்" என்கிறார் பிராஸ்னன். "இப்போ உங்கிட்ட எவ்வளவு பணமிருக்கு?" என்று கேட்க "ஒரு 80$, 90 $ இருக்கும்" என்கிறான் நீல். "இல்ல உங்கிட்ட இப்போ'...$'இருக்கு. சரியா?" என்று பிராஸ்னன் கேட்க முதல் அதிர்ச்சி நீலிற்கு. அந்த'...$' பணம், மிகச்சரியாக அவனது பேங்க் பேலன்ஸ்! இத்தனை வருட சம்பாத்தியம், சேமிப்பு மொத்தத்தையும் பேங்கிலிருந்து ஒரு பெட்டியில் போட்டு, அதைபிராஸ்னனிடன் நீல் கொடுத்தால், அசால்ட்டாக அத்தனை பணத்தையும் (நீல், அபி வாலட்டையும் சேர்த்து) கண்முன்னேயே எரித்து ஒரு பாலத்திலிருந்துதூக்கி எரிந்து விடுகிறார் தலைவர். "ஆஹா...இவன் சைக்கு டா" என்று நீலிற்கும்நமக்கும் பிபி எகிற ஆரம்பிக்கும் இடம் இது. அதற்கடுத்த 24 மணி நேரம், பிராஸ்னனால் நீலிற்கு நடப்பவையெல்லாம் ஒரு சைக்கோபேத்தின் டார்ச்சர்டச்சுகள்.
நீலிற்கு தொழிற்முறையில் பழக்கமான ஒரு மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில்வாயில் வந்த டிஷ்களை எல்லாம் ஆர்டர் செய்யும் பிராஸ்னன், "இன்னும் 15 நிமிடத்தில் 300$ சம்பாதிச்சு வந்து இந்த பில்லப் ‘பே’ பண்ணிரு" என்றுகட்டளையிட, கணவனும் மனைவியும் வெளியே தெரிந்தவர் யாருமே இல்லாதஅந்த இடத்தில் சிலரிடம் பிச்சைக்காரர்களைப் போல் அசிங்கப்பட்டு கடைசியாகசெயின், மோதிரத்தை எல்லாம் அடகு வைத்து 300$ பணம்கொண்டுவருகின்றனர். "இப்போதான் உன் வீட்டுக்குப் பேசினேன். உன்பொண்ணு நல்லா தான் இருக்கா. ம் ம் ம்...சரி, எனக்கு ஒரு பார்சல் டெலிவர்பண்ணனும். யார் செய்யப்போறா...? அபி மேடம் நீங்களே போய் கைப்படடெலிவர் பண்ணீடுங்க" என்று ஒரு பார்சலைக் கொடுக்கிறான் Tom Ryan. பிராஸ்னனின் பெயர் இப்போது தான் நமக்கும், நீலிற்கும் தெரிய வருகிறது.
20 நிமிடத்தில் டெலிவெர் செய்ய வேண்டும் என்று டாம் சொல்லி அபிகொண்டுபோகும் கவரில் இருப்பது நீலின் தொழில் ஜாதகம். அது வெளியேதெரிந்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. வேலை போய் வீட்டில் உட்கார்ந்துவாழ்க்கயை எஞ்சாய் பண்ணலாம். அமெரிக்காவில் வேலையில்லாமல் ஒரேஒரு நாள் இருந்து பார்த்தால் தெரியும் அந்த எஞ்சாய்மெண்ட். விஷயம் அறிந்துபீதியில் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகும் நீலை மேலும் வெறுப்பேற்றஅபி அந்த பார்ஸலை டெலிவர் செய்யும் காட்சியை எதிர் பில்டிங் மாடியிலிருந்துவேடிக்கை பார்க்க வைக்கிறான் டாம். இதுவரை சேர்த்து வைத்த பணத்தையும்இழந்து இருக்கும் நல்ல வேலையையும் இழந்து ரோட்டில் நிற்கும் நீலிடம்இன்னொரு சிறிய பார்சலைக் கொடுக்கும் டாம், அதை டெலிவர் செய்யச்சொல்கிறான்.
அதை வாங்கிக்கொண்டு செல்வது போல் நேராக போலீஸிற்குப் போக டாம்விரும்ப, அபியோ முதலில் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்றுஅவனைத் தடுத்து டாம் போன் பேசும் நம்பரை எப்படியோ டிரேஸ் செய்து, அதன்படி ஒரு ஹோட்டல் அறைக்குள் சென்றால், அங்கு டாம் நிற்கிறான். "பார்சல் டெலிவர் பண்ணியாச்சா?" என்று டாம் கேட்க, நீல் டாமைத் தாக்க டாம்திருப்பித் தாக்கி, "உனக்கு என் மேல் பயம் போய்விட்டது" என்று கூறி அபியைஅந்த இடத்திலேயே உடைகளையச் சொல்கிறான். உடை களையும் அபி க்குவேறு ஒரு சிறிய டிரஸைக் கொடுத்து கணவன் கண்முன்னேயே கட்டிப்பிடித்துத்தழுவி, இன்னும் "6:30 மணிக்குள் அந்த இடத்திற்கு வந்துவிடு" என்று டாம்சொல்ல, எந்த இடம் என்று நீல் கேட்க "எல்லாம் உனக்குத் தெரிந்த இடம் தான்" என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான்.
போலீஸிற்குப் போகும் டாம், தன்னை ஒருவன் காலையிலிருந்து குழந்தையைகடத்தி வைத்திருப்பதாக மிரட்டுவதாகவும், இப்போது தன் மனைவியையும்கடத்திக்கொண்டு போய்விட்டதாகவும் கூற, "உன் மனைவி பெயர் அபியா?" என்று போலீஸ் கேட்க, "ஆமாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்கஉங்க மனைவி கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி இங்க வந்திருந்தாங்க. கூடஅவரோட காதலரும் இருந்தாங்க. உங்க கூட வாழ அவங்களுக்குவிருப்பமில்லைனு சொன்னதுக்குப் பிறகும் ஏன் இப்படி பொய்யா கம்ப்ளைண்ட்பண்ணிட்டு வர்றீங்க? உங்க மனைவி சொன்னது போல் உங்காளுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு" என்று சொல்கிறார். வாழ்க்கையே வெறுத்து, ரோட்டில் அழுதுகொண்டு நிற்கும் நீலிற்கு போன் செய்கிறாள் அபி. "என்ன மன்னிச்சிடுங்க. குழந்தையை கொன்னுடுவென்னு மிரட்டியே என்னை போலீஸிடம் அப்படிசொல்ல வைத்துவிட்டான் டாம். சீக்கிரம் அவன் சொன்ன இடத்திற்கு வந்துஎன்னை கூட்டிட்டுப்போங்க" என்கிறாள். அடித்து பிடித்து அவன் சொன்னவார்த்தைகளிலிருந்து அந்த இடம் 'கிளாக் டவர்' என்பதைக் கண்டுபிடித்து அங்குசென்றால், "இதுவரைக்கும் எல்லாத்தையும் செஞ்ச நீ, கடைசியாக ஒன்றைச்செய்ய வேண்டும்" என்கிறான்.
என்ன என்பது போல் கணவனும் மனைவியும் பார்க்க, காரை ஒரு தனிமையானவீட்டின் முன் நிறுத்தி " பெரிசா ஒன்னும் இல்ல. உள்ள தனியா ஒருத்தங்கஇருப்பாங்க. போய் அவங்கள கொன்னுட்டு வரணும். அவ்வளவுதான்...ம் சீக்கிரம்போங்க நீல்" என்று நீல் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுக்கிறான் டாம்.
1:30 மணிநேரம் ஓடும் இந்தப்படத்தின் 1:15 மணிநேரக் கதையைச்சொல்லிவிட்டேன். கடைசி 15 நிமிடம் தான் முக்கியம். அதை சொல்லவேமாட்டேன். படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். "Who breaks a Butterfly upon a Wheel" என்பது அலெக்சாண்டர் போப் சொன்ன வரிகள். அதற்கு "சின்ன அல்லதுஒன்றுமே இல்லாத விஷயத்தின்மேல் யார் அதிக கவனம்செலுத்தப்போகிறார்கள்" என்று அர்த்தம். அப்படி என்ன கோபம் டாமிற்கு? படத்தைப் பாருங்கள்.
24 மணிநேரத்திற்குள் ஒருவனது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும், யாரென்றே தெரியாத இன்னொருவனுக்கு அதிலிருந்து கிடைப்பது என்ன?

தன் குழந்தையைக் காப்பாற்ற யாரென்றே தெரியாத இன்னொருவரைக் கொல்லவேண்டும் என்கிற கட்டதில் நீல் எடுக்கும் முடிவு என்ன?

படம் முழுவதும் டாம், நீல், அபி மட்டும் தான். சரியாக 24 மணிநேரத்தில் நடக்கும்கதை. பிலாஷ்பேக், இன்ட்ரோடக்ஷன், முன்கதைச்சுருக்கம் எதுவும் கிடையாது. கண்டிப்பாக எவரும் யூகிக்க முடியாத அருமையான படமிது.

Butterfly on a Wheel - Dont Miss It !

You Might Also Like

3 comments

  1. பார்த்துடுவோம் சிங்கத்தை உசுப்பி விட்டுட்டியே???இந்த படத்தை எங்க வாங்க போறேன்னு தேரியலையே...

    ReplyDelete
  2. இந்த படத்த்டை ஷாட்டர்ட் என்னும் பெயரில் இங்கு துபாயில் ரிலீஸ் செய்திருந்தனர்,பட்லரும் பியர்ஸ் ப்ராஸ்னனும் நன்றாக நடித்திருப்பார்கள்

    ReplyDelete
  3. @ஜாக்கி சேகர்: டாரண்ட் தான் ஸார் ஒரே வழி...:)
    கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்: எங்க தல எப்பவுமே ஸ்டைலிஷ் தான ஸார்்...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...