ராவணன் பாடல்கள் மற்றும் டிரைலர்

12:13:00 PM

ராவணன் ஆடியோ இன்று ரிலீஸ் ஆகிறது...
ஆனால் அதற்குள் நெட்டில் பாடல்கள் ஹை குவாலிட்டியில் வந்து விட்டது.

வீரா வீரா - விஜய் பிரகாஷ், கீர்த்தி சங்கீத்தா
உசிரே போகுதே - கார்த்திக்
கோடு போட்டா - பென்னி தயால்
காட்டுச் சிறுக்கி - சங்கர் மஹாதேவன், அனுராதா ஸ்ரீராம்
கள்வரே - ஷ்ரேயா கோஷல்
கெடாக்கறி - பென்னி தயால், பாக்கியராஜ்(?),ரேஹானா, தன்வி ஷா

பாடல்கள் எப்படியிருக்கிறது என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை . ஆனால், ஒரு சின்ன நெருடல்...

முதலில்
ஹிந்தியைக் கேட்டுவிட்டதாலோ என்னவோ தமிழ் பாடலில் வரிகள் சரியில்லையோ என்பது போல் தோன்றுகிறது. அதாவது ஹிந்தி டியூனிற்கு தமிழ் வரிகளை புகுத்தது போலிருக்கிறது என்பது என் கருத்து. இல்லை, வைரமுத்து குல்ஸர் எழுதிய வரிகளை அப்படியே தமிழாக்கி விட்டாரோ, தெரியவில்லை!
தமிழ் டிரைலர் லிங்க் இதோ
"பத்துத் தல, ராவணன்" - விக்ரம் சொல்வதைக் கேளுங்கள், கண்டிப்பாக ராவணை விட ராவணன் பன்மடங்கு அற்புதமாக இருக்கப்போவது நிச்சயம்...

(முழு ஒன்றரை நிமிட ஹிந்தி டிரைலர் இங்கே)

You Might Also Like

6 comments

 1. அற்புதமான தமிழன் ராவணனை படம் பிடிக்கின்றார்கள்.

  ராமாயணம் புதிய கோணத்தில் மாற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 2. நண்பா நான் முதலில் கேட்ட போதும், எனக்கும் அப்படிதான் தோன்றியது. ஆனால் வழக்கம் போல் கேட்க கேட்க இனிமை. அதிலும் "உசிரே போகுதே! உசிரே போகுதே! உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கையில!" கண்டிப்பாக வைரமுத்துவை தவிர இதை யாராலும் எழுத முடியாது.

  ReplyDelete
 3. @ஜெகதீஸ்வரன்: வருகைக்கு நன்றி ஜெகதீஸ்வரன்

  @நெல்லை நாயகன்: சரி தான் நண்பா, நான் மெட்டுகளைப் பற்றி எந்தக்குறையும் சொல்லவில்லை. வரிகள் தான் பல இடங்களில் டப்பிங் போல் தெரிகிறது. நீ சொல்வது போல் "உசிரே போகுதே" தான் இப்போது என் பேவரிட் ஸாங்!

  ReplyDelete
 4. குல்சார் அவர்களின் வரிகளை அப்படியே மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது வைரமுத்துவிற்கு. ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பதாக கற்பனை செய்த மாகவி வைரமுத்து.

  ReplyDelete
 5. இசை யாரு??? என்ன பேச்சு இது??

  தமிழ்ல வரி சரியில்லனுலாம் பேசவே கூடாது!

  ஹிந்தில வந்த அதே பீல் தமிழ்ல வந்துருக்கலாம். அது தான் மியூசிக்கோடமாஜிக். மொழி கிடையாது, எல்லை கிடையாது!

  அது "ஹிந்தி" டியூன் இல்ல... "ராவண்" மற்றும் "ராவணன்" இரண்டுமொழிகளுக்குமான பொது இசை... அவ்ளோதான்!!

  மத்தபடி.. பாட்டுலாம் எப்பவும் போல வெயிட்டு தான்!

  என் பேவரிட்ஸ், (பிடித்தவை வரிசையில்):
  1. உசிரே போகுதே
  2. வீரா.. வீரா..
  3. காட்டு சிறுக்கி & கள்வரே (சுத்தமான, அழகான, இனிமையான, எளிமையானதமிழ் வரிகள்)
  4. கெடா கெடா கறி
  5. கோடு போட்டா..

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...