சிறுகதை: அழகி !

11:47:00 AM


வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையின் அர்த்தம் என்னவென்று புரிந்து கொள்வதில் எந்தச் சிரமும் இருக்காது. மற்ற நாட்களைப் போல் இல்லாமல், எதிர் பிளாட் பெண் இன்று ரொம்பவே அழகாக தெரிந்தாள். முக்கிய அம்சமாக அமைந்திருந்தது அவள் உடுத்தியிருந்த அந்த பளீர் மஞ்சள் நிறத்தில், பச்சை போல இல்லாமலும் நீலம் போலில்லாமலும் வித்யாச காம்பிநேஷன் கொண்ட சல்வார் கம்மீஸ். காரிடாரில் தோழியுடன் செல்பேசிக்கொண்டே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அவளுக்கே உரிய அன்ன நடையில் அசைந்து அசைந்து நடப்பதை நாள் முழுக்க பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று தான் யாருக்கும் தோன்றும். "செம்ம அழகா இருக்காளே!" என்று முதலில் அவன் நினைத்தபோது 'நாள் முழுக்கப் பார்க்கலாம்' என்கிற இதே ஜனரஞ்சகமான முடிவில் தான் இருந்தான்.

ஆனால் இப்போது அவன் மனதில் வேறு எண்ணங்கள் ஓடியது. முடிவும் மாறியிருந்தது; அவன் பார்வையின் தீவிரமும் அதிகமாயிருந்தது. காதில் சொருகியிருந்த ஐபாடில் பாடல்கள் உச்ச சுருதியில் அலறிக்கொண்டிருந்தாலும் இவனுக்கு அது கேட்டமாதிரி தெரியவில்லை. கண், காது, மூக்கு என்று இவனது அங்கங்கள் அனைத்தும் அவளது அங்கங்களின் மேல் தான் கவனமாயிருந்தன. காற்றில் அசைந்து அவளறியாமல் இவன் மேல் பட்ட அவளது துப்பட்டா இவனை ஏதோ செய்தது.

"ஓகேடி நான் குளிக்கப்போறேன். பிறகு பேசறேன்" - மொபைலை கட் செய்யும் முன் அவள் சொன்னது ஐபாட் அலறலை மீறித் தெளிவாகக் கேட்டது. ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடியே வாசற்கதவை சாத்திவிட்டு,... அது சாத்திக்கொள்ளவில்லை என்பதை அவள் கவனிக்கவில்லை; அவன் கவனித்தான். லேசாகத் திறந்து கிடந்த கதவின் இடுக்கில் பார்க்கும் போது அவள் துப்பட்டாவை ஸோபாவில் எறிந்து விட்டு டர்க்கி டவலை தோளில் போடுவது தெரிந்தது. பின் தோளில் படந்திருந்த தலைமுடியை தூக்கிக் கொண்டையிட்டுக்கொண்டே பெட் ரூமிற்குள் போவதும், பெட் ரூம் கதவு சாத்தப்படுவதும் தெரிந்தது.

சுற்றும் முற்றும் அவன் பார்த்தான். பக்கத்து வீட்டில் கொலையே விழுந்தாலும் கவலையில்லை என்று லேப்டாப், ப்ளூரேயில் மூழ்கும் ஐ.டி குடும்பங்கள் வாழும் அதினவீன பிளாட் அது. தைரியமாக கதவைத் திறந்து நேராக உள்ளே சென்றான். வீட்டின் சுவர்களில் ஆங்காங்கே விதவிதமான உடைகளில் அழகாகச் சிரித்தபடி தொங்கிக்கொண்டிருந்தாள் அவள். ஸோபாவில் கிடந்த துப்பட்டாவை கையில் எடுத்தபடி பெட்ரூமை நோக்கி நடந்தான்.

மெத்தையில் அவளது உடைகள் கிடந்தது... அங்கொன்றும் இங்கொன்றுமாய். மெதுவாக அவை மீது கைகளை படரவிட்டான். உள்ளுக்குள் இதுவரை இல்லாத கிளர்ச்சி ஏற்பட்டது. நாடி நரம்புகளில் புது ரத்தம் ஒருவிதமாகப் பாய்ந்தது. பாத்ரூம் கதவின் மீது கைவைத்தான். பாட்டுச் சத்தத்துடன் ஷவர் சத்தம் சன்னமான ஒலியில் கேட்டுக்கொண்டிருந்தது...

சிறிது நேரத்திற்குப் பின்...

ஆளுயரக்கண்ணாடி முன் ஒவ்வொரு உடையகாக சீரான வரிசையில் அழகான நேர்த்தியில் மாற்றி, கண்களுக்கு மையிட்டு, கால்களுக்கு கொலுசிட்டு, துப்பட்டாவை தோள்மேல் படரவிட்டு முகம் பார்த்து வட்டப் பொட்டு வைத்துக்கொண்டே சொன்னான்... “அவளை விட நான் தான் அழகு!”

அழ’கி’!

(நான் இந்தக் கதையை இரண்டு நிமிடக் குறும்படமாக எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் விமர்சனங்கள் அவசியம் தேவை... )

You Might Also Like

12 comments

  1. நேர்த்தியான எழுத்து நடையில் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது . மிகவும் அருமை !

    ReplyDelete
  2. :-) தாராளமாகக் குறும்படமாக எடுக்கலாம் . . எடுக்கையில், இக்கதையில் வரும் ஒரு திகிலான உணர்வு குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும் . . All the best !!

    ReplyDelete
  3. // “அவளை விட நான் தான் அழகு!”
    அழ’கி’! //

    nice.


    உங்க குறும்பட முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
    அந்த அனுபவத்தையும் ஒரு கட்டுரையா எழுதுங்க.

    ReplyDelete
  4. மச்சி, இது முற்றிலும் என்னுடைய சொந்த கருத்து. இதையே நீ முடிவாக என்ன வேண்டாம்.

    கதை சூப்பரா இருக்குது. வழக்கம் போல் எதிர்பாராத முடிவு. இதை ஒரு கதையாக வாசிக்கும் போது, சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் இதயே ஒரு குறும்படமாக எடுத்தால், முதலில் எழும் கேள்வி, "இந்த குறும்படத்தின் கருத்து என்ன?", "இந்த படத்தின் மூலம் மக்களுக்கு நீ சொல்ல நினைப்பது என்ன?"
    இந்த "அழகி" என்று நீ எழுதிய சிறுகதையை, உன் குறும்படத்தின் முதல் காட்சியாக வைத்துக்கொண்டு, இதற்கு மேல் ஏதாவது ஒரு கருவுடன் முடிவது போல் இருந்தால், குறும்படத்தின் முடிவில் மற்றவர்களுக்கு எழும் கேள்விகளை தவிர்க்கலாம் என்று எண்ணுகிறேன். இதை வெறும் சிறுகதையாக எண்ணினால், நான் வாசித்த உன் கதைகளில் இதற்கு, இரண்டாவது இடம். முதலிடம் - விவகாரம்.

    ReplyDelete
  5. நண்பரே,

    மிகவும் ஆழமான உளவியல் பார்வை கொண்டதாக உங்கள் குறுங்கதை இருக்கிறது. அழகி பெற விரும்பும் அந்த அன்பு மற்றும் தன்னைக் கொண்டாடும் வட்டத்தை
    அழகாக ஒளித்து வைத்திருக்கிறது கதை. குறும் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  6. @ பனித்துளி சங்கர்: வருகைக்கு நன்றி சங்கர்
    @ கருந்தேள் கண்ணாயிரம்: குறும்படமாக எடுக்க நினைத்து பின் முதலில் சிறுகதையாக எழுதி ரிசல்ட் பார்ப்போமே என்று வந்தது தான் இந்த அழகி கதை - ஸ்கிரிப்ட், ஷாட்ஸ் அனைத்தும் ரெடி. நடிகர்கள் மட்டும் இன்னும் முடிவு செய்ய முடியவில்லை. பவர்ஃபுல்லாக இல்லையென்றால் நன்றாக இருக்காது... எடுத்துவிட்டுக் காட்டுகிறேன்

    @ கா.பழனியப்பன்: வருகைக்கு நன்றி பழனியப்பன். கண்டிப்பாக எனது அனுபவத்தை எழுதுகிறேன்.

    @ நெல்லை நாயகன்: மாப்ள, இந்தக் கதையை நான் முதலில் யோசித்ததே குறும்படமாகத்தான். காட்சிகள் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கிறது. தப்பு வர சான்ஸே இல்லை. 100% நம்பிக்கை இருக்கிறது. மக்களுக்கு சொல்ல நினைப்பது என்று எதுவும் இல்லை. ஒரு குறும்படம் ஹைக்கூ கவிதை மாதிரி. படிக்கிறவர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் அர்த்தங்களை சொல்லவேண்டும். இந்தக் கதையை வெளியில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத ஒருதிருநங்கையின் உளவியல் போராட்டங்களைக் கூறும் விதமாக நான் உருவாக்கியிருக்கிறேன். ஆனால் படிக்கிறவர்கள், படத்தைப் பார்ப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அந்தப் பெண் கதாபாத்திரத்திற்கு பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் படியான ஒரு பெண் வேண்டும். வலை வீசித்தேடிக்கொண்டிருக்கிறேன். ஆள் கிடைத்தவுடன் பார், பட்டையைக் கிளப்பி விடலாம்.

    முடிவில் ஒரு டுவிஸ்ட் வைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சுஜாதாவின் தூண்டில் கதைகள் பாதிப்பு. விவகாரம் - ஒரு விவகாரமான குறும்பு முயற்சி மச்சி, எனக்கும் என் கதைகளில் மிகவும் பிடித்தது அதுதான்.

    @ கனவுகளின் காதலன்: கொஞ்சம் கால தாமதம் ஆனாலும், கண்டிப்பாக இந்தப் படத்தை எடுப்பேன் நண்பரே... திறமையான நல்லதொரு நண்பர் கூட்டம் எனக்கு இருந்தாலும் அவர்கள் அனைவரும் வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். அனைவரும் ஒன்று கூடினால் அடுத்த நாளே இந்தக் கதை படமாகிவிடும். எங்களது முந்தைய கன்னி முயற்சிகளை இந்த லிங்குகளில் பார்த்து கமெண்ட்டவும்

    http://www.youtube.com/watch?v=nXbYjDDJqRg
    http://www.youtube.com/watch?v=HkHOKWQAny0

    ReplyDelete
  7. HAI BABY ANANDAN,


    THANKS FOR VISIT MY PAGE AND YOUR SWEET COMMENTS.

    MANO

    ReplyDelete
  8. பாண்டி!!! எங்கயோ போய்ட்ட.... செம்ம கெத்து!

    பெங்களூர் ல பிகருக்கு பஞ்சம் இல்ல.... நம்மளுக்கு தான் நல்ல பிகர் ஏதும் தெரியாது.... :-(
    ஒரு பிகரால படம் தாமதம் ஆகுதுனு நெனைக்கும் போது... நீ ஏன் இத சாக்கா வச்சி ஏதும் கரெக்ட் பண்ண கூடாது??

    ஓர் விண்ணப்பம் : நான் படத்துல அந்த எதுத்த வீட்டு பையன் ரோல் பண்றேன்!

    ReplyDelete
  9. good story da,can take as documentary film.

    ReplyDelete
  10. @ LK: வருகைக்கு நன்றி நண்பரே

    @ சுரேந்திரா: ஸாரி மச்சி பக்கத்து வெடுப் பையன் ஆல்ரெடி ரெடி...நீ வேணும்னா பொண்ண ரெடி பண்ணிக் கொடு

    @ Thirumalai: வருகைக்கு நன்றி திருமலை

    ReplyDelete
  11. @Baby: நல்ல தளம்... ஏன் நீங்களே இதில் நடிக்க கூடாது??? (தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்...)இதில் சொல்லப்படும் அந்த உணர்ச்சியை அப்படியே வெளிக் கொணருங்கள் விறுவிறுப்பு குறையாமல்... ஆனால் சிலர் கூறியது போல் இதில் தாங்கள் ஒரு செய்தியையோ இல்லை ஒரு தகவலையோ தெரிவிக்கவில்லை என்பதைத் தவிர மிக நன்று...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...