கனவு காணுங்கள் - இயக்குனர் திரு. S S ராமௌலி - பாகம் 01 + EXTRA
11:01:00 AM
"நான்
திட்டமிட்டு திரைப்படத் துறைக்கு வரவில்லை என்றாலும் கூட எனக்கு கனவு இருந்தது. அது
சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. அந்தக் கனவிலிருந்து
தான் என் படங்கள் உருவாயின.இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு, அப்படிப்பட்ட
கனவா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப் பார்த்துக் கொள்கிறேன்." - இயக்குனர்
மகேந்திரன்.
தமிழ் சினிமாவில் ஆகக் கடினம் 'மகேந்திரனாக இருத்தல்,நீடித்தல்,சாதித்த
போதுமான அளவு பில்டப் போன பதிவிலேயே ஏற்றிவிட்டோம் என்பதால் நேரத்தைக் கடத்தாமல் நேரடியாக யார் இந்த S S ராஜமௌலி என்பதை மட்டும் இந்தப் பதிவில் சுருக்கமாக பார்த்துவிடுவோம்.
ஸ்ரீசைல ஸ்ரீ ராஜமௌலி - பிறந்த தேதி அக்டோபர் 10, 1965. பிறந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ரெய்ச்சூர் என்றாலும் SSR சுத்த தெலுங்குக் காரர். ஆந்திரமே இவரது பூர்வீகம், அங்கு தான் இவர் தனது படிப்பும் இருந்திருக்கிறது (இதை அழுத்திச் சொல்ல காரணமிருக்கிறது. S S R பிறந்தது கர்நாடகாவில் என்பதால் இவருக்கு “கன்னடிகா” பூச்சு பூச நினைக்கிறது சில மானங்கெட்ட கன்னட பக்கிகள்) இவரது தந்தை திரு. விஜயேந்திர பிரசாத். டோலிவுட்டில் நன்கு பிரபலமான கதாசிரியர், இயக்குனர் (சமீபத்திய படம், ராஜண்ணா). ஆரம்பத்தில் படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவிடம் பணிபுரிந்த S S R, பின்னர் நமது ஏ.வி.எம் ரிக்கார்டிங் ஸ்டூடியோயில் வேலை செய்துள்ளார். பிறகு தன் தந்தையிடமே உதவியாளராக பணியாற்றத் தொடங்கியுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் S S R சென்னையில் இருந்ததாகத் தெரிகிறது.
ஸ்ரீசைல ஸ்ரீ ராஜமௌலி - பிறந்த தேதி அக்டோபர் 10, 1965. பிறந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ரெய்ச்சூர் என்றாலும் SSR சுத்த தெலுங்குக் காரர். ஆந்திரமே இவரது பூர்வீகம், அங்கு தான் இவர் தனது படிப்பும் இருந்திருக்கிறது (இதை அழுத்திச் சொல்ல காரணமிருக்கிறது. S S R பிறந்தது கர்நாடகாவில் என்பதால் இவருக்கு “கன்னடிகா” பூச்சு பூச நினைக்கிறது சில மானங்கெட்ட கன்னட பக்கிகள்) இவரது தந்தை திரு. விஜயேந்திர பிரசாத். டோலிவுட்டில் நன்கு பிரபலமான கதாசிரியர், இயக்குனர் (சமீபத்திய படம், ராஜண்ணா). ஆரம்பத்தில் படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவிடம் பணிபுரிந்த S S R, பின்னர் நமது ஏ.வி.எம் ரிக்கார்டிங் ஸ்டூடியோயில் வேலை செய்துள்ளார். பிறகு தன் தந்தையிடமே உதவியாளராக பணியாற்றத் தொடங்கியுள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் S S R சென்னையில் இருந்ததாகத் தெரிகிறது.
“My
only aim was to get 30Rs for a film ticket and 2½Rs to and fro from Valasaravakkam
to Mount Road and back. My only aim was to watch films in Satyam Theatre. This
is the place where I learnt film grammer. This is the place where I developed
passion for films. To make it short, Films are my God and Satyam Cinemas is
my Temple!”
சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த நான் ஈ இசை வெளியீட்டு விழாவின் போது தான் இப்படிச் சொன்னார் S S R.
இந்தக் காலக்கட்டங்களில் கதாசிரியராக இருந்த தன் தந்தையின் (மேலே படத்தில் இருப்பவர், இயக்குனர் திரு. விஜயேந்திர பிரசாத்) சார்பில் இவர் பிற இயக்குனர்களுக்கு சொன்ன கதைகள், அதில் இருந்த இவரது கற்பனை (திரைக்கதை), திரையில் வரும்போது
முழுமையாக இல்லை என்ற அதிருப்தி, வருத்தம் S S R க்கு இருந்து கொண்டேயிருந்திருக்கிறது. தன்னால் அந்த இயக்குனர்களை விட சிறப்பாக அந்த கதையை திரையில் காட்ட முடியும் என்று முழுதாக நம்பியிருக்கிறார் S S R. இதனாலேயே சொந்தமாக தன் அப்பாவின் இயக்கத்தில் ஒரு படமெடுக்கலாம் என்று இருவரும் முயற்சி செய்துள்ளனர்.
அப்படி எடுக்கப்பட்ட படம் - ‘அர்த்தாங்கி’. மிகப் பெரிய தோல்விப் படம். ‘அர்த்தாங்கி’யால்
கடன் அதிகமாக, சம்பாதிக்க சென்னையை விட ஹைதிராபாத் தான் சரியான இடம் என்று முடிவு செய்து
அங்கு மொத்த குடும்பமும் குடிபெயர்ந்துள்ளனர். இயக்குனர் கங்காராஜூவிடம் உதவியாளராக சிறிது காலம் பணியாற்றிவிட்டு,
பின்னர் பழம்பெரும் இயக்குனர் திரு. கே. ராகவேந்திர ராவ் அவர்களிடம் அவரது கடைசி உதவியாளராகச்
சேந்துள்ளார் S S R. ராகவேந்திர ராவின் பல சின்னத்திரை தொடர்களில் உதவியாளராக பணியாற்றி சினிமா கற்றிருக்கிறார் S S R. தினம் 17 மணிநேரம், 18 மணிநேரம் வெறிகொண்டு பணியாற்றிய S S R க்கு அங்கு கிடைத்த பெயர் தான், “பணி ராட்சஷடு”. (அந்தப்
பெயர் இன்றும் தொடர்கிறது) பெயர் மட்டும் தான் கிடைத்ததே தவிர சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
S S R
முதன்முதலில் இயக்குனராக அறிமுகமானது சின்னத்திரையில் தான் வெள்ளித்திரையில் அல்ல. “சாந்தி
நிவாசம்” என்பது அந்த சீரியலின் பெயர். ராகவேந்திர ராவ் தயாரிப்பில் வெளிவந்த அந்தத்
தொடரின் பல எப்பிசோட்களை இயக்கியுள்ளார் S S R. இடைப்பட்ட காலத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு
விளம்பரப் படங்களும் எடுத்துக்கொடுத்துள்ளார். சினிமா தவிர்த்து சில காலம் ஆசிரியராகவும்
பணியாற்றியுள்ளார்!
அப்போது தான் பிரபல
குடும்பத்து வாரிசான, ஜூனியர் N T R ஐ வைத்து தனது கதை, திரைக்கதையில் ராகவேந்திர ராவ்
ஒரு படம் தயரிப்பதாக இருந்தது. ஹீரோவாக முதல் படம் Ninnu Chudalani பிளாப் கொடுத்திருந்திருந்தார்
ஜூனியர் N T R. இப்படியிருக்க அவரது அடுத்த படத்தை இயக்க முதலில் முடிவு செய்யப்பட்டவர்
ராகவேந்திர ராவின் முதல் அஸிஸ்ட்டண்ட் தான். ஆனால் அவரோ பிரபல மெகா சீரியல் ஒன்றை வெற்றிகரமாக
இயக்கிக்கொண்டு பிஸியாக இருந்ததால் கேட்காமலேயே அந்த வாய்ப்பு, தனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு, ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. அந்தப் படம் ஜூனியர் N T Rன் முதல் மெகா ஹிட் படமான
Student No: 1 (2001).
ஆனால் படம் இயக்கும் வாய்ப்பு மட்டும் தான் S S R க்கு கிடைத்தது. பெயர்,
அங்கீகாரம், பெருமை என அனைத்தும் ‘இயக்க மேற்பார்வை’யாக இருந்த இயக்குனர் கே. ராகவேந்திர ராவிற்கே
கிடைத்துள்ளது (மேலே படத்தில் இருப்பவர்). படத்தின் கதை, திரைக்கதை, வசனம், காட்சியமைப்பு என்று சகலத்திலும்
S S Rன் பங்கு இருந்த போதிலும், அந்தப் படம் ராகவேந்திர ராவின் படம் என்றே சொல்லப்பட்டது.
கொண்டாடப்பட்டது. ஒரு வெற்றிப் படத்தை ஒரு வெற்றி இயக்குனர் கொடுத்துள்ளார் என்ற வகையில் மட்டும் ஆந்திரம் இந்தப் படத்தைப் பார்த்தது (உதாரணம் வேண்டுமென்றால் "மன்மதன்" படமெடுத்த A.J.முருகன் நிலைமை தான். எத்தனை பேருக்கு "மன்மதன்"என்றால் A.J.முருகனின் பெயர் நியாபகத்திற்கு வருகிறது?) Student No: 1 - 2 கோடி போட்டு 8 கோடி லாபம் கொடுத்த இந்தப் படம் 42 திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி ஓடியும் S. S ராஜமௌலி
என்பவர் யாரென்று கூட ஆந்திர மாநிலத்திற்கு அப்பொழுது தெரிந்திருக்க வில்லை. 12 ஆண்டுகளில் தெலுங்கு சினிமா பாதுகாக்க நவரத்தினங்களைக் கொடுத்த இயக்குனர் திரு. S S ராஜமௌலியில் தனது திரை வாழ்க்கை ஆரம்பித்தது இப்படித்தான்!
உண்மையாக
உழைத்த தன் சிஷ்யனுக்கு சரியான அங்கீகாரத்தைத் தேடித் தர நினைத்த ராகவேந்திர ராவ்,
தனது தயாரிப்பில் தன் மகனை ஹீரோவாகப் போட்டு, S S R க்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார்.
ஆனால் அந்தப் படம் தொடங்கப்படாமலேயே முடங்கியது. இரண்டு வருடம் தான் யார் என்பதை நிரூபிக்க தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்திருக்கிறார் S S R. இந்தச் சமயத்தில் தான் ஜீனியர் NTR மூலம் V M C (Vijaya Maruthi Combines) என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே ஜூனியரின்
கால்சீட் வைத்திருந்த அந்த தயாரிப்பு நிறுவனம், S S R கதை சொன்ன விதம் பிடித்து போக,
படம் இயக்கும் வாய்ப்பைக் தூக்கிக் கொடுத்திருக்கிறது. அந்தப் படம் “Simhadri” (சிம்ஹாத்ரி(2003)). 53 திரையரங்குகளில் தொடர்ச்சியாக 150 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்.
முதல் வார வசூல் மட்டும் 4.5 கோடிகள். ஜூனியர் N T R திரை வரலாற்றிலேயே இன்று
வரை அதிக லாபம் கொடுத்த ஒரே படம். ஹீரோயிஸம் என்றால் என்ன என்று பாகம் குறித்து விளக்கமளித்த
படம். தனது மொத்த உழைப்பையும் கொட்டி இந்தப் படத்தை உருவாக்கி வெற்றி கண்டிருந்தார் S S R.
இப்போது ஆந்திரம் மட்டுமல்ல தென்னிந்தியாவே
திரும்பிப் பார்த்து கேட்டது, "யார் இந்த புது இயக்குனர்?" என்று.
அவர் தான்
ஏற்கனவே Student No 1 என்னும் வெற்றிப் படத்தைக் கொடுத்திருந்த S S ராஜமௌலி! இனி நடந்தது
எல்லாமே சரித்திரம். கிடைத்தது எல்லாமே வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே!
இது EXTRA:
பேட்மேன் ஜுரம் இன்னும் அடங்கியபாடில்லை. Bane வரலாற்றைக் கூறும் The Vengeance of Bane + The Dark Knight Rises படத்தின் மூலக்கதை மற்றும் மிக முக்கியமாக Joker யார் என்று சொல்லும் The Killing Joke காமிக்ஸ்கள் நெட்டில் கிடைத்தது. எனவே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அந்த linkகள் கீழே. (மன்னிக்கவும்... நான் செய்வது தவறு என்று தெரிகிறது. ஆனால் என்ன செய்ய, ஒரிஜினல் காமிக்ஸ்களின் விலை மிகவும் அதிகம், என்னாலும் அநேக நண்பர்களாலும் அதை வாங்கிப் படிக்க முடியாது. எனவே...)
The Vengeance of Bane:
https://www.rapidshare.com/files/1534363712/B___V_of_B.cbz
https://www.rapidshare.com/files/4097286327/B___V_of_B_II.cbr
Knightfall:
https://www.rapidshare.com/files/3691079374/01_-_Knightfall_-_Broken_Bat.rar.html
https://www.rapidshare.com/files/863261025/02_-_Knightfall_-_Who_Rules_the_Night.rar.html
https://www.rapidshare.com/files/3204628243/03_-_Knightquest_-_The_Search.rar.html
https://www.rapidshare.com/files/664548671/04_-_Knightquest_-_The_Crusade_1.rar.html
https://www.rapidshare.com/files/3912811267/05_-_Knightquest_-_The_Crusade_2.rar.html
https://www.rapidshare.com/files/1358440564/06_-_Knights_End_1.rar.html
https://www.rapidshare.com/files/3779550125/07_-_Knights_End_2.rar.html
The Killing Joke:
http://rapidshare.com/files/314495994/Batman_-_The_Killing_Joke.cbr
பேட்மேனின் மற்ற காமிக்ஸ்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் உடனுக்குடன் கொடுக்கிறேன்.
இது EXTRA:
பேட்மேன் ஜுரம் இன்னும் அடங்கியபாடில்லை. Bane வரலாற்றைக் கூறும் The Vengeance of Bane + The Dark Knight Rises படத்தின் மூலக்கதை மற்றும் மிக முக்கியமாக Joker யார் என்று சொல்லும் The Killing Joke காமிக்ஸ்கள் நெட்டில் கிடைத்தது. எனவே யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அந்த linkகள் கீழே. (மன்னிக்கவும்... நான் செய்வது தவறு என்று தெரிகிறது. ஆனால் என்ன செய்ய, ஒரிஜினல் காமிக்ஸ்களின் விலை மிகவும் அதிகம், என்னாலும் அநேக நண்பர்களாலும் அதை வாங்கிப் படிக்க முடியாது. எனவே...)
The Vengeance of Bane:
https://www.rapidshare.com/files/4097286327/B___V_of_B_II.cbr
Knightfall:
https://www.rapidshare.com/files/863261025/02_-_Knightfall_-_Who_Rules_the_Night.rar.html
https://www.rapidshare.com/files/3204628243/03_-_Knightquest_-_The_Search.rar.html
https://www.rapidshare.com/files/664548671/04_-_Knightquest_-_The_Crusade_1.rar.html
https://www.rapidshare.com/files/3912811267/05_-_Knightquest_-_The_Crusade_2.rar.html
https://www.rapidshare.com/files/1358440564/06_-_Knights_End_1.rar.html
https://www.rapidshare.com/files/3779550125/07_-_Knights_End_2.rar.html
The Killing Joke:
பேட்மேனின் மற்ற காமிக்ஸ்களையும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் உடனுக்குடன் கொடுக்கிறேன்.
16 comments
என்ன நீங்க உள்ளூர் மகேந்திரனுக்கு மரியாதை பண்ணிகிட்டு...
ReplyDeleteவிவரம் புரியாம இருக்கிங்க...
மகேந்திரன் ஒரு இயக்குனரா?
யார் அவர்?
பதிவெழுத...
காரிகன்கிட்டே பெர்மிஷன் வாங்கிட்டிங்களா?
புரொபைல்ல..யார் அவன் மீசைக்காரன் படம்...அசிங்கமா?
டாலி...டோலின்னு சுஜாதா மாதிரி ஜல்லியடிச்சீங்க
காரிகன் கொன்னே புடுவாரு.
ஹா ஹா பேட்மேன் ஜுரத்தை விட காரிகன் ஜுரம் தான் அதிகமாய் இருக்கு ஆனந்தன் சார் எழுதுவது அவருக்கு தெரியவில்லை என நினைக்கிறன் தெரிந்தால் வந்து விடுவார்.....
Deleteஅடுத்த பதிவு...ஹேராம் பற்றி எழுதி காரிகனுக்கு அர்ப்பணிக்கப்போறேன்.
Deleteஅப்ப என்ன செய்வாரு...அப்ப என்ன செய்வாரு...
ரசிகரே இப்போதான் "காரிகன்" காமெடில்லாம் உங்க பதிவுல படிச்சேன். இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல... நீங்களும் விடுறதா இல்ல போல... ஹும்ம் நடத்துங்க நடத்துங்க :-)
Deleteஎங்கே இருந்து தான் இவ்வளவு விவரமும் எடுக்குரிங்க இந்த விசயத்தை எல்லாம் ஒரு infografic போட்டா ரொம்ப நல்லா இருக்கும்....ஆமாம் யார் இந்த A.J.முருகன் எனக்கு தெரியாது அதான் கேட்கிறேன்...ராஜமௌலி என்றதும் நான் ஈக்கும் ஏதாவது எழுதி இருப்பீங்க என பார்த்தேன்....டார்க் நைட் ரைசஸ்க்கு நீங்க விமர்சனம் எழுதினால் ரொம்ப நல்லா இருக்கும்....youtubeல் batman என தேடினால் ஒரே டார்க் நைட் ரைசஸ் பற்றியே நிறைய வீடியோ வருது....ராஜமௌலியை பற்றி அவ்வளவு தானா இன்னும் இருக்கா ராஜமௌலி தமிழ் படம் எடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும்....
ReplyDeleteநன்றி நண்பரே! உடன் வேலை செய்யும் தெலுங்கு நண்பர்கள் தான் அதிகம் செய்ததிகளைக் கொடுத்ததௌ. ஒவ்வொருவரும் தீவிர SSR FANS! so, தகவல்களுக்கு பஞ்சம் இருக்காது.
DeleteTDKR பத்தி ஏற்கனவே பலபேற் பலமாதிரி எழுதித்தள்ளிவிட்டார்கள். இதில் தனியாக நான் எழுத என்ன இருக்கிறது என்று தான் விட்டுவிட்டேன்.
தொடர் முடியவில்லை. இன்னமும் மூன்று பாகமிருக்கிறது. கடைசி பாகம் "நான் ஈ"யைப் பற்றியது. SSR தமிழில் "தல"யை வைத்து படமெடுக்கப்போவதாகக் கிளப்பியுள்ளார்கள்... நடந்தால் சரி :-)
நான் ஜுனியர் என்.டி.ஆரின் ஏதோ ஒரு படத்தை ஏதேச்சையாக டி.வியில் பார்த்திருக்கிறேன்.. அவரு கோபப்படுற முகத்தைப் பார்த்ததுமே சிரிப்பு பொத்திக்கொண்டு வரத் தொடங்கிவிட்டது..
ReplyDeleteஅவரையும் வைச்சு மெகாஹிட் படம் கொடுக்கமுடியும்னா SSR நிஜமாவே talented தான்!
Student No 1 படத்தில் NTR பார்க்கவே செம காமெடியாக இருப்பார். Simhadri படத்தில் பரவாயில்லை. ஆனால் மூன்றாவதாக SSR இயக்கத்தில் நடித்த Yamadonga படத்தில் ஆள் உடல்மெலிந்து PERFECT FIT ஆக இருப்பார். படமும் சூப்பர். விரைவில் அவற்றைப் பற்றி எழுதுகிறேன்...
Deleteஅருமையான பதிவு நண்பரே.
ReplyDeleteநன்றாக எழுதுகிறீர்கள்.
தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஅந்த சிம்மாத்திரி பட ரீமேக் தான் நம்ம கேப்டன் நடித்த கஜேந்திரா.அங்க அவளோ பெரிய ஹிட்.இங்க பூம்.பதிவு அருமை.
ReplyDeleteதெலுங்கர்கள் டேஸ்ட் கொஞ்சம் வித்யாசமானது. எந்த படம் ஓடும் எது ஓடாது என்றே சொல்ல முடியாது. ஆனாலும் கஜேந்திராவை விட, சிம்ஹாத்ரி நன்றாகவே இருந்ததாகத் தோன்றியது எனக்கு...
Deleteநான் ஆந்திரா வந்து கிட்ட தட்ட 5 வருஷம் ஆகிருச்சு தல....இங்க ஹீரோவுக்கு இருக்கிற மரியாதை யாரும் டைரக்டரருக்கு குடுக்கிற மாதிரி தெரியல. ஆனா ராஜமௌலி மட்டுமே அதற்கு விதிவிலக்கு. அவருக்கு இங்கு நிறைய மரியாதை இருக்கு. மாஸ் ஹீரோ படத்தையும் தாண்டி அவரோட முத்திரை தனியா தெரியும். எனக்கு தெரிஞ்சு ஒரே வட்டத்துல சிக்காம (மெகா பட்ஜெட படம் தான் எடுப்பேன்-ஷங்கர், லா லா குடும்ப கதைகள் மட்டுமே எடுப்பேன்- விக்ரமன், விளிம்புநிலை மனிதர்களை மட்டுமே காட்டுவேன் - பாலா, அண்டர்வேர்ல்ட் தாதா படம் மட்டுமே எடுப்பேன்- ராம்கோபால் வர்மா) எல்லா ஏரியாவிலும் கலந்து கட்டி அடிக்கிறது ராஜாமௌலி மட்டும் தான்
ReplyDeleteஅவரை பத்தின இந்த கட்டுரை மிக மிக அருமை..... அப்புறம் தல, எனக்கு இன்னும் Batman feaver போகல...இந்த வாரம் IMAXல படம் பார்த்தேன்....படத்தை பத்தி ஒரே வார்த்தை தான் "The Movie Experience", அப்படியே மிதக்க விட்டுட்டார் நோலன்.....
காமிக்ஸ் லிங்க் குடுததற்கு ரொம்ப நன்றி தல.. ரொம்ப நாளா தேடுறேன்..இப்ப தான் ஒரே எடத்துல கிடைச்சது...
100/100 உண்மை தல நீங்க சொல்றது. ஆந்திராவைப் பொறுத்த வரை இன்னமும் நடிகர்களுக்காக படம் பார்க்கும் கூட்டம் தான் அதிகமிருக்கிறது (தமிழகம் comparatively பரவாயில்லை). SSR தான் அங்கு தனித்து நிற்கிறார்.
ReplyDeleteநானும் இந்த வார TDKR மறுபடியும் பார்த்தேன் :-) முதல் முறை பார்த்ததற்கும் இம்முறை பார்த்ததற்கும் நிறைய வித்தியாசம். முதல் முறை Batman Trilogyயில் கடைசி படம் என்று பார்த்தேன், படம் திருப்தியாக இருந்தது. இம்முறை "நோலன்" படமாக பார்த்ததும் கொஞ்சம் ஏமாற்றமே என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் :-( ஆனால் என்ன செய்ய, இவரது மற்ற படங்களைப் போல, ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் போய் Mind Games எல்லாம் ஆடிக்கொண்டு இருக்க முடியாது. கதையும் அத்தகையதல்ல, வில்லனும் மூளைக்காரன் அல்ல (when compared to Joker). So, overall I am happy the way Dark Knight ended :-)
இதுவரை நான் படித்த TDKR விமர்சனத்திலேயே தி பெஸ்ட் இதுதான். கேபிள் விமர்சனத்த விட இது டாப்! தாங்க முடியல... கொஞ்சம் நீங்களும் படிங்க...
http://cinema.dinakaran.com/cinema/ReviewDetail.aspx?id=7157&id1=13
தல,
ReplyDeleteஒரு வாரம் பதிவுலகம் பக்கம் வர முடியல...ஒரு முக்கியமான வேலையா கொஞ்சம் அலைஞ்சிட்டு இருக்கேன்...
இப்ப தான் உங்க பதில் பார்த்தேன்...அந்த விமர்சனம் கூட படிச்சேன்...அவங்க TDKR படத்தை பத்தி தானே எழுதி இருக்காங்க.... நோலன் கூட இந்த மாதிரி கதையை யோசிச்சு இருக்க மாட்டார்...இவங்க எழுதின கதை நோலன்க்கு தெரியுமா..??? பாவம் நோலன், இது எல்லாம் தெரிஞ்சா நொந்து போயிருவார்..நல்ல காமெடியா இருந்திச்சு..
I Think தினகரன் விமர்சனக்குழு. saw TDKR in British Engilsh....
ஹீ ஹீ சரியாச் சொன்னீங்க... நான் படிச்சதலியே பெஸ்ட் விமர்சனம்னா அது webdunia எழுதுனது தான். லிங்க் கீழே, படிச்சுப் பாருங்க...
Deletehttp://tamil.webdunia.com/entertainment/film/worldcinema/1207/30/1120730040_1.htm
இவர்களின் மற்ற விமர்சனங்களும் அருமை. டை இருந்தா ஒரு வாசிப்ப போட்டு விடுங்க..
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...