ஊரே பத்தி எரிய, நான் மட்டும் சும்மா இருந்தா நல்லாவா இருக்கும்?

12:51:00 PMஊர் உலகமே The Dark Knight Rises பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? அதானால் இதோ என்னால் முடிந்தது, The Dark Knight Rises பற்றிய எனது பதிவு. இன்னமும் படம் பார்க்கவில்லை. நாளை காலை தான் செல்கிறேன். படம் பார்த்து விட்டு எழுதலாமே என்று கேட்கிறவர்களுக்கு – ஒரே ஒரு முறை பார்த்த மாத்திரத்தில் எனக்கு நோலன் படங்கள் புரியாது. The Dark Knight இதுவரை ஆறு முறை பாத்திருக்கிறேன். முதல் தரம் பார்க்கும் பொழுது இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று தோன்றியது. பின் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஏதாவது ஒன்று புதிதாக இருந்தது. முதல் மூன்று முறை புரிவதற்காகவும், பின்னர் மூன்று முறை பிடித்ததற்காகவும் பார்த்திருக்கிறேன். The Dark Knight பரவாயில்லை. Inception நான்கு முறை பார்த்தாகிவிட்டது. இன்னமும் புரிந்து கொள்ளும் முயற்சியில் தான் இருக்கிறேன். So, The Dark Knight Rises நாளை முதல் முறை பார்க்கப் போகிறேன். இன்னமும் எத்தனை முறை பார்ப்பேன் என்று சொல்ல முடியாது (ஓரளவிற்கு ஹைப் ஏற்றிவிட்டேன் என்று தான் நினைக்கிறேன்)

பொதுவாக பெங்களூரை பொறுத்த வரை BookMyShow தளத்தில் புக்கிங் புதன் அன்று தான் ஓப்பன் ஆகும். அதுவும் ஒன்றிரண்டு தியேட்டர்களுக்கு மட்டும் தான். வியாழன் மதியத்திற்கு மேல் தான் ரிலீஸாகும் அனைத்து தியேட்டர் விபரங்களும் கிடைக்கும். ஆனால் The Dark Knight Rises புக்கிங் என்று ஓப்பன் ஆகியது என்றே தெரியவில்லை. Pre – Bookingகிலேயே பல தியேட்டர்கள் House-Full. அட என்னடா இது நாம் மட்டும் தான் வெள்ளிக்கிழமை ஆப்பீஸ் கட் அடித்து விட்டு படத்திற்கு போவோம் என்றால் ஊரே இப்படி தான் இருக்கிறது என்று வெறுப்பாகிவிட்டது. பின்ன என்னங்க, புதன் காலை BookMyShow வை திறந்து பார்தால், நல்ல தியேட்டர்கள் எதிலுமே வெள்ளிக்கிழமைக்கு ஒரு டிக்கட் கூட இல்லை. மதியம் 1:00 மணி, 3:30 மணிக்கு மட்டும் ஒன்றிரண்டு தியேட்டர்களில் முன்வரிசைகளில் சீட் இருக்கிறது. மிச்சமிருந்தது எல்லாமே டொக்கு தியேட்டர்களில் தான். அந்தத் தியேட்டர்களில் தமிழ் படம் பார்தாலே எனக்கு குத்து மதிப்பாகத்தான் புரியும். இதில் நோலன் படமா? No Chance! எப்படியோ சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு “ஊர்வசி”யில் புக் செய்திருக்கிறேன். மூளை சீட் தான் கிடைத்தது என்றாலும், “ஊர்வசி” என்பதால் நம்பிக்கையுடன் செல்கிறேன்.
  
படம் பார்த்த உடன் எனக்கு எல்லாம் புரிஞ்சிருச்சு, நான் உங்களுக்கு விளக்கமா சொல்றேன் கேளுங்க என்கிற ரீதியிலும், எனக்கு சுத்தமா பிடிக்கல எங்கிற ரீதியிலும் பல விமர்சனங்கள் வரும். ஆனால் இப்பொதே எனது விமர்சனத்தை சொல்லி விடுகிறேன் – “புரியவில்லை”. ஒரு வேளை நாளை படம் பார்து விட்டு நன்றாக புரிந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் நோலன் என்னை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கை. சும்மா ஒரு தடம் பார்த்தவுடன் படம் புரிந்துவிட்டால் அப்புறம் மற்றவர்களுக்கும் நோலனுக்கும் என்ன வித்தியாசம்? கொஞ்சம் ஓவராக இருந்தாலும் இது தான் உண்மை!

ஆனால் இப்பொழுதே விமர்சங்கள் வர ஆரம்பித்து விட்டது. சிங்கபூரில் நேற்றே ரிலீஸ், இரவே Preview Show அது இதுனு ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்திலுமே பொதுவான ஒரு வரி இருந்து கொண்டேயிருக்கிறது. Dark Knight போல் Dark Knight Rises இல்லை. We miss “THE JOKER” என்பது தான் அது. JOKER ஆக HEATH LEDGER கொடுத்த நடிப்பைப் பார்த்துவிட்டு, எதைப் பார்த்தாலும் அது சாதாரணமாகத் தான் தெரியும். அந்த மனிதர் போல் யாராலும் நடிக்க முடியாது. எனவே Bane ஆக நடித்திருக்கும் Tom Hardy அடித்து துவைத்து பின்னி பெடலெடுத்திருப்பார் என்று நம்பிக் கொண்டு போனால் ஏமாற்றம் நிச்சயம். அதே போல் The Dark Knight ரிலீஸ் ஆகி மூன்று வருடம் ஆகிவிட்டது. இன்றும் அந்தப் படம் பற்றிய பேச்சு இருந்து கொண்டு தான் இருக்கிறது. The Dark Knight Rises படம் இவ்வளவு எதிர்பார்க்கப் படுவதற்கு காரணமும் அந்த வெற்றிதான். ஆனால் நோலனின் statement உம் இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அது - இதுவரை வந்த எந்தவொரு மூன்றாம் பாகத்தையும் விட இந்த மூன்றாம் பாகம் அருமையானதாக, மறக்க முடியாத வகையில் இருக்கும். எனவே The Dark Knight படத்தை மறந்து, JOKERஐ மறந்து ஏதோ நம் நோலனின் மற்றுமொரு புதிய, fresh படம் என்கிற ரீதியில் இந்தப் படத்தைப் பார்க்கச் செல்வோம் (இது எனக்கு நானே சொல்லிக் கொள்வது)

ஒன்று மட்டும் நிச்சயம். உலகில் இதுவரை வெளியான எந்த ஒரு திரைப்படத்திற்கும் இந்த அளவு வரவேற்பு / ஓப்பனிங் இருந்திருக்குமா, அல்லது இனிமேல் இருக்குமா என்று தெரியவில்லை. படம் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று யூகித்து மட்டுமே பல பதிவுகள், விமர்சனங்கள் வந்து விட்டது. எழுதித் தள்ளி விட்டார்கள் ரசிகக் கண்மணிகள்! ஒரே காம்பெளக்ஸில் 76 ஸ்கிரீனில் ரிலீஸ் செய்த பெரீரீய படம் கொடுக்காத வெற்றியை இந்த ஆங்கில படம் தமிழகத்திற்கு கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. OKOK விற்கு அடுத்து மீண்டும் ஒரு ஜாக்பாட் ரெட் ஜெயண்ட் மூவீஸிற்கு. தமிழில் இவர்கள் தான் ரிலீஸ் செய்கிறார்கள். சென்னை சதியம் திரையரங்கு பார்க்கிங் அருகில் ரசிகவெறியர்கள் ஏதோ தங்களால் ஆனதைச் செய்திருக்கிறார்கள். 


அப்பாடா சம்பிரதாயத்துக்கு பட போஸ்டர் ஒன்னு, நோலன் போட்டோ ஒன்னு, ஜோக்கர் போட்டோ ஒன்னு… போட்டாச்சு! இனி நிம்மதியா தூங்கப் போவேன். நாளைக்கு காலைல சீக்கிரம் எழுதிருச்சு படத்துக்கு போகனும்!

You Might Also Like

10 comments

 1. நான் ஏதோ விமர்சனம் அப்படின்னு வந்தா....படத்த பத்தி முன்னுரை தான் இருக்கு..ஓகே..படத்த பார்த்துட்டு விமர்சனம் போடுங்க..மீண்டும் வரேன்

  ReplyDelete
  Replies
  1. வகைவகையா பல பேர் விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்காங்க தல... நானும் அதேயே செய்யணுமானு பாக்குறேன் (கொஞ்சம் ஓவரா இருக்கோ) :-)

   Delete
 2. பின்னிடார் நோலன்....எனக்கு படம் ரொம்பவே பிடித்து இருந்து....முன்று காட்சிகளில் வேர்த்து விட்டது...படம் பார்த்து விட்டு உங்க கருத்தை சொல்லுங்க..

  ReplyDelete
  Replies
  1. உங்க பதிவுல் சொன்னதையே தான் இங்கயும் சொல்றேன். உங்க விமர்சனம் அருமை. படத்தின் பேர்ல நம்ம ரெண்டு பேர் கண்ணோட்டமும் ஒரே மாதிரி தான் இருக்கு. படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் BATMAN காமிக்ஸ் அவ்வளவாக படித்தது கிடையாது என்பதால் படத்தில் காட்டப்பட்ட அனைத்துமே புதிதாக தான், ஆச்சரியமாகத் தான் இருந்தது!

   Delete
 3. விமர்சனம்னு இல்லாததால தான் வந்தேன். ஆகஸ்ட் மாசம் படம் பார்க்குற வரைக்கும் நோ விமர்சனம் ரீடிங். :)

  ReplyDelete
  Replies
  1. தல என் இனம் நீங்க... வெள்ளிக்கிழமை காலைல 10:00 மணிக்கு ரிலீஸ் ஆகுற படத்துக்கு, காலை 7:00மணிக்கெல்லாம் விலாவாரி விளக்கமா, மூணு பக்கத்துக்கு விமர்சனம் எழுதிடுறாங்க. மக்கள் பர்ஸை பாதுகாக்குறதுல இவங்களுக்கு இருக்குற கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு. தமிழ் படத்த மட்டும் தான் இப்படி பேசிகிட்டு இருக்காங்கன்னு பாத்தா, ஆங்கில படத்தையும் விட்டு வைக்க மாட்டேங்குறாங்க. அதிலும் ஒருத்தர் இந்த பட விமர்சனத்த எழுதிட்டு "நோலனுக்கு சரக்கு தீந்து போச்சா?"னு கேக்குறார். அதுக்கு இன்னொருத்தர் கமெண்ட் போடுறார் "இந்தப் படத்தைப் பார்க்க சகுனி தொடர்ந்து மூணு தரம் பாத்துரலாம்"... அடயங்கப்பா? என்னப்பா நடக்குது இங்க? யார் சாமி இவங்கெல்லாம்? இவங்க பேசிக்கிறதெல்லாம் கேட்டா உலக சினிமாவையே தங்களது கண்ட்ரோலுக்குள்ள வச்சிருக்கிற விமர்சன மாஃபியா கும்பல் மாதிரில தெரியுது!

   Delete
  2. அட கருந்தேளா?!! வாங்க தல... நோலனை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லனு சொல்ல எனக்கு தகுதி இல்ல... ஆனா சரக்கு தீந்துபோச்சானு கேக்குறதெல்லாம் கொஞ்சம் ஓவர். அட நீங்க பரவாயில்ல தல, உங்க நண்பர் ஒருத்தர் சகுனிய பாத்துரலாம்னு எழுதிருந்தாரே, அது தான் அல்டிமேட். என்னால தாங்க முடியல :-) நண்பரே உங்களது தளத்தின் முதல் வாசகன் நான் (நீங்க தான் இந்த IP அது இதெல்லாம் வச்சு track பண்ணுவீங்களே, அதுல பாருங்க :)) நான் உங்களது எழுத்துக்களின் தீவிர ரசிகன் ஆனால் தங்களது சிலமுறை தங்களது மேதாவித்தனமான கருத்துக்களை சுத்தமாக ஒத்துக்கொள்ள முடியவில்லை. தங்களது TDKR படத்தின் விமர்சனம் பார்த்து வெறுப்பு தான் வந்தது. ஆனால் தங்களது "விளக்க" விமர்சனத்தை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். அதில் இருந்த ஒவ்வொரு வரிக்கும் நான் உடன்படுகிறேன். முதல் விமர்சனம் எழுதாமல், இந்த விமர்சனத்தை இதே போல் இரண்டு நாள் கழித்து எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே. அதை விட்டு விட்டு அவசர அவசரமாக முதல் நாள் ஓடி ஓடி படம் பார்த்து விட்டு, அதே கடுப்பில் மொட்டையாக படம் மொக்கை, சரக்கு தீந்து போச்சு, நான் ஏற்கனவே ரெவ்யூலாம் படிச்சிட்டு தான் போனேன், பேட்மேன் கதை மொத்தம் எனக்குத் தெரியும்... இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்ல? இதெல்லாம் நான் மனசுக்குள்ள நெனச்சது. உங்க எடத்துல சொல்ல விரும்பல, நீங்களாவே என் எடத்துல வந்து கேக்குறதால சொல்றேன். எப்படியும் நான் என்ன சொல்ல வர்ரேங்கிறதயே நீங்க ஒத்துக்க போறதில்ல, தப்பில்ல நீங்க அப்படி, நான் இப்படி... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நன் நட்பு தொடர வேணும் :-) (பி.கு - நீங்க நிச்சயம் மாஃபியா தான் தல, ஒரு வார்த்த கமெண்ட்லகூட உங்களபத்தி எழுத முடியலயே, கரெக்டா கண்டுபிச்சு கேள்வி கேக்குறீங்களே, சூப்பர் தல நீங்க)

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 4. விரைவில் படம் பார்த்து விமர்சனம் எழுதுங்கள்.

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...