ஒரு ரயில் பயணம்...

12:52:00 PM

ஒரு முறை என்னைப் போலவே ஒரு சாப்ட்வேர் ஆசாமி தன் மானேஜருடன் ரயிலில் பயணம்செய்து கொண்டிருந்தான். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான இளம் பெண்ணும் அவளது பாட்டியும் உட்கார்ந்து இருந்தனர். மானேஜர் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் நம்மாளும், பாட்டிஇருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் அந்த இளம் பெண்ணும் அமைதியாக வேறு பக்கம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

அப்போது ரயில் ஒரு சுரங்கப் பாதை வழியாக சென்றது. ஒரு அரை நிமிட இருட்டு. திடீரென்று 'பசக்' கென்று முத்தமிடும் சத்தமும்; அதைத் தொடர்ந்து 'பளார்' என்று ஒரு அறை விழும் சத்தமும்கேட்டது.

சுரங்கப் பாதையை விட்டு ரயில் வெளியே வந்தது. யாரும் பேசவில்லை. யார் முகத்தையும் பார்க்கவில்லை. என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரியாக நினைத்துக் கொண்டனர்.

முதலில் மானேஜர்:
சே! இந்த சின்னப் பயல் அந்தப் பெண்ணை முத்தமிட்டதற்கு இந்தக் கிழவி என்னை அறைந்துவிட்டாளே !

பாட்டி:
சே! இந்த இரண்டு ராஸ்கலில் எவனோ ஒருத்தன் என் பேத்தியை முத்தமிட்டிருக்கிறான். ஆனால் என் பேத்தி உடனே சுதாரித்துக் கொண்டு அவனை அறைந்திருக்கிறாள் !

பேத்தி:
சே! இந்த இளைஞன் என்னை முத்தமிடும் சத்தம் கேட்ட இந்த மானேஜர் அவனை அறைந்துவிடானே !

கடைசியாக நம்மாளு:
ஐய்யா, இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்! ஒரே சமயத்தில் ஒரு அழகான பெண்ணை முத்தமிடவும், என் மானேஜரை ஒரு அறை விடவும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது !

எப்புடி :)

You Might Also Like

3 comments

 1. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


  உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-ஓட்டளிப்புப் பட்டை
  3-இவ்வார கிரீடம்
  4-சிறப்புப் பரிசு
  5-புத்தம்புதிய அழகிய templates
  6-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...