ஆயிரத்தில் ஒருவன் - First Look (Trailer-Dont Miss It)

11:56:00 AM

படம் வெளிவர இன்னும் சரியாக ஒரு மாதமே இருக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்தில் ஒருவன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. CNN IBN சேனலில் இதன் வெளியீட்டு விழாவை ஒளிபரப்பியுள்ளார்கள். எதையோ யுடியூபில் தேடப்போய் இந்த க்ளிப்ஸ் கிடைத்தது. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று ப்ளாகில் ஏற்றிவிட்டேன்... டிரைலரைப் பார்க்கும் போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகமாகிறது. மூன்று வருடங்கள் எடுத்ததற்கு கண்டிப்பாக பலன் இருக்கும் என்றே தோன்றுகிறது. எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி ஒரு படம் என்று நாம் விட்ட பெருமூச்சுகளுக்குப் பலன் பொங்கலில் தெரியலாம்.

நல்லவேளை ' நான் அடிச்சா (நடிச்சா) தாங்க மாட்ட' வேட்டைக்காரன் பொங்கல் ரிலீஸ் இல்லை... அடுத்த வாரமே ரிலீஸ் ஆகித் தொலைகிறது. எந்தக் குடைச்சலும் இல்லாமல் பொங்கலுக்கு நிம்மதியா இந்தப் படத்தை மட்டும் பார்க்கலாம். சன் பிக்ஸ்ர்ஸ் வழங்கும், தனுஷ் நடிக்கும் 'குட்டி' ஆயிரத்தில் ஒருவனுக்கு போட்டியாக வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ம்ம்ம்ம்...என்னைப் பொறுத்த வரையில் இந்த மாதிரி அதிக பொருட்செலவில், பல நாட்கள் மிகவும் சிரமப்பட்டு எடுத்த படங்கள் வெளிவரும் சமயம் வேறு எந்தப் படமும் வெளிவரக் கூடாது... ஒரு நல்ல படத்தை மொக்கையான சாதா ஆக் ஷன் அதிரி புதிரி படங்கள் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது... பார்க்கலாம்.டிஸ்க்: இந்த டிரைலரின் நல்ல பிரிண்ட் இருந்தால் தயவு செய்து லிங்க் கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளவும்

You Might Also Like

1 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...