9:48:00 AM

December 1 - உலக எய்ட்ஸ் தினத்தன்று, Life (உயிர்), Love (உறவு), Hope (உண்மை) என்ற தலைப்புகளில் மூன்று குறும்படங்களை வெளியிட்டுள்ளார் 'பெரிய வீட்டு மருமகள்' கிருத்திகா உதயநிதி. People AIDS Initiative தொண்டு நிறுவனம், அலைகள் மீடியா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு, கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக வந்திருந்து, குறும்பட DVDகளை வெளியிட்டார். மேலும் துணை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் சசிக்குமார், மிஷ்கின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மூன்று குறும்படங்களும் HOPE-HOME FOR HIV/AIDS CHILDREN என்னும் குழந்தைகள் காப்பகத்தில் நடப்பது போல் படமாக்கப்பட்டிருக்கிறது.

உயிர் (Life) - கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம். ஒளிப்பதிவு, மகேஷ் முத்துச்சாமி (சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா). பிரசன்னா, இளவரசு நடித்துள்ளனர். நல்ல விழிப்புணர்வு தரும் காட்சிகள்.

உறவு (Love) - சசிக்குமார் இயக்கியுள்ள படம். ஒளிப்பதிவு, எஸ்.ஆர்.கதிர் (கற்றது தமிழ்). உயிர் குறும்படத்தின் தொடர்ச்சியாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. அருமையான தீம்.

உண்மை (Hope) - மிஷ்கின் இயக்கியுள்ள படம். ஒளிப்பதிவு அவரது ஆஸ்தான மகேஷ் முத்துச்சாமி. மூன்றில் இந்தக் குறும்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சொல்லிவைத்தாற்போல் அற்புதமான கேமிரா மற்றும் லைட்டிங். மிஷ்கின் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். என்ன கொஞ்சம் வாய் ஜாஸ்தி. இந்த விழாவில் கூட ஏதோ பெரிய மனுஷத்தனமாய் பேசப் போய் கமலிடம் 'பல்ப்' வாங்கியிருக்கிறார்.

இந்தக் குறும்படங்கள் தமிழகமெங்கும் டிசம்பர் 1 முதல் 8 ஆம் தேதி வரை சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் வெளியிடப்படுக்கிறது. DVDயுடன் சேர்ந்து, HIV சம்பந்தமான திரைக்கதைப் புத்தகம், ஸ்டில்கள் மற்றும் இயக்குனர்கள் பேட்டி என ஒரு 'செட்'டாக கூடிய விரைவில் வெளியாகிறது.

You Might Also Like

2 comments

  1. அருமையா தொகுத்து போட்டு இருக்கிங்க பிரதீப் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிகவும் நன்றி ஜாக்கி சார்... இந்தக் குறும்படங்களை சென்னை திரைப்பட விழாவில் மிஷ்கின், கிருத்திகா உதயநிதி தலைமையில திரையிட்டாங்க. பாத்தீங்களா?

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...