2012 சினிமா: பாகம் 01 - மலையாளம்

10:21:00 AM


ஒரு வழியாக என்னை 100 பேர் follow செய்கிறீங்கள். என்னளவில் இது மாபெரும் வெற்றி, அங்கீகாரம். நண்பர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!

சரி, வருடத்தின் இறுதியை நெருங்கி விட்டோம். மற்ற விஷயங்களை (?) கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு 2012 ஆண்டு சினிமாக்கள் எப்படி இருந்தது? எவை எல்லாம் மகிழ்வித்தது, எவை எல்லாம் எரிச்சல் படுத்தியது, எவை தேறும், எவை தேறாது போன்ற விஷயங்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.  பலர் ஏற்கனவே இது போல் எழுதிவிட்டாலும், நமக்கென்று கடமை என்று ஒன்று இருக்கிறதல்லவா. அதை நிறைவேற்றவே இந்த மினி தொடர்.

2012 - தமிழ் சினிமாவிற்கு சபிக்கப்பட்ட ஆண்டு. வருடா வருடம் தமிழ் சினிமாவின் நிலை படுமோசமாகிக்கொண்டே போனாலும், வழக்கம்போல படங்கள் மட்டும் சென்ற ஆண்டுகளை விட அதிகம் வெளியாகி இருக்கிறது. (கிட்டத்தட்ட 140 படங்கள்). அவற்றில் வெற்றி பெற்றதென்னவோ 10 படங்களுக்கும் குறைவு தான். ப்ளாக் பஸ்டர் ஹிட்கள் இரண்டு - மெகா பட்ஜெட் படமான துப்பாக்கி, மீடியம் பட்ஜெட் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி. மற்றபடி நல்ல படங்கள் என்று பெயர் பெற்று வசூலையும், பாராட்டையும் பெற்ற படங்கள் கலகலப்பு, காதலில் சொதப்புவது எப்படி, பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், அட்டக்கத்தி இத்தியாதி. சுந்தரபாண்டியனையும், கும்கியையும் கூட இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். தமிழில் வெளியான வேற்று மொழிப் படங்களில் மெகா ஹிட் அடித்தவை இரண்டு, நான் ஈ, இங்கிலீஷ் விங்கிலீஷ்.  கர்ணன், சிவாஜி படங்கள் ரீரிலீஸ் படங்களும் நன்றாகவே ஓடின. 

ஓரளவிற்கு கணிசமான தியேட்டர்களில் வெளியான, முக்கியமாக பெங்களூரில் வெளியான அனைத்துப் படங்களையும் நான் பார்த்தேன். அனைத்தையும் தியேட்டரில் தான் பார்த்தேன் என்று சொல்லல முடியாது. 80% தியேட்டரில் தான். தமிழில் நான் இந்த ஆண்டு பார்த்த படங்களில் பெஸ்ட் 10, வொர்ஸ்ட் 10, ஓக்கே 10, 2013 எதிர்பார்ப்பிற்குரிய படங்கள் லிஸ்டை எல்லாம் டீடெய்லாக இந்தத் தொடரின் இறுதியில் பார்ப்போம். 

அதற்கு முன் 2012 ஆம் ஆண்டு வெளியான, நான் பார்த்த வேற்று மொழிப் படங்கள் சிலவற்றைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். ஒரு ரீ-கேப் போல… காரணம் தமிழை விட நமது அண்டை மாநில மொழிப்படங்கள் இந்த வருடம் சக்கைபோடு போட்டுள்ளன. "சுத்தியிருக்குறவனெல்லாம் முன்னேறிக்கிட்டு வர்றான், நீ மட்டும் ஏன்டா இப்படி தண்டமா இருக்க” என்று நாளுக்கு நாள் பட்ஜெட்டையும், நடிகர் / இயக்குனர்களின் சம்பளத்தையும் மட்டுமே உயர்த்திக்கொண்டு வரும் தமிழ் சினிமாவை குத்திக்காட்டவே இந்தத் தொடர்.

பி.கு: "2012 சினிமா" என்கிற இந்தத் தொடர் இந்த வருட இறுதிக்குள் முடிந்து விடும் (என்று நம்புவோம்).  

முதலில் மலையாளம்…

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நான் நிறைய மலையாளப் படங்கள் பார்த்தேன். காரணம், சிம்பிள், நிறைய நல்ல படங்கள் இந்த ஆண்டு வெளியாகியிருக்கிறது. செலெக்டிவாக நான் பார்த்த படங்களைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எல்லா படங்களும் சிறந்த படங்கள் என்று சொல்ல முடியாது. இவை நான் பார்த்த படங்கள். அவ்வளவு தான். இவற்றை ஏற்கனவே எனது முகப்புத்தகத்தளத்தில் வெவ்வேறு தருணங்களில் அறிமுகப்படுத்தியிருப்பேன். கொஞ்சம் விரிவான அலசல் இங்கே.

22 FEMALE KOTTAYAM 
இந்த ஆண்டு நான் பார்த்த முதல் மலையாளப் படம். ஒரு ரேப் விக்டிம், காதலனால் ஏமாற்றப் பட்டு போதை மருந்து தடுப்புச் சட்டத்தால் சிறைக்கு செல்லும் 22 வயதான, கோட்டயத்தைச் சேர்ந்த நர்ஸ், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்குவது தான் கதை. ’I spit on your Grave’ டைப் கதை தான் என்றாலும், மலையாளத்திற்கு இது மிகவும் போல்டான முயற்சி. Rima Kallingal தனது அற்புதமான நடிப்பால் பின்னியிருப்பார். பிரதாப் போத்தனது வில்லத்தனம் அதியற்புதம் (அவரது முடிவும் அப்படியே). ஹீரோவாக (ஆன்டி-ஹீரோ) நடித்திருக்கும் Fahad Fazil நடிப்பும் அற்புதம். இறுதியில் இவரது ஆயுதத்தை ஆப்ரேட் செய்து எடுத்து, மொட்டையாக்கி விடுவார் ஹீரோயின். நல்ல முடிவு. Aashiq Abu இயக்கியிருக்கும் இந்தப் படம் மலையாளத் திரையுலகின் வளர்ச்சிக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.



RUN BABBY RUN 
வரிசையாக ப்ளாப்களாக கொடுத்துக் கொண்டிருந்த லாலேட்டனுக்கு அற்புதமாக பிட் ஆகும் ஸ்கிரிப்ட் கிடைக்க பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். இவருக்கு ஜோடி அமலா பால். தன்னை விட இரு மடங்குக்கு மேல் வயதுள்ளவருடன் நடிக்கிறோம் என்பதே வெளியே தெரியாமல் நல்ல மெச்சூர்டாக நடித்திருப்பார் அமலா பால். இவருக்குள் இவ்வளவு நடிப்புத் திறமை இருக்கும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. டி.வி மீடியா உலகத்திற்குள் நடக்கும் கதை. வேணு ஒரு புகழ்பெற்ற கேமராமேன், ரேணு வளர்ந்து வரும் ரிப்போர்ட்டர். இருவரும் ஒரு அரசியல்வாதி செய்யும் கொலையை படம்பிடிக்கப் போக, அது fake ஆகிறது. முக்கிய அரசியல் பிரமுகரின் பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள் என்ற பழியில் இவர்கள் சிக்கிக்கொள்ள, ஒரு ப்ளாஷ்பேக் காதல், ஒரு துரோகம், சிலபல சுவாரஸ்யமான கேட் அண்ட் மௌஸ் ஆட்டங்கள், நட்பு, சுபம் என்று படம் முடிகிறது. எழுதி இயக்கியிருப்பவர் Josh. இந்தப் படத்தில் மோகன்லால் தன் சொந்தக்குரலில் ஒரு பாடல் வேறு பாடியிருக்கிறார் (தேவதையைக் கண்டேன் பட "அழகே பிரம்மனிடம்" பாடல் போலவே இருக்கும்)

  
THATTATHIN MARAYATHU 
இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்படாதவரே இருக்க முடியாது என்று சொல்லுமளவிற்கு இந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம். மலையாள திரைக்கதை மன்னன் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஒரு சாதாரண காதல் கதை. ஒரு உம்மாச்சிகுட்டியின் (மலையாள முஸ்லீம் பெண்) மீது காதல் கொள்ளும் ஒரு நாயரின் கதை. பெரிய வில்லத்தனங்களெல்லாம் இல்லாமல், சொல்ல வந்த விஷயத்தை காதாலாக, நகைச்சுவையாக சொல்லிமுடித்திருக்கிறார் இயக்குனர். இளசுகளின் மத்தியில் நம் “வின்னைத்தாண்டி வருவாயா” விற்கு இருக்கும் மவுசையே தாண்டி விட்டது இந்தப் படம். அந்த உம்மாச்சிக்குட்டி இப்பொழுது சிவாவிற்கு ஜோடியாக தில்லு முல்லு ரீமேக்கில் நடித்துக்கொண்டிருக்கிறது.


FRIDAY 
இந்த படம் அதிகம் கவனிக்கப்படாமல் போனது எனக்கு வருத்தமே. 11-11-11 வெள்ளியன்று, ஒரு நாளில் நடக்கும் One Day – Many Stories டைப் கதை. பல்வேறு விதமான மக்கள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கதை, இறுதியில் ஒரு கன்வின்சிங் கிளைமாக்ஸ். இது தான் Friday. திரைக்கதைக்கும், படத்தொகுப்பிற்கும் இந்தப் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. Lijin Jose இந்தப் படத்தின் இயக்குனர். 11-11-11 அன்று ஒரு ரெஸ்டாரன்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது இந்தக் கதை தோன்றியதாகக் கூறியிருக்கிறார். படமாக ஈர்த்தது என்று சொல்ல முடியாது, இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்தான் ஆனால், பத்து பன்னிரெண்டு முக்கிய கதாப்பாத்திரங்கள், அவர்களுக்கு வேறு வேறு தளங்கள், பிரச்சனைகள், தீர்வுகள் என்று கதை இருப்பதால் இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது என்பது தான் உண்மை.


ORDINARY 
தமிழ் கினிமாவிற்கு இந்த வருடம் எப்படி கும்கியோ அது போல் மலையாளத்திற்கு இந்தப் படம். கதை கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும், படம் விஷ்வல் டிரீட். சாதாரண கதை, ஆனால் அசாதாரணமாகக் காட்டியது ஒளிப்பதிவு. கேரள மலைக்கிராமமான “கெவி” என்னும் ஊருக்குச் செல்லும் ஒரே அரசுபேருந்திற்கு நடத்துனராகச் சேரும் ஹீரோ குஞ்சக்கோ போபன். டிரைவர் பிஜு மேனன். இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு, கெவி பெண் மேல் காதல் கொள்ளும் குஞ்சக்கோ, பின் வரும் ஒரு பெரிய பிரச்சனை, அதை சிக்கிக்கொள்ளூம் நண்பர்கள், ஒரு சின்ன டுவிஸ்ட், துரோகம், நம்பிக்கை என்று நண்பர்கள் எப்படி அந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி வெளிவருகிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்திருப்பவர் Faisal Ali, இயக்கியிருப்பவர் Sugeeth. 


SPIRIT 
படம் முழுவதும் மொடா குடிகாரனாக வலம்வந்துவிட்டு, திடீரென்று ஒரு மரணத்தால் திருந்தி பின் வேறொரு ஏழை ப்ளம்பரின் ஒரு நாள் குடி வாழ்க்கையை டாக்குமெண்டரி போல் எடுத்து உலகிற்குக் காட்டி “குடி குடியைக் கெடுக்கும்” என்று லாலேட்டன் மோகன்லால் போதிக்கும் படம். மோகன்லால் படம் முழுவது குடித்துக்கொண்டே இருக்கிறார், யாரையாது செமையாக திட்டிக்கொண்டே இருக்கிறார், ‘Shoe Your Spirit’ என்று ஒரு டிவி நிகழ்ச்சி நடத்துகிறார், அதுவும் இலவசமாக நடத்திக்கொடுக்கிறார். எல்லாரும் அவரை ஜீனியஸ் என்கிறார்கள். வீட்டில், பாரில், முன்னாள் மனைவி இந்நாள் கணவருடன் சேர்ந்து நடத்தும் ரிஸார்ட்டிலும் போய்க் குடிக்கிறார். இவரது பெயரைச் சொல்லி இவரது “கலை” நண்பர்களும் குடிக்கிறார்கள். ஆனால் இவ்வளவு குடிக்கு எங்கிருந்து காசு கிடைக்கிறது என்று தான் சொல்லவே இல்லை. குடிப்பவர்கள் எல்லாம் இந்தப் படத்தை பார்த்த மாத்திரத்தில் திருந்தி விடுவார்கள் என்றெல்லாம் மூடத்தனமாக சொல்லமுடியாது. குடிக்காதவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது. மொத்தத்தில் Nothing is special in this Spirit!


பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் போன படங்களும் உண்டு. Ustad Hotel, Mallu Singh, Mayamohini, My Boss, Second Show, Ozhimuri, Trivandrum Lodge, Thappanna , Diamond Necklace என்று நிறைய இருப்பதாய் தெரிகிறது. இவற்றில் எதுவெல்லாம் நல்ல படம் என்று தெரியவில்லை. ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு வேறு ஒரு சமயத்தில் எழுதுகிறேன். இவை தவிர்த்து நண்பர்கள் பார்த்த நல்ல படங்கள் ஏதேனும் இருந்தால் சிபாரிசு செய்யவும். 

You Might Also Like

26 comments

  1. தல நீங்க சூப்பரா சினிமா பத்தின பதிவுகல அலசி ஆராஞ்சு காய போடுறிங்க சூப்பர் இந்த தொடர நான் ஆவள எதிர் பாக்குறேன்

    ReplyDelete
  2. Really nice your reviews and started some of the films downloaded after seeing your reviews.. Keep it up..

    ReplyDelete
  3. படங்கள் பற்றி நல்ல அறிமுகம் தல. நான் இன்னும் எந்த படமும் பாக்கல. ‘தட்டத்தின் மறயத்து’, ‘ரன் பேபி ரன்’ படங்களை தரவிறக்கி வச்சிருக்கேன். சீக்கிரம் பாக்கணும்.

    Ustad Hotel, Mallu Singh, Mayamohini,Diamond Necklace,Second Show - இந்த படங்கள் எல்லாம் நல்லா இருக்குனு கேள்விபட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தரவிறக்கி வைத்திருக்கும் இரண்டு படங்களுமே அருமையான படங்கள். தாராளமாகப் பார்க்கலாம் :-)

      Delete
  4. உஸ்தாத் ஹோட்டல் பாருங்க... அப்படியே கிறங்க வெச்சிருப்பாங்க.. அதுவும் திலகன் நடிப்பு.. சான்ஸே இல்லாதது. அதுவும் க்ளைமேக்ஸ்ல நம்ம ஜெயப்பிரகாஷ் தமிழ்லையே பேசி நடிச்சிருப்பாரு. பிரமாதமான படம். அடுத்து மாயமோகினி. சிரிச்சி சிரிச்சி வயித்து வலி வரலைன்னா நான் அதுக்கு பொறுப்பு,,, டயமண்ட் நெக்லஸ் ரொம்ப பெருசா சொல்ல முடியலைன்னாலும் நிச்சயம் பார்க்கலாம்.. நீங்கள் எழுதி இருந்த தட்டத்தின் மறையது, 22 ஃபீமேல் கோட்டயம் படங்கள் இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் மூவிஸ்.. நீங்க எழுதின ஆர்டினரியைத்தான் (மலையாளத்தில் ஓர்டினரிதான்)தமிழில் ஜன்னல் ஓரம் திரைப்படமாக எடுக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. உஸ்தாத் ஹோட்டல் டிவிடி இன்னனும் ரிலீஸ் ஆகலன்னு நினைக்கிறேன் தல. வலைவீசி தேடிகிட்டு இருக்கேன். கிடைச்சவுடன் பாத்துருரேன். மலையாளம் கொஞ்சம் புரியும் தான். ஆனால் எல்லா வசனத்தையும் புருந்து படம் பார்க்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

      உள்ளதை உள்ளபடியே எடுத்தால் "ஜன்னல் ஓரம்" பெரிதாக வெற்றியடையும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. கரு.பழனியப்பன் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.

      Delete
    2. Ustad Hotel Pirate Bay ல DvdRip இருக்கு நிறைய சீட்ஸும் இருக்கு..,

      Delete
    3. anand a - Torrent file is not there in piratebay தல :-(

      Delete
  5. நம்மளால எப்பயாவதுதான் மலையாளப்படம்லாம் பார்க்க முடியும். கடைசியா ராஜா போக்கிரிராஜாதான் பார்த்தது.. இங்க இவ்வளவும் கிடைக்காது. ரன் பேபி ரன் மட்டும் ஒரு கடையில பார்த்தேன். படத்தையும் டக்குனு பார்க்க முயற்சிக்கிறேன்! இந்த தொடர்பதிவு கான்செப்ட்டும் நல்லா இருக்கு.. ஆனா இதை என்ன செஞ்சாவது (புது வருஷத்துல தொடர்ந்நதாலும் பரவால்லை) கம்ப்ளீட் பண்ணிருங்க, ப்ளீஸ் நண்பா!!

    ReplyDelete
    Replies
    1. //கம்ப்ளீட் பண்ணிருங்க, ப்ளீஸ் நண்பா!!// உங்க ஆதங்கம் புரியுது தல :-) முடிச்சிரலாம் :-)

      அடுத்து தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழுக்கு ரெண்டு. அவ்வளவு தான் தொடர் முடிந்தது.

      Delete
  6. மலையாள படங்களை பற்றி அவ்வளவா தெரியாது.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கிழடுகளை ஓரம் கட்டி இளம் நடிகர்கள்,இயக்குனர்கள் மேலே வந்து கொண்இருக்கிறார்கள் என்பது மட்டும் புரியுது.

    என்னது சிவாஜி இப்போவும் பெரிய ஹிட்டா?

    லேட் பண்ணாமல் அடுத்த பகுதி போஸ்ட் செய்யுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. அட தலைவர் படம், அதனால தான் ஹிட்டுன்னு சொன்னேன் ;-)

      அடுத்த பதிவு நாளை...

      Delete
  7. உங்க சினிமா மீதான காதல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு தல. எப்பவும் சொல்லுறது தான், கலக்கல் பதிவு.
    ஏனோ தெரியல, எனக்கு மலையாள சினிமா வாடையே பிடிக்காது. தெலுங்கு படத்தை கூட கஷ்டப்பட்டு பார்திருவேன், ஆனா மலையாளம் பார்த்ததே இல்ல தல..

    ReplyDelete
    Replies
    1. மலையாள சினிமா மீது எனக்கும் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் கடந்த 2,3 வருடங்களாகத்தான் சில படங்களை பார்த்து வந்தேன். இந்த வருடம் நிறையவே பார்த்துவிட்டேன். இன்னும் பார்க்க நிறைய இருக்கிறது. டிப்பிக்கல் "உலகபடம்" போல மெதுவான் திரைக்கதை, அழுத்தமான உணர்வுகளை மட்டும் தான் மலையாள சினிமா என்று fix செய்து வைத்திருந்த எண்ணத்தை தவிடு பொடி ஆக்குகிறது நான் பார்க்கும் படங்கள். நீங்களும் நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். சூப்பர் ஆரம்பமாக "தட்டத்தின் மறையத்து" பாருங்கள் :-)

      Delete
  8. அருமையான அலசல் தல.. நானும் மலயாளப்படங்களின் தீவிர ரசிகன். அவர்களின் படங்களின் மிகச்சாதார கதைகளுக்கும் அற்புதமாக திரைக்கதை அமைத்திருப்பார்கள். அதுவும் இப்போதைய புதிய தலைமுறை கலைஞர்கள் வெளுத்து வாங்குகிறார்கள்.. நிறைய மலயாளப்படங்களை பார்க்கும் போது தமிழிலும் இப்படி வராதா என்ற ஏக்கத்தையே தருகிறது.

    நீங்கள் சொன்னதில் friday மற்றும் பார்க்கவில்லை அதையும் பார்த்துடனும்.

    உஸ்தாத் ஹோட்டல், டயமண்ட் நெக்லஸ் நிச்சயம் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. friday அருமையான படம் என்று சொல்ல முடியாது ஆனால் நல்ல முயற்சி. நிச்சயம் ஒரு தரம் பார்க்கலாம்.

      தல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்பொழுதெல்லாம் மற்ற மொழிப்படங்களைப் பார்த்து ஏக்கம் வரவில்லை என்றால் தான் ஆச்சரியமே. நமது நிலைமை படுமட்டமாகி பல காலமாகிறது...

      Delete
  9. http://thepiratebay.se/search/ustad%20hotel/0/99/0

    http://thepiratebay.se/user/Ronm1989/

    ReplyDelete
    Replies
    1. நண்பரே - நீங்கள் கொடுத்துள்ள லின்க் கில் Torrent file இல்லை :-(

      Delete
  10. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். உங்களை பின் தொடரலாம் என முடிவெடுத்துவிட்டேன். ஆனால், இன்னும் ஆழமாக அலசி எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமரன். ஒவ்வொரு படத்தையும் ஆழமாக அலசி எழுதுவதென்பது பெரிய வேலையாகிப் போகும் :-) இருந்தாலும் முயற்சி செய்கிறேன்...

      Delete
  11. நீங்கள் எழுதியதில் 22 பெண் கோட்டயம் பார்த்து, என் தளத்தில் விமர்சனம் எழுதியுள்ளேன். தட்டத்தின் மரயாது பார்க்கலாம் என யோசித்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனத்தை மற்ற பதிவுகளையும் படித்துக்கொண்டு வருகிறேன் :-)

      Delete
  12. Dont miss diamond necklace, usthad hotel and second show...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...