உலக சினிமா - எனக்குப் பிடித்த இயக்குனர்களும் அவர்களது படங்களும் - பகுதி 1

11:46:00 AM


உலக சினிமா என்று உலகத்தார் எதைக்கூறுகிறார்கள் என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய மொழிகள் அல்லாத பிற மொழிப் படங்களே உலகத் திரைப்படங்கள். அப்படிப்பார்த்தால் பெரும்பாலான உலக சினிமாக்கள் ஆங்கிலத்தில் தான் வெளிவந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றும். அப்படி இல்லை. ஆங்கிலப் படங்களும் உலக சினிமாக்கள் தானே தவிர அவை மட்டுமே 'உலகம்' அல்ல. உலகத் தரம் என்பது வேறு விஷயம். அதைப் பற்றி நான் சொல்லவே இல்லை. அது ஒரு மிகப் பெரிய குழப்பம் என்று உலக நாயகன் விஜய் டிவியில் சொல்வதைக் கேட்டேன். அவருக்கே அந்த நிலைமை என்றால் நாமெல்லாம் அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. அப்படி உலக சினிமாவை இயக்கிய, என்னகுப் பிடித்த சில இயக்குனர்களையும் அவர்களது படங்களைப் பற்றிய எனது கருத்துகளும்...

கயுசெப்பே டோர்ணடோரே (GIUSEPPE TORNATORE)
பிரபல இத்தாலிய இயக்குனரான இவர் பிறந்தது மே மாதம் 27 ஆம் தேதி, 1956. பிறந்த இடம் பகேரியா. Le minoranze etniche in Sicilia என்னும் ஆவணப் படத்தின் (டாக்குமெண்டரி) மூலம் தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர், தனது முதல் முழு நீளப் படமாக, II Camorrista என்ற தனது நாவலையே 1986 ல் 'தி ப்ரொபசர்' என்ற பெயரில் எடுத்தார். தனது இரண்டாவது படத்திலேயே ஆஸ்கார் விருதை வென்றவர் இவர். ஒளிப்பதிவும் (Camera), பின்னணி இசையும்(Re-Recording) இவரது இவரது படங்களில் அற்புதமாக இருக்கும் என்பது உலக சினிமா ரசிகர்களின் கருத்து.

சினிமா பேரடைசோ (1989)

உலக சினிமா பார்ப்பவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தை தவற விட்டிருக்க மாட்டார்கள். உலக சினிமா என்றாலே இந்தப் படம் தான் முதலில் வந்து நிற்கும். சிறு வயதில் தனக்கு சினிமா பற்றிய அறிமுகத்தைக் கொடுத்த தியெட்டர் ஆபரேட்டர் ஒருவரது மரணத்திற்காக பல வருடங்கள் கழித்து ஊர் திரும்பும் ஒரு இயக்குனரின் நினைவுகள் தான் இந்தப் படம். ஒரு சிறுவன், சினிமாவை எப்படி ஆச்சர்யத்துடன் எதிர்கொண்டு, அதையே தன் வாழ்க்கையாக்கிக் கொள்ள முடிவு செய்கிறான் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கும் இந்தப் படம் 1989 ஆம் ஆண்டிற்கான 'BEST FOREIGN LANGUAGE FILM ' ஆஸ்கார் வாங்கியது.

தி ஸ்டார் மேக்கர் (1995)
பதிவர் கேபிள் சங்கர் இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்த்துவிட்டு, அப்படி என்ன இருக்கப் போகிறது என்ற எண்ணத்தில் பார்க்க ஆரம்பித்த இந்தப் படம் என்னை ரொம்பவுமே பாதித்து விட்டது. சினிமா மோகம் எவ்வளவு தூரம் மக்களை அடிமைப் படுத்துகிறது என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு இந்தப் படம்.சினிமா ஆசையில் ஒருவர் இருவர் ஏமாந்தால் பரவாயில்லை, பல ஊர்கள் ஒருவனிடம் ஏமாறுவதை இந்தப் படத்தில் பார்க்கலாம். ஆச்சரியம், அதிர்ச்சி என்று இரண்டுமே சரிவர கலந்திருக்கும் இந்தப் படம் எனக்குப் பிடித்த 'BEST 10 OTHER LANGUAGE MOVIES'ல் ஒன்றான இந்தப் படம், 1995 ஆம் ஆண்டிற்கான 'BEST FOREIGN LANGUAGE FILM' ஆஸ்கார் விருத்துக்காக பரிந்துரைக்கப் பட்டது.

மலீனா (2000)
இரண்டாம் உலகப் போர் பற்றி ஆயிரம் படங்கள் வந்திருந்தாலும், அதில் ஒருசில படங்கள் தான் போர் எப்படி நடந்தது என்பதைச் சொல்லாமல், அந்தப் போரினால் என்னென்ன நடந்தது என்பதைச் சொல்லும். அப்படி ஒரு படம் தான் மலீனா. போரில் கணவனை இழந்த ஒரு அழகான இளம் பெண் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படம். இது ஒரு அற்புதமான கிளாச்சிக் வகைப் படம் என்பது தெரியாமலேயே, இந்தப் படத்தின் பல காட்சிகளைப் பல முறை நான் பார்த்திருக்கிறேன். அதற்கு முக்கியமான ஒரே காரணம், அந்த அழகான இளம் பெண் பிரபஞ்சப் பேரழகியான மோனிகா பெல்லூசி.

தி ப்ரொபசர், தி லெஜன்ட் ஆப் 1900, தி அதர் வுமன் போன்ற
டோர்ணடோரேவின் பிற படங்களையும் பார்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். டவுன்லோட் லிங்க், DVD என்று எது கிடைத்தாலும் பரவில்லை என்று காத்துக்கொண்டிருக்கிறேன்; கிடைக்க மாட்டேன்கிறது....

You Might Also Like

5 comments

  1. The legend of 1900
    http://www.torrentz.com/9d51dc48ad12894ae6aeffa79baf43dbb0da9955

    ReplyDelete
  2. ஆனந்தன் நிங்க ரசிச்ச வியந்த டைரக்டர் எடுத்த த ஸ்டார் மேக்கர் படத்தை பத்தி எனது பதிவுல எழுதி இருக்கேன் போய் பாருங்க...

    ReplyDelete
  3. முதல் ஆளா படிச்சிட்டேன் ஜாக்கி ஸார்...

    ReplyDelete
  4. நன்றி சுப.தமிழினியன்...

    ReplyDelete
  5. நான் அந்த பெல்லுசி காகவே பார்த்தேன் பா என்னம்மா இருக்கா

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...