"நீயின்றி அமையாது உலகு" - சிறுகதை

11:54:00 AM

ஐ லவ் யூ சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

பதில் ஏதும் சொல்லாமல் மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
  
மறுநாள் காலை எழுந்தவுடன் அவனது கைகள் அவளைத் தேடின. அருகில் அவள் இல்லை. கண்களைத் துடைத்துக்கொண்டே வெளியே வந்து கிட்சனில் போய் பார்த்தான். அங்கும் இல்லை.

ஃப்ரிட்ஜிலிருந்து பாலை எடுத்து சூடாக இரண்டு கப் காஃபி போட்டு டைனிங் டேபிளிற்கு வந்து ஒன்றைக் குடித்து அவளுக்காக காத்திருந்தான். அவள் வரவில்லை. வெளியே போயிருக்க வேண்டும்.

ஒரு மாதமாக வேலைக்காரி வராததால் அவளே தான் எல்லா வேலையையும் செய்ய வேண்டியிருக்கிறது. மறக்காமல் அசோஷியேஸனில் சொல்லி ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்ய வேண்டும் நினைத்துக் கொண்டான்.

அவளிடம் ஒரு சாவி இருக்கும் என்பதால் கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பினான். லிஃப்டில் கீழே இறங்கி பார்க்கிங் நோக்கி நடந்தான். எதிர் பட்ட செக்யூரிட்டியிடம் வேலைக்காரி தேவையைப் பற்றிச் சொன்னான். அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. அசோஷியேஸனில் பேசினால் தான் சரிப்பட்டு வரும் நினைத்துக்கொண்டே தன் கார் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மதியம் மணி 1.

தன் மொபைலை எடுத்துப் பார்த்தான். மிஸ்டு கால் எதுவும் இல்லை. அவள் நம்பருக்கு போன் செய்து பார்த்தான். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. எங்கு போயிருப்பாள்?

லன்ச் சாப்பிட மூட் இல்லாததால் தன் ஸீட்டிற்கு வந்து ஃபேஸ் புக் லாகின் செய்தான். இருவருக்கும் பொதுவான அக்கவுண்ட் தான். அவள் தான் சதாசர்வகாலமும் ஃபேஸ் புக்கிலேயே தவம் கிடப்பாள். ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாக அதிலும் அவளுக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. இரவு இதைப் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே, சென்ற வருடம் திருமணமான புதிதில் எடுத்த போட்டோக்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தான். எல்லாவற்றையும் அப்லோட் செய்தது அவள் தான்.

வேலை எதுவும் ஓடவில்லை. மறுபடியும் ஒரு முறை முயற்சி செய்தான். மறுபடியும் ஸ்விட்ச் ஆஃப். மணி ஆறாக காத்துக்கொண்டிருந்தான்.   

 வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடித்தான். பதில் இல்லை. தன்னிடமிருந்த சாவி மூலம் கதவைத் திறந்து உள்ளே சென்றான். அவள் இன்னும் வரவில்லை. லேசாக பயம் மனதைக் கவ்வியது. வாசலிலேயே உட்கார்ந்து கொண்டான். மொபைல் அடித்தது. அவளாகத்தான் இருக்கும் என்று அவசராவசரமாய் எடுத்தான். அவள் இல்லை. கூப்பிட்டது நண்பன்.

மச்சி, சரக்கடிக்கலாமா?

இல்லடா, வேணாம். அவ இன்னும் வரல. ஏற்கனவே போன மாசம் பார்ட்டில தண்ணி அடிச்சிட்டு கார் ஓட்டிக்கிட்டு வந்ததுக்கு பெரிய சண்டை நடந்துச்சு

கமான் டா... நாளைக்கு நான் யு.எஸ் போறேன். அவ கேட்டா நான் சொல்லிக்கிறேன்

சரி வா

நான்காம் ரவுண்ட் போய்க்கொண்டிருந்தது. டேய் அவ இன்னும் வரல. எனக்கென்னமோ கொஞ்சம் பயமா இருக்கு. போன் வேற சுவிட்ச் ஆப்னு வருது. நீ இரு, நான் போய் கொஞ்சம் பாத்துட்டு வந்துடுறேன்

எங்க போய் பாக்கப்போற?

தெரியல!

ஆனந்த், நான் சொல்றதக் கேளு. நிகழுலகத்துக்கு வா. உன் மனைவி இறந்து ஒரு மாசமாகப் போகுது. போன மாசம் பார்ட்டி முடிஞ்சு நீங்க திரும்பி வரும்போது கார் ஆக்ஸிடெண்ட் ஆகி அவ செத்துப் போய்டா. ஆர்த்தி இனிமே இல்ல டா உளறினான்.

ஆனந்த் ஓங்கி அவனை அறைந்தான். போதையில் இருந்ததால் அடியைத் தாங்க முடியாமல் அவன் அந்தப் பக்கமாகப் போய் விழுந்தான்.

இன்னொரு ரவுண்ட் போட்டுவிட்டு படுக்கையில் போய் விழுந்தான் ஆனந்த். அருகே ஆர்த்தி படுத்திருந்தாள்.

ஐ லவ் யூ சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

பதில் ஏதும் சொல்லாமல் மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள். 

உன்கிட்ட கேட்கனும்னு நெனச்சேன். ஃபேஸ் புக்ல நீ இப்பல்லாம் லாகின் பண்றதேயில்ல போல, என்னாச்சு?

பதில் இல்லை.

***********************************************************************************

எனது அலுவலகத்தில் "World Without Women" என்ற தலைப்பில் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது. அதற்காக பலர் எழுதிய கதைகளை மற்றவரது பார்வைக்காக வெளியிட்டிருந்தனர். அதில் ஒரு கதை 'நம்ம' டைப்பாக இருந்தது. சாதாரண கதையாக இருந்தாலும் படித்துவிட்டு ஓரிரு நாட்கள் மனதை விட்டு நீங்காமலிருந்ததால், 'ஆனந்த் - ஆர்த்தி' என்று பெயர் போட்டு அந்த ஆங்கிலக் கதையை தமிழாக்கம் செய்துவிட்டேன். அது மேலே. ஒரிஜினல் கீழே... All Credits go to the original author!

"I Love You..." He told her.


   She did not reply. She looked at him and kissed him.

           *                *              *

 He woke up. His hands started searching for her on the bed. He could not find her.
 He got up and looked for her in the kitchen. She was not there.

 "She might have gone out." He thought.

 He prepared the coffee and poured it into two cups. He finished his cup but she did not come home.

           *                *              *

 He connected to VPN in the office and logged into twitter. He went to her twitter account. Her last tweet was approximately one month old. He likes stalking at her profile.

 "Why is she not tweeting? I should talk about it today." He thought.

 It was 1 PM. He looked at his mobile. No missed calls.

 He called her.

 Her mobile was switched off.

 He skipped his lunch. He did not feel like having it. He was waiting for the clock to hit 6.

         *                  *              *

 He reached home. It was still locked.
 He sat at the door and called her. It was still switched off.

 He prepared dinner for both of them. He was waiting for her.

 The phone rang. He lifted up. It was Krish.

 " Dude! Come down. Let's have a small drink."

 " I'm waiting for her. She feels bad if I drink."

 " I shall talk to her dude. You come down."

        *                   *             *

   They were in their fourth peg.

 " Life would never have been beautiful if she were not in my life. I met her three years back. Earlier, life was routine and very depressing. But she changed it..."

 " Stop it dude!" Krish shouted.

 He looked at him in shock.

 Krish continued:

 " Come to reality. She died a month ago. And why you still can't accept that fact? Come to reality. I can't see you living in illusion. "

 He did not speak. He went home. She had not yet come home.

 He called her. It was still switched off.

 He slept off and had never woken up...

       *                    *               *


P.S.: The author could only think of life with out woman. He could not even dare to think of world with out women.

Dedicated to the most beautiful woman in the Universe.. The Mother...


You Might Also Like

1 comments

  1. கத பட்டையக்கெலப்புது நண்பா.............!!!!!!!!!!!!!!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...