THE CLASSIFIED FILE (2015)

7:35:00 AM

Kwak Kyung-taek | South Korea | 2015 | 108 min.

Eun-joo பள்ளியிலிருந்து வெளிவரும் பொழுது கடத்தப்படுகிறாள். நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்க, யார் கடத்தினார்கள், எதற்காகக் கடத்தினார்கள் என்ற எந்த விபரமும் தெரியவில்லை. மகளை இழந்து தவிக்கும் பெற்றோர் தங்களால் முடிந்ததை எல்லாம் செய்கிறார்கள். பணக்காரத் தந்தை தனது செல்வாக்கை வைத்து போலீஸ் உதவியை நாடுகிறார். தாய் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் Fortune Teller களை (நம்மூர் ஜோசியக்காரர்களைப் போல) நம்புகிறார். பல பிரபல ஜோசியச்சிகாமணிகள் மகள் இறந்திருக்க வாய்ப்புண்டு என்று சொல்ல, Kim Joong-san என்பவர் மட்டும் சிறுமி இன்னும் உயிரோடு இருப்பதாகக் கணித்துச் சொல்கிறாள். அவளை காப்பாற்றக்கூடிய வாய்ப்புள்ள போலீஸ்காரர் ஒருவரது பெயரையும் பரிந்துரைக்கிறார். நாட்கள் ஆகிவிட்டதால் போலீஸ் சிறுமி இறந்திருப்பாள் என்ற கண்ணோட்டத்திலேயே கேஸை அணுகுகின்றனர். ஆனால் Gong Gil-yong என்ற போலீஸ்காரர் மட்டும் அவள் உயிருடன் இருப்பதாக நம்புகிறார். Kim பரித்துரைத்த போலீஸ்காரர் இவரே. முற்றிலும் மாறுபட்ட குணாதிசயம், கண்ணோட்டம், தொழில்முறையுள்ள இந்த இருவரால் கடத்தப்பட்ட சிறுமி Eun-joo வைக்காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பது தான் இந்தப் படம்.

1978 ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பரபர ஆக்ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் த்ரில்லுக்குப் பஞ்சமில்லை. கடைசி பத்தாவது நிமிடம் வரை குழந்தைக்கு என்ன ஆனது, யார் கடத்தினார்கள் என்பதைச் சொல்லாமலேயே காட்சிகளை வடிவமைத்துப் பார்வையாளனைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். பெற்றோருக்குத் தான் குழந்தை; போலீஸ்காரர்களுக்கு இது மற்றுமொரு கடத்தல் கேஸ். குழந்தையை உயிருடன் மீட்பதை விட, கொலையாளியைக் கண்டுபிடித்துப் பெயர் வாங்குவதிலேயே குறியாக இருப்பதைத் தெளிவாக இருப்பதையும் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டிற்குள்ளிருக்கும் இன்டர்னல் பாலிடிக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எல்லா நாடுகளும் ஒரே மாதிரி தான் என்பதைக் காட்டியது.

போலீஸ் Gong ஆக Kim Yoon-seok. இவர் நடித்த படங்கள் அனைத்துமே நன்றாக இருப்பது ஆச்சரியம். வளர்ந்து வரும் "தீர்க்கதரிசி" Kim ஆக Yoo Hae-jin. நான் பார்த்து இவர் நடித்த ஒரே சீரியஸான கதாப்பாத்திரம் இதுவேஒரு கடத்தல் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்குற்றவாளிக்கும் போலீஸிற்குமமிடையே நடக்கும் கேட் அண்ட் மௌஸ் கேம்பல படங்களில் பார்த்திருந்தாலும்அலுக்காத டெம்ப்ளேட் இதுஅடுத்து என்ன அடுத்து என்ன என்ற பதைபதைப்பில் இருக்கும் சுகமே தனிஎனக்கு இது போன்ற படங்கள் எப்போதுமே பிடிக்கும்.

இயக்குனர் Kwak Kyung-taek
படத்தை இயக்கியிருக்கும் Kwak Kyung-taek, 'Friend (2001)' என்ற அருமையானத் திரைப்படத்தையும் பல நல்ல திரைப்படங்களையும் எடுத்தவர். இவரது இயக்கத்தில் வெளியான Friend படத்தின் Sequel - 'Friend: The Great Legacy (2013)' படம் 12 வருடங்களுக்குப் பின் வெளியாகி அதுவும் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது


படத்தின் கிளைமாக்ஸ் கொஞ்சம் ஏமாற்றலாம்; ஆனால் நிச்சயம் ஒரு நல்ல த்ரில்லரைப் பார்த்த திருப்தியைத் தரும் இந்தப் படம்.  

You Might Also Like

1 comments

  1. உங்கள் விமர்சனங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாகவும் சுவையான முறையிலும் எழுதுகிறீர்கள்.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...