எது சொர்க்கம் ?
12:58:00 PMநண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய பார்வர்ட் மெயில்... இதில் உள்ளது அனைத்தும் என்னைப் போன்றவர்கள் மட்டுமே உணரக்கூடிய உண்மை...
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....
10 comments
சிறு அறையில் குறுகிப் படுத்து
ReplyDeleteசில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !//
ஆகா ஆகா என்ன வரி..???
இந்தக் கவிதை நல்லா இருந்துச்சு... ஆனால், என்னோட கருத்து - என்னோட பர்சனல் கருத்து - என்னன்னா, எனக்கு சொந்த பந்தங்களோட இருக்கும் காலம் போதும்.. அப்பப்ப ஊருக்குப் போகும்போது அது எனக்குக் கிடைக்கும் ;-) .. ஆனா இதுக்கும் மேல உலகத்தோட பல மூலைகளுக்கும் போய் கண்டபடி எஞ்சாய் பண்ணனும்னு நினைக்குறவன் நானு.. ஸோ, எனக்கு அது ஒரு பிரச்னையா தெரியலை..
ReplyDeleteஅத்தோட, ஊர்ல சொந்த பந்தங்களோட இருந்திருந்தா, அப்புடியே போயிருப்பேன்.. எக்ஸ்போஷர் கிடைச்சிருக்காது . . ;-)
இது என்னோட தனிப்பட்ட கருத்து மட்டுமே.. மட்டுமே.. மட்டுமே.. ;-)
செம வொர்க்கு... முதுகு உரியுது.. இப்பத்தான் உங்க போஸ்ட்களைப் பார்க்க நேரம் கிடைச்சது... இந்த மாதிரி லேட்டா வந்து நானு பின்னூட்டம் போட்டா தப்பா எடுத்துக்காதீங்க ;-)
ReplyDelete@ஜாக்கி சேகர்: உண்மைதான் ஜாக்கி ஸார்!
ReplyDelete@கருந்தேள் கண்ணாயிரம்: தலைவா, என்ன கலாய்க்கிறீங்களா? என்னையும் மதிச்சு கமெண்ட் போடுற சில பேர்ல நீங்க முக்கியமானவர்... உங்கள நான் எப்படி தப்பா எடுத்துக்க முடியும்...! உங்களேட இந்தக் கமெண்ட்ல நிறைய உள்குத்து இருக்கு... :-)
சாப்ட்வேர் வேலையின் கொடுமை
ReplyDelete-------------------------------
போதும் இந்த வாழ்க்கை
இயந்திரதுடன் சண்டை இட்டு
தோற்ற நாட்கள் பல அதனால்
தூக்கம் மறந்து
ஏக்கம் மறந்து
அம்மாவின் ஒரு நாள் உணவு மறந்து
அப்பாவின் அரவணைப்பு மறந்து
தம்பியுடன் சண்டை மறந்து
நிர்க்கும் இடத்தில் நடந்து
நடக்கும் இடத்தில் ஓடி
ஓடும் இடத்தில் பறந்து
என்ன வாழ்க்கை
மிருகத்தில் இருந்து மனிதனாகி
மறுபடியும் பணத்திற்காக மிருகமாகும் நிலை ஏன்? ......
The post is written in very a good manner and it entails many useful information for me. I am happy to find your distinguished way of writing the post. Now you make it easy for me to understand and implement the concept. Thank you for the post.
ReplyDeleteI am happy to find your distinguished way of writing the post. Now you make it easy for me to understand and implement the concept. Thank you for the post.
ReplyDeleteI want to thank you for this informative read I really appreciate sharing this great post. Keep up your work
ReplyDeleteI never usually post on blogs but I have found this very useful so thank you
ReplyDeleteI enter every day to read them. Keep going your work
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...