சென்ற வாரம்...டைரி குறிப்புகள்...

10:32:00 AM

திரைப்படங்கள்:
Ninja Assasin - PVRரில் 200 ரூபாய் கொடுத்துப் பார்த்தது. படம் முழுக்க ரத்தம், ரத்தம், ரத்தம் மட்டும் தான். பெர்ஃபெக்ட் 'நிஞ்சா' படம்! நிறைவாகவே இருந்தது. என் பக்கத்தில் ஒரு கணவன், மனைவி ஒரு 5 வயதுச் சிறுவனுடன். பாவம் அந்த பேமிலி, லூசுத்தனமாய் ஸ்மால் பாய்ஸை ரத்தக்களரி 18+ படத்திற்க்குக் கூட்டிக்கொண்டு வந்து விட்டனர். அந்தப் பயல் பாதியிலேயே பயந்து அழ ஆரம்பித்த்துவிட்டான். லாட்ஸ் ஒஃப் டிஸ்டர்பன்ஸ் ஆகிப் போனது.
Old Boy - அடுத்து இந்தப் படத்தைப் பற்றி தான் பதிவிடவேண்டியது. ரசித்துப் பார்த்த படம். இரண்டு நாட்களாக தூங்குவதில் இந்தப் படத்தால் சிரமம் ஏற்பட்டது. பழிக்குப் பழி என்பதற்கான சரியான பொருளை இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சொல்ல நிறைய விஷயங்கள் இருப்பதால் பதிவு கொஞ்சம் பெரியதாகப் போக்கொண்டிருக்கிறது. அதனால் தான் தாமதம். மேலும் ஆபீசில் ஆயிரத்தெட்டு டிஸ்டர்பன்ஸஸ். தமிழில் டைப் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே டீம் லீட் முறைக்க ஆரம்பித்து விடுகிறார். Alt+Tab உதவியுடன், அவர் கண்ணிலிருந்து தப்புவது தான் பெரிய பாடாக இருக்கிறது.
Law Abiding Citizen - ஹாலிவுட் பாலா இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தார். இங்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் DVDRip நெட்டில் வந்து விட்டது. படம் ஏமாற்றவில்லை என்றாலும், காதில் பூ சுற்றவும் தவறவில்லை. இந்தப் படம் ரூம் போட்டு யோசித்தால் மட்டுமே மாட்டும் திரைக்கதை டைப் தான். ஆனால், நன்றாக போய்க் கொண்டிருக்கும் போதே கிளைமாக்ஸில் சொதப்பி விடுகிறார்கள். படம் ஒரு ஒன்னே முக்கால் மணி நேரம் என்றால், ஒன்றரை மணி நேரம் போவதே தெரியாது. நான் கியாரண்டி...

ஏமற்றம்:
யோகி - படம் நன்றாக இல்லை என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது. ஆனால் அமீரின் மேல் நம்பிக்கை போய்விட்டது என்பதை மட்டும் சொல்லலாம். நான் உலகத் திரைபடங்கலெல்லாம் பார்ப்பதில்லை, அதைப் பற்றி படிப்பதும் இல்லை. அந்த அளவிற்கு எனக்கு படிப்பாற்றலும் இல்லை என்று சொல்லும் அமீர், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருது வென்ற ஒரு படத்தை அப்படியே சீன் பை சீன் காப்பியடித்திருப்பது வேதனையாக இருக்கிறது. இதில் பெருங்கடுப்பு என்னவென்றால், இந்தப் படத்தை நான் பார்த்ததே இல்லை என்று இப்போதும் கூருகிறார் அமீர். ஜெயம் ராஜா பக்கத்து மாநிலத்தில் வெளியாகும் படத்தை, 'நான் இந்தப் படத்தை தான் திரும்ப சீன்-பை-சீன், ப்ரேம்-பை-ப்ரேம் எடுக்கப் போகிறேன்' என்று ஊருக்கே சொல்லி, அதையும் எடுத்து நூறு நாள் ஓட்டுகிறார். 'அவரும் அமீரும் ஒன்றாகிறார்களே' என்ற வருத்தம் தான் எனக்கு. நல்ல வெளி நாட்டுப் படங்களை தமிழில் எடுப்பது ஒன்றும் பெரிய தவறில்லை. ஆனால் அதை ஒதுக்கொள்ள வெண்டும். கீழே விழுந்தலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசக்கூடாது. கமலின் பெரும்பாலான படங்களின் கதைகள் ஆங்கிலப் படக் கதைகளே! ஆனால் தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை மாற்றி அமைக்கப்பட்டிருக்கும். அதை கமலும் ஒத்துக்கொள்வார். யோகி படத்தின் திரைகதையை தான் தான் எழுதியதாகச் சொல்லும் அமீரை என்னவென்று சொல்வது? அவர் உலகப் படங்கள் பார்ப்பதில்லை என்றாலும் தமிழர்கள் இப்போது உலகத் திரைப்படங்கள் பார்ப்பதில் பட்டையைக் கிளப்பிக் கொன்டிருக்கிறாகள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அமீரின் அடுத்த படமான கண்ணபிரானை நான் பெரிதும் நம்புகிறேன்...பார்க்கலாம்.

புத்தகம்:
சேத்தன் பகத் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் '2 STATES'. நண்பன் சுந்தரம் தான் புத்தகம் வெளியான விஷயத்தையே சொன்னான். சேத்தன் பகத்தின் முதல் மூன்று கதைகலுமே பிரமாதமாக இருக்கும். அந்த மூன்றிற்கு சற்றும் சளைத்ததல்ல இந்த 2 States. 'Five Point Someone' கதையின் தொடர்ச்சி போல் அமைந்திருக்கும் இந்தக் கதையில், தன் காதலையும், காதல் திருமணத்தையும் பற்றி எழுதியிருக்கும் பகத், தமிழ் நாட்டை கிழி கிழி என்று கிழித்துள்ளார். ஆனாலும் அது ரசிக்கும் படியாக இருக்கிறது. நக்கல், நையாண்டி, செண்டிமெண்ட், ரொமான்ஸ், தாய் பாடசம், தந்தை பாசம், மாமனார், மாமியார் பாசம் அது இது வென்று கலந்து கட்டி கலக்குகிறார். IIT, IIMA வில் படித்துவிட்டு பேங்க் வேலையில் இருந்தவர் இப்பொது வேலையை விட்டு விட்டு, முழு நேர எழுத்தாளராய் வீட்டில் தன் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்கிறார். 2 States புத்த்கம் மட்டும் 4,00,000 பிரதி விற்றிருக்கிறது.
ஒன்றே ஒன்று மட்டும் தான் இந்த 2 States கதையில் எனக்குப் பிடிக்கவில்லை. என்னதான் மாடர்ன் பிகர், IIMA பட்டதாரி என்றாலும் கதையின் நாயகி/காதலி/மனைவியாக வரும் 'அனன்யா' செய்வதாக பகத் கூறுபவை கொஞ்சம் ஓவராக இருக்கிறது. தமிழ்நாட்டு அய்யர் பெண் சிக்கன் சாப்பிடுகிறாள்; பரவைல்லை. பீர் குடிக்கிறாள் பரவைல்லை; கூடப்படிக்கும் பையன் மீது காதல் வயப்பட்டு ஒரு மாத்திலேயே கட்டிலைப் பகிர்ந்து கொள்கிறாள்;பரவயில்லை. அவனுடனேயே 2 வருடம் வாழ்கிறாள்; வீட்டிற்குக் கூட்டி வருகிறாள்; அவன் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்குப் போய் சிக்கன், பீர், பின் கட்டில் என்று விளையாடுகிறாள்; ரத்னா ஸ்டோர்ஸில் லிப் கிஸ் அடிகிறாள்.யப்பேய்...ஏன் இப்படி படு ஓவராய் கேரக்டரைசேஸன் அமைக்க வேண்டும்? இதில் என்ன ரியாலிட்டியைச் சொல்ல வருகிரார் என்று தெரியவில்லை...

டிவி நிகழ்ச்சி:
சென்ற வாரம் சனிக்கிழமை முதல் கலைஞர் டீவி, 'நாளைய இயக்குனர்' என்னும் புதிய நிகழ்ச்சியைத்தொடங்கிவிட்டார்கள். வாரம் மூன்று குறும்படங்கள், மூன்று நடுவர்கள். மதன், பிரதாப் போத்தன் மற்றும் ஒரு சிறப்பு ஜூரி. இந்த வாரம் கே.எஸ். ரவிக்குமார்.
கலைஞர் டீவியின் மானாட மயிலாடவைக் கவிழ்க்க, சன் டீவி ராஜா 6 ராணி யாரு என்று 6 பிகர்களை களம் இறக்கிவிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே டீலா? நோ டீலா? என்று ஒருவன் உயிரை எடுத்துக் கொண்டிருக்க (நடுநடுவில் வேட்டைக்காரன் டிரைலர் வேறு...முடியலட சாமீமீமீ...), இந்த 6 அம்மணிகளும் அறை குறை ஆடையில் ஆடித் தள்ளி, மிச்சம் மீதி தமிழனின் உயிரை எடுக்கிறார்கள். காவியத்தலைவி ரகசியாவெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. குட்டியூண்டு டவுசர்தான் எப்பொதுமே...
இன்னொரு உலக மஹா முக்கிய செய்தி...சன் டீவியின் 'கோலங்கள்' ஒரு வழியாக முடிந்து விட்டது. நான் +1 படிக்கும் போது ஆரம்பித்தது, இப்போது நான் வேலைக்கு வந்து 15 மாதங்கள் முடிந்து விட்டது. இப்போது தான் கோலங்கள் முடிகிறது. மெய்யாகவே மிகப்பெரிய ரெக்கார்ட் தான்.

சுப நிகழ்ச்சி:

தோழி
சுஜீதாவிற்கும்-நண்பர் சுந்தருக்கும் கடந்த சனிக்கிழமை காரைக்குடியில் திருமணமானது.

அதேபோல், நண்பன் சிம்மேஸ்வரனின் அக்கவிற்கு இன்று திருமணம். நான் போக முடியாத சூழ்நிலை. (வராத என்னை நண்பன் கேவலமாக திட்டியதை நான் யாரிடமும் சொல்லப் போவதில்லை.மச்சி சிம்மேஸ் உன் திருமணம் என் மேற்பார்வையில் தான் நடக்கும். டென்சன் ஆகாத :-))

புதுமணத் தம்பதிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

You Might Also Like

3 comments

  1. நீங்க பார்த்தது R5 ரிலீஸ்ங்க பிரதீப். டிவிடி 3 மாதம் கழிச்சிதான் வரும்.

    I'm glad u enjoyed them. :)

    ReplyDelete
  2. For u r info, Call me as Sundar(Sundaram, not one who got married last week :)) and Yeah its me who recommended him to read "2 states" book.

    As we need some masala stuff in all sorts of media, he added all those I guess and also which is happening around u n me pradeep.Come out of DVD's and world movies. India is moving towards westernization boss!!

    I know u r great kamal fan but dont include him for all comparisons.

    Lot of spelling mistakes :) (Nanalam thappu kandupidikiren !!!!)

    ReplyDelete
  3. well Said Pradeep ..... about Yogi....keep ur pace

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...