Landscape No.2 | ஸ்லொவேனியா | 2008 |
12:03:00 AM" இது எனக்கு விழவேண்டிய வெட்டு இல்ல. பாலுவுக்கு விழவேண்டியது. எதையோ முடிக்காம மிச்சம் வச்சிட்டு வந்திருக்கான்" - இது சண்டைக்கோழி படத்தில் வரும் வசனம். எழுதியவர், எஸ்.ராமகிருஷ்ணன். பிரபல தாதாவை ரோட்டில் போட்டு நெஞ்சு மேல் ஏறி மிதித்து விட்டு பஸ் ஏறி ஊருக்குப் போய்விடும் ஹீரோவைத் தேடி அவன் ஊருக்கே வரும் வில்லன், ஊர்த்திருவிழவில் களேபரத்தை உண்டு பண்ணி, கத்தியை ஓங்க, அது ஹீரோவின் அப்பா மேல் விழுந்துவிடும். அந்த ஊரில் பெரிய ஆளான அப்பா சொல்லும் 'அனுபவ' வசனம் தான் இது. பையன் செய்த தவறுக்கு அப்பனுக்கு வெட்டு விழும். (வழக்கமாக 'அப்பன் பட்ட கடனை பையன் அடைக்க வேண்டும்' என்று தான் சொல்வார்கள். இந்தப் படத்தில் கொஞ்சம் வித்யாசம்). அதனால் பரவாயில்லை. ஆனால், சுமார் 50 வருடங்களுக்கு முன் மிச்சம் வைக்கப் பட்ட / மறைக்கப்பட்ட ஒரு சம்பவத்திற்காக அதற்கு கொஞ்சம் கூடச் சம்பந்தமே இல்லாத ஒருவன், அவனைச் சுற்றியிருப்பவர்கள் என்று சம்பந்தசம்பந்தமில்லாதவர்கள் வெட்டு வாங்குவதென்பது ' அதனால் பரவைல்லை' ரகம் இல்லை.
சரி கதைக்கு வருவோம் - இந்த நல்லவர்கள் இருவரும் ஒரு நல்ல நள்ளிரவு வேளையில் ‘அந்த’ ஜெனெரல் வீட்டிற்கு திருடப் போகிறார்கள் (பக்கத்து வீட்டுக்காரி கொடுத்த தகவலின் படி ஜெனெரல் இப்போது தன் பேரப்பிள்ளைகளுடன் மீன் பிடிக்கவோ எங்கயோ போயிருப்பார்). போல்டேவின் குறி அந்த ஜெனெரல் வீட்டில் இருக்கும் Landscape No.2 வை தத்ரூபமாகக் காட்டும் ஒரு ஆயில் பெய்ண்டிங். மியூசியத்திலிருந்து ஜெனெரல் அதை திருடி வந்ததாகச் சொல்லும் போல்டே, அதை அவரிடமிருந்து திருடி, 10000 டாலர் கேட்கலாம் என்றும் வேறு எதையும் தொடாதே என்றும் சொல்கிறான். ஆனால் செர்கெஜ் அந்த பெய்ண்டிங் பின்னால் இருக்கும் ஒரு ரகசிய லாக்கரில் கொஞ்சம் பணம் இருப்பதை கண்டு, மொத்தமாக என்னென்ன எடுக்கிறோம் என்று தெரியாமலே அள்ளிப் போட்டுக் கொண்டு வந்துவிடுகிறான், அந்த ஆணைப்பத்திரத்தையும் சேர்த்து! செர்கெஜ், பெய்ண்டிங்கை போல்டே வீட்டில் வைத்துவிட்டு, ஜாஸ்னா வீட்டிற்கு வந்து மற்ற பேப்பர்களை அலமாரி மேல் வீசிவிட்டு, பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, "அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல, பக்கத்து வீட்டுக்காரி 'மாக்தா' போன் பண்ணா, நா வரேன்" என்று சொல்லிவிட்டு 'வேலை'யைப் பார்க்கப் போய்விடுகிறான்.
வீட்டிற்கு வந்து பார்க்கும் ஜெனெரல், திறந்து கிடக்கும் லாக்கரைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்து விடுகிறார். 80 வயதைத் தாண்டிவிட்ட அவருக்கு Landscape No.2 விஷயம் வெளியே தெரிந்து சாகப் போகும் சமயம் தன் பெயர் கெடுவதில் உடன்பாடுயில்லை. அந்த படுகொலைப் பற்றி நங்கு தெரிந்த தன் பழைய ஆள் ஒருவனைக் கூப்பிட்டு, அந்த பெய்ண்டிங் பற்றித் தெரிந்த அனைவரது லிஸ்டையும் கொடுத்து 'விசாரிக்கும்'படி சொல்கிறார். அதில் அந்த வேலைக்காரி பெயரும் உண்டு.
மொத்ததில் Landscape No.2 எனக்கு மிகவும் பிடித்த உலகத் திரைப்படங்கள் லிஸ்டில். அதன் லிங்க் இதோ...
http://rapidshare.com/files/289245892/andscT.part1.rar
http://rapidshare.com/files/289246343/andscT.part2.rar
http://rapidshare.com/files/289246689/andscT.part3.rar
http://rapidshare.com/files/289246970/andscT.part4.rar
subs
http://www.FastShare.org/download/wthd_landscape2_subs.rar
2 comments
இந்த படத்தை 2 நாட்களுக்கு முன் எழுத நினைத்து மூட் இல்லாமல் விட்டு விட்டேன்...
ReplyDeleteஇந்த படத்தை நானும் பிலீம் பெஸ்டிவலில் பார்த்தேன்... நாம் சந்தித்து இருக்கலாம் பிரதீப்...
இந்த படத்துக்கு நான் எழுதிய விமர்சன்ம் இதோ...http://jackiesekar.blogspot.com/2010/02/landscape-no2-18.html
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...