நாளைய இயக்குனர்

10:35:00 AM

"இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக" - இப்படி தைரியமாக போட்டுக் கொள்ளும்படியாக கலைஞர் தொலைக்காட்சி முதன்முதலில் ஆரம்பித்த நிகழ்ச்சி 'நாளைய இயக்குனர்'. ஐந்து முதல் பத்து நிமடங்களுக்குள் தாங்கள் எடுத்த குறும்படத்தை, இளம் இயக்குனர்கள் இன்றைய முன்னனி இயக்குனர்களின் முன்னிலையில் திரையிட்டுக் காட்டக் கூடிய ஒரு அற்புதமான தளமாக அமைந்தது இந்த நிகழ்ச்சி. இதற்கு முன்னோடியாக மக்கள் தொலைக்காட்சியில் வியாழன் தோறும் இரவு 8:30 மணிக்கு "10 நிமிடக் கதைகள்" என்னும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனால் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு இருக்கும் வியாபார, விளம்பர மற்றும் 'பலரக' ரீதியான வசதிகள் இல்லாத காரணத்தால் அது யாருக்கும் தெரியாத ஒரு நிகழ்வாய் இருந்து வருகிறது. ஆனாலும் தரத்தில் நாளைய இயக்குனரே சிறந்தது என்று தாராளமாகக் கூறலாம்.

சீஸன் ஃபீவரில் சிக்கித் தவிக்கும் சின்னத்திரைக்கு நாளைய இயக்குனர் மட்டும் விதிவிலக்கல்ல. சீஸன்1 முடிந்து சீஸன்2 ஆரம்பமாகப் போகிறது. சீஸ்ன் ஒன்றின் பிரமாண்டமான இறுதிப் போட்டி தொடர்ந்து இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது. வெற்றியாளர் யார் என்பது ஏறக்குறைய தெரிந்து விட்ட சமயத்தில், கல்லூரி நாட்களில் மூன்று குறும்படங்களில் நடித்து, வேலை செய்த அந்த மலரும் நினைவுகளை நினைவில் கொண்டு இதுவரை நான் பார்த்து ரசித்த குறும்படங்களையும், அதன் இயக்குனர்களையும் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

ுதலில் கார்த்திக் சுப்பராஜ் - ஐ.டி துறையில் வேலை. பிரான்ஸில் இருந்த போது நாளைய இயக்குனரைப் பற்றிக் கேள்விப் பட்டு இந்தியா திரும்பி, வேலையை விட்டொழித்து கையில் கேமரா பிடித்து விட்டார். நான் வாழ விரும்பும் வாழ்க்கையை தைரியமாக, சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கார்த்திக்கின் ஒவ்வொரு படமும் அற்புதமாக, வித்யாசமாக இருக்கும். அவரது முதல் கதை "காட்சிப்பிழை" - வானத்தில் பறக்கும் ஒரு விமானத்தை தமிழ் நாட்டிச் சிறுவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் ஒரு இலங்கைச் சிறுவன் எப்படி எதிர்கொள்கிறான் என்று அற்புதமாக சொன்ன படம். நான் இதை ஏற்கனவே Behindwoods.com ல் பார்திருக்கிறேன் என்றாலும் நாளைய இயக்குனரில் கார்த்திக்கின் முதல் என்ட்ரி இந்தப் படம் தான். அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியது "பெட்டி கேஸ்" - சினிமா ரீல் பெட்டி காணாமல் போனதை விசாரிக்க வரும் கிராமத்துப் போலீஸ் கதை. நான் ஒரு குறும்படத்தை இவ்வளவு அற்புதமாக எடுக்க முடியுமா என்று வியந்த கதை இது. அடுத்து "துறு" - காதலுக்கு வீடில் சம்மதம் கேட்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. அடுத்தது "ராவணம்" ஒரு வித்யாசமான எண்கவுன்டர் கதை. அடுத்து "சூத்தாட்டம்". கார்த்திக்கின் ஆஸ்தான ஹீரோ பாபி நடித்த சூத்தாட்ட இளைஞனைப் பற்றிய கதை. "பிளாக் அண்ட் ஒயிட்". பழைய கேமரா ஒன்று கிடைக்கப் பெற்ற ஒரு புகைப்படக்காரனின் கதை. கார்த்திக் ஒரு பலமான டீமை நம்பித்தான் தன் வேலையையே விட்டுருக்கிறார். காட்சியமைப்புகள், கேமரா கோணங்கள், எடிட்டிங், வசனம், பின்னனி இசை என்று அனைத்துமே ஆற்புதமாக இருக்கும் இவரது படங்களில். நாளைய இயக்குனரில் இடம்பெறாத இவரது மற்ற படங்கள் இதோ.

அடுத்தவர் நளன். நளனின் காமெடிக்கு ஈடு இணையில்லை. அவரது முதல் படமான "ஒரு படம் எடுக்கிறேன்" அதற்கு சரியான சாட்சி. அவரது ஆஸ்தான ஹீரோ கருணாகரன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. "நடந்தது என்னணா" இப்போது நினைதாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. "துரும்பிலும் இருப்பர்", "முடிவுக்குப் பின்", "உண்மைய சொல்லனும்னா" போன்ற படங்கள் HD தரத்தில் யுடியூபில் உள்ளது. இவர்கள் முற்றிலும் வித்யாசமாக, மிகவும் சீரியசாக எடுத்த படம், "தோட்டா விலை என்ன". அனைத்து படங்களின் லிங்க் இதோ.

அடுத்தவர் பாலாஜி. டாக்டர் தம்பதியின் ஓரே மகன். திரைக்கதை ஸ்பெஷலிஸ்ட். இவரது "காதலில் சொதப்புவது எப்படி" படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டாதவர்கள் இருக்க முடியாது. அதன் லிங்க் இதோ. இவரது முதல் படமான "கனவு கீர்த்தனை" யில் ஆரம்பித்து, "கொடி", "அட்டடெய்ல்", "Juniors" போன்ற படங்கள் அனைத்துமே கொஞ்சம் Different! அது தான் இவரது வெற்றியின் காரணமும் கூட.இறுதிப் போட்டிக்காக இவர் எடுத்த "மிட்டாய் வீடு" ஒவொரு இளைஞனும் வாழ விரும்பும் வாழ்க்கை. திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். நீங்களும் இங்கு பாருங்கள்.

தமிழரசன். காதல் கிங். இவரை மாதிரி இதுவரை காதலி யாரும் அவ்வளாவு அழகாகச் சொன்னது இல்லை. இவரது மௌனமாய் ஒரு காதல் படம் தான் நான் முதல் முதலில் நாளைய இயக்குனர் நிகழ்சியில் பார்தது, அதன் பிறகு தான் தொடர்ந்து பார்க்கும் ஆவல் ஏற்பட்டது என்றும் சொல்லலாம். "ஒரு மாலை பொழுது", "அன்றொரு நாள்", "ஒரு வேளை அப்படி நடந்தால்" அனைத்துமே திகட்டத்திகட்ட காதல் ததும்பும் படங்கள்.

ஸாம். விளப்பர கம்பெனியில் வேலை. முன்னாள் சன் டீவி வானிலை அறிக்கையில் லைலா மாதிரி ஒரு பெண் "இப்பிடி இப்பிடி" கண்ண வச்சிகிட்டு பேசுமே, நினைவிருக்கிறதா? அந்தப் பெண் இவரது மனைவி. இவர் பாதிப் போட்டியில் உள்ளே வந்து கலக்கிக் கொண்டிருப்பவர். இவரது படங்களான "சூத்தாடம்", "முத்தம்", "பித்தளை சொம்பு" என்று மூன்றுமே க்ளீனாக, ஹெவி பட்ஜெட், பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டதாக இருக்கும்.

கடைசியாக மோகன். இயக்குனர் அமீரின் அஸிஸ்டண்ட். அதனாலோ என்னவோ இவரது படங்களில் சினிமா துணை நடிகர்களின் கூடம் இருக்கும். தொழில் நுட்பமும் சினிமாவிற்கு நிகராக இருக்கும். இவரது படங்களில் முதலில் கலக்கிக்கொண்டிருந்தவர் காதல் சுகுமார். பின்னர் 'பொல்லாதவன்' சென்றாயன். இவரது பெரிய ஹிட் "கலரு". சிரித்து சிரித்து வயிறு புண்ணான படம். லிங்க் இதோ. முதல் படமான "நெடுநெல் வாடை", "அப்படியா", "ஆப்பிள் சாப்பிடுறீங்களா?" "அத அனுபவிக்கனும்" "தபேளா வாசித்த கழுதை" என்று எல்லாமே ஒரு முழு தமிழ் சினிமா பார்த்தது போன்ற பிரம்மிப்பைத் தரக்கூடியவை.


இந்த மொத்த டீமிற்கு ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. இவர்கள் தங்களது நடிகர்களையும், டெக்னீஷியன்களையும் மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு ஆரோக்கியமான போட்டி இவர்களுக்குள் இருப்பது தெரிகிறது.

இவர்களை ஜட்ஜ் செய்வது பிரதாப் போத்தன், மதன். மதனைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் ஒரு குட்டி சுஜாதா. மேலும் தமிழகத்தின் மிகச் சிறந்த சினிமா க்ரிட்டிக். பிரதாப்பைதான் யாருக்கும் பிடிபிடிப்பதில்லை. ஏனென்றால் எந்தவொரு படமும் சாதாரணமாக இவருக்கு பிடித்து விடுவதில்லை. "என்னக்குப் புரியல", "சீரியஸ்லி ஸேயிங்க், எனக்குப் பிடிக்கல" இந்த இரண்டில் ஏதாவது ஒன்றுதான் இவரது கமெண்டாக பல சமயம் இருக்கும். ஆனால் இவரும் சாதாரண ஆள் இல்லை. தனது முதல் படமான, மீண்டும் ஒரு காதல் கதைக்காக தேசிய விருது வாங்கியவர். Bourne Series படங்களின் முன்னோடியான கமல் நடிப்பில் இவரது இயக்கத்தில் வந்த முதல் ஸ்டெடி கேம் படம் "வெற்றிவிழா". மேலும் "லக்கிமேன்", "மை டியர் மார்த்தாண்டா" - இந்த இரண்டு படங்களுமே போதும் காமெடியில் இவரது ஈடுபாட்டைக் காட்ட. "சீவலப்பேரி பாண்டி" - இவர் இயக்கிய இந்தப் படத்தை விட அருமையான ஒரு ஆக் ஷன் படத்தை உங்களால் காட்ட முடியுமா? என் நண்பர்கள் பிரதாப்பிற்கு என்ன தெரியும் என்று கேட்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. சில வருடங்கள் படம் எடுக்காமல், சின்ன சின்ன ரோல்களில் தலை காட்டினால் காமெடியனா?


ாளைய இயக்குனரின் கிட்டத்தட்ட எல்லா எப்பிஸோட்களினுடைய யுடியூப் லிங்க் இந்த தளத்தில் உள்ளது. இதுவரை பார்க்காதவர்கள் உபயோகித்துக் கொள்ளலாம்!

You Might Also Like

7 comments

  1. hi I think seevalapperi pandi director is K Rajeshwar.

    Luckyman also I doubt , id directed by Prathab.

    ReplyDelete
  2. நண்பரே,

    இந்த நிகழ்ச்சி குறித்த அறிமுகம் எனக்கு உங்கள் பதிவின் வழியேயே கிடைத்தது. நேர வசதிக்கேற்ப படங்களை பார்க்க முயல்கிறேன். சுட்டிகளிற்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு.

    சுட்டிகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. @ராம்ஜி_யாஹூ: வருகைக்கு நன்றி ராம்ஜீ... இரு படங்களுமே பிரதாப் போத்தம் இயக்கியது தான். விக்கீபீடியாவில் செக் செய்து பாருங்கள். லிங்க் - http://en.wikipedia.org/wiki/Pratap_Pothan

    @கனவுகளின் காதலன்: கண்டிப்பாக பாருங்கள் நண்பரே... பல படங்கள் HD குவாலிட்டியில் யுடியூபில் உள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால் லிங்க் களை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

    செ.சரவணக்குமார்: வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  5. கரக்ட்,பிரதாப் போத்தன் பெரிய இவரு மாதிரி அலட்றார்.படைப்பாளீகளை ஊக்குவிப்பதுன்னா என்னன்னே தெரியலை

    ReplyDelete
  6. @சி.பி.செந்தில்குமார்: அப்படியில்லை நண்பரே, அவர் தான் நினைப்பதை அப்படியே ஒளிவு மறைவில்லாமல் சொல்லி விடுகிறார். அவ்வளவுதான். அது சில சமயம் கோபப்படுத்தும் படியாக அமைந்து விடுகிறது.

    ReplyDelete
  7. salute to kalaingar tv for making a commercial platform for short films , n making tamil people to enjoy short films.

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...