The Hot Chick | 2002 | America

10:39:00 AM


எந்தவித லாஜிக்கும் பார்க்காமல், ஒன்னே முக்கால் மணி நேரம் சிரிக்க மட்டும் நேரம் ஒதுக்குவதற்கு நீங்கள் தயார் என்றால் உங்களுக்கான படம் - The Hot Chick.  முதலில் எதோ மொக்கை B - Grade காமெடி படமாகத் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஹீரோயின் பிகர் கொஞ்சம் சூப்பராக இருந்ததால் பார்க்க ஆரம்பித்தேன். முதல் காட்சியே “ஐயோ சாமீ” என்று தான் இருந்தது. ஆனால் போகப் போக படம் அதகளம். சிரித்து சிரித்து வயிறு புண்ணானது. பலர் இந்தப் படத்தை மொக்கை என்று உதரித் தள்ளும் வாய்ப்புள்ளது. ஆனால் என்னைப் போன்ற ஒருசிலருக்கு நிச்சயம் இந்தப் படம் பிடிக்கும். There is something about Mary படத்தை விட இந்தப் படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது என்றே கூறுவேன். சரி பில்-டப்புகளை நிறுத்தி விட்டு கதையை சொல்கிறேன்.

படம் ஆரம்பிப்பது கி.மு. 50களில். இஷ்டமில்லாத திருமணத்திலிருந்து தப்பிப்பதற்காக எகிப்து இளவரசி தன் அடிமையின் மூலம் ஒரு மந்திர காதணியை (தோடு) வரவழைக்கிறாள். அதில் ஒன்றை இளவரசியும் ஒன்றை அடிமையும் போடுக்கொள்கின்றனர். சிறிது நேரத்தில் இளவரசியின் உடலில் அடிமையும், அடிமையின் உடலில் இளவரசியும் கூடு விட்டு கூடு பாய்கின்றனர். இளவரசி உடலில் இருக்கும் அடிமையை திருமணத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அடிமையின் உடலில் இருக்கும் இளவரசி எஸ்கேப். தற்காலத்தில் இந்த தோடுகளை ஆன்டிக் பொருட்களில் விற்கும் ஒரு கடையிலிருந்து ஜெஸிக்கா என்னும் துறு துறு சுட்டிப் பெண் திருடிக்கொண்டு வந்துவிடுகிறாள். ஒரு தோடை இவள் அணிந்திருக்க, மறு தோடு காணாமல் போகிறது. சின்னச் சின்ன திருட்டுகள் செய்யும் க்ளைவ் என்பவனிடம் இந்த தொலைந்த தோடு கிடைக்க, சும்மனாச்சுக்கும் அவன் அதை காதில் மாட்டிக் கொள்கிறான். மறுநாள் காலை எழுந்து பார்த்தால் ஜெஸிக்கா உடலில் க்ளைவும், க்ளைவ் உடலில் ஜெசிக்காவும் இருக்கிறார்கள். இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது ஆட்டம். 

முக்கால் படம் க்ளைவ் உடலில் இருக்கும் ஜெஸிக்காவைச் சுற்றியே நடக்கிறது. தான் தான் ஜெஸிக்கா என்பதை தன் நண்பிகளுக்கு நிரூபிப்பதற்காக க்ளைவ் செய்யும் குபீர் ரக செயல்களில் இருந்து ஆரம்பம் ஆகிறது ஆட்டம். 

படத்தில் இரண்டு காதல் கதைகள். ஒன்று ஒரிஜினல் ஜெசிக்காவிற்கும் அவளது காதலனான பில்லி (Billy) க்குமானது. மற்றொன்று க்ளைவ் உடலில் இருக்கும் ஜெசிக்காவிற்கு அவளது நெருங்கிய தோழியான ஏப்ரலுக்குமானது. ஒன்று சீரியஸான ரொமாண்டிக் காதல், மற்றொன்று சீரியஸான காமெடி காதல். அதிலும் ஏப்ரல் ஜெசிக்காவின் மேல் உள்ள தன் காதலை உணர்ந்து ஒரு பார்ட்டியில் அதை வெளிப்படுத்துவதும், பின் உண்மை உணர்ந்து வருந்துவதும் அட்டகாசம். காதல் பெருக்கெடுத்து ஏப்ரல் க்ளைவ் உடலில் இருக்கும் ஜெசிக்காவை கிஸ் அடிக்க அதற்கு ஜெசிக்கா “I am so lesbian right now” என்று சொல்லும் காட்சி அல்டிமேட்.

ஏப்ரிலாக நடித்திருப்பவர் Scary Movie புகழ், Anna Faris. பில்லிக்கும் ஜெசிக்காவிற்குமான காதலை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கின்றனர். 

ஜெஸிக்காவை காணாமல் பில்லி படும் பாடும், க்ளைவாக மாறியிருப்பதால் பில்லியை நெருங்க முடியாமல் தவிக்கும் ஜெசிக்கா என்று ஒரு அற்புதமான காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

க்ளைவ் உடலில் இருக்கும் ஜெஸிக்கா தன் தாய் தந்தையருக்கு தாம்பத்யத்தில் இருக்கும் பிரச்சனையையெல்லாம் சரி செய்யும் இடங்களும் செண்டிமெண்ட் குபீர். ஒரே நேரத்தில் தன் காதலன் உண்மையானவன் என்பதையும், தன் தோழியின் காதலன் டூபாக்கூர் என்பதையும் கண்டறிவது நம் மொழியில் சொல்வதென்றால் இயக்குனரின் திரைக்கதை டச். 

அதே சமயம் ஜெசிக்கா உடலில் இருக்கும் க்ளைவ் போடும் ஆட்டம் இன்னும் சுவாரஸ்யம். பகலில் திருடுவது, இரவில் ஒரு பாரில் 'போல் டான்ஸ்' ஆடி சம்பாதிப்பது என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துகிறான்.


எல்லாம் சரியாக இருக்கும் போது நாம் காணும் ஜெசிக்காவின் செயல்களை அதே பெண்மை கலந்த நளினத்துடன் க்ளைவ் ஆக நடித்திருக்கும் Rob Schneider செய்து காட்டி அசத்துகிறார். அவர் உண்மையில் ஒரு Stand up Comedian னாம். பல பிரபலங்களைப் போல நடித்துக் காட்டுவதில் வல்லவர் என்று சொல்கிறது விக்கிபீடியா. பல காமெடிப் படங்களில் இவரை நான் பார்த்துள்ளேன். 

கொஞ்சம் சூப்பர் பிகர் ஹீரோயின் என்று நான் முதலில் சொன்னது, அதாவது “The Hot Chick” அல்லது ஜெசிக்காவாக நடித்திருப்பது ‘கோ’... ஸாரி The Stat of Play படத்தில் நடித்த Rachel Mcadams. படத்தில் இவர் செய்யும் ஒவொன்றும் இவரைப் போலவே கொள்ளை அழகு.      

நேரம் கிடைக்கும்போது நிச்சயம் இந்தப் படத்தை பாருங்கள். இப்போதைக்கு படத்தின் டிரைலரை இங்கே பாருங்கள்.

You Might Also Like

3 comments

  1. நீங்க நல்ல ரசனையான ஆள்தான் உங்களோட அனைத்து படவிமர்சனங்களும் அருமை. இந்த படத்தின் விமர்சனமும் சூப்பரா இருக்கு தொடர்ந்து பல நல்ல படங்களை அறிமுக படுத்துங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //ஜெசிக்காவாக நடித்திருப்பது ‘கோ’... ஸாரி The Stat of Play படத்தில் நடித்த Rachel Mcadams//

    ஹா! ஹா! ஹா! காப்பி அடிக்கறதுல நம்ம ஆளுங்கள அடிச்சுக்க இன்னொருத்தன் பொறந்து தான் வரணும்.

    'கோ’... ஸாரி The Stat of Play லீலைய இங்க போய் பாருங்க!!

    http://worldcinemafan.blogspot.com/2011/04/blog-post_26.html

    ReplyDelete
  3. @ராஜகோபால்: தொடர் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி ராஜகோபால். நிச்சயம் முடிந்த அளவு வித்யாசமான நல்ல படங்களை எழுதுகிறேன்.

    உலக சினிமா பாஸ்கரது தளத்தின் முதல் வாசகன் நான். அவரது பதிவை படித்து விட்டு உடனே State of Play படம் பார்த்தேன். அப்படியே ஷாக் ஆய்டேன்!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...