Beautiful | Korean | 2008

11:33:00 AM

பல நாட்களாயிற்று இந்தப் படத்தைப் பார்த்து. ஆனால் ஏதேதோ காரணங்களால் எழுதாமலேயே விட்டிருந்தேன். இப்போது உங்கள் பார்வைக்கு. நான் ஏற்கனவே எனது ுந்தைய பதிவுகளில் உலக சினிமா வகையறாக்களில் எனக்கு மிகவும் பிடித்தவை தென் கொரியப் படங்கள் என்று சொல்லியிருக்கிறேன். இந்தப் படமும் ஒரு டிபிக்கல் தென் கொரியப் படமே. படத்தின் கதை தற்போது நமக்கு நண்பர் கருந்தேளின் மூலம் நெருக்கமாகிக் கொண்டிருக்கும் 'கிம்-கி-டுக்' கினுடையது. படத்தின் தயரிப்பாளரும் இவரே. "கிம்-கி-டுக் ஒரு ஸேடிஸ்டா?" என்று கருந்தேள் ஒரு பதிவு எழுதியிருந்தார். அப்போது நான் அதற்கு பதில் எதுவும் எழுதவில்லை. ஆனால் இப்போது எனக்கென்னவோ 'ஆமாம்' என்று பதில் சொல்லத் தோன்றுகிறது. அது இந்தப் படத்தினால் மட்டுமல்ல. இந்தப் படமும் ஒரு மிக முக்கிய காரணம் (மேலும், என்னுடன் 'Beautiful' பார்த்த என் நண்பன் 'கிம் கி டுக் சரியான சைக்குத் தா... வா இருப்பான் போலடா' என்று சொன்னதையும் இங்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

பெண் - இரண டெழுத்து மத்திரச் சொல்லில் உலகை ஆட்கொள்பவள். ஆயிரமாயிரம் விந்தைகளை தனக்குள் புதைத்து வைத்திருப்பவள். அதனாலோ என்னவோ ஆண்களால் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகிறாள். அதுவும் அழகானப் பெண் என்பவள் ஆண்களுக்கு கோடைக் கால மல்கோவா மாம்பழம் போல, எப்படியேனும் கல்லால் அடித்து சிதைத்தாவது பரித்து சாப்பிட்டு விடத் தூண்டும். 'அழகு' என்பது வரம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் "தான் ஒரு பேரழகி" என்கிற மிதப்பு உள்ள 'அட்டு' பீஸ்களுக்கு மட்டும் தான். அது ஒரு பேராபத்து என்பது நிஜமான பேரழகிகழுக்கு மட்டுமே தெரியும். இளவரசி டயானா வை மறக்க முடியுமா? அவரது அழகு அவருக்கு வரமா? சாபமா? அவருக்கு நிகரான அழகி இன்று யார்? அவருக்கு நிகழ்ந்ததென்ன?ஊரில் உள்ள ஒரு பெண் தான் ஒரு நிஜமான பேரழகி என்கிற ஓரே ஒரு காரணத்தால் படும் பாட்டை அற்புதமாகக் காட்டிய படம் - 'Malena'. இதில் நடித்திருந்த மோனிக்கா பெலூசி தான் உண்மையான 'பிரபஞ்சப் பேரழகி'. அந்தப் படத்தில் அவர் நடித்ததை விட அவரது அங்கங்கள் அதிகமாக நடித்திருந்தாலும், மூலக் கதை ஒரு அப்பாவிப் பெண்ணின் துயரம் தான். காரணம் அவள் அந்த ஊரிலுள்ள ஒட்டுமொத்த ஆண்களின் கனவுக்கன்னி, ஒட்டுமொத்த பெண்களின் பரம எதிரி. கடைசியில் அவளுக்கு ஏற்படும் நிலைமை? இதே மோனிக்கா பெலூசியிற்கு Irreversible படத்தில் ஏற்படும் நிலைம? 'Franck Spadone' என்கிற ஃப்ரென்ச் படத்திலும் இவர் தான், 'Shoot Em Up' என்ற படத்திலும் இவரே தான் (அது என்ன கன்றாவியோ தெரியவில்லை. பேரழகியைப் பற்றிய படமென்றால் அதற்கு மோனிக்காவைப் போட்டுவிடுகிறார்கள், படம் முழுக்க அவரை 'முழுதாகக்' காட்டுகிறார்கள், பின் துன்புறுத்துகிறார்கள்... கருமம். "அழகான பெண்ணை கடைசிவரை அழகாகக் காட்டும் படமே இல்லையா?" என்று கேட்கத் தோன்றுகிறது)சரி விஷயத்திற்கு வருவோம். ‘மெலீனா’ விற்குப் பிறகு ஒரு பெண்ணிற்கு அவளது அழகே ஆபத்தாய் இருப்பத்தை ரசிக்க ‘முடியாத’ வண்ணம் அழகாகக் காட்டியது கிம் கி டுக் எழுதி, Jeon Jae-hong என்பவர் இயக்கி, Arumdabda என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த Beautiful (English Title) படம் தான்.

படத்தின் கதை சுருக்கமாக - Eun-yeong ஒரு பேரழகி. ஆனால் அதைக் கொண்டாடாமல் அது தனக்கு இழைக்கப்பட்ட சாபம் என்று கருதுபவள். காரணம் ஊரில் உள்ள அத்தனை ஆண்களும் இவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க அனைத்துப் பெண்களும் இவளை ஜென்ம விரோதி போல் நடத்துகிறார்கள். தன்னை பல ஆண்கள் பின்தொடர்வதை அவள் வெறுக்கிறாள். மேலும் அவளை அப்படிப் பின் தொடரும் ஒருவன், அவள் வீட்டில் வைத்தே கொடூரமாக வன்புணர்ந்து, நிர்வாண உடலை போட்டோ எடுத்து, போலீஸ் விசாரணையில் "நீ அழகாய் இருக்கும் ஒரே காரணத்தால் தான் நான் அப்படி நடந்து கொண்டேன். என்னால் என்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்று சொல்லும் போது, அவளுக்கு தன் அழகின் மேல் பெருங்கோபம் வருகிறது. தன் அழகைக் கெடுக்க அவளே பல முயற்சிகளை மேற்கொள்கிறாள். நிறைய சாப்பிட்டால் உடல் பெருத்து அசிங்கமாகி விடலாம் என்று கண்ணாபின்னாவென்று சாப்பிடத் தொடங்குகிறாள். பின் மெலிய வேண்டும் என்று சாப்பிடாமல் இருக்கிறாள், தன் அழகையே அசிங்கமாகக் காட்ட அளவிற்கதிகமான மேக்கப் போடுகிறாள், அடிக்கும் வண்ணங்களில் பொருத்தமில்லாமல் உடையணிகிறாள். என்ன செய்தும் தான் நினைத்தது நடக்காமல் போவதைக் கண்டு பெரும் மன உளைச்சளுக்கு ஆளாகிறாள். அந்தச் சமயம் ஒரு போலீஸ் அதிகாரியுடன் நட்பு ரீதியான பழக்கம் ஏற்படுகிறது. மன உளைச்சளால் சிறிதுசிறிதாக தன்னிலை மறந்து கொண்டிருப்பவளை காக்கும் விதம் நடந்து கொள்ளும் இந்த போலீஸ் கடைசியில் தானும் சராசரி ஆண் தான் என்று நிரூபிக்கிறான். மனதைப் பிசையும் கிளைமாக்ஸுடன் படம் நிறைவடைகிறது. மனித மனம், உறவுகள், உலவியல் போக்குகளை தீவிரமாகக் கையாள்பவரான கிம் கி டுக் கிற்கு இந்தக் கதையெல்லாம் சும்மா அல்வா சப்பிடுவது மாதிரி. அவரது மற்ற படங்களைப் போல் ஓரேடியாக பார்வையாளர்களின் போக்கிற்கு படத்தை விட்டு விடாமல், தெளிவாக காட்சியப்படுத்தியுள்ளார். ஒரு வேளை திரைக்கதையில் இவர் சுத்தமாக தலையிட வில்லை போலும். எப்படியிருந்தாலும் கொரியப் படங்களில் பெஸ்ட் என்று சொல்ல முடியாத ஆனால் ஒரு நல்ல படம் இந்த Beautiful.பி.கு: அந்தப் பெண் நிஜமாகவே கொள்ளை அழகு!

You Might Also Like

5 comments

 1. படத்துல மேட்டர் உண்டா இல்லையா அதை சொல்லுங்க .நல்ல விமர்சனம்

  ReplyDelete
 2. நண்பரே,

  நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 3. அடடா... இந்தப் படத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டது கூட இல்லை.. மிஸ் செய்துவிட்டேன்... இதோ பிடிக்கிறேன் நண்பர் பாஸ்கரனை.. கோவை செல்லும்போது கவ்விக்கொண்டு வந்துவிடுகிறேன்.. ;-)

  நல்லா எழுதியிருக்கீங்க தலைவா.. அடி பின்னுங்க !!

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்: அது இல்லாமலா நண்பரே, ஆனால் ரசிக்கும் படியாக இருக்காது, சொல்லிவிட்டேன்...

  @கனவுகளின் காதலன்: வருகைக்கு நன்றி நண்பரே

  @கருந்தேள் கண்ணாயிரம்: அஹா நீங்க கிம் கி டுக் கின் பரம விசிறி, இந்தப் படத்தைப் பற்றி எழுதி உங்க மூலமா ஒரு டிஸ்கஷன போடலாம்னு நெனச்சேன்... சரி பரவாயில்ல, படம் பாத்துட்டு எப்படி நு சொல்லுங்க...

  ReplyDelete
 5. did you see Malena remake in Tamil.. Don't see bcoz Peralagi was namita.. enna koduma sir?.. Visit http://madurabeats.blogspot.com/

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...