இரண்டாம் உலகப் போர் (1939 - 1945) - ஒரு சின்ன பிளாஷ்பேக்

9:58:00 AM


"போர்"

இந்த வார்த்தைக்குள் புதைந்திருக்கும் குரூரம் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளவதென்பது முடியாத காரியம்.

இன்னுமொரு உலகப்போர் வந்தால் சண்டையிட்டுக்கொள்ள இந்த உலகமே இருக்காது என்பது தான் நிதர்சனம். ஆனாலும் வந்துவிடக்கூடாத அந்தப் போருக்காக எப்போதும் தங்களைத் தயார் நிலையிலேயே வைத்திருக்கிறது உலக நாடுகள். ஒருவனுக்கு மற்றவன் சளைத்தவனல்ல என்கிற ரீதியில் பயமுறுத்துகிறது நாடுக்கு நாடு நடந்துகொண்டிருக்கும் ஆயுதச் சோதனைகள். ஒருவனையும் வளர விடாமல் தொடர்ந்து கண்காணித்து, மிரட்டி, அதட்டி முடிவில்லையா கிளர்ச்சி ஒன்றைக் கிளப்பி அந்த நாடையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உலக நாட்டாமையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆனாலும் விடாமல் ரஷ்யாவும், சீனாவும் இப்போது வடகொரியாவும் தங்களது இருப்பை அவ்வபோது காட்டி அமெரிக்காவை வெறுப்பேற்றிக்கொண்டே இருக்கிறது. எல்லாம் அமைதியாக இருப்பதைப் போலத் தெரிந்தாலும், ஒருவித பதட்டநிலை மறைமுகமாக உருவாகி வருவது நிஜம்.

விஷயத்திற்கு வருகிறேன். இரண்டாம் உலகப்போர் பேரழிவு மட்டுமல்ல, பல அருமையான திரைப்படங்கள் உருவாகவும் காரணமாக இருந்து, இருக்கிறது. ஆக்ஷன் படப்பிரியனான எனக்கு போரும் போர் பின்னணியில் நடைபெறும் கதைகளும் ஆல்-டைம்-பேவரிட். வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகளுக்கிடையே எதிரிகளைத் தாக்கிக்கொண்டே தப்பியோடும் ராணுவ வீரர்களை கண்களை அகலவிரித்து காண்பதென்பது எனக்கு பிடித்தமான ஒன்று. சுமாராக இருந்தால் குறைந்தது ஒரு முறை, சூப்பர் என்றால் பல முறை - வெளிவரும் எந்தப் போர் படங்களையும் பார்க்காமல் விடுவதில்லை.

இரண்டாம் உலகப்போர் பற்றிய படங்கள் இல்லாமல் உலக சினிமா இல்லை. நமது இந்த #100நாடுகள்100சினிமா தொடரிலும் குறைந்தது 5 படங்களாவது முழுக்க முழுக்க இரண்டாம் உலகப்போர் சம்பந்தப்பட்ட படங்களாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

அதற்கு முன் – இரண்டாம் உலகப்போர் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுதல் நலம் என்பதால் கொஞ்சம் ஹிஸ்டரியை புரட்டிப்பார்த்து தெரிந்த விஷயங்களை அசைபோட்டும், தெரியாத விஷயங்களை டீப்பாகத் தேடியும் படித்துவைத்தேன். நான் தெரிந்துகொண்டதை உங்களுக்கும் சொல்லவே இந்தப் பதிவு. கொஞ்சம் பெரிய பதிவாக இருந்தாலும் வொர்த் என்பது என் கருத்து. 
Adolf Hitler
இரண்டாம் உலகப் போர் தொடங்கக் காரணமாக இருந்தது ஹிட்லர்.

தெரிந்த விஷயம்.

எப்படி தொடங்கியது இந்தப் போர்? கொஞ்சமாக எனக்குத் தெரிந்த கதையைச் சொல்கிறேன்.

முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி பலிகட்டா ஆக்கப்பட்டிருந்தது. Treaty of Versailles என்ற உடன்படிக்கையின்படி நிறைய பணத்தையும், பெரும் நிலப்பகுதிகளையும் இழக்க நேர்ந்தது. பெருங்கோபத்தில் இருந்த ஜெர்மனிய மக்களுக்கு நம்பிக்கையூட்டினார் 1933 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஹிட்லர் (Adolf Hitler). முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்க யூதர்கள் தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

Joseph Stalin
இதே சமயத்தில் சோவியத் யூனியனில் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தலைமையில் கம்யூனிஸ்ட்கள் ஒரு பெரும் சக்தியாக உருவாகிக்கொண்டிருந்தார்கள். ஹிட்லரது ஃபாசிசக் கொள்கைகள் அவர்களது கம்யூனிஸக் கொள்கைகளுக்கு எதிராக இருந்தது

Benito Mussolini with Adolf Hitler
அதே சமயம் முசோலினி (Benito Mussolini) தலைமையில் பாசிச நாடான இத்தாலி ஜெர்மனிக்கு ஆதரவளித்தது

General Hideki Tojo
அதே சமயம் ஆசியாவிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக உருவாக வேண்டும் என்ற பேராசையில் சீனக்குடியரசின் (Republic of China) மீது போர் தொடுத்திருந்தது Tideki Tojo தலைமையிலான ஜப்பானியப் பேரரசின் படை (Empire of Japan - ஜப்பானியப் பேர்ரசராக இருந்தவர் Hirohito. போரில் இவரது பங்கீடு குறித்து சரியான தகவல் இன்று வரை இல்லை. மொத்த வேலையையும் செய்த்து பிரதம மந்திரியும், படைத்தளபதியுமான Hideki Tojo) 

Beheading During The Nanking Massacre (China)
இது நடந்தது 1937 ஆம் ஆண்டு. சீனா தவிர Indochina நாடுகள் என்றழைக்கப்படுகிற Vietnam, Cambodia Laos நாடுகளையும், Thailand, Malaysia, Burma, Singapore, Philippines, Netherlands போன்ற நாடுகளையும் ஆக்கிரமிப்பு செய்தது.

1939 இல் இருந்து 1941 வரை ஜெர்மனி Belgium, Netherlands, Austria, Luxembourg, Greece,  பல ஐரோப்பிய நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துகொண்டிருந்தது. 

இத்தாலியப் படைகள் நாஜிப்படையுடன் சேர்ந்து ஆப்ரிக்க நாடுக்களைக் கைப்பற்றியது.

செப்டம்பர் 01, 1939 ஆம் ஆண்டு போலாந்து மீது படையெடுத்தது ஜெர்மனி. இதனால் போலந்திற்கு ஆதரவாக களத்தில் குதித்தது சர்ச்சில் (Winston Churchil) தலைமையிலான பிரிட்டன். பிரிட்டனுக்கு ஆதரவாக பிரான்ஸ் வந்தது. ஆனால் அதற்குள் Denmark, Norway ஜெர்மனியிடம் வீழ்ந்திருந்தன. அடுத்த சில மாதங்களில் (ஜூன் 1940) பிரான்ஸ் ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரிட்டன் தனித்து நின்றது. அடுத்தடுத்து பெரும் தாக்குதல்கள் நடத்தியும், ஜெர்மனியால் பிரிட்டனைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் பெரும் சேதாரத்தை உண்டுபண்ண முடிந்தது. கூடவே

Nazi–Soviet Nonaggression Pact (Molotov-Ribbentrop Pact)
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சோவியத் யூனியன், ஜெர்மனியுடன் சண்டையிட்டு அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த Poland, Finland, Romania மற்றும் Baltic States என்று அழைக்கப்படுகிற Estonia, Latvia, Lithuania ஆகிய நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றியது. இத்தனைக்கும் 1939 இல் தான் இரு நாடுகளும் சண்டையிடுக்க்கொள்ள மாட்டோம் என்று உலகறிய ஒப்பந்தம் இட்டுக்கொண்டார்காள் (Nazi–Soviet Nonaggression Pact). ஜெர்மனி திருப்பித்தாக்கியதில் சோவியத் யூனியனுக்கு பலத்த அடி. ஆனால் அது நீடிக்கவில்லை. ரஷ்யாவின் கடுங்குளிர் ஜெர்மனியை பின்வாங்க வைத்தது.

Franklin D. Roosevelt
ஐரோப்பாவில் ஆளாளுக்கு பெரியாளாகி சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ரூஸ்வெல்ட் (Franklin D. Roosevelt) தலைமையிலான அமெரிக்கா, தன் பங்கிற்கு நேச நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஜப்பானுக்கு பொருளாதாரச் சிக்கல் கொடுத்துக்கொண்டிருந்தது.

Attack on Pear Harbour (07 December 1941)
இதைக் கண்டு கடுப்பான ஜப்பான், அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக 07 டிசம்பர் 1941 அன்று ஒரு தாக்குதலை நடத்த (The Pearl Harbour Attack), நேரடியாகக் களத்தில் இறங்கியது அமெரிக்கா. அதற்குள் ஜப்பான் சீனாவை படாதபாடு படுத்தியிருந்தது (Second Sino-Japanese War July 7, 1937 to September 9, 1945). ஜப்பான் மீது அமெரிக்கா போர் தொடுக்க, ஜப்பானிற்கு ஆதரவாக ஜெர்மனி அமெரிக்கா மீது போர் தொடுத்தது.

இப்படித்தான் தொடங்கியது உலகப்போர்.

ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி மூன்று நாடுகளும், இவர்களுக்கு ஆதரவளித்த நாடுகளும் Axis Powers (அச்சு நாடுகள்) என்றழைக்கப்பட்டது.  

சோவியத் யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஆதரவு நாடுகள் Allies (நேச நாடுகள்) என்று அழைக்கப்பட்டது.

The Public Hanging of Bennito Mussolili
அமெரிக்கா உள்ளே வந்தவுடன், நிலைமை தலைகீழாகி அச்சுபடைகள் தோற்கத் தொடங்கின. 1943 இல் இத்தாலி விழுந்தது. 28 ஏப்ரல் 1944 முசோலினி தூக்கிலிடப்பட்டார். 6 ஜூன் 1944 அன்று ஃப்ரானிஸைக் அச்சுபடைகளிடமிருந்து கைப்பற்றியது நேசப்படை (Normandy landings / D-Day). 

Battle of Normandy (6 June 1944)
அந்தப்பக்கம் சோவியத் யூனியன் ஜெர்மனியை முழுபலத்துடன் தாக்கி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளை விடுவிக்கத் தொடங்கியிருந்தது.

The Yalta Conference (04-11 February 1945)
பிப்ரவரி 1945, உலகப்போரை நிறுத்தவும், ஜெர்மனியைச் சரணடைய வைக்கவும், ஐரோப்பாவைச் சீரமைக்க வேண்டியும் ஸ்டாலின், சர்ச்சில், ரூஸ்வெல்ட் தலைமையில் நேசநாடுகள் கூடி ஆலோசித்தது (The Yalta Conference)

USSR Flag in Berlin
யாருக்கும் அடங்காமல் ஜெர்மனி தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்க, முதலில் தாக்கியது சோவியத் படைகள். பின்னாலேயே பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சும் சேர்ந்து கொள்ள என்று எல்லா திசைகளிலிருந்தும் தாக்குதலுக்கு உண்டானது ஜெர்மனி. மே 8, 1945 பெர்லின் கைப்பற்றப்பட, சரணடைந்தது ஜெர்மனி. ஐரோப்பாவில் சண்டை முடிவிற்கு வந்தது. ஹிட்லர் 30 ஏப்ரல் 1945 மதியம் வாக்கில் தற்கொலை செய்துகொண்டார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அமெரிக்கா விடவில்லை. ஜப்பானைத் தன் பலம் கொண்டமட்டும் பெருமளவில் தாக்கியது. ஹிட்லருக்கு முன் நாம் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஆராய்ச்சி நிலையில் வைத்திருந்த அணுகுண்டுகளை ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் அடுத்தடுத்து ஜப்பானின் ஹிரோசிமா நாகசாகி மீது வீசியது அமெரிக்கா (ரூஸ்வெல்ட் அப்போது இறந்திருந்தார். அணுகுண்டு வீச உத்தரவளித்தவர் அவருக்கு பின் அதிபரான Harry S. Truman). நூற்றுக்கணக்கான ஜப்பானியர்கள் செத்து விழுந்தார்கள். மீள முடியாத தோல்வியைச் சந்தித்த ஜப்பான், செப்டம்பர் 2, 1945 அன்று நேசப்படைகளிடம் சரணடைந்தது.

இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை - போர் சமயம் நாம் பிரிட்டனின் காலனியாக இருத்ததால் நேசப் படைகள் சார்பாக சண்டையிட வேண்டிய நிலை. 'என்னதான் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் என்றாலும், அவர்களுக்கு ஒன்றென்றால் நாம் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கக்கூடாது, தோள் கொடுக்க வேண்டும்' என்று இந்தியப் படைகளை பிரிட்டனுக்காக சண்டையிட வைத்தார் மகாத்மா காந்தி. அதே சமயம் பிரிட்டனை செம்ம அடி அடித்துக்கொண்டிருந்த ஜெர்மனிக்கு தனது ஆதரவை வழங்கி தனது INA அச்சுப்படைக்காக சண்டையிடும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 
ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் தான் இரண்டாம் உலகப்போரில் நேரடியாகப் பங்குபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட 30 க்கும் அதிகமான நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாக இந்தப் போர்களால் பாதிப்பிற்குள்ளானது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டனர் என்கிறார்கள்

Polish Resistance Group
நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டதைத் தவிர, ஜெர்மனி / அச்சுப்படைகள் ஆக்கிரமித்திருந்த நாடுகளில் அவர்களை எதிர்த்த, பெரும் சிம்மசொப்பனமாக விளங்கிய உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களும் உண்டு. இவர்கள் Resistance Groups என்று அழைக்கப்பட்டார்கள். Polish resistance, French Resistance, Yugoslav Partisans, Belgian Resistance, Norwegian Resistance, Greek Resistance, Dutch Resistance போன்றவை மிக முக்கியமான கிளர்ச்சிப்படைகள். இவர்களைத் தவிர ஜெர்மனியிலேயே கிளர்ச்சிப்படைகள் உருவாகி 27 க்கு அதிகமான முறை ஹிட்லரையே கொல்ல முயற்சி செய்தவர்களும் உண்டு. சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராடியவர்கள் Soviet partisans என்றழைக்கப்பட்டார்கள். முசோலினியைத் தூக்கிலிட்டு இத்தாலியை விடுவித்தவர்கள் Italian Partisans என்றழைக்கப்பட்டவர்களே.

Auschwitz
யூதர்களைக் கொத்து கொத்தாக அழித்தொழிக்க நாஜிப்படைகள் சித்திரவதைக் கூடங்களை ஐரோப்பா முழுவதும் நிறுவியிருந்தார்கள். Concentration Camps என்றழைக்கப்பட்ட இந்தக் கூடங்களில் மிக முக்கியமானது போலாந்தில் இருந்த Auschwitz. தூக்கிலிடுவது, துப்பாக்கியால் சுடுவது மட்டுமல்லாமல் யூதர்களையும், போர்க்கைதிகளையும், அரசியல் கைதிகளையும் கொத்துக்கொத்தாகக் கொல்வதற்கு பல புதிய புதிய முறைகளைக் கண்டுபித்தார்கள் நாஜிக்கள். விருப்பமிருக்கிறதோ இல்லையோ ஜெர்மனியில் யூதர் அல்லாத மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் நாஜிப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்டரி பாடம் இத்துடன் முடிந்தது. சினிமாவிற்கு வருகிறேன்.

ஜெர்மனி, ஜப்பான் படங்களை எழுதிவிட்டேன் என்பதால், இந்த நாடுகள் தவிர்த்து மற்ற உலக நாடுகளில் வெளியான, இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட படங்களை அடுத்து எழுதலாமென்றிருக்கிறேன். வழக்கம்போல அதிகம் பிரபமில்லாத, ஆனால் பாத்தே தீர வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன். அதற்கு முன்பு பார்க்கவேண்டிய இரண்டாம் உலகப்போர் படங்கள் என்ற லிஸ்ட் ஒன்றைத் தயார் செய்துகொண்டிருக்கிறேன். பிரிவு வாரியாக அவற்றைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவோடு அதையும் இணைத்தால் பக்கங்கள் பெருகிவிடும் என்பதால், அடுத்த பதிவில் அந்தப் படங்களைக் கொடுக்கிறேன்.

உங்களுக்கு பிடித்த, உங்களது பேவரிட் ஆன இரண்டாம் உலகப் போர் தொடர்புடைய படங்கள் இருந்தால் கமெண்ட்டில் தெரிவிக்கவும் - எந்த நாட்டுப் படமாக இருந்தாலும் சரி.

*********************

World War II - Fought between two groups, the Axis and the Allies was the most widespraed war in Hostory which directly involved more than 100 million people from over 30 countries.

It all started during 1937, the Empire of Japan started waging war at Republic of China and other nearby nations. September 1939 Germany invaded Poland and started conquering most of the European countries except the mighty Britain. Britain joined hands with France and declared war on Germany. They called themselved the Allies. Germany invited Japan to join the party along with the other Fasict country Italy and they called themselves the Axis Powers. Soviet union joined hands with the Allies and conquered some of the German controlled regions in Poland, Finland, Romania and the Baltic States (Estonia, Latvia, Lithuania). America was indirectly supporting the Allies by giving economic pressure to Japan which made them angry. Japan attacked America during December 1941 which made America enter the World War, officially.

After the U.S entry, the fate of Axis powers changed. Italy fell during 1943 and its ruler Mussolini was killed on 28 April the same year. Germany fell on May 8, 1945 and was declared that Hitler commited suicide on (2 days after Mussolini's death). The U.S army attacked Japan and threw 2 atom bomds on Japan's Hiroshima and Nagasaki on 6th and 9th August 1945 forcing them to surrender. Japan fell to the Axis Powers on September 2, 1945 bringing an end to the World War II.

World War II has not just brought Horror and Destruction to the World but also has given some very good Classics to the World of Cinema. War is an important Genre in Cinema and war movies have always been my favourite. This World Cinema Series will be incomplete without movies related to World War II. I have decided to include 5 movies from 5 countries that happen around WWII.

Check this little vdo which explains WWII in just 7 minutes and brush up history - https://www.youtube.com/watch?v=wvDFsxjaPaE

Before that,


Let me know your favourite WWII movies (any country) in comments...

You Might Also Like

2 comments

  1. நண்பரே,

    உலகப் போர் ஒரு கொடூர சோகம் கொண்ட மிக துயரமான நிகழ்வு. மாற்றுக்கருத்தே இல்லை. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    சில திருத்தங்கள். நெதர்லாண்ட்ஸ் இந்தோ சைனா நாடுகள் வரிசையில் வராது. ஹிட்லர் போரை ஆரம்பித்தார் என்பது நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். அதில் முழுவதும் உண்மை கிடையாது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னாள் ஜெர்மனி பிய்த்துப் போடப் பட்டு, அங்கங்கே அதன் பகுதிகளை மற்ற நாடுகள் ஊறுகாய் போல கபளீகரம் செய்துகொண்டிருந்தன. முதல் உலகப் போரில் தோற்றதால் ஜெர்மனிக்கு இந்த அவலம் நிகழ்ந்தது. ஹிட்லர் உண்மையில் தன் நாட்டுக்காக பல திட்டங்கள், செயல்பாடுகள் கொண்டுவந்து அதன் மூலம் ஜெர்மனியை மீண்டும் ஒரு வலுவான நிலைக்கு உயர்த்தினார் என்று சொல்லப்படுகிறது. அவரைப் பற்றிய பிம்பம் போரில் வெற்றி பெற்ற நாடுகளின் பேனாக்காளால் எழுதப் பட்டதால் நமக்கு ஹிட்லர் பற்றி நியாயமான கருத்து தோன்றுவதில் சிக்கல் உள்ளது என்பது எனது கருத்து.

    போர் ஐரோப்பாவில் முடிந்துவிட்டாலும் ஜப்பான் விடாது போரிட்டதால் அமெரிக்கா அணுகுண்டுகள் வீசும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதில் இரண்டு நாடுகளுக்கும் பங்குண்டு. நாம் அமெரிக்காவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. அப்படி இல்லாவிட்டால் ஜப்பான் இந்தியாவரை வென்றிருக்கும். நமது வரலாற்றில் ஜப்பானிய மொழியும் அதன் கலாச்சாரமும் உடன் சேர்ந்திருக்கும்.

    உண்மையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள விரும்பாமல் மற்ற நாடுகளை விட்டு தங்கள் பலத்தை சோதித்துக் கொண்ட இரு முனைப் போரே இரண்டாம் உலகப் போர். ஹில்டரால் ரஷ்யாவை துவம்சம் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் துவக்கத்தில் ஒரு அமைதியான பார்வையாளனாக இருந்த அமெரிக்காவின் மீது ஜப்பான் குண்டு வீசியதில் அமெரிக்க பெருமிதம் சேதமானதில் உண்டான கோபம் அந்த நாட்டை போரில் இறக்கியது. பின் நடந்தது எல்லோருக்கும் தெரிந்ததே.

    அபாரமான பதிவு. மீண்டும் பாராட்டுக்கள். Savior என்றொரு war movie தொண்ணூறுகளில் வந்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் (போஸ்னியா) நடந்த போரின் பின்னணியில் வந்த அருமையான படம். Oliver stone எடுத்தது என்று நினைவு. அவருடைய platoon என்ற படமும் சிறப்பானது.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டமிட்டதற்கு நன்றி :)

      தாங்கள் சொல்லியிருக்கும் தகவல் அனைத்தும் 100-100 உண்மை. எனது பதிவில் இவற்றையெல்லாம் மேலோட்டமாகச் சொல்லியிருந்தாலும், அதிக தகவல்களைக் கொடுக்கவில்லை. பதிவு பெரிதாகிக்கொண்டே போனது தான் காரணம் :) படங்களை எழுதும் போது அந்தந்தப் போர்களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாமென்றிருக்கிறேன். Savior (1998) Dir. Predrag Antonijević நான் பார்த்ததில்லை. அவசியம் பார்த்துவிடுகிறேன்.

      நன்றி

      Delete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...