TRIPLE 9 (2016)

6:52:00 AM

அமெரிக்கப் போலீஸ் துறையில் குறியீட்டு எண் 999 (Police Code: 999) என்றால் அதிகாரிக்கு ஆபத்து என்று அர்த்தம் (Office rdown / Officer Needs Help). சக போலீஸ் அதிகாரிக்கு ஆபத்து அல்லது அவர் தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்கிறார் என்று செய்தி வந்தால் அந்த ஏரியாவில் உள்ள அத்தனை போலீஸ்காரர்களும் சம்பவ இடத்திற்கு வந்துவிடுவார்கள். இது நடைமுறை. இதைப் பயன்படுத்தி பெரிய திருட்டு ஒன்றைச் செய்யத் திட்டமிடும் கும்பலைப் பற்றி படம் தான் Triple 9. 

வங்கிக்கொள்ளை படங்கள் எனது பேவரிட். Bank  Heist பின்னணியில் வந்த அத்தனை படங்களையும் பார்த்து நான் எழுதிய பதிவு இதோhttp://babyanandan.blogspot.in/2015/08/genre.html.

Triple 9 படத்தின் ஆரம்பக்காட்சியே அட்டகாசமான ஒரு வங்கிக்கொள்ளை தான். சிவப்புப் பொடி பறக்க ஃபுல் டிராபிக்கில் மெஷின் கன் களுடன் வேன் ஒன்றிலிருந்து ஸ்லோ மோஷனில் கொள்ளையர்கள் இறங்குவது டிரைலரிலேயே செம்ம அட்டகாசமாக இருந்தது. பெரிய திரையில் சொல்ல வேண்டுமா! மாஸ்! யார் இந்த கொள்ளையர்கள்? எதனால் குறிப்பிட்ட வங்கியில் உள்ள குறிப்பிட்ட லாக்கரை மட்டும் திருடிச் செல்கிறார்கள்? இவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் போன்ற விடைகளுக்கு பதில் தான் படம்.

ஓவர் ஆலாக கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கும் வேகத்திலேயே நகர்ந்தாலும், எனக்குப் படம் பிடித்திருந்தது. காரணம் படத்திலிருக்கும் அட்டகாசமான காஸ்ட்டும் அவர்களது நடிப்பும். வதவதவென்று நடிகர்கள். நமக்குப் பரிச்சையமான முகங்கள் என்பதால் யார் யார் எந்தெந்த கதாப்பாத்திரம் என்று சுலபமாக நம்மால் ஃபிக்ஸ் செய்து ஒன்ற முடிகிறது. புதுமுகங்கள் என்றால் கொடூரமாகக் குழம்பிப்போயிருப்போம். அந்த இடத்தில் தப்பித்துக்கொண்டுவிட்டார் இயக்குனர். Ben Affleck சகோதரர் Casey Affleck, '12 Years of a Slave' Chitwetel Ejiofor, 'Falcon' Anthony Mackie, 'Breaking Bad' Aaron Paul, 'Walking Dead' Norman Reedus, 'Wonderwoman' Elena Vlaslov உடன் மீண்டும் டிடெக்டிவ் ஆக Woody Harrelson, ரஷ்ய கும்பலின் தலைவியாக Kate Winslet ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் John Hillcoat உம் லேசுப்பட்டவர் அல்ல. ஆஸ்திரேலியரான இவர் The Road (2009), The Proposition (2005), Lawless (2012) போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இந்தப் பெயர்களுக்காகவே படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக்கிளப்பி இருக்க வேண்டும். ஆனால் ஏனோ ஹாலிவுட்காரர்களுக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. ஆனால் ஒளிப்பதிவு + பின்னணி இசையைப் பாராட்டாதவர்கள் இல்லை.

பரபர அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படத்தை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் அவசியம் ஒரு முறையாவது பார்த்தே தீர வேண்டிய படம்.



பி.கு: 'ஆக்ஷன்' என்ற ஒன்றைக் காரணத்திற்காகவே நான் வங்கிக்கொள்ளை 'படங்களை' விரும்பிப்பார்க்கிறேன். மற்றபடி வங்கிக்கொள்ளையர்களையோ, விஜய் மல்லையாவையோ, ஏழைகளை ஏமாற்றும் வங்கிகளையோ நான் ஆதரிக்கவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...