என் தமிழ் சினிமா இன்று - 02
12:24:00 PM
தமிழ்
சினிமா பிரம்மாக்களை போன பதிவில் ஒரளவிற்கு அலசிவிட்டேன் என்று நினைக்கிறேன். 4 –
5 பெயர்கள் நிச்சயம் விடுபட்டிருக்கும். அவர்களைப் பற்றி மொத்தமாக இறுதிப் பதிவில்
எழுதிவிடுகிறேன். இனி நேராக இன்றைய காலகட்டத்திலிருக்கும் தமிழ் சினிமா இயக்குனர்களை
பற்றி ரகவாரியாகப் பார்த்துவிடுவோம்.
உங்களுக்குப்
படிக்க சுவாரஸ்யமாகவும், எனக்கு எழுத சுலபமாகவும் இருக்க இன்றைய இயக்குனர்களை அவர்களது
இன்றய நிலையை வைத்து கீழ்கண்ட 6 தலைப்புகளில் (இப்போதைக்கு) வகைப்படுத்துகிறேன். ஒவ்வொரு
தலைப்பின் கீழ் உள்ள இயக்குனர்களின் படங்களை விரிவாக அலசலாம். விமர்சனம் போல் இல்லாமல்,
தமிழ் சினிமாவில் இவர்கள் பதித்த தடம் என்ன? இப்போது இவர்களது நிலை என்ன? என்று ஒவ்வொன்றாகப்
பார்க்கலாம். அந்த 5 தலைப்புகள் பின்வருமாறு.
1) மினிமம்
கியாரண்டி இயக்குனர்கள்
2) முதல்
படம் ஹிட்; நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த இயக்குனர்கள்
3) முதல்
படம் மெகா ஹிட்; அடுத்த ஹிட்டிற்கு தவம் கிடக்கும் இயக்குனர்கள்
4) முதல்
படம் ஹிட், இரண்டாம் படம் பிளாப், ஆனாலும் மூன்றாவது படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும்
இயக்குனர்கள்
5) மிகப்பெரிய
ஹிட்கள் இதுவரை கொடுத்ததில்லை என்றாலும் எதிர்பார்ப்பு குறையாத இயக்குனர்கள்.
6) நம்பிக்கை
லிஸ்டில் புதிதாக சேர்ந்துள்ள ‘ஒரு படம்’ எடுத்திருக்கும் இயக்குனர்கள்
************************************************************************************************************************************************************************************************************
"மினிமம்
கியாரண்டி இயக்குனர்கள்"
1) கே.எஸ்.ரவிகுமார்
தமிழ்
சினிமாவில் “மினிமம் கியாரண்டி” என்று சொன்ன உடனே நியாபகத்திற்கு வரும் பெயர் கே.எஸ்.ரவிகுமார்.
இவரது முதல் படம் இவரே எழுதிய அருமையான த்ரில்லர். ”புரியாத புதிர் (1990)”. கே.எஸ்.ரவிக்குமாரை
விட ரகுவரனை அதிகம் நினைவிற்கு கொண்டு வரும் படம். ரகுவரனின் “I Know, I Know” டயலாக்கை
ஒரு முறை கேட்டவர்கள் மறக்கமாட்டார்கள். பெரும்பாலும் வேறொருவர் எழுதும் கதைக்கு தனது
ஸ்டைலில் அற்புதமான திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் கே.ஏஸ்.ரவிக்குமார். அப்படி
அவர் இயக்கியதில் குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்கள் சில.
சேரன்
பாண்டியன் (1990) - இவரது இரண்டாவது படம். விஜயகுமார் – சரத்குமார்,
அண்ணன் தம்பி, ஜாதி பிரச்சனை, காதல், காதல் கடிதம் என்ற ஒரு அற்புதமான மெலடி, பஞ்சாயத்து, வில்லன், கிளைமாக்ஸில்
பைட், படம் முடிந்து சுபம். வெற்றிப் படமே.
நாட்டாமை
(1994) – இந்தப் படத்தைப் பார்க்காத தமிழ் ரசிகன் இல்லை எனலாம்.
“நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு” டயலாக்கும் அதற்கு “நிறுத்துடா” என்று தன் கொண்டை
அவிழ கர்ஜிக்கும் விஜயகுமாரையும் மறக்கவே முடியாது. சட்டையில்லாமல் பட்டு வேஷ்ட்டியில்
தங்க நகைகள் ஜொலிக்க விஜயகுமார் நடந்து வரும்போது, நமக்கே கையெடுத்து கும்பிடத் தோன்றும்.
அப்படியொரு பாத்திரப்படைப்பு (தெலுங்கில் நம் தலைவர் தான் நாட்டாமை / பெத்தராய்டு)
“நாட்டாம தம்பி நாப்பது யானை வந்தாலும் எதிர்த்து நிக்கிற சிங்கம்டா” என்று சரத்குமாரும்
தன் பங்கிற்கு வெளுத்து வாங்கியிருப்பார். “டேய் தகப்பா, ஏண்டா இப்படி பண்ண” கவுண்டர்
- செந்தில் காமெடி இன்றும் க்ளாசிக். ‘தாய்க்கெழவி’ என்று தன் தாய் மனோரமாவை அழைக்கும்
வில்லன் பொன்னம்பலம், “தாத்தா நான் பாத்தேன்” சிறுவன், ‘மியாவ்’ பேக்கிரவுண்ட் மியூசிக்குடன்
வரும் டீச்சர், ‘நம்ம முன்னாடி நம்ம எப்படி உட்காரமுடியும்’ என்று தன் மகள் மீனாவிற்கு
நாட்டமை பெருமை புரிய வைக்கும் ‘வர்ரேங்கண்ணு’ பணக்கார அப்பா வினுசக்கரவர்த்தி, “பொண்டாட்டினா
ஆரு தெரியமாடி” என்று அதே மீனாவிற்கு பெண் பெருமை சொல்லித்தரும் “ஏனுங்க, ஆமாங்க” குஷ்பு,
கொட்ட பாக்கு கொழுந்து வெத்தல, பாடல் என்று “நாட்டாமை” ஒரு புல் மீல்ஸ்
மூவி.
முத்து
(1995) – மூலக்கதை ப்ரியதர்ஷன். ஆனாலும் கதையைவிட திரைக்கதை தான்
படமே. தலைவரது சினிமா வரலாற்றில் ஓடோ ஒடு என்று ஜப்பான் வரை ஓடிய மாபெரும் வெற்றிப்
படம். “நான் எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல
கரெக்டா வருவேன்” என்று தமிழ்நாட்டையே கலக்கிய (அன்றைய அரசியல் கட்சியினரின் வயிரையும்)
படம். சன் டிவியில் தீபாவளி பொங்கலென்றால் காலைக்காட்சி நிச்சயம் முத்து தான். “எஜமான்”
என்று தலைவர் அடிவயிற்றில் இருந்து கூப்பிடும் சத்தம் இன்னும் காதில் கேட்கிறது (“திவான்”
என்று அப்பா ரஜினி கூப்பிடுவதும்). “எஜமான் மேலயாடா கைய வச்ச” என்று ஏ.ஆர்.ரஹ்மானின்
“ஒஹ்ஹோ, ஹ்ஹோ, ஒஹோஹோஹோ” இசைக்கு தன் தோளில் கிடைக்கும் துண்டை அப்படி இப்படி என்று
ஒரு சுத்துசுத்தி இடுப்பில் கட்டி, தெறிக்க தெறிக்க தலைவர் மீனாவின் மாமனை (மச்சினிச்சி உன்ன உட்டுஆச்சி :-)) புரட்டி
எடுக்கும் பைட்டில் இருந்த "மாஸ்" வேறு எந்தப் படத்திலும் இதுவரை இல்லை. மீனாவைக் காபாற்றும் அந்த டிராமா கொட்டகை, சேஸிங் பைட் என்று "ஒரு ஹீரோவிற்கு
பைட்னா இப்டி வைக்கனும்" என்று பாடம் சொல்லிக்கொடுத்த காட்சியமைப்புகள் அவை. ஆனால், ‘காளி’ பொன்னம்பலத்திடம் எஜாமான் சொன்னதற்காக அடிவாங்கி
அழுது கொண்டே எல்லோரிடமும் ‘நான் என்ன தப்பு செஞ்சேன்’ ரியாக்ஷன் கொடுத்துக்கொண்டே
போகும்போதும், அதைவிட “எங்கடா எஜமான்?சொல்லு சொல்லு” என்று பொன்னம்பலத்தை சாட்டையால் புரட்டி அடிக்கும் பைட்டும் என் உடம்பை புல்லரிக்க வைத்தவை (இப்போதும் சரி!). ‘ஜமீன்தார்
மகன் முத்து ஒரு சாதாரண குதிரைவண்டிக்காரன்’ என்ற கதைக்கு அருமையான திரைக்கதையமைத்து,
ஏ.ஆர்.ரஹ்மானை இசையில் அதிரிபுதிரியாக ஒரு படத்தைக் கொடுத்திருப்பார் கே.எஸ் ரவிக்குமார்
அவ்வை
சண்முகி (1996) – ஆங்கில Tootsie/Mrs.Doubtfire படத்தின் ரீமேக் தான் என்றாலும் கிரேஸி மோகன் கதை
வசனத்தில் ‘அவ்வை சண்முகி’ இன்றும் கமல் நடித்ததில் ‘ஒன் ஆஃப் தி பெஸ்ட்’. கோபத்தில்
விவாகரத்து பெற்று மகளையும் உடன் அழைத்துச் சென்று விடும் மனைவிக்கு புத்தி புகட்டவும்,
தன் செல்ல மகளை அருகிலிருந்தே பார்த்துக்கொள்ளவும், தன் மாமனார் வீட்டிற்கு வேலைக்’காரி’யாக
சேரும் கமல் – இது தான் கதை. அதகளப்படுத்தியிருப்பார்கள். டெல்லி கணேஷ், மணிவண்ணன்காட்சிகள் இன்றும் நம் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. “நான் பிராமணன் இல்லதான், ஆனா
சத்தியமா ஊம சாமி” என்று நாசர் பேசும் வசனம், “என் செல்லம்மா எனக்கு உத்தரவு கொடுத்துட்டா”
என்று காதல் பேசும் ஜெமினியும் அஹா, இன்றும் ஏதாவது ஒரு சேனலில் போட்டால்கூட விடாமல்
பார்க்க்க்கூடிய அற்புதமான படம்!
நட்புக்காக
(1999) – மீண்டும் சரத்குமாருடன். ஜோதி கிருஷ்ணா கதை வசனம் (இவரது ஊலலலா படம் பார்த்த
பிறகு எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது). ரவிக்குமாரின் பேவரிட் களம். சும்மா
பொழந்து கட்டியிருப்பார். என்னைக் கேட்டால் இந்தப் படத்தில் காட்டப்படும் விஜயகுமார்
- சரத்குமார் நட்பு “தளபதி” சூர்யா – தேவாவை விட மேலோங்கியதாகக் காட்டப்பட்டிருக்கும்.
மீசக்கார நண்பா பாட்டில் நட்பை ப்ரூவ் செய்ய இவ்விருவருக்கும் வைக்கப்பட்டிருக்கும்
காட்சிகள் செம ஜாலி.
படையப்பா
(1999) – கே.எஸ்.ரவிக்குமாரே எழுதி இயக்கிய படம். தமிழ்நாட்டையே சரக்கடிக்காமல் “ஒஹோஹோஹோ”
என்று கிக்கு ஏற வைத்த படம். தலைவரின் மெகா ப்ளாக் பஸ்டர். அம்மன் படத்திற்கு பிறகு
காணாமல் போயிருந்த நீலாம்பரிக்கு, சாரி ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப் பெரிய வாய்ப்பைத்
தந்த படம். மிக முக்கியமாக நடிகர் திலகத்தின் கடைசிப் படம். படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும் அற்புதம்.
ஊஞ்சல் சீன் ஒன்று போதும் கே.எஸ்.ரவிக்குமார் யார் என்று காட்ட. மொத்தப் படத்தையும்
இந்த ஒரு காட்சி சொல்லிவிடும். கிளைமாக்ஸ் “வாட் எ மேன், உங்களுக்கு வயசாகல” டயலாக்
இன்று கொஞ்சம் காமெடியாகத் தெரிந்தாலும் படம் ரிலீஸான போது (அப்போ நான் எட்டாங்கிளாஸ்)
புல்லரிக்க வைத்தது உண்மை. 20 பேர் கம்பு கட்டையோடு எதிரில் நின்று கொண்டிருப்பார்கள்,
லட்சுமி அசால்ட்டாக “படையப்பா, சீக்கிரம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திரு” என்று சொல்லி
விட்டுப் போவதெல்லாம், அட போங்கப்பா உலக சினிமாவாவது மண்ணாவது, எனக்கு “படையப்பா” தான்
பிடிச்சிருக்கு :-)
(இரண்டாம்
பாதியில் வந்த்து போலவே ஒரு கெத்தான அப்பா போன்ற கேரக்டர்களில் தான் தலைவர் படம் நடிக்க
வேண்டும் என்பது என் பெர்ஸனல் வேண்டுகோள். அப்படி நடந்தால் அமிதாப் எல்லாம் கால்தூசாகிவிடுவார்.
ஆனால் தலைவர் இன்னும் விடாமல் மெடிக்கல் ஸ்டூடென்டையெல்லாம் லவ்விக்கொண்டிருக்கிறார்!)
தெனாலி(2000) – ஹேராமிற்குப் பிறகு ரிலாக்ஸ்டாக மீண்டும் கிரேஸி மோகன் கதை, வசனத்தில் (Actually
‘What About Bob’) கே.எஸ்.ரவிகுமாருடன் கமல் தந்த படம். மீண்டும் ஒன்-லைனர் வசனங்கள்,
ஜாலியான திரைக்கதை என்று ஒரு அற்புத பேமிலி பேக்
வில்லன்(2002) – அஜித் மொத்தம் நடித்திருக்கும் 50 படங்களில் ஹிட்டான 5 படங்களில் ஒன்று. யூகிசேதுவின்
கதை, வசனத்தில் ஒரு நல்ல ஆக்ஷன் டபுள் ரோல் படம். ஃபெப்சி விஜயனை ஒரு கெட்ட்ட்ட வில்லனாக
மாற்றிய படங்களில் இந்தப் படத்திற்கு முக்கிய இடம் உண்டு
பஞ்சதந்திரம்(2002) – மீண்டும் கிரேஸி மோகன் – கமல் – கே.எஸ்.ரவிகுமார். இந்த
முறை பத்தாத்தற்கு ஒவ்வொரு மொழியிலிருந்து ஒவ்வொரு ஹீரோ வேறு. இந்தப் படத்திலிருக்கும்
கன்டெண்ட்டிற்கு இதற்கு கிடைத்த வெற்றி கொஞ்சம் கம்மி என்றே சொல்லலாம். அவ்வளவு அற்புதமான
டைமிங்கான வசனங்கள், காட்சிகள். கிளைமாக்ஸ் நோக்கி நகரும் பொழுதெல்லாம் ஒரு காட்சியை
புரிந்து சிரிப்பதற்குள் அடுத்த காட்சி வந்துவிடும். மறுபடியும் ஒரு ஆல்டைம் பேவரிட்.
வரலாறு (2006)
– அஜித்தின் ஐந்து வெற்றிகளில் மீண்டும் ஒன்று. இம்முறை கதை, வசனம், இயக்கம் கே.எஸ்.ரவிக்குமாரே.
அருமையான படம். கொஞ்சம் தாமதமானாலும் சொல்லி அடித்த கில்லி. அஜித் தன் முழு நடிப்புத்திறனையும் கொட்டியிருந்த படம். கன்னடத்தில் இந்தப் படம் இப்போது உப்பேந்திரா நடிப்பில்
தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது முக்கிய செய்தியல்ல, ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முறையாக
ஒரு கன்னடப்படத்திற்கு, இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்!
இந்தப்
படங்களுக்குப் பிறகு இன்று வரை கே.எஸ்.ரவிக்குமாருக்கு இறங்கு முகம் தான். வரலாறுக்குப்
பிறகு இவர் இயக்கிய படங்கள் தசாவதாரம் (2008) ஓ! தசாவதாரத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும்
இருக்குறாரா என்று கேட்கும் அளவிற்கு கமலே நிறைந்திருப்பார். ஆதவன் (2009). கே.எஸ்.ரவிக்குமார்,
சூர்யா இருவருக்கும் நன்றாக போய்க்கொண்டிருந்த கேரியரில் ஒரு மிகப்பெரிய சடன்பிரேக்
கொடுத்த ஓட்டைப் படம் (கதை – ரமேஷ் கண்ணா, தனியா பேர் போடுற அளவுக்கு இந்தப் படத்துல
புதுசா கதைன்னு என்னயிருக்குன்னே தெரியல), ஜக்குபாய் (2010) நல்லவேளை இதுல தலைவர் நடிக்கல
என்று தமிழ் நாடே திருப்திபட்டுக்கொண்ட படம். எப்படா புடுங்கிக் கொளுத்தலாம் என்பது
போல் கவுண்டருக்கு ஒரு விக்கை கொடுத்திருப்பார்கள். Wasabiயை முடிந்த வரை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருப்பார்கள்.
ராதிகா சரத்குமார், படம் ரிலீஸுக்கு முன் இணையத்தில் வந்துவிட்டதற்காக ஒரு முறை, படம்
வெளியாகி இணையத்தை விட தியேட்டரில் கம்மியான நாட்கள் ஓடியதற்காக ஒரு முறை என்று இருமுறை
வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுத படம். மன்மதன் அம்பு (2010) கிரேஸியில்லாமல்
கமல் - ரவிக்குமாரே முயற்சி செய்த சரியான மொக்கைப் படம் (ஆப்பீஸ் கட்டடிச்சிட்டு, முதல்
நாள் முதல் ஷோ இந்தப் படம் போனேன், தேவுடா!)
மன்மதன்
தன் அம்பை குறி பார்த்து எறியக்கூடாத இடத்தில் குறிதவறாமல் எய்து முழுதாக இரண்டு வருடமாகியும்
கே.எஸ்.ரவிக்குமார் இன்னும் அடுத்த படத்தை தொடங்கவில்லை. இந்தா இந்தா என்று இங்கும்
அங்கும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார். நல்ல வேளை ‘ராணா’ தொடங்கவில்லை! அந்த படப்போஸ்டரே
எனக்குப் பிடிக்கவில்லை. ‘கோச்சடையான்’ படத்தின் இயக்க மேற்பார்வை என்பதெல்லாம் கண்துடைப்பு
என்பது ஊரறிந்த விஷயம். மீண்டும் ஒரு முத்து, படையப்பா, வரலாறு படைப்பாரா கே.எஸ்.ரவிக்குமார்?
இது தான் இந்தப் பதிவின் மில்லியன் டாலர் கேள்வி! தமிழ் சினிமாவின் ஒவ்வொரு டாப் ஹீரோவுடனும்
படம் செய்து விட்டார். இன்னும் பல ஹீரோக்கள் இவருக்காக தவம் கிடக்கிறார்கள். ஆனால்
வரிசையாக சொல்லிவைதாற்போல் வெற்றிக் கூட்டணிகள் அனைத்தும் மண்ணைக் கவ்வின. (சரத்துடன்
மட்டும் 10 படங்கள் அதில் 4 மெகா ஹிட், கமலுடன் 5, அதில் 4 மெகா ஹிட்)
“இப்போதிருக்கும்
ட்ரெண்டு தெரியவில்லை, பழைய ஆள், இன்னும் எத்தனை நாளைக்கு தான் மாஸ் படமே எடுத்துக்கொண்டிருக்கப்
போகிறார், மக்கள் ரசனை மாறிவிட்டது” அது இது என்று அவ்வளவு எளிதில் கே.எஸ்.ரவிக்குமாரை
ஒதுக்கி வைக்க முடியாது. இப்போதிருக்கும் கமர்ஷியல் இயக்குனர்கள் யாரும் இவர் அருகில்
கூட வர முடியாது. ஒரு பெர்ஃபெக்ட் என்டர்டெய்னர் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று
சிலபஸ் எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார். 1999ல் மட்டும் 5 பண்டங்கள் இயக்கியுள்ளார்.
இவரது வேகத்திற்கு இன்றும் ஈடுயிணை இல்லை. இவரது படங்கள் தோற்றதற்கான காரணங்கள் என்ன
என்றெல்லாம் அலச வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் பல மொக்கை படங்களையும் இவர் கொடுத்துள்ளார்
(சரவணா (2006), எதிரி (2004), பாறை (2003), சமுத்திரம் (2001), பாட்டாளி (1999), மின்சார கண்ணா (1999), பிஸ்தா (1997)), ஆனால் அந்தப் படங்கள்
வந்த சுவடே இல்லாமல் அடுத்த படம் பிரம்மாண்டமாக வந்துவிடும். அப்படி சுலபமாக “இவ்ளோ
தான் இவரு” என்று ஜட்ஜ் பண்ணமுடியாத ஒரு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். மீண்டும் கமல்
- கிரேஸியுடன் இவரது இயக்கத்தில் ஒரு படம் வரப்போவதாகக் கேள்வி, தலைவன் இருக்கிறான்
படத்திற்கு இவர்தான் இயக்குனர் என்கிறார்கள். இல்லை சாமி படத்தை ஹிந்தியில் சஞ்சய்
தத், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். பார்க்கலாம்,..
ஒரு இயக்குனருக்கே
ஒரு முழு பதிவு தேவைப்படுகிறது. இப்படியே மொத்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு எழுதினால்
ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் போலிருக்கிறது. அடுத்த பதிவிலிருந்து ஆவேசப்பட்டு எல்லோருக்கும்
தெரிந்த விஷயத்தையே விலாவாரியாக எழுதாமல், மேலோட்டமாக எழுதுகிறேன்.
தொடரும்...
டிஸ்கி: வீடியோ லின்க்கள் அனைத்தும் YouTubeலிருந்து...
9 comments
நல்ல பதிவு.அதில் கவர்ந்த ,மறுக்க முடியாத விஷயங்கள்
ReplyDelete1.அஜித் மொத்தம் நடித்திருக்கும் 50 படங்களில் ஹிட்டான 5 படங்கள் தான் .
2. ‘கோச்சடையான்’ படத்தின் இயக்க மேற்பார்வை என்பதெல்லாம் கண்துடைப்பு என்பது ஊரறிந்த விஷயம்
நான் சொல்ல விரும்புவது,
ரஜினியை பிடிக்கும் விஷயங்கள் எல்லாம் அவரை பிடிக்காதபோது காமெடி ஆக தெரியும்.இது எனக்கு அனுபவபூர்வமான உண்மை.
அவ்வை ஷண்முகி படம் "mrs.doubtfire".நீங்கள் சொல்லயுள்ள படமும் அதே தீம் தான் என்றாலும் நான் சொல்லியுள்ள படத்தின் சீன் பை சீன் ரீமேக் தான் அவ்வை ஷண்முகி.
அடுத்து யார் டைரக்டர் ஹரி தானே.படிக்க ஆவலாக உள்ளேன்.
நல்ல சுவாரிசியமான பதிவு...ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பாஸ்...ஒரே மூச்சில் படிச்சு முடிச்சேன்...
ReplyDelete* நாட்டாமை ‘வர்ரேங்கண்ணு’ பணக்கார அப்பா "ஜெய் கணேஷ்" ன்னு நினைக்கிறன்..
* எங்க காலேஜ்ல ஒரு நாட்டாமை டீச்சர் இருந்தாங்க.. மறக்கவே முடியாது..
* "படையப்பா" படத்தை பத்தி அற்புதமா சொல்லிடேங்க..., அந்த படத்தை கே.எஸ் தான் இயக்கினார் என்று எனக்கு எப்போதும் ஞாபகம் இருந்தது இல்லை.... அதில் தலைவர் மட்டும் தான் எனக்கு தெரியறார்...
* உங்க லிஸ்ட்ல கண்டிப்பா பாலா இருப்பார்ன்னு நினைக்கிறேன்..அவரை விட்டுராதேங்க பாஸ்...
@scenecreator: // ரஜினியை பிடிக்கும் விஷயங்கள் எல்லாம் அவரை பிடிக்காதபோது காமெடி ஆக தெரியும்.இது எனக்கு அனுபவபூர்வமான உண்மை // ரஜினியைப் பிடிக்காது என்று சொல்பவர்களை நான் "csenecreators" என்று தான் சொல்வேன் :-) Tootsie/Mrs.Doubtfire என்று பதிவில் மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. நிச்சயம் இந்த லிஸ்டில் ஹரி உண்டு. அவரயும் ஔர் பிடி பிடிக்கலாம். தொடர்ந்து படியுங்கள்!
ReplyDelete@ராஜ்: மீனா அப்பா வினுசக்கரவர்த்திதான் தல.. சந்தேகமிருந்தால் இந்த வீடியோவின் இறுதி 10 நிமிடங்களைப் பாருங்கள் - http://www.dailymotion.com/video/xks20r_nattamai-002-moviesfilms-net_shortfilms
ஒவ்வொரு ஸ்கூல்/காலேஜ்லயும் அப்படி ஒரு டீச்சர் நிச்சயம் இருப்பாங்க ;-)
பாலா இல்லாமல் இன்றய தமிழ் சினிமா பற்றி ஒரு பதிவா. நிச்சயம் அவரும் இந்தப் பட்டியலில் உண்டு!
வில்லன்(2002) – அஜித் மொத்தம் நடித்திருக்கும் 50 படங்களில் ஹிட்டான 5 படங்களில் ஒன்று.//// ha..ha nalla commedy.... naanum etho ungala neutral blogger endu thappa ninaiththuvidden
ReplyDelete@ sajirathan - மன்னிக்க வேண்டும், நீங்கள் தல ரசிகராக இருந்தால்... நான் factஐ சொன்னேன். அஜித்திற்கு இருக்கும் மாஸ் இமேஜிற்கு இந்நேரம் 50ல் 40 ஹிட்களாவது இருந்திருக்கும். ஆனால் 10ற்கும் குறைவு தான் ஹிட்கள், 5 படங்கள் தான் மெகா ஹிட்கள். அதுவும் சமீபத்தில் தான். அமர்க்களம், தீனா, அட்டகாசம், பில்லா, மங்காத்தா. வேண்டுமென்றால் உங்களுக்காக 5 ஹிட்கள் என்று என் பதிவில் எழுதியிருப்பதை 10 ஹிட்கள் என்று மாற்றி விடுகிறேன் :-) வருகைக்கு நன்றி!
ReplyDeleteEven today I watched Nattamai in Sun TV. KSR centiment dialogues pinni eduthurkaru. I am expecting next one will be Director Charan/Hari/Dharani... excited to read the next blog.
ReplyDelete@Anony - நண்பரே நான் எழுத நினைத்திருக்கும் லிஸ்ட்டில் மிக முக்கியமான பெயர்களை அப்படியே சொல்லிவிட்டீர்கள் :-) இவர்களையும் சேர்த்து, இன்னும் பலரைப் பற்றி விரவில் ஒரு பதிவுடன் வருகிறேன். தொடர்ந்து வாருங்கள். வருகைக்கு நன்றி!
ReplyDeleteசஜிரதன் இங்கேயும் வந்துட்டாரா? இருக்கும் உண்மையை சொன்னால் இவர் இப்படி தான் கமெண்ட் போடுவார்.உங்களுக்காவது பரவாயில்லை.நீங்கள் நான் எழுதிய பதிவை படித்திருப்பீர்கள் .எனக்கு எப்படி வந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள்.அஜித் நடித்ததில் 5/50 தான் ஹிட்.ஒருவர் பாலா பற்றி கேட்டுள்ளார்.பாலா மினிமம் கேரண்டி இயக்குனரில் வருவாரா? எனக்கு தெரிந்து அவர் அதில் வர வாய்ப்பில்லை.
ReplyDeletesir hit films of ajith
ReplyDeleteaasai,vanmathi,kadhal kottai,kadhal mannan,aval varuvala,vaali,anantha poongatre,amarkalam,mugavari,kandukonden kandukonden,dheena,villain,attagasam,varalaru,billa,mankatha..
ungalukku piditha padangal vendumanaal 5 aaga irukalam...oru kelvi 5 padangal matume hit koduthirundhaal epdi inraiku tamil cinemavin rajni-kamalukku aduthu pesapadam listil irupar...
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...