Little Big Soldier | Chinese | 2010

11:43:00 AM

பண்டைய சீனாில் கி.மு 225 ம் ண்டு வாழ்ந்த பேரரசர்கள், ரத்த வெறி கொண்டு அண்டை நாடுகள் மீது போர் தொடுத்து சண்டையிட்டுக்கொண்டேயிருந்தனர். தினம் தினம் ஆயிரக்கனக்கான மக்கள் செத்து மடிந்து கொண்டிருந்தனர். எங்கும் பிணம், ரத்தம், வறுமை, வன்முறை என்று வாழ இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக நாடோடிகளாக திரிந்து கொண்டிருந்தனர். மிச்சமிருந்த க்களும் படைவீரர்களாக்கப்பட்டு கொல் அல்லது கொல்லப்படு என்று வேறு வழியில்லாமல் வாழ்ந்துகொண்டிருந்தனர். அப்படிப் பட்ட ஒர சூழலில் நடப்பதாக இந்தப் படம் அமைக்கப்பட்டுள்ளது.

லியாங் (Liang), வெய் (Wei) நாடுகளின் பெரும் படைகள் ஒன்றுக்கொன்று அதிகாலையிலிருந்து மாலைவரை விடாமல் போர் செய்ததில், அனைவரும் மடிகிறார்கள்; இருவரைத் தவிர... ஒருவன் லியாங் தேசத்தின் கடைநிலை போர் வீரனான, ‘ாக்கி’ (ெயர் என்னவென்று கடைசி வரை சொல்லவில்லை). பொய்யாக உடலில் அம்பு குத்தியிருப்பதைப் போல செட் அப் செய்து கொண்டு, செத்தவனைப் போல நடித்து இறந்தவர்களிடம் ஏதாவது தேறுகிறதா என்று தேடிக் கொண்டிருக்கும் ோது, திடீரென்று எழுந்து உட்காருகிறான் வெய் தேசத்தின் படைத்தளபதிான ‘லீஹொம் வாங்’ (Leehom Wang).

செத்தது போல் நடித்து உயிர் பிழைத்த ஜாக்கி, அடிப்பட்டு சோர்ந்து போயிருக்கும் ‘வாங்’ பிணைக்கைதியாக கூட்டிச் சென்று தன் அரசனிடம் ஒப்படைத்து, போரிலிருந்து விடுதலை பெற்று சொந்த ஊருக்குச் சென்று, ிம்மதியாக விவசாயம் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறான். படைத்தளபதியை எப்படியோ ஏமாற்றி கட்டிப்போட்டு விடுகிறான். தான் ஒரு கைதியாக்கப்பட்டாலும், 'வாங்' தன் கவுரவத்தை விட்டுக்கொடுக்கத் தயாராகயில்லை. ஜாக்கியை வழி நெடுக அசிங்கப்படுத்திக்கொண்டே வருகிறான். ஜாக்கி வயதான வெகுளித்தனமான அமைதியையும், சுதந்திரத்தையும் விரும்பும், ோர் செய்வதை விட உயிர் வாழ்வது முக்கியம் என்று தீர்க்கமாக நம்பும் ஒரு சாதாரண குடிமகன் என்று கொஞ்ச நேரத்திலேயே வாங்கிற்கு தெரிந்து விடுகிறது. நட்பாக இருக்கலாம் என்று நினைத்தால் ஜாக்கி வாய் சும்மா இருக்காது. எதையாவது பேசிவைத்து, வாக்குவாதம் ஆகி இறுதியில் சண்டையில் முடியும். ஆனாலும் எப்படியோ வாங்கை தப்ப விடாமல், தனியாளாக தன்னுடனேயே தன் நாட்டிற்கு அழைத்து வந்துகொண்டிருப்பார் ஜாக்கி. இவர்களது இந்தப் பயணம் தான் மொத்தப் படமும்.

சிங்கத்திற்கு வயது ஆக ஆக தான் மெறுக்கு கூடும் என்று சொல்வார்கள். ஜாக்கியும் அதே கேட்டகிரிதான். சண்டையில் கலக்குகிறார். நடிப்பில் அசத்துகிறார். காமெடி - சான்ஸே இல்லை. தாறுமாறாக அடிவாங்கும்போதும், சமாளித்து வாங்கை கட்டிப்போட்டுவிடும் திறமையும், ஒழுக்கமா இருப்பியா? இருப்பியா? என்று வாங்கின் அடிபட்ட கால்புண்ணை விரலை வைத்து குத்தி குத்தி டார்சர் செய்வதும், சதா சர்வகாலமும் எங்க ஊர் எவ்ளோ அழகு தெரியுமா? நான் அங்கு போய் விவசாயம் செய்யப்போகிறேன் என்று கூறிக்கொண்டே ஒவ்வொரு முறையும் தான் பயிரிடப் போவதை மாற்றிக்கொண்டே வருவதும், இறுதியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வர அதிலிருந்து சமாளித்து கடைசியாக நாடு வந்து சேர்வதும், ஜாக்கி ஜாக்கி தான்...

ாடகரான லீஹொம் வாங் தன் கம்பீரமானத் தோற்றத்திலும், அந்த மேன்லியான குரலிலும் வெய் நாட்டின் முக்கிய போர்த்தளபதியாக வந்து கலக்குகிறார். ஜாக்கியிடமிருந்து ஈஸியாக தப்பித்துவிட முடியும் என்று தெரிந்தும், "என்னதான் செய்வான் பார்ப்போம்" என்று ஜாக்கி தோளிலேயே பாதி படம் முழுக்க பயணம் செய்க்கிறார். ஜாக்கியின் வெகுளித்தனத்தின் முன் தன் வீரம் ஒன்றும் இல்லை என்று புரிந்து கொள்கிறார். மலைவாழ் வீரர்கள் போலிருப்பவர்களிடமும், எதிரி நாட்டு வீரர்களிடமும் ஒரே சமயம் சிக்கும் போது இவரது ரியாக்ஸனும் ஜாக்கி ரியாக்ஸனும் அப்படியே நேர் எதிர்.

தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழவிற்கு வந்த போது ஜாக்கிக்கு 'மருதநாயகம்' டிரைலர் போட்டுக்காட்டியிருக்கிறார்கள் என்பது எருமை மாடு மீது ஜாக்கி ஏறி தப்பிக்கும் ஸீனைப் பார்த்தவுடன் தெரிந்தது :) ஜாலியாகப் போகும் படம் கடைசி நிமிடத்தில் ஒரு பெரிய டுவிஸ்டுடன் முடிவது அதிர்ச்சி. ஜாக்கியின் செல்லப் பிராஜெக்டாக இருந்த இந்தப் படம் அவரது சொந்தத் தயாரிப்பு. இயக்கியிருப்பவர், Sheng Ding. கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்தக்கதை காத்துக்கொண்டிருந்தது என்று சொல்கிறார் ஜாக்கி.(ஆவூயென்றால் இப்படி எதாவது ஒரு பிட்டைப் போட்டுவிடுகிறார்கள்)

இரு மன்னர்களுக்கிடையே எற்படும் பிரச்சனையால் எத்தனை எத்தனை சாமானிய மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது என்பதை அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜாக்கி.

மொதத்தில் எல்லா ஜாக்கி சான் படங்களைப் போலவே இந்தப்படமும் உங்களைக் கவரும். இறுதியில் சின்ன செண்டிமெண்டில் அழவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இன்னும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. ஏனென்று தெரியவில்லை. நான் சப்-டைடிலுடன் டி.வி.டியில் தான் பார்த்தேன். உங்களுக்கும் கிடைத்தல் கண்டிப்பாக வாங்கிப்பார்க்கவும்.

You Might Also Like

2 comments

  1. நண்பரே,

    நல்லதொரு விமர்சனம். ஜாக்கியின் ஆரம்பகால ஸ்னேக் இன் த ஈகிள்ஸ் ஷாடோ எனக்கு மிகவும் பிடித்தமான படம். சிறுவயதில் பார்த்தது. நான் முதன் முதலாக பார்த்த ஜாக்கியின் படம் அது என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  2. ஜாக்கியா கொக்கா? :-)

    விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது . . தொடருங்கள். .

    பி.கு - ஒருவேளை பண்டைய மன்னர்களின் ரத்தவெறியை நிஜமாகவே பார்க்க விரும்பினால்,ரான் - குரஸவா - பார்க்கவும் . .

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...