ஆரண்ய காண்டம் Trailer !

1:06:00 PM

ஆரண்ய காண்டம் - "மச்சி இந்த டிரைலரைப் பாரேன்" என்று என் நண்பன் சொன்ன போது, நான் பெரிதாக எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பார்த்து முடித்தவுடன் திரும்பத்திரும்பப் போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு டிரைலரைப் போலவே இல்லை என்று சத்தியமே செய்யலாம். ' STYLE OF MAKING' என்கிற வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் இதுதான். நான் மிகவும் எதிர்பார்க்கும் படங்கள் லிஸ்டில் சந்தேகமில்லாமல் இந்தப் படமும் சேர்ந்து விட்டது. அந்த டிரைலர் லிங்க் இதோ

படத்தின்
ப்ரொமோ ஸ்டில்களைப் பார்த்தாலே தெரிந்து விடும் படம் எப்படி இருக்குமென்று...

ஜாக்கி ஷராப், சம்பத் குமார், ரவி கிருஷ்ணா மற்றும் கூத்துப்பட்டறை சோமசுந்தரம் நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பெயர் தியாகராஜன் குமாரராஜா, இசை யுவன், நெடுநாட்களாக இந்தப் படத்தைத் தயாரித்து வருபவர் கேப்பிடல் ஃபில்ம்ஸ் S.P. பாலசுப்ரமணியம். இந்தப் படத்தைப் பற்றிய மேலும் விபரங்களுக்கு... விக்கிபீடியா!

You Might Also Like

8 comments

  1. இப்படத்தைப் பற்றி வெகுநாட்களாகவே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். . இதன் போஸ்டர் வெளிவந்த நாள் முதல். . இது அப்படியே சின்சிடி மற்றும் கிராஃபிக் நாவல்கள் பாணியில் உள்ளதால் :-) . . ஆனால் இதன் ட்ரைலர் வெளிவந்தது எனக்குத் தெரியாது.. டிரைலருக்கு நன்றி நண்பா . . :-)

    ReplyDelete
  2. தகவலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

    ReplyDelete
  3. நண்பரே,

    போஸ்டர்கள் எல்லாம் கிராபிக் நாவல் ஓவியர்கள் பிராங்க் மில்லர், எடுவார்டோ ரிஸ்ஸோ பாணியின் தழுவல்கள். ஆனால் அதனை வரவேற்கிறேன். திரைப்படமும் noir பாணி திரில்லர்களை த்ழுவியிருந்தால் இன்னமும் மகிழ்ச்சியே. பகிர்தலிற்கு நன்றி.

    ReplyDelete
  4. @கருந்தேள் கண்ணாயிரம்: ஆமாம் நண்பரே, ஸ்டில்ஸ் சின்சிட்டி போலவும், டிரைலரில் சில ஷாட்ஸ் 300 மாதிரியும் இருக்கிறது. ஏதோ ஒன்னு... தமிழ் சினிமா அளவில் ஒரு புது வகையான மேக்கிங்காக இருந்தால் மகிழ்ச்சி.

    @உண்மைத் தமிழன்: வருகைக்கு நன்றி உண்மைத் தமிழன் ஸார்...

    @கனவுகளின் காதலன்: இதே கேள்விகளை பத்திரிக்கைக்காரர்கள் கேட்டிருக்கிறார்கள். கண்டிப்பாக ஆங்கில பட பாணியில் இருக்குமே தவிர, தழுவளாக இருக்காது என்று சொல்லியிருக்கிறார், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.இவர் யாரென்று தெரிகிறதா? "என்னடா பெரிய பிரெண்ட்ஸிப்பு, ஈயும் பீயும் பிரெண்ட்ஸிப்பு, பீ காஞ்சா ஈ பறந்துடப்போது" - இந்த டயலாக எழுதினவர் இவர்தான்...:)

    ReplyDelete
  5. //கருந்தேள் கண்ணாயிரம் said...

    இப்படத்தைப் பற்றி வெகுநாட்களாகவே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். . இதன் போஸ்டர் வெளிவந்த நாள் முதல். . இது அப்படியே சின்சிடி மற்றும் கிராஃபிக் நாவல்கள் பாணியில் உள்ளதால் :-) . . ஆனால் இதன் ட்ரைலர் வெளிவந்தது எனக்குத் தெரியாது.. டிரைலருக்கு நன்றி நண்பா . . :-)//

    ரிப்பீட்டு.. நானும் எதிர்பார்த்திருந்தேன்.. நம்ம guy ritchie-யின் snatch படத்தை நினைவுபடுத்தும் போஸ்டர் என்பதாலும்.
    நன்றிங்க்னா.. :)

    ReplyDelete
  6. //இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.இவர் யாரென்று தெரிகிறதா? "என்னடா பெரிய பிரெண்ட்ஸிப்பு, ஈயும் பீயும் பிரெண்ட்ஸிப்பு, பீ காஞ்சா ஈ பறந்துடப்போது" - இந்த டயலாக எழுதினவர் இவர்தான்...:)//

    வாவ்.. ஓரம் போ..
    ஓரம் போ எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. நிச்சயம் இந்த படத்தை பார்ப்பேன். :)

    ReplyDelete
  7. Trailer ragala..

    "Vaazhvadhu edharku vaiyagathil sugangalai vaazhkaiyil perathane"

    Vaa Vaa Pakkam Vaa song{Thanga Magan) Thalaivar padam...

    Raja class thaan!!!

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...