என் தமிழ் சினிமா இன்று - 03
12:02:00 PM
தமிழ்
சினிமாவின் கார்பொரேட் தயாரிப்பாளர்களின் அடாவடியை தடலடியாக போட்டுத்தாக்கிய இயக்குனர் திரு. கரு.பழனியப்பனுக்கு ஒரு ராயல் சல்யூட்டை வைத்து விட்டு மேட்டருக்கு வருகிறேன். இயக்குனர்களைப்
பற்றி எழுதுவது என்று முடிவானவுடன் ஒரு ஆர்வத்தில் ஒரே மூச்சில் கே.எஸ்.ரவிக்குமார்
பற்றி பதிவிட்டேன். அடுத்து, நான் கொடுத்திருக்கும் பிரிவுகளுக்கு ஏற்றபடி இயக்குனர்களின்
பெயரை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தத் தொடங்கினேன். அப்போதுதான் நான் எடுத்துக் கொண்ட வேலையின்
உண்மையான முகம் தெரிகிறது. கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட இயக்குனர்கள் இன்றும்
படமெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சரியாகச் சொல்லவேண்டுமானால் ஐம்பதிற்கும் மேற்பட்ட
இயக்குனர்களின் படங்களுக்கு மதிப்பு + எதிர்பார்ப்பு இன்று தமிழகத்தில் இருக்கிறது.
புதிது புதிதாக தினம் தினம் இயக்குனர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் நிலைத்து
நின்று புருவத்தை உயர்த்த வைக்கிறார்கள். பலர் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.
மொத்தத்தில் ஹீரோக்கள், ஹீரொயின்கள் கூட்டத்தைவிட, இயக்குனர்களின் கூட்டம் அதிகம் என்பது
மட்டும் தெரிகிறது.
இப்படி
ஒரு பெரிய கூட்டத்தைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைக்கும் பொழுது சற்று கலக்கமாகவே
இருக்கிறது. ஏனென்றால் நம்ம ரெபுடேஷன் அப்படி.. நான் பதிவிடும் வேகம் உலகறிந்த ஒன்று.
இருந்தாலும் எடுத்த வேலையை பாதியில் நிறுத்துபவன் தமிழன் அல்ல (அரசியல்வாதிகள் தவிர்த்து).
So, the journey continues…
கே.எஸ்.ரவிக்குமாருக்கு
மூன்று வருடங்களுக்கு முன்னரே தமிழ் சினிமாவிற்குள் நுளைந்து ஒரு ரவுண்ட் வந்தவர்,
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவரது முதல் படம் சத்யா (1988),
150 நாட்கள் ஓடிய பாக்ஸ்
ஆபீஸ் ஹிட். 90களின் முக்கிய ‘தீம்’ ஆன ‘Unemployed angry young man’ டைப் படம். கதாநாயகன்
கமல்ஹாசன், அப்பொழுதான் நாயகனை (1987) முடித்து விட்டு, தேசிய விருதைத் தட்டிக்கொண்டு
வந்திருந்தார் (இதுவும் ஒரு கேங்ஸ்டர் படம் என்பது குறிப்பிடத்தக்கது). நாயகனின் இயக்குனர்
மணிரத்தினம். ஆக கமலின் இந்த படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்திருக்கும்! கமல்
நினைத்திருந்தால் யார் இயக்கத்தில் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் அவர் புதியவரான
சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு கொடுத்தார். கமல் வாய்ப்பு கொடுத்தார் என்று நான் சொல்வதற்கு
காரணம் இருக்கிறது. சத்யா கமல்ஹாசனின் சொந்தத் தயாரிப்பு. இந்தப் படத்தில் இளையராஜா
இசையில் கவிஞர் வாலி ஒரு ஐட்டம் நம்பர் பாடலில் கெட்ட ஆட்டம் போட்டிருப்பார். இளையராஜாவின்
மற்றுமொரு மாஸ்டர் பீஸ் – வளையோசை கலகலகலவென…
சத்யாவின்
பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் வெங்கடேஷுடன் Prema (1989) என்ற ஹிட்டைக்
கொடுத்துவிட்டு மறுபடியும் தமிழில் கமலுடனேயே இணைந்தார் சுரேஷ் கிருஷ்ணா. படம் இந்திரன்சந்திரன் (1989) ஒரிஜினல் தெலுங்கு டைட்டில் “இந்துருடு சந்துருடு”, ஒரிஜினல் ஆங்கில
மூலத்தின் பெயர் Moon Over Parador, ஒரிஜினல் கதை Caviar for His Excellency. கமலும்
விஜயசாந்தியும் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தில் மேயர் சந்திரனாக செம காட்டு காட்டியிருப்பார்
கமல். இவரது உடல்மொழி, டயலாக் டெலிவரி அபாரமாக இருக்கும். இந்தப் படத்திற்கும் இசை
ராஜாதான். கமலுக்கு தெலுங்கு Filmfare விருதைப் பெற்றுத் தந்த்து இந்தப் படம்.
அடுத்த
படம் அன்றிலிருந்து இன்று வரை நம் தலைவரின் ரெக்கார்டு பிரேக்கர்களில் மிக முக்கியமான
படம். தலைவரின் பெயர் ஸ்கிரீனில் வரும் போது அதிரும் தீம் சாங்கிற்கு வித்திட்ட படம்.
“அடேய் நண்பா, உன்னை வெல்வேன்” என்று ஒரே பாடலில் பணக்காரனாகும் புதிய டிரெண்டை தமிழ்
சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய படம். சரத் பாபு என்றால் யாருக்கும் தெரியாது “அசோக்”
என்றால் சின்னக் குழந்தை கூட அடையாளம் காட்டும். அப்படிப் பட்ட திருப்புமுனையை சரத்
பாபுவிற்கு ஏற்படுத்திக் கொடுத்த படம். “கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழபூ, கூடையில்
என்ன பூ?...., குஷ்பு” என்று தமிழ் நாடே குஷ்பு புகழ் பாட வைத்த படம். அந்தப் படம்
“அண்ணாமலை (1992)”! பால்கார அண்ணாமலை சந்தர்பவசத்தால் தன் பணக்கார நண்பன் அசோக்கிற்கு எதிரியாக,
என்ன நடக்கிறது என்பதே கதை. “மலே டா அண்ணாமலே” என்று தலைவர் மீசை தட்டி பன்ச் பேசும்
அந்த வசனத்திற்கு ஈடான வசனம் இன்றும் இல்லை. அதே போல் தொடை தட்டி, “இந்த நாள் உன் கேலண்டர்லகுறிச்சு வச்சிக்கோ…” என்று தலைவர் பேசும் வசனம் (இந்த வசனத்தைப் பேசி தான் விஜய் தனது
அப்பாவிடம் தனக்கும் நடிக்க வரும் என்று ப்ரூவ் செய்தாராம். ஐய்யோ ராமா!)
அர்ஜுனுடன்
ரோஜாவைக் கில்லாதே (1993), சரத் - குஷ்பூவுடன் வேடன் (1993) படங்களுக்குப் பிறகு மீண்டும்
தலைவருடன் வீரா (1994). அதிக ஆக்ஷன் இல்லாமல், காமெடி, சென்டிமெண்ட் கலந்த ரெண்டு பொண்டாட்டிகாரன்
கதை. ராஜாவின் இசை, ரோஜா – மீனா ஹீரோயின், கவுண்டர் இல்லாமல் தனியாக செந்தில் மட்டும்
ஜொலித்த வெகு சில படங்களில் ஒன்று என்று இந்தப் படமும் ஒரு பிளாக் பஸ்டர்.
அடுத்த
வருடமே தலைவருக்காக மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது சுரேஷ் கிருஷ்ணாவிற்கு.
அந்தப் படம் இன்றளவும் தலைவரின் மெகா ஹிட் படங்களில் முதன்மையான “பாட்ஷா (1995)”. பாட்ஷாவின்
மூலம் மலையாலத்தில் மம்மூட்டி நடித்து பெரிதும் பேசப்பட்ட Samrajyam (1990) (இந்தப்
படத்தின் இரண்டாம் பாகத்தை Samrajyam 2 – Son of Alexander என்ற பெயரில் நம்ம பேரரசு
இயக்க முடிவு செய்துள்ளாராம். மறுபடியும் ஐய்யோ!) மலையாளத்திலிருந்து ஹிந்திக்கு
Hum என்று அமிதாப் பச்சன் நடிப்பில் வந்து, பின் பாட்ஷாவாக தமிழகத்திற்கு வந்தது இந்தக்
கதை (மீண்டும் ‘ஜனா’வாக தல நடிப்பில் வந்து சோதித்தது). பாட்ஷா சமயத்தில் தான் தலைவரின்
அரசியல் பிரவேசம் பற்றி அதிகமாக பேசப்பட்டது. அந்நேரத்திற்கெல்லாம் சரியான முடிவு எடுக்கப்பட்டிருந்தால்
இந்நேரம் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எதுவும் நடக்கவில்லை.
அதுவும் நல்லதுக்குத்தான்.
தலைவருடன்
தொடர்ந்து மூன்று படங்கள் மெகா ஹிட் கொடுத்த திருப்தியில் மலையாளத்தில் தனது முதல்
படத்தை எடுத்தார் சுரேஷ் கிருஷ்ணா. அந்த முதலே கடைசியுமாக ஆனது. படம் அட்டர் ப்ளாப்.
மோகன்லால் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் The Prince (1996). பின் தெலுங்கில் வெங்கடேஷுடன்
இணைந்து “Dharma Chakram (1996)”, சிரஞ்சீவியுடன் மெகா ஹிட் “Master (1997)” படங்களை
கொடுத்துவிட்டு மீண்டும் தமிழுக்கு வந்தார் ஆஹாவுடன் (1997). பெர்சனலாக எனக்கு மிகவும்
பிடித்த படம் ஆஹா. நான் இதுவரை டி.வி.யில் மட்டுமே 10 தடவைக்கு மேல் பார்த்துவிட்ட
படங்களுக்குள் இதுவும் ஒன்று. உதவாக்கரை ஹீரோ, தன் அண்ணனின் முன்னாள் காதலை குடும்பத்திடமிருந்து
மறைக்கும், வில்லனே இல்லாத அருமையான குடும்பக் கதை. பாட்ஷா கொடுத்த சுரேஷ் கிருஷ்ணாவின்
படம் இது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். தமிழ் சினிமா வில்லன்களில் மிக முக்கியமாக
‘மார்க் ஆண்டனி‘ ரகுவரன் இந்தப் படத்தில் பொறுப்பான அண்ணன். முற்றிலும் மாறான களத்தில்
நம்மை கட்டிப்போடிருப்பார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. ஆனால் இந்த ஆஹாவுடன் ஐய்யோவாகிப்
போனது இவரது திரை வாழ்க்கை. போகவர கூப்பிட்டு வைத்து வெட்டினார்கள் தமிழ் சினிமா நட்சத்திரங்கள்
இவரை.
தில்லான
மோகமாம்பாள் ஸ்டைலில் சங்கமம் (1999). இதுதான் முதல் வெட்டு. ஹீரோ ரஹ்மான். இதுவே படத்திற்கு
மிகப்பெரிய அடி. கூப்பிட்டு வைத்து வெட்டியவர் பிரமிட் நட்ராஜன், தயாரிப்பாளர். ஏ.ஆர்.ரஹ்மானின்
பாடல்களைத் தவிர படத்தில் ஒன்றுமே இல்லை. அடுத்த வெட்டு தலைவரிடமிருந்து. தலைவரது கதையில்
மோகன் பாபு ஹீரோவாக நடிக்க தெலுங்கில் “Rayalaseema Ramanna Choudhary” என்ற ஒரு படத்தை
எடுத்தார். தெலுங்கு நண்பர்களிடம் இந்தப் படத்தை பற்றிக் கேட்டால் கடுப்பாகிறார்கள்.
அந்த அளவிற்கு ஒரு மொக்கை சரித்திரமாம் (வள்ளி என்ற காவியம் தலைவரது கைவண்ணம் தானே?)
தெலுங்கில் துரத்தப்பட்டு தமிழிற்கு வந்தால் அடுத்த வெட்டு கமல்ஹாசனிடமிருந்து.
கமலின் கதை, திரைக்கதை வடிவத்தில் இவர் இயக்கிய படம் ஆளவந்தான் (2001). இந்தப் படத்தின் நிலைமை
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழக ரசிகர்களின் பல்ஸ் தெரியாமல் அடிக்கடி ஓவர் டோஸ்
கொடுத்து விடுவார் கமல். அதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சக்கை போடு
போட்டுக்கொண்டிருந்த “சித்தி” மெகாதொடர் இந்தப் படத்தை கவிழ்த்துவிட்டது என்று அப்போது
சொன்னார்கள். ஆளவந்தான் காட்டியது சித்தி கொடுமையை, சித்தி காட்டியது சித்தி பாசத்தை.
கொடுமையை பாசம் வென்றுவிட்டது.
ஏற்கனவே
அதளபாதாளத்திற்கு போய்க்கொண்டிருந்த சுரேஷ் கிருஷ்ணாவின் கேரியருக்கு மேலும் ஒரு குழியைத்
தோண்டினார் தலைவர். படம் பாபா (2002). மறுபடியும் தலைவர் கதை! தொடர்ந்து 100 படங்கள்
ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரான தலைவருக்கே இந்தப் படம் ப்ளாப். அப்போது
சுரேஷ் கிருஷ்ணாவின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்!
அடுத்த
வெட்டு விஜயகாந்திடமிருந்து. படம் கஜேந்திரா (2004). S.S.ராஜமௌலியின் “சிம்மாத்ரி”
ரீமேக். ஆந்திராவில் 150 நாட்கள் ஓடிய மெகா ஹிட் படம். விஜயகாந்திற்கு ரமணாவிற்கு அடுத்த
படம். தெலுங்கில் எவ்வளவுக்கெவ்வளவு இந்தப் படம் ஹிட்டோ அவ்வளவுக்களவு இந்தப் படம்
தமிழில் ப்ளாப்!
அடுத்து
வெட்டியதும் தலைவரே தான். காணாமல் போயிருந்த இந்த இயக்குனரை தூக்கி விடுகிறேன் என்ற
பெயரில் தலைவர் கொடுத்த படம், “பரட்டை எங்கிற அழகுசுந்தரம் (2007)”. Jogi என்கிற கன்னடப்பட்த்தின்
ரீமேக். “நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட படம்” என்று கமெண்ட் அடித்து தனது மருமகப்பிள்ளையை
நடிக்க வைத்தார் தலைவர். படம் அட்டர் ப்ளாப். மரண அடி விழுந்தது இயக்குனருக்கும், ஹீரோவிற்கும்.
அண்ணாமலை,
வீரா, பாட்ஷா என்று மூன்று படங்கள் கொடுத்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவை ஏற்றி விட்ட
தலைவர், Rayalaseema Ramanna Choudhary, பாபா, பரட்டை என்கிற அழகுசுந்தரம் ஆகிய மூன்று
படங்களை கொடுத்து அதளபாதாளத்தில் தள்ளினார்!
பரட்டைக்கு
அடுத்து தமிழில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படங்கள், ஆறுமுகம் – அண்ணாமலை ரீமேக், இளைஞன்
– கலைஞர் தேடிப்பிடித்து சொறுகிய ஆப்பு. இரண்டும் மெகா ப்ளாப்கள்
இப்போது
உப்பேந்திராவுடன் இணைந்து “கட்டாரிவீர சூரசுந்தராங்கி” என்ற 3D படத்தை கன்னடத்தில்
எடுத்து வெளியிட்டுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா. படம் நன்றாகப் போவதாகக் கேள்வி. ஆனால் பெயரெல்லாம்
நிச்சயம் உப்பேந்திராவுக்கு தான்.
சுரேஷ்
கிருஷ்ணா அடுத்து தமிழுக்கு வருவாரா? சத்யா, பாட்ஷா படங்களைக் கொடுத்தவரது நிலைமை ஏன்
இவ்வளவு மோசமாக போயிற்று? விடை தெரியவில்லை! புற்றீசல் போல் கோடம்பாக்கத்தை மொய்த்து கலக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கமர்ஷியல் இயக்குனர்களுக்கு ஈடுகொடுத்து ஒரு படத்தை
சுரேஷ் கிருஷ்ணாவால் இயக்க முடியுமா? தெரியவில்லை!
22 comments
நல்ல அலசல்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Deleteசுரேஷ் கிருஷ்ணாவிற்கு ஓடிய படம் எல்லாமே ரஜினி, கமல் போன்ற மாஸ் ஹீரோகளால் தான் ஓடியது....அவர் சொந்தமா எடுத்த படம் என்றால் அது "ஆஹா" மட்டும் தான்.....இந்த படத்தின் வெற்றியில் மட்டுமே இவரின் பங்கு இருப்பதாய் நான் கருதுகிறேன்....இப்ப கூட விஜய் டிவியில அதே (ஆஹா)பேருல ஒரு சீரியல் எடுத்துகிட்டு இருக்கார்...பானுப்ரியா தான் ஹீரோயின்...
ReplyDeleteபாபா தோல்விக்கு தலைவர் மட்டுமே பொறுப்பு.....திரைக்கதை அவரோடது....அந்த படத்தை கேமரூன் டைரக்ட் செஞ்சு இருந்தா கூட ஊத்தி இருக்கும் பாஸ்...
பாபா படத்துல முத பாட்டுக்கு செம மியூசிக் குடுத்திட்டு, தலைவர் "புர்...புர்ன்னு" ரயிலு ஓட்டுன அப்பவே படம் கதம் கதம்...
சுரேஷ் கிருஷ்ணா பல படங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருந்திருக்கிறார். அதனால் தான் இயக்குனர் ரோல் சும்மா இருக்கே யாரப்போடுரதுனு யோசிக்கிறவங்க எல்லாம் இவர கூப்பிட்டு வச்சு குத்துனாங்க (பாபா, ஆளவந்தான், இளைஞன், கட்டாரிவீர...) சீரியல் அளவிற்கு இவரது நிலைமை மோசமானது மிகவும் வருத்தமான ஒரு செய்தி!
Deleteபாபா படம் பற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் 100/100 உண்மை :-) எரிச்சலாப் போச்சு படத்த பாத்துட்டு!
சுரேஷ் கிருஷ்ணா இப்போ விஜய் டிவியில ஆஹா சீரியல் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு...
ReplyDeleteஎனக்கு இது புது தகவல் நண்பரே... விஜய் டிவியில் சீரியல் பார்க்கும் அளவிற்கெல்லாம் பொறுமை இல்லை. அதுவும் பானுபிரியா சீரியல், ஹீ ஹீ நான் கேள்விப்படக்கூட இல்லை பாருங்கள்.
Deleteவருகைக்கும் இடுகைக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்!
தலைவர் படம் பாபா தலைவருக்கே பிடிக்குமோ இல்லியோ எனக்குப் பிடிக்கும். எனக்கு பிடிக்காத ஒரே படம் குசேலன் தான், இந்த வாசு தலைவர இளமையா காட்டுறேன்னு கேவலப் படுதியிருப்பாரு.
ReplyDeleteமற்றபடி தெளிவான கருத்துகளுடன் போரடிக்காத பதிவு. பல விசயங்களை தெரிந்து கொண்டேன்.
படித்துப் பாருங்கள்
தலைவன் இருக்கிறான்
http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_09.html
பாபாவில் அந்த CM கார் அட்டாக் பைட் மட்டும் எனக்கு பிடிக்கும். அதிலும் தலைவர் என்னமே சிக்குன்குனியா காய்ச்சல் வந்தவர் மாதிரி இருப்பார். போங்க பாஸ், பாபாவிற்கு குசேலன் என்னைப் பொறுத்த வரை 1000 மடங்கு தேவலாம் (தலைவரின் தோற்றத்தை மட்டும் தான் சொல்கிறேன்)
Deleteவருகைக்கும் இடுகைக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்!
தெரியாத பல விசயங்களை இந்த பதிவில் தெரிந்து கொண்டேன் எனக்கு பிடித்த சத்யா,பாட்சா,ஆளவந்தான் படத்தின் டைரக்டர் இவர் இவ்வளவு நாள் நான் தெரிந்து கொள்ளவே இல்லை...ஆளவந்தான் என்ன மாதிரியான படம் அதை எல்லாம் இயக்கி விட்டு சிரியல் டைரக்ட் பண்ண போறாராம்...ரொம்ப வேதனையா இருக்கு...காலத்தால் மறக்கபட்ட மனிதர்...
ReplyDelete//காலத்தால் மறக்கபட்ட மனிதர்...// சரியாச் சொன்னீங்க தல!
Deleteநான் ஈ விமர்சனம் தங்களிடம் எதிர்பார்கிறேன்...எப்ப வரும்...
ReplyDeleteமனச படிச்சிட்டீங்க தல... நான் ஈ பற்றி மட்டுமல்ல, S S ராஜமௌலி பற்றியும் முழுத் தகவல்களுடன் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறேன். படத்தின் ஒவ்வொரு காட்சி பற்றியும் அலச ஆசை. அதனால் தான் படம் வெளியானவுடன் விமர்சனம் எதுவும் போடவில்லை. படிப்பவர்களுக்கு படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறைந்து விடக் கூடாது. அடுத்த வாரம் நிச்சயம் நான் ஈ + S S R பதிவு / தொடர் உண்டு :-)
Deleteசத்தியமா சொல்றதுன்னா, தலைவர் படங்கள் தவிர்த்து பழைய படங்கள் பார்த்தது மிகவும் குறைவு. இப்பொழுது தான் கமல் படங்களை ஆரம்பித்திருக்கிறேன். அதிலும் படத்தைப் பார்ப்பதோடு சரி. எதுவும் விஷயங்களை நோண்டப்போவதில்லை. நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் புதுசு. தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கு. இன்னும் தொடருங்க.
ReplyDeleteஇன்னும் நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள் தல. ஒவ்வொருவராக அலசுவோம்... இந்தத் தொடரால் நீங்கள் நிறைய விடயம் தெரிந்து கொள்வீர்களானால் மகிழ்ச்சி தான் :-)
Deletehii.. Nice Post
ReplyDeleteகட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்!.
உங்கள் ப்ளாக் மிகவும் அருமை.
http://dohatalkies.blogspot.com/2012/07/hachi-dogs-story-tale-movie-review.html
வருகைக்கும் இடுகைக்கும் நன்றி நண்பரே. தொடர்ந்து வாருங்கள்!
Deleteசுரேஷ் கிருஷ்ணா ஆரம்பத்தில் ,அதாவது 1988-1996 சத்யா -ஆஹா வரை சில அல்லது பல வெற்றிகள் கண்டிருப்பார்.அதற்க்குபின் பெரும்பாலும் தோல்வி படங்களே.அவரது பெரிய குறை அவரது வெற்றி பெற்ற படங்களின் சாயல்(பெரும்பாலும் அண்ணாமலை -பாட்ஷா ) அவரது பிற படங்களில் இருப்பதே.இதில் இளைஞன் ஐம்பதாவது படமாம்.இவர் இயக்கிய ஐம்பதில் ஒரு பத்து தேறும் என்று நினைக்கிறன்.ஆனால் நல்ல மனிதர் .மற்ற இயக்குனர்கள் போல் இல்லாமல் அதிர்ந்து கூட பேச மாட்டார்.இதுவரை யாரோடும் பிரச்சனையில் சிக்காதவர்.நல்ல அலசல்.நான் ஈ உங்கள் பார்வையில் எப்படி என்பதை படிக்க ஆவல்.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்... "சாயல்" என்பது மிகப்பெரிய பிரச்சனை, அது மற்ற படங்களுடையதாக இருந்தாலும் சரி, தனது முந்தைய படத்தினுடையதாக இருந்தாலும் சரி, பிரச்சனை தான்!
Deleteபிரபு-கவுதமி ஜோடியில் ஒரு பிளாப் படம் பண்ணினார்.[பெயர் மறந்து விட்டேன்]
ReplyDeleteஆளவந்தானில் சு.கி இல்லாமலே பாதி படம் சூட்டிங் நடந்தது.
பாபா இயக்கம்... ரஜினியே...
ரஜினி, நோயால் மிகவும் உருக்குலைந்திருந்த நேரம்...எடுக்கப்பட்ட படம் ..பாபா.
ஒப்பனிங் சாங்கில் ஒரு கையை...அசைக்க முடியாமல் அவஸ்தையுடன் ஆடியிருப்பதை கவனித்து பார்த்தால் தெரியும்.
கேரள ஆயுர்வேத வைத்தியம்தான்... அவரை மீட்டெடுத்தது.
நான் சு.கி சூட்டிங்கை பார்த்து இருக்கிறேன்.
அசாத்திய அமைதி காப்பவர்.
ஆர்.டி.எக்ஸ் வெடித்த சப்தம் கேட்டால்...ஊசி வெடி ரியாக்ஷன் காட்டுவார்.
தொடருக்கு நன்றியும்...வாழ்த்தும்.
நண்பரே, அந்தப் படம் "ராஜா கைய வைச்சா" - பிரபு, கௌதமி, சரத்குமார், ரேவதி, மழை வருது மழை வருது குடை கொண்டு வா :-)
Delete@Nanbanae, romba nalla post. Unnodya menakedal (effort) parattathakathu :)
ReplyDelete-Velu
Thanks da dude!
Deleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...