அதிகபட்சமாக ஏதோ ஒரு வேகத்தில் மே மாதம் 20 பதிவுகள் எழுதியுள்ளேன். அடுத்தது இந்த டிசம்பரில் தான் (50 வர வேண்டும் என்பதற்காக). நண்பர்கள், சொந்தங்கள் சிலர் என்னைத் தொடர்ந்து எழுதும் படி ஊக்குவித்தாலும், நான் ஒரு சோம்பேறி என்னும் ஒரே காரணத்தினால் 'நேரமின்மை' பிரச்சனை. மேலும் நோட்பேடில் அடிக்கும் வித்தை எனக்கு மிகவும் தாமதமாகத்தான் தெரிய வந்தது. 'அழகி' இலவச மென்பொருளுக்கு நன்றி. அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
2009 - போன வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கெல்லாம் தூங்கிவிட்டேன். 12:00 மணிக்கு நண்பன் முத்துராம் நியூ யர் வாழ்த்து சொல்ல என்னை எழுப்பிய போது அவனை தூக்கத்திலேயே பேட் வேர்ட்ஸில் திட்டியுள்ளேன். இப்படித்தான் எனது 2009 ஆரம்பித்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு சில சந்தோஷங்களையும் பல கஷ்டங்களையும் கொடுத்த ஆண்டு. காலஓட்டத்தில் காணாமல் போகும் அளவிற்கு திக்குமுக்காட வைத்த ஆண்டு. எனது எதிர்காலம், ஆயிரமாயிரம் மென்பொருள்களுக்கிடையே SAP-FICO என்று தீர்மானிக்கப்பட்ட ஆண்டு (எனது அனுமதியிலாமலேயே). எதிர்பாராத இறப்புகள், துக்க சம்பவங்கள் நிறைந்த ஆண்டு. முன்னேற்றங்கள் என்று பார்த்தால் பெரிதாக எதுவும் இல்லை. சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி குடிபுகுந்ததைச் சொல்லாம். ஆனால் அதிலும், சின்னச் சின்னப் பிரச்சனைகள். சரிவுகளும்ம்ம்ம்ம்.... இல்லை. மொத்தத்தில் சுவாரஸ்யங்கள் குறைந்த ஆண்டாக அமைந்து விட்டது 2009.
கடந்ததை மறந்து 'நாளை நமதே' என்று தலைவர் வழியில் 2010 ஐ எதிர்நோக்கி...
(இந்த வருட நியூ யர் ஈவ், அலுவலக நண்பர்களுடன் அதிரடியாக பெங்களூர் பேமஸ் 'சரோவர் ப்ரீமியரில்...' அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்)