உலகத் திரைப்பட விழா அனுபவம் - பாகம் I

8:18:00 PM

உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. என்னதான் இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்து லாப்டாப்பில் தினம் ஒரு படத்தை பார்த்தாலும், 'தியேட்டர் அனுபவம்' என்னும் அந்தத் தனி இன்பம் கிடைப்பதில்லை. நம் ஊர் தியேட்டர்களில் கேமரூனின் 'அவதார்'ருக்கே இங்கிலீஷ் 'வேட்டைக்காரன்' என்று விளம்பரப்படுத்தி, பன்டோரா 'நவி'களை தமிழ் பேசவைத்தால்தான் கூட்டம் வருகிறது. இதில் 'உலக'ப்படங்கள் என்று எங்கு போய் நிற்பது?

(வெயிட் நிமிட் ஃபார் ஃபைவ் நிமிட்ஸ் - என்னடா இவன் ...வூ...என்றால் உலகத்திரைப்படம், உலகத்தரம் அது இதுவென்று ஓவராகப் பேசுகிறானே என்று நினைக்கவேண்டாம். எனக்குத் தெரிந்தது சினிமா பார்ப்பது, சினிமா பற்றிப் பேசுவது. அவ்வளவு தான். இப்போது கொஞ்ச நாட்களாகத்தான் 'பார்டர்' தாண்டி படம் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் அல்டாப் இருக்கத்தான் செய்யும். தயவு கூர்ந்து பொறுத்துக்கொள்ளவும்)

ம்... சரி சரி... ஆட்டய கவனிப்போம்...என்ன சொல்லிக்கொண்டிருந்தேன், உலகத்திரைப்படவிழா...ம்... இந்த உலகத்திரைப்படவிழா இருக்கே!, அதன் மீதான மோகத்திற்கு இன்னொரு முக்கிய காரணம் பதிவர் ஜாக்கிசேகர். தினம் ஒரு வித்யாசமான படத்தை பற்றி எழுதி ஆர்வத்தை கண்டபடி தூண்டும் அவர், இந்தப் படங்கள் எங்கு கிடைக்கும் என்று கேட்டால், 'சர்வதேச திரைப்படவிழா' என்று பதிலளிப்பார். அட, இந்தப்படங்களுக்கு டவுன்லோட் 'லிங்க்'ஆவது கிடைக்குமா என்று தேடிப் பார்த்தால், அதுவும் சாமானியத்தில் சிக்குவதில்லை. இந்தக் கடுப்புகளினாலேயே வெறுப்பாகியிருந்த நான், '7 வது சர்வதேசத் திரைப்பட விழா' என்ற அதே ஜாக்கியாரின் பதிவைப் பார்த்து, குஷியாகிப்போனேன். விழா நடப்பதோ 16 முதல் 24 தேதிகளில். எனக்கோ 24 தேதிகளுக்குப்பிறகு தான் விடுமுறை. 'சினிமா பார்க்கப்போறேன் லீவ் வேணும்' என்று போய் நின்றால், என் டீம் லீட், 'என்னை பார்த்தா உனக்கு லூசு மாதிரி தெரியுதா' என்பது போல் பார்ப்பார். ரிஸ்க் எடுக்க நான் தயாரில்லை. சனி, ஞாயிறு தான் ஒரே வழி. வெள்ளி காலை முடிவு செய்து சென்னையிலிருக்கும் நண்பர்களுக்கு போன் செய்து விட்டு, இரவு பஸ் ஏறிவிட்டேன்.

ஆனால் பஸ் ஏறுவதற்குள் எத்தனை டென்சன் என்கிறீகள். ஆன்லைனில் கடைசி நேரத்தில் 'புக்' செய்திருந்ததால், அந்த புது டிராவல்ஸ் எங்கு என்று தெரியவில்லை. ஆட்டோக்காரன் டிராபிக்கை சமாளிக்க சந்து பொந்தாக புகுந்து வந்து பொத்தாம் பொதுவாக 'ஹெல்லா டிராவல்ஸ்னு ஹில்லிதா இத்தா' என்று ஒரு இடத்தில் இறக்கிவிட்டு 30 ரூபீஸ் வாங்கிக்கொண்டு போய்விட்டான். நானும் நம்ம்ம்ம்ம்பி இறங்கிவிடேன். இறங்கி தேட ஆரம்பித்தால், அந்த 'சங்கிதா டிராவலஸ்' தவிர எல்லமே அந்த இடத்தில் தான் இருந்தது. நானும் 'எங்கதான்டா இருக்கு உங்க ஆபீஸு' என்று போன் போட்டால், 'அனுமார் கோயிலுக்கு எதுத்தாப்பல'னு பதில் வருது. நான் அந்த அனுமார் கோயிலையெல்லாம் தாண்டி 3/4 கிலோ மீட்டர் அப்பால நிக்கிறேன். கருமம், சந்து பொந்துல புகுந்து வந்து அனுமார் கோவிலை அந்த ஆட்டோக்காரன் எனக்குக் காட்டவேயில்லை. சந்து பொந்து இல்லாமல், ரோட்டு மேலேயே அப்படியே நேராக ரிவெர்ஸில் போக வேண்டும். 40 ரூபீஸ் கேட்டான் ஒரு ஆட்டோக்காரன். BTM லிருந்து மடிவாலா - 4.5 கி.மீ, 30 ரூபீஸ். மடிவாலாவிலிருந்து மடிவாலாவுக்கு - 3/4 கி.மீ, 40 ரூபீஸ். 'டிக்கெட் 5 ரூவா, பூ 50 ரூவா... நல்ல பார்ட்னர்ஸிப்பு' என்று வடிவேல் சொல்வது போல் ஆகிவிட்டது என் பிழைப்பு. 10 மணிக்கு பஸ். மணி ஒன்பதரையைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்ததால், சரி என்று கேட்டதைக் கொடுத்து ஷார்ப்பாக போய் நின்றேன். பஸ் 11.45 க்கு வருகிறது. அடப் பவிப்பயலுகளா... இந்த பெங்களூரில் ஒவ்வொரு முறை நானும் வெட்கமில்லாமல் ஆட்டோ ஏறி பஸ் பிடிப்பதற்குள் 'யப்பா... சாமீமீமீ… ராஜா, என்னால முடியல ராஜா...' என்றாகி விடுகிறது.

ஒர வழியாக பஸ் ஏறினால் என் சீட்டில் ஒரு வெள்ளைக்காரன் தூங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பி 'சாரி, திஸ் இஸ் மை சீட்' என்றால், அவன் ஒரு கண்ணை மட்டும் திறந்து என்னைப் பார்த்து, அவன் டிக்கெட்டைக் காட்டினான். சீட் நம்பர் 27, என் சீட் நம்பரும் 27. 'அடேய்ய்ய் சங்கீத்தா' என்று கத்தினால், 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க சார். நெறைய சீட் ப்ரீயாதான் இருக்கு; வேணும்கிறதுல உட்கார்ந்துக்கோங்க' ங்கிறான். நிறைய சீட் என்று அவன் சொன்னது கடைசி சீட்டை. தூக்கித் தூக்கி போட்டபடி குதிரை ஓட்டிக்கொண்டே அரையும் குறையுமாகத் தூங்கி சென்னை வந்து காலை 6 மணிக்கு இறங்கினேன். இறங்கியதும் நண்பன் முத்துராமிற்கு போன் செய்தேன். 'இந்தா வந்துர்றேன் டா மாமா' னு சொன்னவன் 10-15 நிமிடம் ஆகியும் வரவில்லை. என்னகோ இரவு சாப்பிட்ட ஏதோ ஒன்று வயிற்றைக் கலக்கிக்கொண்டிருந்தது. மறுபடியும் போன் செய்தால் ' இர்றா, வண்டி பஞ்சர். வேற வண்டி ஏற்பாடு செய்யனும்ல, பொறு' ங்கிறான். 'டேய் ராசா, சீக்கிரம் வாடா, என்னக்கு வயித்தைக் கலக்குது' ன்னு சொன்னால் 'வயசுப்புள்ளயாடா நீ... பஸ் ஸ்டாண்டுல நிக்கிறதுக்கு வயிதக்கலக்குதுனு சொல்ற' ங்குறான் அவன். டேய் என்னாங்கடா இது சம்பந்த சம்பந்தமில்லாம பேசுறீங்க! சாப்பிட்டது வயிதக்கலக்குறதுக்கும் வயசுப்புள்ளைக்கும் என்னடா சம்பந்தம்? ஆனால் சொன்னது போல் ஒரு 50 பேராவது என்னிடம் வந்து, ஆட்டோ வேணுமா சார், ரூம் வேணுமா சார், டாக்ஸி வேணுமா சார் என்று என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். 'கூப்பிட ஆள் வருது' என்றால் 'ஆள் வரலன்னா ரூம் வேணுமா சார். 2500 தான் 'சகல' வசதியும் உண்டு' ங்கிறான் ஒருத்தன். "ராமா டேய் சீக்கிரம் வாடா" என்று நானும் 'சமாளித்து' நின்று கொண்டிருந்தேன்.

இப்படிப் பல இன்னல்களைத் தாண்டி எப்படியோ 10.15 மணிக்கு உட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு வந்து சேர்ந்தோம் நானும் நண்பனும். அங்கு ஸ்ரீனிவாசன் என்பவருக்கு நான் முன்பே போன் செய்திருந்ததால், அவர் எங்களுக்கு 300 ரூ மட்டும் போதும் என்று கூறிவிட்டார். அந்த நல்ல மனிதருக்கு நன்றிகள் (9 நாட்களுக்கு 500 ரூ. எங்களுக்கு 2 நாட்களுக்கு மட்டும் தான் தேவை என்று நான் முன்பே சொல்லியிருந்தால் கன்சிடர் செய்தார் அவர்).

போய் உட்கார்ந்த முதல் படமே ஒரு டாக்குமெண்டரி. 'Shake Hands With the Devil' என்று ருவாண்டா படுகொலைகள் நடந்த சமயம் இருந்த ஒரு UNO அதிகாரியின் சுயசரிதைப் போன்ற படம். ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தூக்கம், பசி என்று ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டது. பாதிலேயே வெளிநடப்பு செய்தாகவேண்டிய நிலைமை. பசி, தூக்கமிருந்தால் எதையும் சரியாகச் செய்யமுடியாது என்பதால் நல்ல ஹோட்டலாகப் பார்த்து ஒரு கட்டு கட்டி விட்டு வந்தோம். வந்தவுடன் பார்த்த படம் ஹங்கேரி நாட்டு 'Kameleon'. அடுத்து ஸ்லொவேகியா நாட்டு 'Heaven, Hell... Earth'. அதற்கு அடுத்தது போலாந்து நாட்டு 'Operation Danube'. இந்தப் படத்தின் இயக்குனரும், இசை அமைப்பாளரும் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். அவர்களுக்கு பொன்னடை, மாலை என்று போட்டு 'மிரள' வைத்த அக்மார்க் 'நம்' ஊர் விழா அமைப்பாளர் ஒருவர் 'ஃப்ரெண்ஸ் ப்ளீஸ் சுவிட்ச் ஆப் யுவர் செல்போன்ஸ் அண்ட் என்ஜாய் தி மூவீஸ்' என்று சொன்னார். யாரும் அவரைக் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை (என்னையும் சேர்த்து). இப்படி முதல் நாள் மூன்றரைப் படம் என்று எனது 'உலகப்பட விழா அனுபவம்' வெற்றிகரமாக முடிந்தது.

You Might Also Like

2 comments

  1. அப்படியே பார்த்த படங்களைப் பற்றி விரிவாக அடுத்தடுத்ட பதிவுகளில் பகிரலாமே

    ReplyDelete
  2. அது இல்லாமலா தர்ஷன்... கண்டிப்பாக நான் பார்த்ததில் நல்ல படங்களைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுவேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...