100 நாடுகள் 100 சினிமா #1 AFGHANISTAN - OSAMA (2003)

5:14:00 AM

Siddiq Barmak | Afghanistan | 2003 | 83 min.

(*** English Synopsis given below ***) 

காபுல் நகரம். 1996 ஆம் ஆண்டு. பர்தா அணிந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அணிவகுத்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே தங்களது கணவன், மகன், தந்தை, சகோதரர்களை அடுத்தடுத்த ஆஃப்கான் போர்களில் இழந்தவர்கள். "எங்களுக்கு வேலை வேண்டும். நாங்கள் அரசியல் பேசவில்லை. எங்களுக்குப் பசிக்கிறது. நாங்கள் கேட்பது வேலை செய்ய உரிமை மட்டுமே" என்று கோஷமிட்டபடி ஊர்வலம் வருகின்றனர். கனநேரத்தில் அங்கு வரும் தாலிபான்கள் சிறிதும் யோசிக்காமல் அந்தப் பெண்கள் மீது தண்ணீரைப் பீச்சி அடிக்கின்றனர். சிதறி ஓடும் பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுடுகின்றனர். சில பெண்களை சிறைபிடிக்கின்றனர். எங்கும் அவல ஓலம். இதையெல்லாம் ஒரு கேமரா படம்பிடித்துக்கொண்டிருக்கிறது. 12 வயதே ஆன பயந்த சிறுமி ஒருத்தியும் தன் தாயின் பின்னால் மறைந்தபடி இவையனைத்தயும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

தாலிபான்களின் மிரட்டலால் மூடப்பட்ட மருத்துவமனையில் வேலை செய்து வந்தவர் அந்தத் தாய். கணவனையும், சகோதரனையும் போரில் இழந்த விதவை. மூன்று பெண்கள் இருக்கும் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் தன் மகளுக்கு ஆண்வேடமிட்டு வேலைக்கு அனுப்புகிறாள். தாலிபான்களின் கொடூரச் செயல்களை தினம் காணும் அந்தப் பெண்ணுக்கு தன் உயிர் மேல் பயமிருந்தாலும், குடும்பத்திற்காக தனது நீண்ட கூந்தலைத் தியாகம் செய்து, தந்தையின் உடையணிந்து வேலைக்குச் செல்கிறார். குரைக்கத் தெம்பில்லாத நாயில் தொடங்கி, சந்தேகப்பார்வை பார்க்கும் கிழம் வரை யாரைப்பார்த்தாலும் பயந்து நடுங்குகிறாள். அழும் தன் பேத்தியை மடியில் கிடத்தி கதை சொல்லித் தேற்றுகிறாள் அவள் பாட்டி. 

ஆண்வேடமிட்டு வேலைக்குப்போகும் இந்தப் பெண்ணை, வலுக்கட்டாயமாக பயிற்சிப் பள்ளிக்கு இழுத்துச் செல்கிறது தாலிபான். 'ஒசாமா' என்று பெயர் சூட்டி மற்ற ஆண் பிள்ளைகளிடமிருந்து காப்பாற்றுகிறான் இவள் ரகசியமறிந்த ஒத்தவயது நண்பன் ஒருவன். மற்ற சிறுவர்களிடமிருந்து பெயர் வைத்துக் காப்பாற்ற முடிந்த அந்த ஆண்மகனால் தாலிபான்களின் கோரப்பிடியிலிருந்து தன் தோழியைக் காப்பாற்ற முடியவில்லை. சிக்கிக்கொண்ட ஒசாமாவிற்கு என்ன ஆனது என்பது தான் மீதிக் கதை. 

சில படங்கள் நம் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடும். அந்தப் படங்களை நினைத்துப் பார்க்கும் பொழுதெல்லாம் சில காட்சிகள் கண்முன் நிழலாடும். சிறைக்குள் 'ஒசாமா' ஸ்கிப்பிங் ஆடும் காட்சியும் அப்படிப்பட்ட ஒன்று தான். மதத்தின் பெயரால் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுமி ஸ்கிப்பிங் ஆடுவதென்பது நடக்காத காரியம். அது அந்தச் சிறுமி காணும் கனவு என்று கூட வைத்துக்கொள்ளலாம். பார்த்தவுடன் மனதைக் கவ்வும் அந்தக் காட்சி ஒரு அருமையான குறியீடு என்பதை படம் பற்றிய சில கட்டுரைகளைப் படித்ததிலிருந்து தெரிந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் இளமையைச் சிறைச்சாலைகளில் தொலைத்த நெல்சன் மண்டேலா, ராபன் தீவுகளில் சிறைவைக்கப்பட்டிருந்த போது தன் உடலை 'ஃபிட்' ஆக வைத்திருக்க சிறைக்குள் ஸ்கிப்பிங் ஆடுவாராம். இன்று சிறையில் இருந்தாலும், என்றாவது ஒரு நாள் நான் சுந்ததிரக் காற்றைச் சுவாசிப்பேன். அன்று மீண்டு எழுந்து வர எனக்கு இந்த ஆரோக்கியம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். "I cannot forget, But I can forgive" என்ற மண்டேலாவின் பிரபல வாசகங்களுடன் தான் இந்தப் படமும் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் பெண்கள் சொல்வது இதைத்தான். அப்படி வெளிவந்திருக்கும் ஒரு திரைப்பொக்கிஷம் தான் இந்தப் படம். நடந்த கொடுமைகளை அவர்கள் மன்னித்தாலும், மறக்கத் தயாராக இல்லை. தாலிபான்கள் கோரமாக்கிவிட்டுப் போன மிச்சத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு எழுந்து வந்து கொண்டிருக்கிறது ஆஃப்கானிஸ்தான். தங்களுக்கு, தங்கள் வீட்டுப் பெண்களுக்கு நடந்த கொடுமைகாளை கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஆவணப்படுத்தி வருகின்றனர் அந்நாட்டுப் படைப்பாளிகள். 

Dir.Siddiq Barmak
தாலிபான்கள் ஆட்சி முடிவிற்கு வந்த பிறகு முழுக்க முழுக்க ஆஃப்கானில் எடுக்கப்பட்ட படம் 'ஒசாமா'. படத்தை எழுதி இயக்கியிருப்பவர் Siddiq Barmak. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக்குவித்திருக்கிறது இந்தப் படம். Youtube இல் காணக்கிடைக்கிறது படம்.

Marina Golbahari
தொழில்முறை நடிகர் அல்லாதவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் சிறுமி ஒசாமாவாக நடித்து உலகளவில் பெரும் பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கிக்குவித்தவர் - Marina Golbahari. இப்போது இளம் குமரியாக, பேரழகியாக வளர்ந்து நிற்கிறார். நகைமுரண் என்னவென்றால், பர்தா அணியாமல் பொதுவிழா ஒன்றில் கலந்து கொண்டதற்காக அதே தாலிபானின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார். மரினாவின் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. ஆஃப்கானுக்கு திரும்பினால் மரணம் நிச்சயம் என்பது தெரிந்துவிட்டதால் தனது கணவருடன் பிரான்ஸ் நாட்டில் அகதியாக வாழ்ந்து வருகிறார் மரினா.

Movie opens up with women protesting in the streets asking for the right to work. They are bruttaly attacked by the Taliban who open fire, use water-canons and arrest some of them ending the protest through chaos. Under the Taliban regime women are not allowed to work or be seen in public without any man accompanying them and, when accompanied, had to wear the burka. With 3 starving woman in the family, the mother and grandmother decide to disguise their young girl as a boy and make her work in a Tea shop. The frightened girl is consoled by the grandmother. Troubles arrives when she is enrolled with all other male children in town to a Taliban Training school forcibly. The small girls struggle to keep her secret and what happens when the Taliban finds out is the story. 

Winning awards from across the world including the Golden Glode Globe for Best Foreign Language Film, 'Osama' is the first film to be directed entirely in Afghanitan after the Taliban regime by Afghan born Writer-Director Siddiq Barmak. The nuances in spread throughout the movie is amazing and shocking at the same time. The director has made sure that the message should be original, hard-hitting and should project zero positivity. The Film begins with a note from Mandela, I cannot forget, But I can forgive which is applies to the Afghans state of mind after the end of the suppressing Taliban regime. 

But the Bitter truth and reality is the Obama girl, Marina Golbahari - is currently living in France with her husband in an asylum as an immigrant. She received numerous death threats after being photographed at a South Korean film festival without her head covered.


Other Recommended Movies from Afghanistan:

You Might Also Like

1 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...