2009 சினிமா | எனது பார்வை

3:40:00 AM

2009 நிறைவடையப்போகிறது. இந்த வருடத்தில் 'அ ஆ இ ஈ' யில் ஆரம்பித்து 'எனக்குள் ஒரு காதல்' வரை வெளியான மொத்த தமிழ்ப் படங்கள் 130 (விக்கிபீடியா கணக்கு படி). அந்தப் படங்களில் எனக்குப் பிடித்தவை, பிடிக்காதவை, ஏமற்றியவை, சொதப்பியவை என்று நிறைய 'வை' கள் உண்டு. அ'வை' பற்றிய எனது கருத்துகள் இனி...


சிறந்த 10 படங்கள் என்று முதலில் வரிசைப்படுத்தினால்,

10. படிக்காதவன்
9. ரேணிகுன்டா
8. திறு திறு துறு துறு
7. ஈரம்
6. பேராண்மை
5. அயன்
4. நாடோடிகள்
3. நான் கடவுள்
2. உன்னை போல் ஒருவன்
1. பசங்க
(அருந்ததீ தெலுங்குப் படமாக இருப்பதால் இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை)

இந்த லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெரும் என்று நினைத்து நான் ஏமாந்த / என்னை ஏமற்றிய படங்கள் 5. அவை சர்வம், கந்தசாமி, ஆதவன், பொக்கிஷம் மற்றும் யோகி.
இவை தவிர நல்ல படங்கள் என்று நான் நினைப்பவை 6. அதில் முக்கியமானதாக வெண்ணிலா கபடி குழு பின் யாவரும் நலம், நியூடனின் மூன்றாம் விதி, லாடம், சிவா மனசுல சக்தி மற்றும் கண்டேன் காதலை.

எனது பார்க்கலாம் / ஓகே லிஸ்டில் வரும் படங்கள் TN07 AL4777, மாயாண்டி குடும்பத்தார், மாசிலாமணி, வால்மிகி, வாமனன், அச்சமுண்டு அச்சமுண்டு, தோரணை, மோதி விளையாடு, மலை மலை, சிந்தனை செய், நினைத்தாலே இனிக்கும், மதுரை சம்பவம், சொல்ல சொல்ல இனிக்கும், மதுரை டூ தேனி, கந்தக்கோட்டை, Quick Gun முருகன் மற்றும் ஈசா.
நான் பார்த்த படங்களில் ஏன்டா பார்த்தோம் என்று நினைக்க வைத்த படங்களும் உண்டு. அவை, குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், நேசி, ராஜாதி ராஜா, மாதவி, இந்திர விழா, முத்திரை, வில்லு, வேட்டைக்காரன் (நான் என்ன செய்வது? விஜய் என்ன செய்தாலும் என்னக்குப் பிடிக்கமாடேங்கிறது) மற்றும் சில மொக்கை ஆங்கிலப் படங்கள்.
திரைப்பட வெளியீட்டில் பெரும் பங்கு வகிக்கும் சன் டீவியின் தயவால் இந்த வருடம் 'வெற்றி நடை போட்ட' படங்கள் 8. அவை படிக்காதவன், Outlander, தீ, அயன், மாசிலாமணி, நினைத்தாலே இனிக்கும், கண்டேன் காதலை மற்றும் வேட்டைக்காரன். அவற்றில் உண்மையாக வெற்றி நடை போட்டது 'அயன்' மட்டுமே. கொஞ்சம் 'மெல்ல நடந்தது' படிக்காதவன் மற்றும் கண்டேன் காதலை.
அடுத்ததாக இந்த வருடம் ஐங்கரன் இண்டர்நேசனல் சார்பில் வெளிவந்த வில்லு, சர்வம் மற்றும் பேராண்மையில் மூன்றாமானது மட்டுமே சொல்லிக்கொள்ளும் படி ஓடியது. இதன் ராசி அடுத்து வெளிவரயிருக்கும் நந்தலாலா, அங்காடித் தெரு மற்றும் களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை பாதித்துவிடக்கூடாது.

அடுத்த வருடம் நான் பெரிதும் எதிர்பார்க்கும் படங்கள்

1. ஆயிரத்தில் ஒருவன்
2. ராவணா / அசோகவனம்
3. நந்தலாலா
3. அங்காடித்தெரு
4. நகரம் (சசிகுமார் படம்)
5. விண்ணைத்தாண்டி வருவாயா
6. இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
7. கோவா
8. ஜக்குபாய் ('டேக்கன்' படத்தின் தீம் என்பது என் கணிப்பு)
9. அசல்
10. பையா / சிங்கம்
மேலும் குட்டி, தமிழ் படம், தீராத விளையாட்டு பிள்ளை, ரெட்டை சுழி படங்களும் எதிர்பார்ப்பைக் கிளப்புகின்றன.
மற்ற மொழிப்படங்களில் என்னைக் கவர்ந்தவை அருந்ததீ, மஹதீரா, பா மற்றும் 3 இடியட்ஸ். 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலப் படங்களில் 2012, Avatar, Ninja Assasin, Paranormal Activity, Inglourious Basterds, District 9, The Hangover, Up, 9, X-Men Origins மற்றும் Taken

வேறு
என்ன சொல்வது புதுத் தெம்புடன் புது வருடத்தை வரவேற்போம்...

You Might Also Like

3 comments

 1. உங்களின் உயர்ந்த ரசனை நீங்கள் எந்திரன் போன்ற மசாலா படத்தை எதிர்பார்க்காமல் நிராகரிப்பதிலேயே தெரிகிறது. உங்கள் கருத்துப் படி உயர் கலானுபூர்வ அனுபவத்தை நல்கும் ஜக்குபாய்,அசல்,பையா,சிங்கம் படங்களை நானும் ஆவலாய் எதிர்ப்பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. //உங்கள் கருத்துப் படி உயர் கலானுபூர்வ அனுபவத்தை நல்கும் ஜக்குபாய்,அசல்,பையா,சிங்கம் படங்களை நானும் ஆவலாய் எதிர்ப்பார்க்கிறேன்//

  சார்...இது என்னமோ டோட்டலா "வஞ்சப்புகழ்ச்சி" மாதிரி தெரியுது. அப்புறம் தலைவர் படம் 2011 தான் ரிலீஸ். இல்லையென்றால் லிஸ்டில் முதல் படம் 'எந்திரன்' தான். ஹி ஹி ஹி...

  ReplyDelete
 3. சிறந்த பத்து படங்களில் வெண்ணிலா கபடி குழுவை சேர்க்காதது உங்களின் பாரபட்சத்தை காட்டுகிறது.

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...