2012 சினிமா: பாகம் 02 - தெலுங்கு
9:59:00 PM
தெலுங்கு
சினிமா மலையாளம் அளவிற்கு இந்த வருடம் ஆச்சரியப்படுத்தவும் இல்லை, தமிழ் அளவிற்கு அசிங்கப்படுத்தவும்
இல்லை. ஒட்டு மொத்தமாக ஊத்திக்கொள்ளாமல் ஒரு சில பெரிய பட்ஜெட் படங்கள் நன்றாகவும்,
சில படங்கள் மோசமாகவும் வந்திருந்தது. இந்த வருடத்தின் ஹீரோ யாரென்றால் அது பவன் கல்யாண்
தான். பல வருடங்களுக்குப் பிறகு Gabbar Singh, Cameraman Gangatho Rambabu என்று தொடர்
வெற்றி. அடுத்து வருபவர் நிதின். கிட்டத்தட்ட S. S. ராஜமௌளியின் Sye படத்திற்குப் பிறகு
இந்த வருடம் வந்த ISHQ படம் தான் இவருக்கு
ஓடியிருக்கிறதாம். ஆச்சரியப்படுத்திய இன்னொருவர் ஹீரோவான காமெடியன் சுனில். க்ரனைட்
கல்லை செதுக்கி வைத்தாற்போலான 8 பேக்ஸில் மிரள வைக்கிறார். இந்த வருடத்தின் டாப் இயக்குனர் - பூரி ஜெகன்னாத். மூன்று படங்கள். அதில் இரண்டு ஹிட். மிகப்பெரிய ப்ளாப்
ஸ்டார் - ரவிதேஜா. வெளியான 3 படங்களும் ஊத்திக்கொண்டிருக்கின்றன. அவரது தனது ரூட்டை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. சரி 2012 ஆண்டு வெளியான, நான் பார்த்த தெலுங்கு படங்களைப் பற்றி கீழே.
EEGA
இந்தப்
படத்திற்கு அறிமுகம் தேவையில்லை. தமிழில் பல முறை, தெலுங்கில் ஒரு முறை என்று இந்தப்
படத்தைப் பார்த்திருக்கிறேன். தமிழ் படங்களைப் பற்றிய பதிவில் இந்தப் படம் வர வேண்டுமா
அல்லது தெலுங்கில் வர வேண்டுமா என்ற குழப்பதில் இங்கே(யும்) எழுதியிருக்கிறேன். என்னதான்
தமிழிலும் எடுத்தார்கள் என்று சொன்னாலும், மூலக்கதை எடுக்கப்பட்டது தெலுங்கிற்கு தான்.
இது ஒரு தமிழ் படம் என்று சொல்லி, கொண்டாட மனம் ஒத்துவரவில்லை. S S ராஜமௌலி தனது முழு
விஸ்வரூபத்திற்கு சிறப்பான ஒரு டிரைலராக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஹாலிவுட்டிற்கு
James Cameron என்றால், தென்னிந்திய சினிமாவிற்கு S S R. இருவரது அடுத்தடுத்த படங்களும்
எப்படி இருக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருக்காத ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள்
இல்லை.
S
S ராஜமௌலி பற்றி நான் எழுதிய "கனவு காணுங்கள்" தொடரை இந்த லின்க்களில் போய் படிக்கலாம். அறிமுகம், பாகம் 01, 02, 03, 04, 05
ISHQ
யாவரும்
நலம் / 13 B கொடுத்த விக்ரம் கே. குமாரிடமிருந்து இப்படியொரு ரொமான்டிக் காமெடி படத்தை
நான் எதிர்பார்க்கவே இல்லை. சாக்லெட் ஹீரோவாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் நிதின்.
இவர் ஏன் சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஆக்ஷன் படங்கள் எல்லாம் முயற்சி செய்தார் என்று
தெரியவில்லை! ஏற்கனவே Ala Modalaindi யில் போன வருடம் பட்டையைக் கிளப்பியிருந்த நித்யா
மேனன், இந்த வருடமும் கலக்கியிருக்கிறார். அவ்வளவு அழகு, அவ்வளவு க்யூட். ஹீரோ, ஹீரோயின்
சந்திக்கிறார்கள், முதலில் சின்ன சண்டை, பின் ஈர்ப்பு, பின் நட்பு, சரியான ஒரு இடத்தில்
காதல், ஒரு not so dangerous டைப் வில்லன், ஒரு பைட், சுபம். முதல் பாதியின் முதல்
பாதி முழுவதும் ஒரு ஏர்போர்ட், ஏர்ப்ளேனிற்குள் நடக்கிறது. பின் ஒரு கல்யாண வீட்டில்
நடக்கிறது. வில்லன் என்ட்ரி, அது இது வெல்லாம் இரண்டாம் பாதியில் தான். ஆனால் அதுவும்
நன்றாகத் தான் இருந்தது. வில்லன் துரத்தும் போது ஒரு ஹீரோயின் இவ்வளவு என்ஜாய் செய்வதை
நான் எந்தப் படத்திலும் பார்த்தது கிடையாது. பி.சி.ஸ்ரீராம் தனது ஒளிப்பதிவில் இந்தப்
படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். இந்த வருடத்தில் நான் பார்த்த,
ரசித்த, மனம் விட்டு சிரித்த சில படங்களுள் இதுவும் ஒன்று.
BUSINESSMAN
மகேஷ் பாபு - இவருக்கென்று எங்கிருந்து தான் இது மாதிரியெல்லாம் கதை பிடிக்கிறார்களோ தெரியவில்லை. படத்தில் லாஜிக் என்பது சுத்தமாக இல்லை. போக்கிரிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமும் இல்லை. ஆனால் படம் பம்பர் ஹிட்! ஒரு இடத்தில் கூட யோசிக்கவே விடாமல், அடுத்தடுத்து என்று அசத்திக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறது. இந்தளவிற்கு "கெத்"தை எல்லாம் தாங்க எந்த ஒரு மாஸ் ஹீரோவாலும் முடியாது. ஆனால் மகேஷ் பாபு அசால்ட்டாக பொருந்திப் போகிறார். பார்க்க சாக்லெட் பாய் போல் இருந்தாலுல் அந்த முறைப்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. பாடல்களில் கூட இவர் பேருக்கு சிரித்ததாகத் தெரியவில்லை. செம்ம கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு, சதா யாரையாவது அறைந்து கொண்டு, பேசிப் பேசியே அலப்பறையைக் கொடுத்துக்கொண்டு... நன்றாகத்தான் இருந்தது. காஜல் அகர்வால் ஹீரோயின். மகேஷ் பாபு முறைத்துக்கொண்டு திரியும் நேரம் போக காஜலை அழவைக்கிறார். காஜலும் பிழிந்து பிழிந்து அழுகிறார். பாடல் காட்களில் வழக்கம்போல குட்டி டிரஸ், சேலையில் வந்து ஆடுகிறார். நச்சென்று மகேஷ் பாபுவிற்கு ஒரு கிஸ்ஸும் கொடுக்கிறார், படத்திற்கு தேவைப்பட்டிருக்கும் (பாட்டு முடியுற இடத்துல எதுக்கு லிப்கிஸ்? அந்தக் கிஸ் கதையை அந்த இடத்திலிருந்து எங்க நகத்தப்போகுது? தெரியவில்லை) உடலில் 10 யானை பலம், மூளையில் 10 சாணக்கியன் பலம் கொண்ட ஒருவன் தான் கிட்டத்தட்ட கார்ப்பரேட் ரவுடிஸம் போன்ற தனது அப்ரோச்சின் மூலம் மும்பையில் உட்கார்ந்து கொண்டு கடைசியில் தன் இஷ்டத்திற்கு இந்தியாவையே ஆட வைப்பது தான் கதை. வசனங்கள் எல்லாம், அதிரிபுதிரி. அதிலும் முக்கியமாக சென்ட்ரல் மினிஸ்டரிடம் "எனக்கு டெல்லியில் எதுவும் வேண்டாம் ஸார்... நான் உங்களுக்கு டெல்லியைத் தர்றேன்" என்று சொல்லும் போது லூசுத்தனமாக இருந்தாலும் என்னால் கைதட்டாமல் இருக்க முடியவில்லை! படங்கள் ஒன்று இது போல் "என்டர்டைன்" செய்ய வேண்டும் அல்லது "எஜுகேட்" செய்ய வேண்டும். ஏன்டா வந்தோம் என்று சாகடிக்கக்கூடாது.
GABBAR
SINGH
Dabangg
நான் தியேட்டரில் பார்த்த முதல் ஹிந்திப் படம். மொழி சுத்தமாகப் புரியவில்லையென்றாலும்
Chulbul Pandey வாக வந்த சல்மானின் ஒவ்வொரு சேட்டைகளையும் ரசித்தேன். அதற்கு நேர்மாறாக
ரசிப்பியா, ரசிப்பியா என்று என்னை செவிலுக்கு செவில் அறைந்தது சிம்புவின் ஒஸ்தி. காளை,
அலை படமெல்லாம் கூட என்னை இவ்வளவு வெறுப்பேற்ற வில்லை. ஒஸ்தியை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருந்த
போது ஒரு காதல் ஜோடியில் (?) பெண், ஆணிடம் “இந்த படத்துக்கு போய் கூட்டிக்கிட்டு வந்தியே,
த்தூ…” என்று துப்பிவிட்டு பாதி படத்திலயே எழுந்து போய்விட்டாள். அது மாதிரி தான் இதுவும்
இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே தான் கப்பர் சிங்கையும் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால்
சிம்பு போல் சாவடிக்காமல் தனக்கு எது வருமோ அதை செமையாகச் செய்து என்னை மீண்டும் குதூகலிக்க
வைத்தார் Gabbar Singh பவன் கல்யாண். ஒஸ்தியை போல் மொத்தமாக அப்படியே ஹிந்தியிலிருந்து
சுடாமல், முக்கிய அம்சங்களை மட்டும் வைத்துக்கொண்டு மீதி திரைக்கதை தங்கள் இஷ்டத்திற்கு,
பவன் கல்யாணிற்கு ஏற்ப எழுதி அசத்தியிருக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் ஹஸ்கி வாய்சில் பேசிக்கொண்டு,
சிக்கென்று இருந்ததும் இதமாக இருந்தது.
JULAYI
திரைக்கதை,
கேரக்டரைஷேசன் சூப்பர், புத்திசாலித்தனமான படம், ஆஹா, ஓஹோ என்றல்லாம் இந்தப் படத்தை
தெலுங்கர்கள் கொண்டாட நானும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். முதல் காட்சியான வங்கிக்கொள்ளை
அப்படியே THE DARK KNIGHT போல் இருந்ததையும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் போகப் போக
பலப் படங்களில் நான் பார்த்த பல காட்சிகள், கேட்ட வசனங்கள் என்று கொஞ்சமாய் படுத்த
ஆரம்பித்தது படம். இத்தனையையும் மீறி முதல் பாதி, புத்திசாலி ஹீரோ, அவனுக்கு இணையான
வில்லன், இருவருக்குள்ளுமான கொஞ்சம் சுவாரஸ்யமான கேட் அண்ட் மௌஸ் காட்சிகள் என்று நன்றாகத்தான்
இருந்தது. ஆனால் இன்டர்வலுக்குப் பிறகு (முக்கியமாக இன்டர்வல் ப்ளாக்) என்னைச் சாவடித்துவிட்டது.
நன்றாக போய்க்கொண்டிருக்கும் ஒரு திரைக்கதையை எப்படி நாசப்படுத்தலாம் என்று இந்தப்
படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். திடீரென்று “கெத்” வில்லன் மொக்கை வில்லனாகிறாகி,
ஹீரோவிடம் தன்னைச் சரண்டர் செய்துகொள்கிறான். “ஏன்டா? நல்லாத்தான போய்கிட்டு இருந்திச்சி”.
ஆனால் ஒன்று. வழக்கம்போல அல்லு அர்ஜுன் டான்ஸ் சூப்பர். ஆனால் அதை MAA TV யில் பார்த்துக்கொள்ளலாமே,
தியேட்டருக்கு ஏன் போக வேண்டும்? இலியானா இருக்கிறார். அவ்வளவுதான்.
SUDIGADU
நம்
“தமிழ்ப்படத்தை" அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். தமிழில் வந்த பல படங்கள் தெலுங்கிலும்
வெளியாகி ஹிட்டடித்திருப்பதால், புதிதாக எதையுமே அவர்கள் செய்யவில்லை. தமிழ் படத்தில்
சிவா செய்வதையே தான் பெரும்பாலும் அல்லரி நரேஷ் செய்கிறார். ஆனால் இம்ப்ரஸிவ் ஆக இருந்தது
என்னவோ சிவா தான். இந்தப் படத்தில் சுவாரஸ்யம் என்று பார்த்தால் தெலுங்கு ஹீரோ டான்ஸ்களை
நக்கலடித்த “சரசரசரசரா” பாடலும் (தமிழில் - ஓமகசீயா) ஒன்றிரண்டு புதிய காட்சிகளும்
தான். மற்றபடி புதிதாக எதுவுமே இல்லை. ஆனால், தமிழ் ஹீரோயினை விட தெலுங்கு ஹீரோயின்
டாப் டக்கர். என்னா பிகரு!
DAMMU
இன்னும்
எப்படி பாலகிருஷ்ணாவெல்லாம் நடித்துக்கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் எனக்கு எப்படி
இருக்கிறாதோ அது போலத்தான் இன்னும் எப்படி இந்த மாதிரியான படங்களையெல்லாம் தெலுங்கர்கள்
எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற சந்தேகம் இருக்கிறது.
ஒரு பெரிய குடும்பம், அதன் கடைசி வாரிசு, ஊரையே மிரட்டி வைத்திருக்கும் ஒரு வயதான வில்லன்,
ஹீரோ தந்தையுடன் அவருக்கு இருக்கும் ஒரு ப்ளாஷ்பேக், இப்பொழுது அவரது மகங்களை முதலில்
எதிர்த்து பின் மெயின் வில்லனிடம் வரும் ஹீரோ… யப்பா… எழுதும் போதே அலுப்பாக இருக்கிறது.
ரெண்டு ரெண்டு பேராக சுழட்டி சுழட்டி ஜூனியர் என்.டி.ஆர் பறக்க விட்டுக்கொண்டே இருக்கிறார்
படம் முழுவதும். எப்படா முடியும் என்றாகிவிட்டது. திரிஷா, கார்த்திகா என்று இரண்டு ஹீரோயிங்கள் இந்தப் படத்தில் இருந்ததே, எனக்கு இங்கு பதிவில் கொடுக்க wallpaperகள் தேடிக்கொண்டிருக்கும் போது தான் நினைவிற்கே வந்தது!
KRISHNAM
VANDE JAGADGURUM
இந்த
வருடத்தில் என்னைப் பெரிதும் ஏமாற்றிய படங்களில் ஒன்று. நான் தியேட்டரில் பார்த்த முதல்
தெலுங்கு படம். Gamyam (தமிழில் காதல்னா சும்மா இல்ல) மற்றும் Vedam (தமிழில் வானம்)
படங்களின் இயக்குனர் க்ரிஷின் அடுத்த படம் என்பதால் இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே
எதிர்பார்ப்பு இருந்தது. முதல் காணொளியில் பத்து அவதார வேஷங்களில் ராணா வர எதிர்பார்ப்பு
அதிகமானது. அதனாலேயே இந்தப் படத்தை முதல் நாள் தியேட்டரில் உடன் ஒரு தெலுங்கு நண்பரை
வைத்துக்கொண்டு பார்த்தேன். ஆனால் எந்த இடத்திலும் எனக்கு சப்-டைட்டிலோ, டிரான்ஸ்லேஷனோ
தேவைப்படவில்லை. ஏனென்றால் படத்தில் நான் புரிந்து கொள்வதற்கு எதுவுமே இல்லை. படம்
காட்டு மொக்கை. ராணா ஹீ-மேன் போல் உடலை ஏற்றியிருந்தார். பிரயோஜனம்? நயன்தாராவெல்லாம்
இப்படி திரும்பி நடிக்க வரவேண்டும் என்று யார் அழுதார்களோ தெரியவில்லை. இந்த படத்தில்
இவர் நடிப்பதைப் பார்ப்பதற்கு பதில், இவரது போட்டோக்கள் பத்து பன்னிரெண்டை எடுத்து
வைத்து மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருக்கலாம். வித்தியாசமே இல்லை. மற்ற படங்களிலாவது ஏதாவது ஒரு ரசிக்கும்படியான, சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தது. இந்தப் படத்தில் எதுவுமே இல்லை.
பார்க்க
வாய்ப்பு கிடைக்காத படங்கள் Ee Rojulu, Poola Rangadu, Cameraman Gangatho
Rambabu, Shirdi Sai, Damarukam, Rebel. நல்ல வேளை சில காட்சிகளுடன் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்
என்று நிம்மதியடைய வைத்த படங்களும் உண்டு. Rachcha, Daruvu, Adhinayakudu. நண்பர்கள் நான் விட்ட படங்கள் ஏதாவது இருந்தால் ரெக்கமன்ட் செய்யவும்.
இவை தவிர, இன்னும் சில படங்களை (2012 ஆண்டு அல்லாத) எனது முகப்புத்தகப்பக்கத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். பார்த்து ரசிக்கவும்.
இவை தவிர, இன்னும் சில படங்களை (2012 ஆண்டு அல்லாத) எனது முகப்புத்தகப்பக்கத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். பார்த்து ரசிக்கவும்.
அப்புறம் ரொம்ப நாளா ஒரு டவுட். அது ஏன் எதுக்கெடுத்தாலும் "பிரம்மானந்தத்தை" கூப்பிட்டு விடுகிறார்கள்? நாம சந்தானம் வந்ததுமே, அவரே "இது ஒன்னும் பெரிய காமெடி இல்லன்னு" சொன்னாலுமே சிரிப்போமே அது மாதிரி பிரம்மானந்தத்த பாத்தாலே சிரிச்சுத் தள்ளிருராங்க மக்கள். நல்ல காமெடியன்; அவர ஏன் இப்படி ஒரு நாள், ரெண்டு நாள் கால்ஷீட்டுக்கு எல்லாம் நடிக்க வச்சு அசிங்கப்படுத்துறாங்களோ. அவர் நடித்ததைவிட, சும்மா தோன்றிய பட எண்ணிக்கை தான் அதிகம். பட எண்ணிக்கையை மட்டும் உயர்த்தி இப்பொழுது என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை!
14 comments
//நம் “தமிழ் சினிமா”வை//
ReplyDelete"தமிழ்ப்படம்" நண்பா..
இதுல பிஸினஸ் மேன் மட்டும் பார்த்தேன்.. லாஜிக் காண்டாக்கினாலும் எப்படியோ சுவாரஸ்யமாக கொண்டு போய் முடித்துவிடுவார்கள்!
தெலுங்குவின் டாப் 4மே (மகேஸ், ராம்சரண், Jr.NTR, பவண்) மாஸை விட்டு அடக்கி வாசிப்பதாகவே தெரியலையே.. எப்படியும் சில வருடங்களில் ரசிகர்களே வெறுத்துப்போய்விடுவார்கள் (விஜய் மாதிரி)..
அப்போ, இப்போதைக்கு தமிழும் தெலுங்கும் லெவல்-டு -லெவல் நிக்குது, இல்லையா?
"தமிழ்படம்" மாற்றிவிட்டேன். நன்றி :-)
ReplyDeleteலெவல்-டு-லெவல் என்று சொல்லமுடியாது. தெலுங்கு சினிமா நம்மை விட ஒரு படி மேல் தான் இந்த வருடம். தமிழைவிட தெலுங்கில் இந்த வருடம் வெற்றியடைந்த, மக்கள் ரசித்த படங்கள் நிச்சயம் அதிகம். நான் மேல் சொன்ன படங்களில் பல வெற்றிப்படங்கள் தான். பிடித்த ஹீரோ படங்கள் சுமாராக இருந்தாலே 50 நாட்கள் ஓட்டுவார்கள் தெலுங்கு ரசிகர்கள். அது தான் அவர்கள் ஸ்பெஷல் :-)
DHENIKAINA READI இதுவும் ஹிட் படம் தான்
ReplyDeleteநன்றி Hemanth... நிச்சயம் இந்தப் படத்தையும் வாய்ப்பு கிடைத்தால் பார்த்துவிடுகிறேன் :-)
Deletedei unaku neram kidacha andari rakshashi nu oru padam irukum atha paaru,..
ReplyDeleteAndala Rakshasi தான டா... வச்சுருக்கேன், பாதுருறேன் :-)
Deleteநான் ஈ பாத்துட்டு ஒரு இருபது இருபத்தஞ்சு தெலுங்கு படங்கள் பார்த்தேன் எதுவுமே பெருசா இம்ப்ரஸ் பண்ணல நமக்கு தெலுங்கு ஒத்து வராது போலன்னு விட்டுடேன் ஆனாலும் ஆக்ஷன் படங்களை விட ரொமான்டிக் காமெடி வகை பிடிக்க தான் செய்ய்து..,
ReplyDeleteபிருந்தாவனம், ஹேப்பி, டார்லிங், பிசினஸ் மேன், கொத்த பங்கார லோகம், Ala modalaindi ஆகிய படங்கள் மட்டும் நன்றாக இருப்பதாக தோன்றியது..,
எல்லா தெலுங்கு படங்களும் நல்லா இருக்கும்னு சொல்லமுடியாது, சில நல்ல படங்களும் தொரந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கும் படங்களில் பிருந்தாவனம், டார்லிங், கொத்த பங்கார லோகம் இன்னும் பார்க்கவில்லை. கூடிய விரைவில் பார்த்துவிடுகிறேன். பரிந்துரைக்கு நன்றிகள்...
Deleteதல,"Business Man" படம் பார்த்து நான் விழுந்து, விழுந்து சிரிச்சேன்......அதுல மகேஷ் பேசுற கிளைமாக்ஸ் டயலாக் தான் செம சிரிப்பு. படம் இங்க, மகேஷ் ஸ்டாண்டர்ட்க்கு பயங்கரமா ஊத்திகிச்சு.
ReplyDeleteநீங்க மகேஷின் அதி தீவிர ரசிகராக இல்லாம இருந்தா அந்த படத்தை அரை மணி நேரத்துக்கு மேல பார்க்க முடியாது.
நான் மகேஷின் தீவிர ரசிகனெல்லாம் இல்லை. ஆனால், அது என்னமோ தெர்ல படம் எனக்குப் புடுச்சிருந்தது :-) மகேஷ் மேனரிஸம் கொஞ்சம் ஓஓஓவர் தான் என்றாலும், நன்றாக்த்தான் இருந்தது. மூளையைக்கழட்டி வைத்துவிட்டு ஜாலியாகப் பார்க்கலாம். அவ்வளவுதான்...
Deleteநான்-ஈ ,பிசினஸ்மேன் ,ரச்சா (ரகளை )
ReplyDeleteதெலுங்கு படங்களை தமிழ் டப்பிங்குடன் பார்த்தேன்.
நான் ஈ சூப்பர் .
பிசினஸ்மேன் கொஞ்சம் கடுப்பு ஏற்றியது .இந்த படம் கதையை தமிழில் எடுத்திருந்தால் ரஜினியே நடித்திருந்தாலும் ஊற்றிகொண்டிருக்கும்.பார்த்தவுடன் எப்படி இந்த படம் எல்லாம் ஆந்திராவில் ஹிட் ஆகுது என்று யோசித்தேன்.என்ன தான் மகேஷ் பாபு இருந்தாலும் தாங்கல .
இன்னொரு கொடுமை ரச்சா .அரத பழசான கதை .உட்கார முடியல நல்ல வேல படம் ஊத்திக்கிச்சு .ராம் சரண் டான்ஸ் தவிர படத்தில் ஒன்றும் இல்ல .தமன்ன வர வர முகம் பிரெஷ்நேசஸ் இழந்து காணப்பட்டது.
இஷ்க் சில நாட்களுக்கு முன் ஜெமினி டி வியில் சில நிமிடங்கள் பார்த்தேன் . நீங்கள் சொல்லித்தான் படம் சூப்பர் என்று தெரிகிறது .
good selections.
--
ரச்சா, ஏதோ ஒரு டிவில சமீபத்துல தான் தமிழ் டப்பிங் போட்டாங்க. முதல் சீனைப் பாத்துட்டே நான் வேற சேனல் மாத்திட்டேன். டூ மச் டா டேய் என்று இருந்தது ஆரம்பமே.
Deleteஇஷ்க் மெய்யாலுமே நல்ல படம். நிச்சயம் ஒரு தரம் பார்க்கலாம்.
மகேஷ் பாபு பிடிக்கும் ஆனா நீங்க சொன்ன எந்த படமும் நான் பார்களா
ReplyDeleteமுடிஞ்சா Eega, Ishq, Gabbar Singh படங்களை பாத்து வைங்க தல :-)
Deleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...