கனவு காணுங்கள் - S S ராஜமௌலி – பாகம் 03
11:43:00 AMதெலுங்கில் Vikramarkudu (ஒரிஜினல், ஹீரோ ரவிதேஜா), தமிழில் சிறுத்தை (ரீமேக், ஹீரோ கார்த்தி), கன்னடத்தில் Veera Madakari (ரீமேக், ஹீரோ சுதீப்), ஹிந்தியில் Rowdy Rathore (ரீமேக், ஹீரோ அக்ஷய் குமார்), வங்காள மொழியில் Bikram Singha: The Lion is Back (ரீமேக், ஹீரோ Prasenjit), மலையாளத்தில் Vikramathithya (டப்பிங்), போஜ்பூரியில் Vikram Singh Rathod IPS (டப்பிங்) என்று இந்த படம் / கதை இந்தியா எங்கும் சுற்றி வந்துள்ளது. வெளியான அத்தனை மொழிகளிலும் அபார வெற்றி, அமோக வசூல்! S S ராஜமௌலியின் அசிஸ்டண்ட் ஒருவர் செய்து காண்பித்த “ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா” இன்று நாடு முழுக்க பிரபலம். படத்தின் கதை, காட்சியமைப்புகள், ஸ்பெஷாலிட்டி என்ன என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவை அனைத்தும் நமக்கு மனப்பாடம்!மற்ற எந்த வெர்ஷனையும் ஒரிஜினலான தெலுங்கு வெர்ஷன் அற்புதமாக இருக்கும் என்பது என் கருத்து. இன்டர்வல் சண்டைக் காட்சி மற்றும் பயம் பற்றி மேலதிகாரியிடம் பேசும் காட்சியில் பின்னியிருப்பார் ரவிதேஜா.
அந்தக்
காட்சிகள் மற்றும் தி பேமஸ் ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா பாடல் வெர்ஷன் வாரியாக உங்களுக்காக (படப்பெயர்களை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்!)
Jinthatha jintha jintha – Vikramarkudu, சிறுத்தை, Veera Madakari, Rowdy Rathore,
Bikram Singha
The Definition of Fear - Vikramarkudu,
சிறுத்தை, Veera Madakari, Bikram Singha
The
Interval Fight - Vikramarkudu, சிறுத்தை, Veera Madakari, Rowdy Rathore, Bikram Singha
என்ன இருந்தாலும் ஒரிஜினலுக்கு இருக்கும் சுவையே தனி தான்.
சென்ற வார விகடனில் S S ராஜமௌலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
“உங்க படங்களை தமிழ், மலையாளம், கன்னடம்,
இந்தினு ரீமேக் பண்றாங்க. அதை நீங்களே பண்ணிடலாமே?''
'ரீமேக் ரொம்ப போருங்க. சுடச் சுடச்
சாப்பிடுற மாதிரி வராது. ஒரு கதையைப் பிடிச்சதும் அடிச்சுப் பிடிச்சு வேலை பார்க்கிற
எக்ஸைட்மென்ட் ரீமேக்ல வராது. அதனால, நான் ரீமேக் பண்றது இல்லை. நல்ல படங்களைப் பார்த்தா,
ரொம்ப சந்தோஷப்படுவேன். ரீமேக் பண்ண ஆசைப்பட மாட்டேன். என் சாப்பாட்டை நானே சமைச்சு,
நானே பரிமாறணும்.''
மேலும் ரீமேக் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் இன்னொரு முக்கிய
விஷயம். தமிழில் ரீமேக் செய்யப்பட்ட மற்ற S S R ந் படங்கள் அனைத்தும் (Student No
1 (Student No 1), கஜேந்திரா (Simhadri), குருவி (Chatrapathi)) அட்டர் பிளாப். இந்த
படம் மட்டும் தான் பம்பர் ஹிட். இந்த பயத்தை கார்த்தி வெளிப்படையாகவே “ராஜமௌலி படத்தையா
ரீமேக் பண்ணப்போறீங்க, ஜாக்கிரதைனு நிறைய பேர் சொன்னாங்க. அந்த பயம் எங்களுக்கும் இருந்துச்சு.
அவர் அளவுக்கு கொடுக்கமுடியுமா எங்களுக்கு சந்தேகம் இருந்துக்கிட்டே தான் இருந்துச்சு”
என்று “நான் ஈ” பாடல் வெளியீட்டின் போது ஒத்துக்கொண்டார். இது தான் ராஜமௌலி!
Vikramarkudu வெற்றிப் படத்திற்கு பிறகு மீண்டும் தன் ஜக்கண்ணாவுடன்
இணைந்தார் ஜூனியர் N T R. படம் Yamadonga (2007). 1988 ஆம் ஆண்டு வெளியான மெகா ஸ்டார்
சிரஞ்சீவியின் Yamudiki Mogudu (நம்ம தலைவர் நடிச்ச “அதிசய பிறவி”) படம் தான் இந்தப்
படத்திற்கு இன்ஸ்பிரேஷன்! தவறுதலாக யமலோகத்திற்கு வரவழைக்கப்படும் ஹீரோ யமலோகத்தையே
ஒரு கலக்கு கலக்கி மீண்டும் புதுத் தெம்புடன் பூலோகம் திரும்பி விட்ட காரியத்தை முடிப்பதே
கதை! தெலுங்கில் இதே சாயலில் வந்த மற்றுமொரு படமென்றால் அது Yamagola (1977). தமிழில்
லக்கி மேன் - இங்கு யமன், சித்திரகுப்தன் பூலோகம் வருவர்), இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
– இங்கு வானுலகம் செல்லும் சாதாரண மனிதன் சொர்க்கம், நரகம் இரண்டையும் ஒரு கலக்கு கலக்குவான்
(கலக்கியிருக்க வேண்டும்).
Yamadonga என்றால் "யமகாதத்திருடன்" என்று பொருள். படத்தின்
கதை இது தான். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்து தாத்தாவுடன் வாழ்பவள் சிறுமி மஹி.
அவளுக்கு கடவுளின் அருள் இருப்பதாகவும் நிச்சயம் ஒரு ராஜகுமாரன் வந்து அவளைத் தூக்கிச்
செல்வான் என்றும் ஏற்றிவிடுகிறார் (!) கோவில் பூசாரி. நரசிம்ம சாமியின் அருள் பெற்றது
என்று ஒரு டாலரையும் கொடுக்கிறார். முறிந்து விழப்போகும் ராட்டினத்திலிருந்து தன்னைக்
காப்பாற்றிய திருடனான சிறுவன் ராஜாவை ராஜகுமாரன் என்று நம்பி சாமி அருள் பெற்ற அந்த
டாலரைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறாள். பைசா பெறாத அந்த டாலரை எங்கு தூக்கியெறிந்தாலும்
மறுபடியும் மறுபடியும் ராஜவிடமே வந்து சேர்கிறது. டைட்டில்… சிறுவன் ராஜா தான் இப்போது
பலே திருடனான ஜூனியர் N T R. தாத்தா இறந்த பின் மஹி (இப்போது ப்ரியாமணி) தன் சொந்த
வீட்டிலேயே சொந்தங்களால் வேலைக்காரியாக நடத்தப்படுகிறாள். என்றைக்காவது ஒருநாள் ராஜகுமாரன்
வந்து தன்னைக் காப்பாற்றிச் செல்வான் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள்.
இதற்குப் பிறகு சொல்லவா வேண்டும் படம் அதகளம் தான். முக்கியமாக
குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மற்றுமொரு கதாப்பாத்திரம் கந்துவட்டி தனலட்சுமி (மம்தா
மோகந்தாஸ்). பாவா… என்று மம்தா வரும் காட்சிகள் எல்லாம் கவர்ச்சி மழை தான். இந்தப்
படத்தில் பெரிதும் பேசபட்டது பிரம்மாண்ட அரங்குகள் (செட்) மற்றும் VFX. இந்த ஏரியாக்களைப்
பற்றி தனியாகவே ஒரு பதிவில் எழுதப் போகிறேன் என்பதால் அதை விட்டுவிடுவோம். அனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கு சொல்லியே ஆக வேண்டும். ஜூனியரின் தாத்தாவான ஒரிஜினல் NTR யமலோகத்தில் தன் பேரனுக்கு அட்வைஸ் செய்து, பஞ்ச் டயலாக் பேசி, ஒரு பாடலுக்கு சரிக்கு சமமாக ஆடியிருப்பார். Technology என்ற வார்த்தைக்கு எளிமையான அர்த்தம் தந்த காட்சிகள் இவை என்பது என் கருத்து. NTR திரையில் தோன்றும் காட்சிகளுக்கு ஆந்திராவே அல்லோல் கல்லோல் பட்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த பாடல் இதோ.
வசூலில் சாதனையை ஏற்படுத்திய இந்தப் படம் S S R ன் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் படம். அதாவது அடுத்து வரவிருந்த மஹதீராவிற்கு முன்னோடி. கிராபிக்ஸ் காட்சிகளில் ஈகாவிற்கு அடிநாதம். ஜூனியர் N T R உடன் மூன்றாவது மெகா வெற்றி. இந்தப் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி, ஆப்பரேஷன் அது இது என்று பல சிரமங்களுக்கிடையே தனது பப்ளிமாஸ் உடலை ட்ரிம்மாக்கியிருக்கிறார் ஜூனியர். பின்ன யமதர்மராஜா என்ன சட்டை போட்டுக்கொண்டா வர முடியும்? 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படம் மொத்தமாக 29 கோடி லாபத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
வசூலில் சாதனையை ஏற்படுத்திய இந்தப் படம் S S R ன் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் படம். அதாவது அடுத்து வரவிருந்த மஹதீராவிற்கு முன்னோடி. கிராபிக்ஸ் காட்சிகளில் ஈகாவிற்கு அடிநாதம். ஜூனியர் N T R உடன் மூன்றாவது மெகா வெற்றி. இந்தப் படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி, ஆப்பரேஷன் அது இது என்று பல சிரமங்களுக்கிடையே தனது பப்ளிமாஸ் உடலை ட்ரிம்மாக்கியிருக்கிறார் ஜூனியர். பின்ன யமதர்மராஜா என்ன சட்டை போட்டுக்கொண்டா வர முடியும்? 100 நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படம் மொத்தமாக 29 கோடி லாபத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
Yamadongaவின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தைரியமாக
அடுத்த மெகா பட்ஜெட் படத்திற்குத் தயாரானார் S S R. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான
ராம் சரணின் முதல் படம் சிருத்தா பிளாப். தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மகன் என்னும் கௌரவத்தைக்
காப்பாற்ற அடுத்த படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும். வந்தார் S S R. படம்
Magadheera (2009). ராம் சரணுக்கும் ராஜமௌலிக்கு உள்ள பொதுவான பொழுதுபோக்காக குதிரை
யேற்றம் இருக்கிறது. அதைப் பின்புலமாக வைத்தே சரித்திரக் கதை ஒன்றை எழுதிவிட்டார்
S S R. உயரம் குள்ளமான ராம் சரணால் எப்படி ராஜகுடும்பத்து பாதுகாவலனாக நடிக்க முடியும்
என்று கேள்வி எழுந்தது. படத்தைப் பார்த்த நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும், ராம்
சரண் காலபைரவன் / ராஜபார்த்திபன் கதாப்பாத்திரத்திற்கு எவ்வளாவு பொருத்தமாக இருந்தார்
என்பது படம் பார்த்த நம் அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தை நான் அனைவரும் தெலுங்கிலோ
தமிழிலோ (மாவீரன்) நிச்சயம் பார்த்திருப்போம் என்பதால் கதைச்சுருக்கம் தேவையில்லை என்று
நினைக்கிறேன். இந்தப் படத்தின் பின்புலத்திலும் கிராபிக்ஸ் மற்றும் இதர டெக்னிக்கல்
சமாச்சாரங்கள் புகுந்து விளையாடியிருக்கும். அதைத் தனிப்பதிவில் பார்க்கலாம். 40 கோடி
பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டம், 80 கோடி லாபத்தைத் தந்துள்ளது. ஆந்திராவில், சில தியேட்டர்களில் 365 நாட்கள், ஒரு தியேட்டரில் மட்டும் 1000 நாட்கள் (தினம் ஒரு ஷோ) ஓடியிருக்கிறது இந்தப் படம். தமிழில் 8 கோடி லாபம். தமிழில் அதிகம் லாபம் சம்பாதித்த டப்பிங் படங்களில் இதுவும் ஒன்று.
எதையுமே சொல்லவில்லை என்றாலும் இந்தச் சொல்லாமல் இருக்க முடியாது. The 100 Warriors Fight! முழுக்க முழுக்க S S Rன் ஆளுமையைக் காட்டும் இந்தக் காட்சி, "ஒவ்வொருத்தனா அனுப்பாத ஷேர்கான், மொத்தமா அனுப்பு" - இது வரை 1000 தடவையாவது நான் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் அந்த சண்டைக்காட்சி, உங்களுக்காக...
எதையுமே சொல்லவில்லை என்றாலும் இந்தச் சொல்லாமல் இருக்க முடியாது. The 100 Warriors Fight! முழுக்க முழுக்க S S Rன் ஆளுமையைக் காட்டும் இந்தக் காட்சி, "ஒவ்வொருத்தனா அனுப்பாத ஷேர்கான், மொத்தமா அனுப்பு" - இது வரை 1000 தடவையாவது நான் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் அந்த சண்டைக்காட்சி, உங்களுக்காக...
தொடரும்…
4 comments
இதுவரைக்கும் பார்த்திருக்கிறது இரண்டே இரண்டு தெலுங்குப் படம் தான். அதில் பிடித்திருந்தது மஹதீரா. அருமையான ஸ்டைலிஷ் மேக்கிங்.
ReplyDeleteபதிவை வாசித்தபிறகு Yamadonga படத்தை எடுத்துப் பார்க்கணும் போலயிருக்கு.
தமிழ் பட ரசிகர்களுக்கு இப்போது வரும் பெரும்பாலான தெலுங்கு படங்கள் நிச்சயம் பிடிக்கும். நிறைய படங்கள் YouTubeலேயே கிடைக்கிறது (Yamadonga உட்பட)... நேரம் இருப்பின் ஒவ்வொன்றாகப் பார்க்கவும்...
ReplyDeleteதல.....
ReplyDeleteசிறுத்தை படத்தில் கார்த்தியை விட விக்ரம் நடித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்தது இருக்கும்...ரவிதேஜாவை நன்றாக மேட்ச் செய்து இருப்பார் விக்ரம்.... எனக்கு சிறுத்தை விட Vikramarkudu தான் பிடித்து இருந்தது.
Magadheera படத்தை பார்த்து இப்படி ஒரு கற்பனை எனக்கு வந்தது... படத்தை தமிழில் யார் செய்ய வேண்டும் என்று.. எனக்கு தோன்றியது சூர்யா மற்றும் தலைவர் ரஜினி தான். சூர்யா மாடர்ன் பாய் கேரக்டர்.. ரஜினி முன்ஜென்ம கேரக்டர்.. அதையும் SSR தான் டைரக்ட் செய்ய வேண்டும்.... படம் பிளாக்பஸ்டர் ஆக இருந்தது இருக்கும்.. ஆனா படத்தை டப்பிங் செய்து தமிழில் ரிலீஸ் செய்து எனது கற்பனையில் மண்ணை போட்டு விட்டார்கள்... :)
தல... மஹதீரா படத்தை ரீமேக் செய்யவே முடியாது. ஏன்னா படத்துல அவ்ளோ விஷயம் + செலவு இருக்கு :-) ஆனா நீங்க சொன்னதும் நல்லாதான் இருக்கு... தலைவர் + சூர்யா!
Deleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...