எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி ஒரு படம்?

11:34:00 AM

உலக சினிமாவையும் தமிழ் சினிமாவையும் ஒரு சேரக் காதலிக்கும் என்னைப் போன்ற ஆட்கள் ஒரு நல்ல படத்தைப் பார்த்தவுடன் கூறும் முதல் வாக்கியம்-'எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி ஒரு படம்' ? மாகத்தான் இருக்கும். தமிழ் சினிமாவை காதல், ஆக் ஷன், நகைச்சுவை, செண்டிமென்ட், மசாலா என்று மிகவும் சுலபமாக இந்து வகைகளாகப் (Genre) பிரித்து விடலாம். இவை தவிர எப்போதாவது அத்தி பூத்தாற்போல் ஒரு சில த்ரில்லர்கள் வருவதுண்டு. அவற்றையும் த்ரில்லர் என்று சொல்ல முடியாது, தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அவை 'பேய்' படங்கள்.

பிளாக் காமெடி (no mans land) , sci-fi (star wars) , ரொமான்டிக் காமெடி (american pie), horror(saw series), music based(ray), dance based (step up), game based (the longest yard) மாதிரியான படங்கள் தமிழில் வருவது சாத்தியமில்லாதது அல்லது அபூர்வம்.

அப்படித் தப்பித் தவறி வந்த படங்களில் ....

பிளாக் காமெடி வகையில் வந்த படம் கமலின் 'பேசும் படம்'.

தமிழின் முதல் ரொமான்டிக் காமெடி சக்கரக்கட்டி. வகையாய் ஊற்றிக் கொண்ட படம்.

சுப்ரமணிபுரத்தில் சசிகுமார் சமுத்ரகனி கழுத்தை கர கர வென்று கத்தியால் அறுப்பதையே அதிர்ச்சியாய் பார்த்த தமிழ் பிஞ்சு உள்ளங்களுக்கு saw, hostel போன்ற படங்களைப் பார்க்கும் சக்தி இருப்பது போல் தெரியவில்லை.

முழுக்க முழுக்க game based ஆக தமிழில் 'லீ' வந்து, வந்த இடம் தெரியாமல் போனது. 'வெண்ணிலா கபடிக் குழுவில்' காமெடி தூக்கலாக இருந்ததால் பிழைத்துக் கொண்டது. மற்றபடி விஜயின் கில்லி யைஎல்லாம் என்னால் இந்த வகையில் சேர்க்க முடியாது...

இளையராஜா இசையமைத்தாலே 'இது ஓரு மியுசிகல் சப்ஜெக்ட்' என்று போட்டுவிடுவார்கள். ஆனால் தமிழில் 'சிந்து பைரவி' மாதிரியான படங்கள் ரொம்பவும் குறைவு.

இதுவே இப்படி என்றால், Alexander, Gladiator, Kingdom of Heaven, 300, Red Cliff போன்ற படங்களை மிகவும் ரசித்து வாயைப் பிளந்து பார்க்கும் எனக்கு, தமிழிலும் அது போல் மருதநாயகமோ, மர்மயோகியோ வர வேண்டும் என்ற ஆசை இருக்காதா? வருவேனா என்று ஆட்டம் அல்லவா காட்டுகிறது. மூன்று விஜய் படம் எடுத்து காசை காற்றில் பறக்க விடுவதற்கு பதில் இந்த மாதிரி ஓரு படமெடுத்து உலகப் புகழ் அடையலாமே? என்ன செய்வது என்னால் புலம்ப மட்டும் தான் முடியும்...

அனகோண்டா படங்களைப் போல் முழுக்க முழுக்க காட்டில் எடுத்தப் படங்கள் தமிழில் மிகவும் குறைவு. இதற்கு முன் காட்டுச் சூழலில் நான் ரசித்த படம் கமலின் 'குணா' (எங்கும் எதிலும் கமல்). இப்பொது ரசிக்கும் படம் பேராண்மை. ரொம்ப நாள் கழித்து வந்துருச்சுடா தமிழில் அந்த மாதிரி ஓரு படம் என்கிற திருப்தி...
கடல் அழகை இயற்கையில் காட்டிய s.p.ஜனநாதன், காட்டின் அழகை பேராண்மையில் காட்டுகிறார். படத்தின் இரண்டாம் பாகம் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளரின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஓரு காட்சியில் வானத்திலிருந்து கீழே பார்ப்பது போன்ற கோணத்தில் அப்படியே காட்டை ஓரு வட்டம் போட்டு காட்டுவார்கள்...ஆஹா தமிழிலும் எடுத்துட்டோம்ல என்று காலரைத்த் தூக்கி விடும் காட்சியமைப்பு அது .
பேராண்மை ஓரு பார்வை...
படம் முழுக்க ஜெயம் ரவி தான். xerox ரவிக்கு சொல்லிக் கொள்ளும் படியாக ஓரு படம். பல இடங்களில் உழைப்பு தெரிகிறது. படத்தில் நிறைய நுணுக்கமான விசயங்களைச் சொல்லுகிறார்கள். வேளாண் செயற்கைக்கோள், நவீன ஆயுதங்கள், அவற்றை உபயோகிக்கும் முறை, சர்வதேச அரசியல், காட்டு ரகசியங்கள் என்று பல விசயங்களைச் சொல்கிறார்கள். ரசிக்கும் படியான காட்டுப் பயணக் காட்சிகள், ஆற்றைக் கடக்கும் காட்சிகள், மூங்கில் காடுகள், பொந்து மரம் என்று நிறைய அசத்தல்கள். கண்டிப்பாக இந்தப் படத்தின் பல காட்சிகளில் நான் ரசிக்கும் உலகத் தரத்தைப் பார்த்தேன். ஆனால்....

முதல் பாதி என்று பார்த்தால் அதை வசனம் பாதி என்று சொல்லும் அளவிற்கு சென்சார் கட்டுடன் இருக்கிறது. NCC Training வரும் பெண்களை நவநாகரீக பெண்களாகக் காட்டவேண்டும் என்பதற்காக அவர்களை கேவலமாகச் சித்தரித்துள்ளார்கள். அவர்கள் பேசும் வசனங்கள் ஏறக்குறைய முழுவதுமே சென்சார் கட். மலைக் கூட்டத்தினர் மத்தியிலிருந்து ஒருவன் (ஜெயம் ரவி) அதிகாரியாக வந்திருக்கிறான் என்பதற்காக அவனை கேவலப்படுத்தும் இடங்களும் டூ மச்.
பின் பாதியில் இந்தியாவையே காப்பாற்ற வேண்டியவர்கள் முன் பாதியில் கூத்தடிப்பது, டபுள் மீனிங்கில் பேசுவது, அவமானப் படுத்துவது, அருவியில் அரைகுறை ஆடையில் ஆடுவது என்று காட்டியது ஏன் என்று தெரியவில்லை. இப்படி திரியும் பக்கிகள் தீய சக்திகள் ஊடுருவியது தெரிந்த அடுத்த நிமிடமே, ஜெயம் ரவியை ஹீரோ வாக ஏற்றுக்கொண்டு துப்பாக்கியைச் சுற்றி 'இந்தியா, எனது தாய்நாடு, அதைக் காப்பாற்றுவேன்' என்று கூறுவதும் இடிக்கிறது. எனத்தான் படித்த மாடர்ன் மங்கைகளாக இருந்தாலும், அண்டா குண்டா சைஸ் ஆயுதங்களை அசால்ட்டாக எடுத்து சண்டை போடுவது (அதிலும் தலைவிரி கோலமாய் பொட்டு வைத்து பூவைத்து மை பூசி...ஐயோ கடவுளே...) நடக்கிற காரியமாய்த் தெரியவில்லை.
ஓரு சீனில் வில்லன்களை ஏமாற்ற டேப்பில் இவர்கள் பேசுவது போல் பதிவு செய்ய, அதை வில்லன் கேட்டுக் கொண்டே கிட்ட வரும் போது என்னவோ நடக்கப் போகிறது என்று நாம் ஆவலாக உட்கார்ந்தால், அது போடா போடா புண்ணாக்கு என்று பாட்டு படிக்கிறது...வெள்ளைக்காரனுக்கு புண்ணாக்கைப் பற்றி என்ன தெரியும்? நல்லவேளை அவன் பக்கத்தில் இருப்பவனிடம்..'Hey Whats that Punaku they are singing about?' என்று கேட்காமல் இருந்தான். இந்தப் படத்திற்காக அந்த ஐந்து பெண்களும் பல தற்காப்புக் கலைகள் மலை ஏற்றம் அது இது வென்று கற்றதாக முன்பு சொன்னார்கள். அதையெல்லாம் படத்தில் காட்டி இருக்கலாமே. அதை விட்டு குட்டைப் பாவாடை, குட்டி டவுசரில் அவர்களை ஏன் ஓட விட வேண்டும்? வயிற்றில் ஸ்பீட் பிரேக்கர் மாதிரி பேக்கஸ் வைத்திருக்கும் வில்லனும் சுலபமாக ரவியிடம் தோற்பது போல் தெரிந்தாலும் அந்த சண்டைக் காட்சி சூப்பர்... முக்கியமாக தேவையே இல்லாமல் வடிவேலு எதற்கு?
நல்ல கதை, நல்ல களம் பின் ஏன் கமர்சியல் விசயங்களைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

இந்த மாதிரியான கதைகளுக்கு திரைக்கதை என்பது ரொம்பவும் முக்கியம். படத்தை எப்படியாவது இரண்டரை மணி நேரம் இழுக்க வேண்டும் என்று நினைக்காமல் தேவையான காட்சிகளை மட்டும் வைத்து படம் எடுத்தால் கண்டிப்பாக அபார வெற்றி கிடைக்கும். உலக சினிமா பார்க்கும் ரசிகர்கள் பெருகி விட்டார்கள். அவர்களுக்குத் தெரியும் எது நல்ல படம் என்று. தமிழனின் சினிமா ரசனை மாறிவிட்டதை இயக்குனர்கள் உணர வேண்டும்.

பேராண்மை - தமிழனின் முயற்சி (பாரம்பரிய மசாலாவுடன்)...

You Might Also Like

10 comments

 1. எல்லாரோட விமர்சங்களையும் படிக்கும்போது என் மனதில் வந்த கேள்விகளைத்தான்.. நீங்க கேட்டிருக்கீங்க.

  டிவிடி வராம இந்த படத்தை பார்க்க முடியாது. ஆனால்.. பார்க்கும்போது.. நீங்க சொன்னதுதான் நிச்சயம் என் மனதிலும் ஓடும்.

  ReplyDelete
 2. பீரதீப் உங்கள் ஆதங்கம் வாக்கியங்களாக... படிக்கும் போதும் அந்த விவரனையும்.. அருமை நல்ல பதிவு...

  ReplyDelete
 3. சொல்ல‌ வ‌ந்த‌தை அழ‌கா சொல்லிட்டீங்க‌.. ந‌ன்றி ப்ரதீப் ஸார்.

  Toto
  www.pixmonk.com

  ReplyDelete
 4. அருமையான விமர்சனம். நல்ல பல விசயங்களை ஆரம்பத்தில் சொல்லிருக்கீங்க.

  //சுப்ரமணிபுரத்தில் சசிகுமார் சமுத்ரகனி கழுத்தை கர கர வென்று கத்தியால் அறுப்பதையே அதிர்ச்சியாய் பார்த்த தமிழ் பிஞ்சு உள்ளங்களுக்கு saw, hostel போன்ற படங்களைப் பார்க்கும் சக்தி இருப்பது போல் தெரியவில்லை.

  முழுக்க முழுக்க game based ஆக தமிழில் 'லீ' வந்து, வந்த இடம் தெரியாமல் போனது. 'வெண்ணிலா கபடிக் குழுவில்' காமெடி தூக்கலாக இருந்ததால் பிழைத்துக் கொண்டது. மற்றபடி விஜயின் கில்லி யைஎல்லாம் என்னால் இந்த வகையில் சேர்க்க முடியாது...

  இளையராஜா இசையமைத்தாலே 'இது ஓரு மியுசிகல் சப்ஜெக்ட்' என்று போட்டுவிடுவார்கள். ஆனால் தமிழில் 'சிந்து பைரவி' மாதிரியான படங்கள் ரொம்பவும் குறைவு.

  இதுவே இப்படி என்றால், Alexander, Gladiator, Kingdom of Heaven, 300, Red Cliff போன்ற படங்களை மிகவும் ரசித்து வாயைப் பிளந்து பார்க்கும் எனக்கு, தமிழிலும் அது போல் மருதநாயகமோ, மர்மயோகியோ வர வேண்டும் என்ற ஆசை இருக்காதா? வருவேனா என்று ஆட்டம் அல்லவா காட்டுகிறது. மூன்று விஜய் படம் எடுத்து காசை காற்றில் பறக்க விடுவதற்கு பதில் இந்த மாதிரி ஓரு படமெடுத்து உலகப் புகழ் அடையலாமே? என்ன செய்வது என்னால் புலம்ப மட்டும் தான் முடியும்...//

  சரியாக சொன்னீங்க. இதை நானும் இந்தப்படங்களை பார்க்கும்போது யோசித்திருக்கிறேன்

  ReplyDelete
 5. @Jackie: நன்றி ஸார்...
  @Nanjil: நிறைய பேருக்கு இந்த ஆதங்கம் இருக்கு பாஸ்...தமிழ் சினிமா இன்னும் ரொம்ப தூரம் போகணும்:(

  ReplyDelete
 6. First of all don't compare tamil films and english films, both are entirely different eg way of life style, culture,sentiments , emotionals etc film is more or less a photocopy of the people's culture and nature, also we can't take high budget film like hollywood since they have huge audiences all over the world, apart from english speaking people every other language people love to watch english movies so this will add popularity of the movies,
  they can take any style of movies with different concepts, angles etc since they didn't dependent on english audiences alone but in case of tamil film apart from tamil audiences others are very less, eventhough if the film is so good the (h)indian govt will dubbed into hindi and that film will be send to various country's film festival eg Roja, Bombay so every credits goes hindi(i am not against any language , don't think me as a language chauvnist, some times I feel in-secure to proud tamil among the thamilians) india doing false propaganda, in the name national integrity we are simply losing our own rights ok we'll come to the topic since that will be a endless debate until tamilnadu being a part of india. Subramaniyapuram mind blowing movie I don't remembered how many time I watched in theater itself each and every scene I enjoyed, Nadodigal also good, I never seen any film like mouna raagam enna padam athu? whether it is revathi, mohan,karthick each and evey one did a good job
  I don't want to say any single word about the music thala thalathan simply superb, can u compare bharathiraja, bhackiyaraj, balu mahendra, sridhar, mani ratnam etc film with any of the hollywood films none of the film can't touch their feet I am not exaggerating, even I have seen the movies like gladiator, troy, 300, life is beautiful etc each one is special in it oneway just c n njoy don't never ever compare, will u accept when ur parents/teachers compare u with other children, will u accept when ur wife compare u with others(i am sorry if

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றி தாமிரபரணி...

  நீங்கள் நினைப்பது போல் நான் ஆங்கிலப் படங்களை தமிழ் படங்களுடன் ஒப்பிட்டு பேசவில்லை. தமிழிலும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டது, மகிழ்ச்சி, என்று தான் எழுதியுள்ளேன். இதற்கு நீங்கள் இவ்வளவு உணர்ச்சிகளைக் கொட்டத் தேவைல்லை. வெளிநாட்டவரைப் பார்த்து வேண்டாதப் பலத்தைக் கற்றுக் கொண்ட நாம், வேண்டிய விசயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். நல்ல படம்; அதில் எதற்கு இரட்டை அர்த்த வசனங்கள்? எதற்கு வடிவேலு? எதற்கு அருவில் அரைகுறை ஆடையில் பாட்டு? நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கமர்ஸியல் சாக்டையைப் பற்றி என் கவலை பட வேண்டும்.

  தமிழில் உலகத் தரத்தில் படம் வரவே இல்லை என்று சொல்ல வில்லை. வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன்...:-)

  சின்ன சந்தேகம்: நீங்கள் இளைய தளபதி, நாளைய முதல்வர் விஜய் ரசிகரோ?

  ReplyDelete
 8. அருமையான விமர்சன பதிவு... சீக்கிரம் பார்க்கவேண்டும் எனத்தோன்றுகிறது...

  http://kaaranam1000.blogspot.com

  ReplyDelete
 9. @பிரதீப்:
  //தமிழில் உலகத் தரத்தில் படம் வரவே இல்லை என்று சொல்ல வில்லை. வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்கிறேன்...:-)//

  கடவுள் இல்லைன்னு சொல்லலை..இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.

  //சின்ன சந்தேகம்: நீங்கள் இளைய தளபதி, நாளைய முதல்வர் விஜய் ரசிகரோ?

  எனக்கும் ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் கமல் ரசிகரா? :)

  ReplyDelete
 10. //இதுவே இப்படி என்றால், Alexander, Gladiator, Kingdom of Heaven, 300, Red Cliff போன்ற படங்களை மிகவும் ரசித்து வாயைப் பிளந்து பார்க்கும் எனக்கு, தமிழிலும் அது போல் //

  how about ayirathil oruvan??????

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...