கவனிக்க: இது கமல் புராணம் பாட எழுதப்பட்ட பதிவு அல்ல!

11:59:00 AM



பல ஆண்டுகளாக அடிமைகளாகவே இருந்தவர்களில் திடீரென்று ஒரு புரட்சியாளன் உருவாகி அடிமைகளை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களது சக்தியைப் பற்றி எடுத்துச் சொல்லி போராடத் தூண்டுகிறான் என்று வைத்துக்கொளுங்கள். அதைப் பார்க்கும் “ஆண்டை”கள் என்ன செய்வார்கள்? அடிமைகள் கண்ணெதிரிலேயே அந்தப் புரட்சியாளனை கொடுமைப்படுத்தி, சிறுக சிறுக சித்ரவதை செய்து, சாவடிப்பார்கள். நம்மை ஆள்பவர்களை எதிர்த்தால் என்ன ஆகும் என்பது தான் அடிமைகள் அன்று கற்றுக்கொள்ளும் பாடம். இதை இங்கு சொல்வதன் அர்த்தம் பின்னால் தெரியவரும்.

என் தமிழ் சினிமா இன்று பகுதியில் திருட்டு வி.சி.டி ஒரு பிரச்சனையா? என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை முதலில் படித்து விடுதல் நலம். அதில் திருட்டு வி.சி.டியைத் தடுக்க தயாரிப்பாளர்கள் நினைத்தால் முடியும் என்று சொல்லியிருந்தேன். நான் சொன்ன நேரமோ என்னமோ தெரியவில்லை அப்படி ஒரு தயாரிப்பாளர் கிளம்பி வந்திருக்கிறார். கண்ணிற்கு தெரியாத எதிரிகளை எதிர்த்துப் போராடக் கிளம்பிய அந்த தயாரிப்பாளர்களுக்கு இப்பொழுது கண்முன்னேயே புதிய எதிரிகள் கிளம்பியிருக்கிறார்கள் - அவர்கள் விநியோகிஸ்தர்கள் / திரையரங்கு உரிமைகள். இவர்களை மேலே நான் சொன்ன “ஆண்டை”கள் என்று வைத்துக்கொண்டால், அடிமைகள் சினிமா தயாரிப்பாளர்கள், அவர்களிலிருந்து எழுந்து நின்று போராடக் கிளம்பிய புரட்சியாளன் - தயாரிப்பாளர் கமல்ஹாசன். கேபிள் டிவி வந்த புதிதில் திரையுலகமே சேர்ந்து அதை எதிர்த்த போது, “தொழில்நுட்பத்துடன் சேர்ந்து நாமும் வளர வேண்டும், இதனால் நமக்கு நன்மை தான்” என்று கமல் சொன்னார், வாதாடினார். இப்போது அதே கேபிள் சேனல்களில் அன்று எதிர்த்தவர்கள், இன்று அவர்கள் சம்பந்தப்பட்ட படம் வெளிவந்து காலை முதல் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே “வெற்றிநடை போடுகிறது” என்று வெட்கமில்லாமல் கத்திக்கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கின்றனர். இது மட்டுமா, இன்னும் எத்தனையோ வகையில் கேபிள் டி.வி இவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அன்றே கமல் சொன்னார் “இதனால் நமக்கு நன்மை தான்” என்று.

விஸ்வரூபம் என்று மட்டுமல்ல. கமல் மிகவும் சிரமப்பட்டு தன் உழைப்பையெல்லாம் கொட்டி வெளியிட நினைக்கும் எந்த ஒரு படமும் பிரச்சனை இல்லாமல் வெளியானதே இல்லை. “சண்டியர்” என்று பெயர் வைத்ததால் யாருக்கு அன்று எங்கு வலித்தது என்றே தெரியவில்லை. Mumbai Express – சண்டையரை விட இதற்கு பெரிய பஞ்சாயத்து நடந்தது. சந்திரமுகியுடன் வெளியாகியிருந்த மும்பை எக்ஸ்பிரஸ் பட போஸ்டர்கள், பேனர்கள் எல்லாம் கிழிக்கப்பட்டு, தொங்கிக் கொண்டிருந்தன. கேட்டால் கமல் தமிழில் பெயர் வைக்கவில்லையாம். அதானால் கிழிக்கிறோம், எதிர்க்கிறோம் என்றார்கள். தமிழ் உணர்வைக் காட்ட வேறு இடமே அன்று கிடைக்கவில்லை போல. இன்று வெள்ளைக்காரன் கண்டுபிடித்த காய்ந்த ரொட்டியான பீட்ஸா வின் பெயரில் ஒரு படம் வந்து சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்க்காவலர்கள் ஏன் பீட்ஸா என்னும் ஆங்கில உணவுப் பொருளின் பெயரை வைக்கிறாய்? அழகாக தமிழில் “வடை” என்று வாய் நிறைய வை என்று ஏன் சொல்லவில்லை? ஹேராமிற்கு ஆன பஞ்சாயத்து எல்லாம் ஊர் உலகமறிந்தது. “நான் காசு கொடுத்து படம் பார்க்க வந்திருக்கிறேன். என்னைப் படம் பார்க்க விடாமல் பண்ணுவதற்கு நீ யாரடா” என்று அவர்களை அடித்து விரட்டவும் நமக்குத் தெரியாது. துணிவும் இருக்காது. இருபது பேர் வந்து, இருநூறு பேர் படம் பார்த்துகொண்டிருக்கும் தியேட்டருக்குள் வந்து பிரச்சனை செய்வார்கள். நாம் அமைதியாக வெளியே வந்துவிடுவோம். நமக்கு வேடிக்கைப் பார்க்க மட்டும் தானே தெரியும்.

சரி, இப்போது விஸ்வரூபத்திற்கு நடந்து கொண்டிருப்பதும் இது போன்ற ஒன்று தான். உலகத்தரத்தில் ஒரு படத்தைக் கொடுத்து, தமிழ் சினிமா, தமிழனின் பெருமையை உயர்த்த நினைத்து பேராசைப் பட்டுத் தொலைத்த கமல், படத்தின் பட்ஜெட் 100 கோடியைத் தொடுவதைப் பற்றி அன்று கவலைப்படவில்லை. தன்னுடன் கைகோர்த்து சேர்ந்து தமிழ் சினிமா மேலே வரும் என்று அவர் நினைத்திருப்பார் போல். படத்தைத் தயாரித்துக்கொண்டிருந்த PVP சினிமாஸ் கழண்டுகொண்ட போதும் உணராமல் தன் சொந்த பேனரான ராஜ்கமல் இன்டர்நேஷனல் மூலம் மீதிப் படத்தைத் தயாரித்து படப்பிடிப்பையும் நடத்தி முடித்தார். அடுத்தது டெக்னாலஜி. சரவதேசத் தீவிரவாதம் பற்றிய மிரட்டல் படங்களை எல்லாம் ஆங்கிலத்திலும் வேறு மொழிகளிலும் மட்டுமே பார்த்துப் பழகிய தமிழனுக்கு, தான் காண்பதும் அப்படிப்பட்ட தரத்திலான ஒரு படம் தான் என்பதை உணர்த்த, அவர்கள் உபயோகிக்கும் தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிற்கே புதிதான AURO 3D தொழில் நுட்பத்தையும் தன் படத்தில் புகுத்தினார் கமல். கவனிக்க: AURO 3D தொழில்நுட்பத்தில் இதுவரை ஒரே ஒரு திரைப்படம் தான் வெளிவந்துள்ளது - RED TAILS (2012). முழுக்க முழுக்க RED ONE கேமராவில் எடுக்கப்பட்ட இரண்டாவது தமிழ் படம் கமல் ஹாசனின் “உன்னைப்போல் ஒருவன்”. முதல் படமான அச்சமுண்டு அச்சமுண்டு தமிழ் படமாக இருந்தாலும் முழுக்க முழுக்க ஹாலிவுட் கலைஞர்களை வைத்து, அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடப்பட்டது. உன்னைப்போல் ஒருவன் முழுக்க முழுக்க தமிழகத்தில் தயாரான திரைப்படம். தமிழின் முதல் DOLBY DIGITAL படத்தைக் கொடுத்தவரும் கமல் தான். படம் குருதிப்புணல். வெளியான ஆண்டு 1995 (கருப்பு ரோஜா தமிழின் முதல் DTS படம். வெளியான ஆண்டு 1996). கமல் இன்னமும் 3D யை ஒரு கைபார்க்காமல் இருப்பது ஆச்சரியம் தான். நான் மெய்சிலிர்த்து எழுதிய IMAX தொழில்நுட்பத்தில் தமிழில் ஒரு படம் வந்தாலும் அதனை கொடுப்பவர் நிச்சயம் கமல் ஆகத்தான் இருப்பார்.

இப்பொழுதும் ஒரு புதுமையை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க நினைத்து தான் பலருக்கு எதிரியாகியிருக்கிறார் கமல். அந்தப் புதுமை, படம் வெளியாகும் அன்றே அனைவரையும் படத்தைப் பார்க்க வைத்து, அதன் மூலம் திருட்டு வி.சி.டி பிரச்சனையை தடுப்பது. எப்படி? படம் வெளியாகும் அன்று மட்டும் ஒரே ஒரு காட்சி DTH சேனல்களிலும் படத்தை வெளியிட முயற்சித்திருக்கிறார் (இந்த முறையை எனது பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன்). தியேட்டரில் படத்தைப் பார்க்க முடியாதவர்கள், இந்த DTH சேனல்களில் பணத்தைக் கட்டிப், படத்தைப் பார்க்கலாம். ஒரே ஒரு முறை, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் படம் திரையிடப்படும் என்பதும், இதை ரெக்கார்ட் செய்யவும் முடியாது என்பதும் தான் இதில் உள்ள ஹைலைட். இதனால் தயாரிப்பாளருக்கு நிச்சய லாபம். ஒரிஜினல் படமே டிவியில் தெரியும் போது யாராவது திருட்டு விசிடியில் கண்ணைக் கெடுத்துக்கொண்டும், காதை கிழித்துக்கொண்டும் படத்தைப் பார்ப்பார்களா? இது தான் கமல் திட்டம். TATA SKY உடன் ஒப்பந்தம் கூட போடத்தயாராக இருந்ததார் என்று தகவல். இது தான் இவர் செய்த மிகப்பெரிய குற்றம். 100 கோடி பணம் போட்டு படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர், தான் போட்ட காசை திரும்ப எடுக்க வேண்டும் என்று நினைப்பது இங்கு குற்றமாகி இருக்கிறது. இது தப்பு தான் என்கிறார்கள் இடைத்தரகர்களாக இருக்கும் விநியோகிஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும். படம் தியேட்டரில் வெளியாகும் அன்றே டிவியிலும் வெளியானால் தங்ககளது லாபம் பெருமளவில் குறையும் என்கிறார்கள் இவர்கள். நான் திரும்பவும் கேட்கிறேன். டிவியில் படம் பார்க்கப்போகிறவர்கள் எல்லாம் அந்த வசதி இல்லை என்றால் நேரே என்ன தியேட்டருக்கா படை எடுக்கப்போகிறார்கள்? காலை பார்ப்பதற்கு பதில் மாலை திருட்டு விசிடியில் படத்தைப் பார்க்கப்போகிறார்கள். இதனால் இவர்களுக்கு என்ன நஷ்டமாகிவிடப்போகிறது என்று தான் தெரியவில்லை. தியேட்டரில் படம் பார்க்கும் கூட்டம் நிச்சயம், அதுவும் முதல் நாள் நிச்சயம் டிவிக்குள் முடங்காது. டிவி ரிலீஸ் டார்கெட் எல்லாம் திருட்டு விசிடி பார்ட்டிகளுக்கு மட்டும்தான்.

“கமல் இப்படி DTH ல் படத்தை வெளியிட்டால் தமிழகத்தில் விஸ்வரூபம் வெளியாக நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம். மேலும் கமலது எந்த திரைப்படத்தையும் நாங்கள் இனி வெளியிட மாட்டோம்” என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள் இந்த இடைத்தரகர்கள் எனப்படும் “ஆண்டை”கள். முதலுக்கே மோசம் என்றால் என்ன செய்வது? படத்தை கமல் சொல்லும் விலைக்கு வாங்கி விநியோகிக்க யாரும் தயாராக இல்லை. எனவே படத்தை தனது ராஜ்கமல் நிறுவனம் மூலமே வெளியிட கமல் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதுவும் நன்மைக்கே. தமிழகத்திற்கு DTH வசதி இந்த முறை கிடையாது என்றே தோன்றுகிறது, ஆனால் ஹிந்தியிலும், தெலுங்கிலும் நிச்சயம் கமல் இந்த முறையைப் பயன்படுத்திப் பார்ப்பார். அனைத்து தகவல்களும் படத்தின் ஆடியோ வெளியீட்டான டிசம்பர் 7 ஆம் தேதி உறுதியாகி விடும். இந்த முறை இல்லையென்றால் என்ன, வழக்கம்போல இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு இந்த வெளியீட்டு முறை நடைமுறைபடுத்தப்பட்டு சிறு படங்களும் பெரும் லாபம் அடையும் நாள் வரும் போது பல்லை இளித்துக்கொண்டு நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு தங்களது படத்தை DTHயிலும், ஆன்-லைனிலும், டிவிடியிலும் படம் திரையரங்கில் வெளியாகும் பொழுதே வெளியிடுவார்கள். அன்று கமலைப் பற்றிப் பேசுவார்கள்.

வியாபாரம் என்றால் லாபம் நஷ்டம் இரண்டும் இருப்பது சகஜம்தான். உதிரத்தை வியர்வையாகச் சிந்தி, நிலத்தில் இறங்கி, தன் குடும்பத்துடன் பட்டினி கிடந்து அரும்பாடு பட்டு பயிரை விதைத்துக் கொண்டு வரும் விவசாயியிடம் இடைத்தரகன் ஒருவன், “நீ நான் சொல்கிற விலைக்கு தான் விற்க வேண்டும் ,அதுவும் எனக்கு மட்டும் தான் விற்க வேண்டும், மீறி ஏதாவது செய்ய நினைத்தால் உன் பயிரை யாரையும் வாங்க விடாமல் செய்வேன்” என்று மிரட்டுவது எப்படியோ அதைப் போலத்தான். “நீ படத்தை எனக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும், அதுவும் நான் சொல்லும் விலையில் தான் கொடுக்க வேண்டும்” என்று ஒரு தயரிப்பளரிடம் சொல்வதும். “படம் நஷ்டமடைந்தால் அதை நாங்கள் தானே ஏற்றுக்கொள்கிறோம்; அது போலத்தான் இதுவும்” என்று படத்தை வெளியிடுபவர்கள் வாதாடலாம். தமிழ் சினிமாவை நாம் எந்த லட்சணத்தில் வைத்திருக்கிறோம், என்ன மாதிரியான படங்களை வெளிவர விடுகிறோம் என்பதைப் பொறுத்து தானே படங்களும் வெளிவரும். “விநியோகிஸ்தர்கள் இப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள்” என்று தங்கள் படத்தை எப்படியாவது வியாபாரம் பண்ண நினைக்கும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து 5 பைட், 5 பாட்டு, காமெடி, தொப்புள், தொடை, மார்பு என்றே காட்டிக்கொண்டிருந்தால் எப்படி தமிழ் சினிமா உருப்படும்? இந்தக் கண்றாவியை எல்லாம் எப்படி காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் விடாமல் பார்த்துக்கொண்டேயிருப்பான்? படத்தை வாங்கி வெளியிடுவதையே தொழிலாக வைத்திருப்பவர்களுக்கு ரசிகர்களின் அன்றைய பல்ஸ், டிரெண்டு தெரியவில்லை என்றால் பிரச்சனை யாருடையது? பெரும் விலை கொடுத்து வாங்கி வெளியிடப்படும் படங்கள் எல்லாம் ஊத்திக்கொள்ள, அட்டகத்திகளும், பீட்ஸாக்களும் வெற்றியடையும் போதே தெரியவில்லை?

கமலுக்கு ஏன் இந்த வேலை? சினிமாவில் சம்பாதித்த காசை சினிமாவிலேயே போட்டு, புதுமைகளை புகுத்தி தமிழனை பரவசப்படுத்த வேண்டும் என்றெல்லாம் அவர் ஏன் நினைக்கிறார்? பேசாமல் நம் தலைவர் செய்துகொண்டிருப்பது போல, பொதுமேடையில் ஒரு நன்றியை போட்டு வைத்துவிட்டு, யாரோ கஷ்டப்பட்டு 3Dயாக்கி வெளியிடும் அவர் நடித்த (கவனிக்க “தயாரித்த” அல்ல) படத்தை தனது ரசிகர்களுக்கு இவர் கொடுக்கும் பிறந்த நாள் பரிசாக அறிவித்துவிட்டு இமயமலை, காசி, ராமேஸ்வரம் என்று எங்காவது போகலாமே? ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைவருக்கே ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவோம், புதிய தொழிநுட்பங்களை தமிழுக்கு கொண்டு வருவோம் அல்லது ஷங்கர், முருகதாஸ், பிரபுசாலமன், லிங்குசாமி, கௌதம் மேனன் போல் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்ற நினைப்பெல்லாம் இல்லை. கமலுக்கு மட்டும் ஏன் இந்த வேலை?

பி.கு: கமல் காப்பியடிக்கிறார், தற்பெருமை பேசுகிறார், கிஸ்ஸடிக்கிறார் போன்ற விஷயங்களையெல்லாம் பேச இது சமயமில்லை என்பது எனது கருத்து. கருத்து ஏதுமிருந்தால் தெரிவிக்கவும். இல்லை நான் கமல் காப்பி, லொட்டு, லொசுக்கு பற்றி தான் இங்கும் பேசுவேன் என்று சொன்னால், நிச்சயம் அதற்கு வாகாக வேறு பதிவு எழுதுகிறேன். அங்கு விளையாடிக் கொள்ளலாம், இங்கு வேண்டாம்!

You Might Also Like

27 comments

  1. சூப்பர் பதிவு தலைவா! ஆனாலும் எனக்கு இந்த DTH மேட்டர் கொஞ்சம் உறுத்தலாகப்படுகிறது! இதனால் முதல் ஷோவிலேயே படம் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகலாம்.. :)
    ஆனாலும் பெரிய சைஸ் ஸ்கிரீனையும்,சூப்பர் ஹோம் தியேட்டர் சிஸ்டமும் வைத்திருக்கும் பணக்காரர்கள் / ஹோட்டல்கார்ஸ் சில்லறை காசுக்கு டிக்கெட் போட்டு மினி தியேட்டர் நடத்தத் தொடங்கினால் என்ன பண்ணுவது??

    ReplyDelete
    Replies
    1. DTH ரிலீஸ் என்பது திருட்டு விசிடியைத் தடுக்க ஒரு முயற்சி மட்டுமே. நீங்கள் சொல்வது போல் "பணக்காரர்கள் / ஹோட்டல்கார்ஸ்" எல்லாம் DTH இல்லையென்றால் திருட்டு விசிடியில் படம் ஓட்டப்போகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். கல்லூரிகளில், பிரைவேட் அப்பாட்மென்ட்டுகளில் (ஏன் இரவு நேர அரசுப்பேருந்துகளில்) எல்லாம் திருட்டு விசிடி வைத்து ப்ரொஜெக்ட் செய்து வாரம் ஒரு படம் காட்டுகிறார்களே, அவர்களை எல்லாம் என்ன சொல்வது. 30ரூ ஒரு டிவிடி வாங்குவதறகு பதில், 200ரூ கொடுத்து DTH வாங்குவாரகள் என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியது தான் :-) (திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கவே முடியாது :-)

      Delete
  2. அருமையான பதிவு! நிச்சயம் இன்று கமல் சொல்வதெல்லாம் நாளை நடந்திருக்கும் அன்று வெட்கமில்லாமல் இன்று எதிர்பவர்களும் அதில் குளிர்காய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டன் சுப்பிரமணி :-)

      Delete
  3. தியேட்டரில் தான் படம் பார்ப்பேன் என்று இருப்பவர்களை கமலின் திட்டம் எந்த விதத்திலும் dth பக்கம் இழுக்காது.டி.வி.டி குறையும் .

    தயாரிப்பாளர் (கமல்) ஒழிந்தால் பரவாயில்லை,நாங்கள் வாழ்ந்தால் போதும் என்று இருக்கும் தெய்வ பிறவிகள் உள்ள தமிழ் சினிமா.

    முன்பு கேபிள் டி .வி பற்றி பிரச்னை வந்த போது அதை ஆதரித்து பேசியதால் "கருங்காலி " என்று ஊர் முழுதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடினார்கள் .இன்று வெட்கமில்லாமல் அவர் சொன்ன யோசனையை கொண்டு சினிமாவை ஆண்டு வருகிறார்கள்.

    இப்போது என் பயம் எல்லாம் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி படம் எடுத்தால் பிரச்சனையாகுமே? கமல் என்றால் மொத்த கட்சிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு ஓடிவந்து எதிர்க்குமே.அதை கமல் எப்படி சமாளிக்க போகிறார். துப்பாக்கி காட்சிகள் வெட்டியது போல் விஸ்வரூபம் வெட்ட முடியுமா? வெட்டினால் படம் மிஞ்சுமா? ஹே ராம் கதி நேர்ந்துவிட்டால் ? இது தான் துப்பாக்கி பிரச்சனை வந்ததும் விஸ்வரூபம் பற்றி என் மனதில் இருந்து வருகிறது.

    ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு பெற்றவர் தமிழ் சினிமாவிற்கு ஏதாவது செய்வார் என்று இன்னமும் இந்த ஊர் நம்பி கொண்டிருக்கிறதா என்ன?
    நீங்கள் ஏன் உங்கள் தலைவர் தமிழ் சினிமாவிற்கு செய்த தொண்டுகளை பற்றி ஒரு முழு பதிவு எழுத கூடாது?
    அதை விடுங்கள் எந்த விஷயத்தை படத்தில் வைத்தாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டம் இருக்கே ! உடனே டி.வியில் வந்து எச்சரித்து பேட்டி, உருவ பொம்மை எரிப்பது,வீட்டை முற்றுகை என இவர்கள் தொல்லை தாங்கவில்லை. சுதந்திரமாக ஒரு இயக்குனர் நினைத்ததை இனி படம் எடுக்க தமிழில் முடியாதா?

    ReplyDelete
    Replies
    1. "கருங்காலி" மேட்டரை சொல்லவேண்டாம் என்று தான் தவிர்த்திருந்தேன் :-)

      கமல் இதையெல்லாம் நிச்சயம் எதிர்பார்த்து தான் இருப்பார் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான். "விஸ்வரூபம் யாருக்கும் எதிரானது அல்ல. நான் காந்தியின் ரசிகன் .இது தீவிரவாதத்தின் காரணத்தை அலசும் ஒரு கதை" என்று சொல்லியும் போராட்டத்தில் குதிக்கத்தான் போகிறார்கள். பின்லேடனைப் பற்றிச் சொன்னால் முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்கிறார் என்று கிளம்பி வரும் மூடர்களை நாம் என்ன செய்ய முடியும்?

      //நீங்கள் ஏன் உங்கள் தலைவர் தமிழ் சினிமாவிற்கு செய்த தொண்டுகளை பற்றி ஒரு முழு பதிவு எழுத கூடாது? // - "தலைவர்" என்றால் அது சூப்பர் ஸ்டார் மட்டும் தான். அவரது படங்களின் வசூலைத்தவிர, குறிப்பிட்டு சொல்லும்படியான தொண்டு எல்லாம் ஒன்றும் இதுவரை ஆற்றவில்லை. கமல் பற்றி ஏற்கனவே பல பதிவுகள் வந்துள்ளன. அதில் எனக்குப் பிடித்த இரண்டு

      1) "இன்னொருவனின் கனவு- என்னை போல் ஒருவன் - 7" - FB தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Page (http://www.facebook.com/notes/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-7/251253688311551)

      2) நண்பர் ராஜ் எழுதியது - http://hollywoodraj.blogspot.in/2012/06/blog-post.html

      //சுதந்திரமாக ஒரு இயக்குனர் நினைத்ததை இனி படம் எடுக்க தமிழில் முடியாதா?// - இனி யா? தலைவரே, இதுவரை சுதந்திரமாக எந்த இயக்குனரும் ப்டம் எடுத்ததே இல்லை! இந்திய ஒலிம்பிக்ஸ் கமிட்டியிலேயே அரசியல் ஆதிக்கம் இருக்கிறது என்று நம் நாட்டை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஒலிம்பிக்ஸிற்கே இந்த கதி என்றால் சினிமாவெல்லாம் எம்மாத்திரம்?

      Delete
  4. You are giving good article and with more minute details.. great work. thanks.

    ReplyDelete
  5. தல, காலையிலே பதிவை படிச்சிட்டேன்...ஆபீஸ் போய் பதில் போடலாம் என்று விட்டு அப்படியே மறந்து போயிட்டேன்.. இது பத்தி என்னோட கருத்து இது தான்.

    முத நாளே DTH ல ரிலீஸ் பண்ணுற வேலை கண்டிப்பா ஒத்து வராது. ஏனா திருட்டு விசிடி வரவே கொறஞ்சது முனு நாள் ஆகுது. படத்தோட மாக்ஸீமம் வசூல் வரது முத முனு நாள் தான். படத்தோட ரிசல்ட் வெளியே போறதுக்கு முன்னாடியே வசூல் அள்ளுறது முத வாரம் தான், அந்த முத நாளே DTH ல ரிலீஸ் பண்ணுனா, படம் மொக்கையா இருந்தா கண்டிப்பா ரொம்பவே ஊத்திக்கும்.
    அப்புறம் உங்களுக்கு DTH ரிலீஸ் முலம்மா பெரிய வசூல் வேற வராது. max ஓர் படத்துக்கு நீங்க 100 ரூபா சார்ஜ் பண்ணுவீங்க, ஒரு குடும்பமே பார்த்திடும். அதே குடும்பம் தியேட்டர்ல அதே படத்தை பார்க்க கண்டிப்பா 1000 ரூபா செலவு செய்து இருப்பாங்க. அப்ப அந்த படத்துக்கு நஷ்டம் தானே...

    இங்க ஹிந்தியில் எல்லாம் ஒரு வாரம் கழிச்சு DTH ரிலீஸ் நடக்கும். இங்க ஹிந்தி படங்கள் ஊத்திகிட்டா ஒரே வாரத்துல டிவியில வேற ரிலீஸ் பண்ணிடுவாங்க..

    ReplyDelete
    Replies
    1. // திருட்டு விசிடி வரவே கொறஞ்சது முனு நாள் ஆகுது // - தல எந்த காலத்துல இருக்கீங்க, படம் வெளியான மாலை திருட்டு வி.சி.டி கிடைக்குது, வெல்கம் டு பெங்களூரு :-)

      அது போல மொக்கை படத்த DTH ல ரிலீஸ் பண்ற தைரியம் எல்லாம் யாருக்கும் வராதுனு நினைக்கிறேன்.

      தியேட்டருக்கு போய் படம் பாக்குற கூட்டம் DTH ரிலீஸினால் குறையும் என்பது நிச்சயம் ஒத்துக்கொள்ளவே முடியாத ஒன்றாகத்தான் எனக்கு படுகிறது. இப்போ விஸ்வரூபம் படம் வெளியாகுதுனு வைங்க, AURO 3D அது இதுனு எதெல்லாமோ சொல்றாங்க. இதையெல்லாம் நீங்க தியேட்டருக்கு போய் பாப்பீங்களா அல்லது வீட்டில் உட்கார்ந்து உங்க டிவில பாப்பீங்களா? தியேட்டருக்கு போகும் கூட்டம் போய்கிட்டே தான் இருக்கும். DTH ரிலீஸ் என்பது முதல் நாள் படம் பார்க்க முடியாதவர்களுக்கும் / மொத்தமாக ஒரே நாளில் ஒரு படத்திற்காக 1000ரூ செலவழிக்க முடியாதவர்களுக்கு மட்டும் தான். அடுத்த நாள் திருட்டு விசிடியில் குடுமபத்துவன் உட்கார்ந்து பார்ப்பதற்கு பதில், ரிலீஸ் நாளே ஒரிஜினலை காசு கொடுத்து குடும்பத்துடன் உட்கார்ந்து பார்ப்பார்கள். அவ்வளவு தான். தியேட்டருக்கே வராதவர்கள் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம். எப்படிப் பார்த்தாலும் மினிமம் லாபம் நிச்சயம் :-)

      நான் என் கருத்த சொல்றதும், நீங்க உங்க கருத்த சொல்றதெல்லாம் ஒரு assumption தானே தவிர, வந்தால் தானே உண்மையில் தமிழி சினிமவிற்கு DTH வரமா, சாபமா என்பது தெரியும்! அதுக்கே இங்க வழியக் காணோமே! அதான பிரச்சனையே!

      Delete
  6. நண்பரே...இன்றுதான் பதிவைப்படித்தேன்.
    கமலின் புதிய முயற்சிகள் எப்போதுமே மற்றவர்களால் எதிர்க்கப்பட்டு...
    வெற்றியடைந்த பின்னால் அதன் பின்னாலே நான் முந்தி...நீ முந்தி என ஓடுவார்கள்.
    நிச்சயம் இப்புதிய முயற்சி வெற்றி பெறும்.
    தமிழ் சினிமாவின் வியாபாரம் புதிய தளத்தில் விரிவாக்கம் பெறும்.

    சில பின்னூட்டங்களை அனுமதிக்காதீர்கள்.
    அவர்கள் நோக்கமே பதிவை குலைப்பதுதான்.
    ‘டெலிட்’தான் சாலச்சிறந்தது.
    வியாதிக்காரன்களை ஸ்பேம் பண்ணி விடுங்கள்.
    அதற்குப்பிறகு அவன்களால் பின்னூட்டம் போடவே முடியாது.

    ReplyDelete
    Replies
    1. ஸார், தேவையில்லாத கமெண்ட்டுகளை சம்பந்தப்பட்ட ஆட்களிடம் சொல்லிவிட்ட பிறகு நீக்கிவிட்டேன். நாளை இசை வெளியீடு + பட வெளியீட்டு அறிவிப்பு. கமல் நிச்சயம் யாருக்காகவும் தன்னை விட்டுக்கொடுக்க மாட்டார் என்று தான் நினைக்கிறேன். கோயம்பத்தூர் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் உண்டு தானே? செய்தி அறிந்தவுடன் தயவு செய்து தெரியப்படுத்தவும் :-)

      - உங்கள் மொபைல் எண்ணைத் தொலைத்து விட்டேன். அதனால்தான் பேச முடியவில்லை. நேரம் இருப்பின் அழையுங்கள்...

      Delete
  7. விரிவான கலக்கலான பதிவுக்கு நன்றி சகா....

    எதிர்ப்புகள் இருந்தால் தான் கமல்ஹாசன் முழுவீச்சில் களம் இறங்குவார்.... தியேட்டர்களே தேவை இல்லை என்று கமல் விஸ்வரூபத்தை தினமும் டிவியில் திரையிட்டால் இவர்களால் என்ன செய்ய முடியும்????

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சண்டியரே...

      தன் படம் எப்படி வியாபாரம் ஆக வேண்டும் என்பதை தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும். தியேட்டர்காரர்கள் இல்லையென்றால் என்ன எனக்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது என்று தன் நிலையிலிருந்து சற்றும் மாறாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் கமல். இது ஒரு நல்ல ஆரம்பம். ஏனென்றால் DTH கம்பெனிகளுக்கிடையான போட்டியால் SUN DIRECT DTH, ஸ்டுடியோ கிரீனின் அலெக்ஸ் பாண்டியனை 20 கோடிக்கு கேட்டு வருகிறார்களாம். இது தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை அதிகரித்துத் தரும் ஒரு அருமையான வியாபார உக்தி.

      விஸ்வரூபம் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆகி, படமும் நன்றாக இருந்து, ஹிட்டும் ஆகிவிட்டால், இனி இது தான் டிரண்டு என்றாகிவிடும். அது தான் கமல் ரசிகர்களது ஆசையும். நிச்சயம் கமல் நம்மை ஏமாற்றமாட்டார் :-)

      Delete
  8. எப்பவும் புதுமைகளை புகுத்துவதில் கமலை தவிர வேறு ஆளு இல்லை இவங்களும் செய்ய மாட்டாங்க செய்றவனையும் விட மாட்டங்க தமிழ் சினிமாவே வளர விடமா பன்றது இந்த ஆண்டைங்க தான் நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. இனி எந்த "ஆண்டை"யும் யாரையும் தடுக்க முடியாது தல... விஸ்வரூபம் தியேட்டரில் வெளியாவதற்கு 8 மணி நேரத்திற்கு முன் ஒரு ஷோ DTHல் ரிலீஸ் ஆவது உறுதி. தியேட்டர் கொடுப்பவர்கள் கொடுக்கட்டும், கொடுக்காதவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்று சொல்லியிருக்கிறார் கமல். கமல் படத்தை வெளியிடாமல் தடுப்பதால் நஷ்டம் தியேட்டர்காரர்களுக்கு தான், கமலுக்கு அல்ல...

      Delete
  9. //குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் படம் திரையிடப்படும் என்பதும், இதை ரெக்கார்ட் செய்யவும் முடியாது என்பதும் தான் இதில் உள்ள ஹைலைட்.//

    அந்த ரெக்கார்ட் செய்ய முடியாத தொழில்நுட்பம் என்னனு சொன்னால் கொஞ்சம் தெளிவடைவேன்.

    எந்த வகை மின்னணு ஊடகத்தையும் பதிவு செய்ய முடியும், உங்களால் ஒன்றை பார்க்க ,கேட்க முடியும் என்றால் பதிவும் செய்ய முடியும், இதுவரை பதிவே செய்ய முடியாத தொழில்நுட்பம் உலகில் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

    டிவி ட்யுனர் கார்டு, விடீயோ கேப்சர் கார்ட் (Nvidia, pinnacle etc) என வகையில் பதிவு செய்யலாம்.

    எனது பதிவிலும் இதனை அலசியுள்ளேன்.

    //AURO 3D அது இதுனு எதெல்லாமோ சொல்றாங்க. இதையெல்லாம் நீங்க தியேட்டருக்கு போய் பாப்பீங்களா அல்லது வீட்டில் உட்கார்ந்து உங்க டிவில பாப்பீங்களா?//

    இந்தியாவில்,தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்குகளில் ஆரோ 3டி ஒலியமைப்பு இருக்குன்னு தெரியுமோ?

    இப்போதைக்கு சென்னையில் சத்யம் அரங்கில் தான் ஆரோ 3டி, டால்பி அட்மோஸ் 64 சேனல்(128 வரைக்கும் தனித்து தேவைக்கு ஏற்ப ஒலி வழங்கும்) ஒலியமைப்பு உள்ளது.

    வேறு எந்த அரங்கிலும் அத்தகைய ஒலியமைப்பே இல்லாத போது டி.வி.டிவிடி என எதில் பார்த்தாலும் வழக்கம் போல தான்.

    ஒரு டிடிஎச் இணைப்புக்கு 1000 ரூ என அதிக தொகை கொடுப்பதற்கு தியேட்டர்ரே மேல்.

    மேலும் பல இடங்களிலும் கேபிள் டீவியில் டிடிஎச் சேனல் நிகழ்ச்சியை வழங்குகிறார்கள், அதே போல கேபிள் ஆபரேட்டர் விஷ்வரூபம் படத்தையும் ஊருக்கே காட்டினால், டிடிஎச் மூலம் தயாரிப்பாளருக்கு வரும் வருமானமும் அவுட் :-))

    நம்ம நாட்டு நடைமுறை என்னனே தெரியாமல் லோகநாயகர் செய்வதெல்லாம் புரட்சியா ,நல்ல காமெடி போங்க :-))

    டிடிஎச் இல் திரையிட்டால் ஏற்படும் விளைவினை எனது பதிவில் விரிவாக சொல்லி இருக்கிறேன் ,முடிந்தால் பார்க்கவும்.

    வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: சினிமா ரகசியம்-4:VISHWAROOPAM IN DTH RELEASE வெற்றியடையுமா?

    ReplyDelete
    Replies
    1. என்னடா கமல் பத்தி எழுதியிருக்கோம், இன்னும் நம்ம வவ்வால்ஜி யைக் காணோமே என்று காத்துக்கொண்டிருந்தேன். வந்துவிட்டீர்கள். உங்கள் கேள்விகளுக்கும் கிண்டலுக்கும் பதில் கமல் வாய்மொழியிலேயே இதோ - https://soundcloud.com/maiam-kuzhuvinar/kh-on-dth

      நன்றி...

      Delete
    2. பேபி ஆனந்தன்ஜி,

      அட டே என்ன இது விட்டா என்னை லோகநாயகரின் வில்லனாக ஆக்கிடுவிங்க போல :-))

      நீங்க சொன்னதையும் படிச்சேன்,

      அவரும் பதிவு ஆகாது, டிடிஎச் இல் தங்காது என பொத்தாம் பொதுவாக சொல்லியுள்ளார், ஆனால் எப்படினு சொல்லக்காணோம்.

      என்னாலேயே டிடிஎச் ஒளிப்பரப்பை ரெக்கார்ட் செய்ய முடியும், இன்னும் விவரமானவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்.

      சரி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் டிடிஎச் ஒளிபரப்பை ,அவர்கள் நெட் ஒர்க்கில் ஒளிப்பரப்ப முடியாது என்கிறீர்களா?

      எங்க ஏரியாவில் எல்லாம் கேபிள் டிவியில் பல டிடிஎச் சேனல்களின் ஃபீட் எடுத்து ஒளிபரப்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

      கொஞ்சம் விவரமான கேபிள் டிவீ ஆபரேட்டர்கள், மிக எளிதாக மாற்று செட்டாப் பாக்ஸ் பயன்ப்படுத்தி லோகோ இல்லாமல் செய்கிறார்கள்.

      செட் டாப் பாக்சின் firmware எனப்படும் இயங்கு மென்பொருளை எளிதில் ரிசெட் செய்ய முடியும், நானே செய்வேன் :-)) இன்னும் சில டிரிக் இருக்கு செய்தால் பே சேனலை இலவசமாக பார்க்க முடியும் :-))

      அதே போல ஒளிபரப்பப்பட்ட எதனையும் கேப்சர் செய்யலாம். யாரோ சொன்னதை நம்பிக்கொண்டு ரெக்கார்ட் செய்ய முடியாது என லோகநாயகர் சொல்கிறார் என நீங்களும் சொல்கிறீர்கள்.

      டாடா ஸ்கை" மீடியாகர்ட் SECA-2" என்கிரைப்ஷனும் . Dish Tv conex, and SECA-2 என டுயல் என்கிரைப்ஷனும் தான் செய்கிறார்கள், மற்ற எல்லாரும் இதில் ஏதோ ஒன்று தான். இவை எல்லாம் செட்டாப் பாக்ஸ் வரையில் தான் அதில் இருந்து தொலைக்காட்சிக்கு வரும் போது வழக்கம் போல டிவிடி வகை சிக்னல் தான், எளிதில் பதிவு செய்யலாம்.

      நீங்க நினைப்பது போல டிடிஎச் சிக்னலில் பயங்கரமான என்கிரப்ஷன் இருந்தால் 10 ஆண்டுக்கு முன்னர் வாங்கிய டிவியில் எல்லாம் எப்படி டிடிஎச் படம் பார்க்க முடியும் :-))

      பதிவு செய்வதில் அப்படியும் ஏதேனும் சிக்கல் எனில் டிஜிட்டல் டு அனலாக் கன்வெர்ஷன் செய்தால் எந்த தடையும் இருக்காது.

      Delete
    3. Decryption, Encryption அளவுக்கெல்லாம் எதுக்கு ஸார், சிம்பிளா டிவி முன்னாடி ஒரு கேமராவ வச்சு படமெடுத்துட்டா போச்சு, சரி தான? சரி, நீங்களே இவ்ளோ யோசிச்சு, டெக்னிகலா பேசும் போது, 50 வருசமா சினிமாவே கதினு கிடக்கும் நம்ம "லோகநாதன்" இதையெல்லாம் யோசிச்சிருக்க மாட்டாரா? சரி அவருக்கு அந்த அறிவு இல்லைன்னே வச்சிக்குவோம், அவர் கூட உங்க மாதிரி விவரம் தெரிஞ்ச ஆட்கள் ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாங்க? சரி அவர் கிட்ட இருக்குறவங்களுக்கும் விவரம் தெரியாத ஜால்ரா கோஷ்ட்டினு வச்சிக்குவோம்; 50 கோடிக்கு இந்த "டீல" ஓக்கே பண்ணியிருக்காங்களே, அந்த இந்தியாவின் முன்னணி DTH நிறுவனத்தில் கூடவா ஆட்கள் இல்லை?

      ஒன்னே ஒன்னு தான் ஸார், 100 கோடியோ இல்ல அதுக்கு குறைவாவோ, எப்படி பாத்தாலும் ரொம்ப பெரிய பட்ஜெட், அத போட்டு படம் எடுத்திருக்குற "லோகமே" எத பத்தியும் கவல படல, நீங்க ஏன் ஸார் இவ்ளோ யோசிக்கிறீங்க? உங்களுக்கு வேண்டாம்னா படத்த பாக்காதீங்க, யார் ஜி உங்கள தடுத்தது?

      போக, கமலுக்கு நீங்க வில்லன்லாம் கிடையாது, இப்படி சொல்லிகிட்டு காமெடி பண்ணிக்கிட்டு திரியாதீங்க :-)கமல் ஒரு சினிமா நடிகன், தமிழ் சினிமாவுக்கு காப்பியடிச்சாவது (சந்தோஷமா?) நல்லது பண்ணனும்னு நினைக்கிற ஒரு நடிகன். கொஞ்ச பேர் அவர ரசிக்கிறோம், கொஞ்ச பேர் அவர ரசிக்கல. அவ்ளோ தான்...

      Delete
    4. பேபி ஆனந்த்ஜி,

      // 50 கோடிக்கு இந்த "டீல" ஓக்கே பண்ணியிருக்காங்களே, அந்த இந்தியாவின் முன்னணி DTH நிறுவனத்தில் கூடவா ஆட்கள் இல்லை? //

      ஹி...ஹி நல்ல காமெடி, டாடா ஸ்கைக்கு தமிழ்நாட்டில் 5% அளவுக்கு மார்கெட் ஷேர் இருக்கலாம் ,இதில் 50 கோடி கொடுப்பதெல்லாம் எப்படி?

      டிடிஎச் காரன் ஏன் சொல்லனும், திருட்டி டிவிடியால் அவனுக்கு என்ன இழப்பு.மற்றபடி இப்போ என்ன தொழில்நுட்பம் இந்தியாவில் இருக்குனே தெரியாமல் தான் லோகநாயகர் இப்படி செய்கிறார்,பின்னாடி தான் தெரியும்!!!

      டிடிஎச்சில் ஒளிபரப்பி நல்ல திருட்டு டிவி கிடைத்தால் சரி தான்.

      இதெல்லாம் ஹாலிவுட் காரனுக்கு தெரியாமலா சின்னப்பட்ஜெட் படத்தை மட்டும் வெளியிடுறாங்க,பெரிய பட்ஜெட் என்றால் திரையரங்கில் போடுறாங்க.

      நம்ம ஊரிலும் எத்தனை பேர் 1000 கொடுப்பான், திருட்டு டிவி தயாரிக்கிறவன் தான் கொடுப்பான், மற்றவர்கள் எல்லாம் ரசிகர்களாக இருந்தால் உண்டு.

      நாம என்னிக்குமே காமெடியனுக்கு வில்லன் ஆக மாட்டோம்.

      Delete
    5. சூப்பர் வவ்வால்ஜி, நல்லா பேசுனீங்க :-)

      Delete
  10. nadigar நடிகர் நாசர் தனது சொந்தப்படங்கள் பற்றி பேசும்போது ஒர்தடவை இதைப்பற்றி கூறினார். எந்தப்படம் பார்க்கப்பட வேண்டும் என்பதை விநியோகச்தர்களே முடிவு செய்கிறார்கள்,அதனால் சிறு தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கபடுகிரார்கள் எண்டு. கமல் இதற்கு ஒரு நல்ல முன்னோட்டத்தை உருவாக்குகிறார்.

    ReplyDelete
  11. Very good article. The pity is only educated upper class can follow Kamal's creativity. But the uneducated masses go by gimmics, punch dialogues, funny styles etc. I wish Viswaroopam all sucess and create a flutter in international cinema.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...