100 நாடுகள் 100 சினிமா #7 THAILAND - BANG RAJAN (2000)

9:04:00 AM

#100நாடுகள்100சினிமா

#6. TAIWAN

BANG RAJAN

Tanit Jitnukul | Thailand | 2000 | 127 min.   

(*** English write-up and download link given below ***)

அன்றைய அயோத்தியப் பேரரசு (Ayutthaya Kingdom - இன்றைய தாய்லாந்து) வீழ்ந்த கதையில் ஒரு முக்கியமான பகுதி தான் இந்தப் படம். 1765 முதல் 1767 வரை நடந்த பர்மா - சயாம் போரின் (The Great Burmese - Siamese War) ஒரு முக்கிய பகுதியை இந்தப் படம் சொல்கிறது. 1763 ஆம் ஆண்டு பர்மாவின் மாமன்னராMangra, சுற்றியுள்ள நாடுகளை அனைத்தையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர திட்டமிட்டான். அவனது முதல் குறி சயாம் (Siam - தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர்). மன்னனின் தளபதிகள் 1765 ஆம் ஆண்டு சயாமின் தலைநகரமான அயோத்தியாவை இருபக்கதிலிருந்து தாக்கத் தொடங்கினர். வழியெங்கும் உள்ளா சிறு கிராமங்களை எல்லாம் அழித்து, சரணடைந்தவர்களை அடிமைப்படுத்தி, எதிர்த்தவர்களைக் கொன்று குவித்து வந்தனர். ஆனால் திட்டமிட்டபடி தலைநகர் அயோத்தியாவை திட்டமிட்டபடி நெருங்க முடியவில்லை. காரணம் வழியில் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த ஒரு சாதாரண விவசாய கிராமம்.

அந்த கிராம மக்கள் தொடர்ந்து 8 முறை, கிட்டத்தட்ட 5 மாத காலம் பர்மியப் படைகளை தொடர்ந்து விரட்டியடித்து தலைநகரைக் காத்துள்ளனர். இத்தனைக்கும் தலைநகரிலிருந்து இவர்களுக்கு போதிய உதவிகள் வழங்கப்படவில்லை.

பர்மியப் படை நெருங்கி வர வர பல ஊர் மக்களும் கூட்டம் கூட்டமாக தலைநகர் நோக்கிப் பயனப்படுக்கொண்டே இருந்திருக்கின்றனர். ஆனாலும் அந்த ஊர்த்தலைவர் மட்டும் தங்களால் அந்த மாபெரும் படையை தடுத்து நிறுத்த முடியும் என்று நம்பி தனது சகாக்களை தலைநகர் அயோத்தியாவிற்கு அனுப்பி பீரங்கிகள் வேண்டும் என்று உதவி கேட்டிருக்கிறார். ஆனால், தாக்குதலில் கிராமம் வீழ்ந்துவிட்டால் பீரங்கிகள் பர்மா வசம் போய் தலைநகருக்கு மேலும் ஆபத்து விளைவிக்கும் என்பதால், உதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியும் விடாமல் கையில் இருக்கும் இரும்பையெல்லாம் உருக்கி தாங்களே ஒரு பீரங்கியைச் செய்து போரிட்டிருக்கிறார்கள் அந்த மக்கள்.

அந்த கிராமம் "பேங் ரஜான்" (Bang Rachan). அவர்களது கதை தான் இந்தப் படம்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படம், தாய்லாந்து வரலாற்றில் இன்றும் மாபெரும் வீரர்களாக, தேசப்பற்றின் இலக்கணமாகப் கொண்டாடப்படுவர்களைப் பற்றிய சரித்திரப்பதிவு. தைவானின் ‘SeediqBale: Warriors of the Rainbow’ படத்திற்கு சற்றும் குறைவில்லாத படம் தாய்லாந்தின் இந்த Bang Rajan: The Legend of the Village Warriors. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் சூட்டோடு சூட்டாக இந்தப் படத்தையும் பார்த்துவிடுங்கள்.

ஆக்ஷன், வரலாற்றுப் பட விரும்பிகளுக்கு இந்தப் படம் படையல் விருந்து. மீசைக்காரன் Nai Chan Nuad Kheo, ஊர்தலைவரான Nai Taen, யாருக்கும் அடங்காமல் அடாவடித்தனம் செய்துகொண்டிருக்கும் ஆனால் மாவீரனான Ai Tong Maen, கோடாரி கொண்டு சண்டையடும் Ai Tong Maen, மிகச் சிறந்த வில்லாளனான Nai Thongmen அவனது கர்பிணி மனைவி என்று படத்திலிருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நினைவிலேயே நிற்கிறது. நீண்ட கொம்புடைய எருமை மாட்டை குதிரை ஓட்டுவதைப் போல அசால்ட்டாக விரட்டி வரும் Ai Tong Maen சேட்டையை மறக்கவே முடியாது.

மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இயக்குனர் Tanit Jitnukul. தாய்லாந்து வரலாற்றில் அதிக் வசூல் செய்த படங்களில் ஒன்று. படம் வெளியான ஆண்டு 2000 என்பதால் தொழில்நுட்பரீதியாக கொஞ்சம் டல்லடிப்பதைப் போலத் தெரியும். ஆனால் அந்த காலகட்டத்திற்கு இந்தப் படம் ஒரு மைல் கல். சீரான கதைசொல்லல், தேவையான அளவு எமோஷன்ஸ், மிக அருமையான பின்னனியிசை, குறைந்தளவு கிராபிக்ஸ், மிக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அற்புதமான சண்டைக்காட்சிகள், வாயைப் பிளக்க வைக்கும் போர்க்களக் காட்சிகள் என்று படம் அதகளம்.

மிகச் சிறந்த படமாக இருந்தாலும், தாய்லாந்தின் மிக முக்கியமானப் படமாக இருந்தாலும், இந்தப் படம் பற்றி அநேக உலக சினிமா ரசிகர்களுக்குத் தெரியவில்லை. 2004 ஆம் ஆண்டு இயக்குனர் Oliver Stone (Platoon, Born on the Fourth of July, JFK, Natural Born Killers) இந்தப் படத்தை பார்த்து வியந்து அமெரிக்காவில் வெளியிட்டிருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு Bang Rajan 2 என்ற பெயரில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. அது கிட்டத்தட்ட இந்தப் படத்தின் ரீமேக் போலவே தான் இருக்கிறது. சண்டைகாட்சிகளுக்காக நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். ஒரிஜினல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை (டாரெண்டில் சீடிங் இல்லை. ஆனால் டவுண்லோட் ஆகும். பதிவின் கடைசியில் லின்க் உள்ளது). ஆனால் இரண்டாம் பாகம் ஆங்கில சப்டைடிலுடன் YouTube இல் இருக்கிறது.

தாய்லாந்து படங்கள் எனக்கு அறிமுகமானது Tony Jaa மூலமாக. '7 வருட பயிற்சி, 3 வருட படப்பிடிப்பு, அறிமுகம் புதிய ஆக்ஷன் மன்னன் Tony Jaa' என்று விளம்பரப்படுத்தப்பட்ட அவரது Ong Bak: Muay Thai Warrior படத்தைத் தஞ்சை யாகப்பா திரையரங்கில் பார்த்த்து இன்றும் நினைவில் இருக்கிறது. இன்று மார்ஷியல் ஆர்ட்ஸ் உலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் Tony Jaa வின் குரு மறைந்த இயக்குனர், ஸ்டண்ட் மாஸ்டர் PANNA RITTIKRAI. இவரது மறைவை ஒட்டி நான் எழுதிய பதிவு - https://www.facebook.com/permalink.php?story_fbid=767182929998528&id=233998196650340. அவசியம் படித்துப் பாருங்கள். ஆக்ஷன் படப்பிரியர்கள் பார்த்தே தீர வேண்டிய படங்கள் Rittikrai இன் படங்கள்.

இந்தப் படங்களைத் தவிர பார்க்க வேண்டிய மற்ற தாய்லாந்து படங்கள் - #1. Beautiful Boxer (2003) – உலகளவில் பிரபலமான முதல் தாய்லாந்துப் படம். அவசியம் பார்க்க வேண்டிய அருமையான ஸ்போர்ட்ஸ் டிராமா. #2. Uncle Boonmee Who Can Recall His Past Lives (2010) – இதுவும் உலகளவில் பிரபலமான ஒரு படமே. ஃபான்டஸி கதை. சமீபகாலமாக பிரபலமாக இருக்கும் சில தாய்லாந்து படங்கள் #3. Pee Mak (2013) – ஹாரர் காமெடி, #4. Teacher’s Diary (2014) – அருமையான டிராமா #5. Fan Chan (2003) – ரொமான்டிக் காமெடி. இந்தப் படங்களையும் பார்த்துவிடுங்கள்.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தையும் படத்தையும் பகிர்ந்து மகிழ்ந்திருங்கள்.

‘Bang Rajan’ is the true story of the village people who during the great Burmese–Siamese War (1765–67) fought the Burmese invaders and held position for more than 5 months helping the Siamese Army. Just like Taiwan’s ‘Seediq Bale: Warriors of Rainbow’, this is a historically important and a must watch movie from Thailand.

In 1763, Burmese King Hsinbyushin (called as, Mangra) desired to bring all countries around Burma under his rule and sent his army of 40,000 men who attacked the the Kingdom of Ayutthaya from the Northern and Southern sides. The Northern army was held up for five months at Bang Rachan, a small village northwest of Ayutthaya by a group of simple villagers. This is their story.

Panna Rittikrai
Thailand movies gained international fame only during early 2000’s when Tony Jaa, the new martial arts Legend. I remember watching his movie ‘Ong-Bak: Muay Thai Warrior (2003)’ with my mouth wide-open. Tony Jaa and his mentor Late. Panna Rittikrai have given handfull of ulitmate action movies and they are a must watch for every action film lover. Do not miss them. Check this post for the movies and their download links -https://www.facebook.com/permalink.php?story_fbid=767182929998528&id=233998196650340.

Other than the action movies, #1. Beautiful Boxer (2003), #2. Uncle Boonmee Who Can Recall His Past Lives (2010), #3. Pee Mak (2013), #4. Teacher’s Diary (2014) and #5. Fan Chan (2003) are some of the must watch movies from Thailand.

Recommend this page to your friends. Happy movie watching


To know more about Bang Rachan – https://en.wikipedia.org/wiki/Bang_Rachan



You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...