OLD BOY | கொரியன் | 2009

10:30:00 PM

உலக திரைப்படங்களில் கொரியன் திரைப்படங்கள் தான் என் முதல் சாய்ஸ். இயக்குனர் கிம் கி டுக் ஒருவர் போதும். Spring, Summer, Fall, Winter...and Spring, Isle, 3-Iron, Bow, Samaritan Girl என்று அவரது பல படங்கள் எனது ஆல்-டைம்-பேவரைட்கள். எந்த ஒரு ஜானரையும் நாம் யோசித்துப் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு 'முழு'மையாக எடுப்பார்கள், கொரியன் இயக்குனர்கள். இவர்களது படங்களில் எல்லாமே அளவிற்கதிகமாக இருக்கும். காதல், காமம், வன்முறை, ரத்தம், நட்பு, சென்டிமென்ட் என்று அந்தந்த வகைகளில் முழுமையாக இருப்பவை கொரியன் படங்கள். My Wife is a Gangster (சாகக் கிடக்கும் அக்காவின் கடைசி ஆசைக்காக திருமணம் லேடி தாதா), Beautiful (அழகி என்னும் ஒரே காரணத்தினால் ஒரு பெண் படும் அவஸ்தைகள்(செத்த பிறகும்!)), 300 Pounds Beauty (300 பவுண்டு எடையுள்ள குண்டுப் பெண், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் 'நச்' பாடகியாவது), D-War (ருத்ர நாகம் என்னும் பெயரில் நம் ஊரில் வெளியாகி கலக்கிய படம்), Sex Drive (கொரியன் 'அமெரிக்கன் பை') என்று பல கொரியன் படங்கள் எனது பேவரைட் கள். இந்த லிஸ்டில் இப்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் படம் OLD BOY !

வஞ்சம் வைத்துப் பழி தீர்த்தல் என்று கேள்விப்பட்டிருப்போம். சின்ன வயதில் என் பென்சிலை உடைத்தவனுடைய ரப்பரை நான் கடித்து வைத்து அவன் பழி வாங்குயுள்ளேன். என் அளவில் நான் அவனைப் பழி வாங்கி விட்டதாக நினைத்து திருப்தி பட்டுக்கொண்டு விடுவேன். இப்போது எவனாவது என்னிடம் ராங்கு காட்டினால் சரியான நேரத்தில் சரியான ஆளிடம் அவனைப் போட்டுக் கொடுத்துவிடுவேன்(ஏதோ நம்மால் முடிந்தது). இந்த அளவில் தான் என் பழி பழி வாங்குதல் இருக்கும். ஆனால் கொஞ்சம் அதிகம் பேசுவான் (He talks too much) என்ற ஒரே காரணத்திற்காகஒருவனை ஏன், எதற்கு என்று கூட சொல்லாமல் 15 வருடங்கள் தனி அறையில் அடைத்துவைத்தல் என்பது... நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

சிந்தனை செய் படத்தின் இறுதிக் காட்சிகளில் 'பழி வாங்குறதுல இருக்கிற சுகம் வேற எதுலையும் இல்ல சார்!' என்று ஒரு டயலாக் வரும். இதன் அர்த்தம் எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், இதை எவ்வளவு தூரம் செயல்படுத்தலாம் என்பதை சில தினங்களுக்கு முன்பு நான் இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

Vengeance Triology - Sympathy for Mr. Vengeance (2002), Old Boy (2003), Sympathy for Lady Vengeance (2005). இந்த மூன்றும் கொரிய இயக்குனர் Park Chan Wook எழுதி இயக்கிய படங்கள். மூன்று படங்களையும் Sequel என்று சொல்ல முடியாது என்றாலும், மூன்றின் மையக் கதையும் ஒன்றுதான்; பழிக்கு பழி! (ஒரு படத்தின் ஒரு கேரக்டர் இன்னொரு படத்தில் நாம் கண்டிப்பாக தவறவிடும் வகையில் ஒரே ஒரு காட்சியில் தோன்றும்). மூன்றில் தி பெஸ்ட் 'Old Boy'

படத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருக்கும். உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சியில், ஒரு பரட்டைத் தலைக்காரனைக் காட்டுவார்கள் (அவன் தான் நம் ஹீரோ!). அவன் இன்னொருவனைக் கீழே விழாதபடி 'டை'யை பிடித்துக்கொண்டிருப்பான். என்னடா ஆரம்பமே பழிக்கு பழியா? என்று தோன்றும். பயம்+கலவரம் கலந்து தொங்கிக்கொண்டிருப்பவன் 'உன் பெயர் என்ன?' என்று நம் பரட்டையைக் கேட்க, 'என் பெயர்...' இங்கிருந்து Oh Dae-su தன் கதையைச் சொல்கிறான்.

தெ-சூ ஒரு பிசினெஸ்மேன். ஒரு நாள் இரவு நிரம்ப குடித்துவிட்டு ரவுசு பண்ணிக்கொண்டிருந்தவனை, போலீஸ் ஸ்டேஸனில் உட்காரவைத்திருக்கிறார்கள். நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருக்கிறான் அவன். கடைசியில் தே-சூ வின் நண்பன் Yeun-Hee வந்து கூட்டிச் செல்கிறான். இன்று தனது மகளுக்குப் பிறந்த நாள் என்றும், சீக்கிரம் போக வேண்டும் என்று கூறும் தெ-சூ, ஒரு பொதுத்தொலைபேசியிலிருந்து வீட்டிற்குப் போன் செய்து, மகளிடம் பிறந்த நாள் பரிசாக அவளுக்கு தோளில் மாட்டிக்கொள்வது போன்ற 'ஏஞ்சல் விங்ஸ்' வாங்கி வைத்திருப்பதாகவும், சீக்கிரம் வீட்டிற்கு வருவதாகவும் சொல்கிறான். தே-சூ வின் மனைவியிடம் பேசும் Yeun-Hee, அவனை பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து விடுவதாகவும், கவலை படவேண்டாமென்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்கிறான். தெ-சூவைக் காணவில்லை !

கண் விழித்துப் பார்க்கும் தெ-சூ, யாருமில்லாத தனி அறையில் இருக்கிறான். கதவின் ஓட்டை வழியாக அவ்வபோது உணவு வருகிறது. யார், எதற்கு, ஏன், எங்கு என்று கத்திக் கதறி, கையில் கிடைப்பதை உடைத்து, சாப்பாடு கொண்டுவருபவனின் காலைப் பிடித்துக் கெஞ்சி... என்ன செய்தும் யார் தன்னை அடைத்து வைத்திருக்கிறார்கள், எதற்கு அடைத்து வைத்திருக்கிறார்கள், எங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள், எத்தனை நாள் ஆயிற்று, இன்னும் எத்தனை நாள் ஆகும் என்பது எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முயற்சி செய்தாலோ, இல்லை வேறு ஏதாவது செய்தாலோ, இண்டு, இடுக்குகள் வழியே மயக்கப்புகை அனுப்பப்பட்டு, மயங்கச்செய்து விடுகிறார்கள். மயக்கத்திலிருந்து முழித்துப் பார்த்தால், முடி வெட்டப்பட்டிருக்கும் (மட்டமான ஹேர் ஸ்டைல்), அறை சுத்தம் செய்யப்பட்டிருக்கும், உடை மாற்றப்பட்டிருக்கும்.

அந்த ரூமில் இருக்கும் டிவி மட்டும் தான் எல்லாம் என்று ஆகிறது. அதை வைத்து தான் நாட்களை எண்ணுகிறான். தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதையும், தன்னை இப்படி செய்யும் அளவிற்கு யாருக்கெல்லாம் வஞ்சம் இருக்கிறது என்று ஆரம்பித்து பதினைந்து வருடத்தில் ஒரு முழு சுயசரிதையையே எழுதுகிறான். வருடத்திற்கு ஒன்று என்று கையில் கோடு’போட்டுக் கொள்கிறான். எப்படியும் ஒரு நாள் வெளியே வந்து தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக டிவியில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து கிக் பாக்சிங் பழகுகிறான். சுவற்றில் ஒரு மனித உருவத்தை வரைந்து குத்திக் குத்திப் பழகுகிறான். வழக்க கதிற்கு மாறாகஒரு நாள் உணவில் பிளாஸ்டிக் குச்சிக்குப் (ஜப்பான், சைனீஸ் காரருனுவள் ரெண்டு குச்சி தான் ஸ்பூன் கணக்க வச்சு சாப்பிடுவானுவள்) பதில் ஸ்டீல் குச்சி இருக்கும். அதைப் பத்திரப்படுத்தி சுவற்றை குடைய ஆரம்பிப்பான். குடைந்து குடைந்தே வெளியே வரும் நிலையில் இருக்கும் போது, அடைத்து வைத்தவர்களே விடுதலை செய்து விடுகிறார்கள் (கஷ்டப்பட்டு குடைந்தது எல்லாம் வேஸ்ட்!). ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இதுவரை தான் எழுதிய 'சுயசரிதை' டைரிகளுடன் சேர்த்து ஒரு பெட்டியில் இருக்கிறான் தே சூ. அதே மொட்டை மாடிக்கு தற்கொலை செய்து கொள்ள வரும் ஒருவனைப் பிடித்து தான் 'நீ என் கதைய கேட்டே ஆகனும்' என்று இத்தனையையும் சொல்கிறான். "சரி இவ்ளோ நேரம் பொறுமையா உன் கதைய நான் கேட்டேனல்ல, இப்போ என் கதைய கேளு" என்று நம் தற்கொலை பார்ட்டி ஆரம்பிக்க, நம் ஆள் இண்ட்ரெஸ்ட் இல்லாமல் எழுந்து போய் விடுகிறான். தற்கொலையை வெற்றிகரமாக பார்ட்டி செய்ய நம்மாளு கண்டுகொள்ளாமல் ரோட்டில் நடக்க ஆரம்பிக்கிறான்.

ரோட்டில் நடந்து செல்லும் அவனருகில் வரும் ஒரு பிச்சைக்காரன், "ஏன் எதற்கு என்று கேட்காதே. எனக்கு எதுவும் தெரியாது" என்று சொல்லிவிட்டு ஒரு வாலெட் நிறைய பணமும், ஒரு செல்போனும் தந்துவிட்டுப் போகிறான். இரண்டையும் வாங்கிக்கொண்டு ஒன்றும் பேசாமல் ஒரு ரெஸ்டாரன்டில் போய் உட்கார்ந்து, "என்ன வேண்டும்" என்று கேட்க்கும் சர்வர் பெண்ணிடம், உயிருள்ள எதாவது வேண்டும் என்று சொல்கிறான்...

பின் நடப்பவை சீட் நுனி சமாச்சாரங்கள். அப்படி இப்படி என்று ரெஸ்டாரண்ட் பெண் (Mi-Do) வீட்டிலேயே செட்டில் ஆகி அவளையும் லவ்வி, கரெக்ட் செய்து, கடைசியில் தன்னைக் கடத்தியவன் முன்பே போய் நின்று விடுகிறான் தே சூ. "ஏன்டா இப்படிப் பண்ண" என்று கொலை வெறியுடன் கேட்க்கும் தே சூ விடம், "நீ இப்போ என்னைக் கொன்னுட்டா உன்னோட 15 வருடக் கேள்விக்கு பதிலே கிடைக்காம போய்டும். ஒரு கேம் ஆடலாம். உனக்கு 5 நாள் டைம். நான் யார், உன்ன எதுக்கு அடைச்சு வச்சிருந்தேன், எல்லாத்தையும் கண்டுபிடி.நீ கண்டுபிடிச்சிட்டா நானே தற்கொலை பண்ணிக்கிறேன். கண்டுபிடிக்காட்டி, இப்ப உனக்கு நெருக்கமாக இருப்பவங்களை கொன்னுடுவேன்" என்கிறான். சவாலை ஏற்றுக்கொள்ளும் தே சூ, தான் முதலில் சந்தித்த ரெஸ்டாரண்ட் பெண் உதவியுடன் 'யார் அவன்?' என்ற கேள்விக்கு பதிலைக் கண்டுபிடிக்கிறான். அந்த அவன், சிறு வயதில் கூடப் படித்த 'Woo Jin' !

வூ ஜின் யார் என்பதைக் கண்டுபிடித்தக் கையோடு, அவனிடம் போய் நிற்கிறான். "நான் யார் என்பதைக் கண்டுபிடிச்சிட்ட, நான் எதுக்காக உன்ன இப்படிப் பண்ணேன்னு தெரிஞ்சா, 'ஏன்டா என்ன வெளியே விட்ட' னு என் காலப் பிடிசிகிட்டுக் கதறுவ" என்று சொல்லிவிட்டு, 'காரணத்தை' சொல்கிறான். கத்திக் கதறி 'நான் செஞ்சது தப்புதான். என்ன மன்னிச்சிடு. நான் தெரியாம பேசிட்டேன்' என்று அழும் தே சூ, கடைசியில் தன் நாக்கையே அறுத்து வூ ஜின்னின் காலடியில் போட்டு ஊமையாகிறான். வாயைப்பொத்திக்கொண்டு 'சிரித்தபடியே' அவனது செயல்களை ரசிக்கும் வூ ஜின், 'பிழைத்துப் போ' என்று சொல்லிவிட்டுப் போகிறான்...

அந்த 'ரகசியம்', அந்த 'பிளாஷ்பேக்' நாம் இந்தக் கதையைப் பற்றி என்ன யூகித்து வைத்திருந்தாலும் அதைத் தவிடுபொடியாக்கிவிடும். இந்த மாதிரியெல்லாம் நாம் சாதாரணமாக கேள்விகூடப்பட்டிருக்கமாட்டோம். கிளைமாக்ஸ் காட்சியில் நம் கண்ணில் கூட நீர் வந்து விடும் ஆனால், வூ ஜின் சிரித்துக் கொண்டிருப்பான். யோசித்துப்பார்த்தால், 'நல்லா அனுபவிடா' என்று நமக்கும் தே சூ வைப் பழிக்கத் தோன்றும்.

சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்துள்ள இந்தப் படம், கொரியாவின் சிறந்த படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. பதிவர்கள் பலர் பல இடங்களில் இந்தப் படத்தை சுட்டிக் காட்டியுள்ளனர். படத்தில் வரும் ஒரு 'காரிடார் பைட்' சிங்கில் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். அதற்கு மட்டும் மூன்று நாள் 17 டேக்குகள் ஆனதாம். உயிருள்ள ஆக்டோபஸை தே சூ ஒரு காட்சியில் தின்பதுபோலிருக்கும். அந்த டேக்கில் நான்கு உயிருள்ள ஆக்டோபஸ்களை தின்றிருக்கிறார் தே சூ வாக நடித்திருக்கும் பௌத்த மதத்தை சேர்ந்த Choi Min-sik.

இந்தப் படம் பார்த்து விட்டு எனக்கு இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை. ஆனால் சில பேருக்கு இந்தப் படம் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கூறலாம். எது எப்படியோ, இப்படியும் ஒரு ஆக்ஷன், க்ரைம் படம் எடுக்கலாம் என்று இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

(டிஸ்க்: Landscape No.2 படம் தான் இந்த வருடத்தின் முதல் பதிவாக இருக்க வேண்டியது; அனால் அது டிராப்டிலிருந்து ஆட்டோ போஸ்ட் ஆகி, 2009 இல் கலந்து விட்டது...)

You Might Also Like

9 comments

  1. ப்ரதிப் உங்கள் விமர்சனம் படத்தை உடனே பார்க்க தூண்டுகிறது. அருமை. உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றி

    ReplyDelete
  2. படம் பார்த்தும் ஆவலைத் தூண்டும் விமர்சனம். நம்ம ஏரியாவுக்கும் ஒரு எட்டு வந்துட்டுபோங்க...நன்றி

    ReplyDelete
  3. You can also try the other korean movies "Memories of Murders and "The Chaser" .Excellent one !!

    - Kamal

    ReplyDelete
  4. இந்த படத்தை அப்படிய ஈயடிச்சான் காப்பி அடிச்சு சஞ்சய்தத்தை வைத்து ஹிந்தியில Zindaன்னு எடுத்தாங்க. கிளைமேக்ஸ் மட்டும் வேற, அதே கிளைமேக்ஸ் இங்க வச்சா அவ்வளவுதான். அப்புறம் ஸ்பில்பெர்க் இந்த படத்தை ஆங்கிலத்தில் எடுக்க உள்ளார்.

    பழிவாங்குவதில் உச்சம் இந்த படம்

    ReplyDelete
  5. //படித்துவிட்டு கண்டிப்பாக பின்னூட்டம் இடவும்...//

    போட்டுட்டாலும்...வந்தவங்களுக்கு ஒரு ஹாய் பாய் சொன்னா தான திரும்பி வரனும்னு நினைப்பாங்க

    ReplyDelete
  6. ஸாரி டமால்டுமீல்... புது வீடு மாற்யதால் நெட் வருவதில் ஏகப்பட்ட தாமதமாகிவிட்டது. ஆபீஸில் டைப் அடிக்க முடியும் ஆனால் போஸ்ட் செய்ய முடியாது. டைப் அடித்து ட்ராப்ட் செய்து விட்டு நண்பனை போஸ்ட் செய்யச்சொல்வேன். (பார்க்க - சென்ற வாரம்) உங்கள் பின்னூட்டங்களும், ஆதரவும் தான் எனக்கு தூண்டுதல்கள். இனி பிரசனை இல்லை. நெட் வந்துவிட்டது. தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம். தொடர்ந்து வாசிக்கவும், பின்னூட்டமிடவும்...

    ReplyDelete
  7. @ramtirupur,mayilravanan: தாமதத்திற்கு மன்னிக்கவும்...வருகைக்கு நன்றி

    @kamalakkannan: கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன் கமல். வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. //உலக திரைப்படங்களில் கொரியன் திரைப்படங்கள் தான் என் முதல் சாய்ஸ்.//

    machi,en chellam ya nee... :)

    ReplyDelete
  9. நான் சென்னையில் உலக சினிமா dvd கடை வைத்துள்ளேன்.
    என்னிடம் உள்ள திரைப்படங்களின் தொகுப்பு .
    dvdworld65.blogspot.com

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...