உலக சினிமா - எனக்குப் பிடித்த இயக்குனர்களும் அவர்களது படங்களும் - பகுதி 1
11:46:00 AM
உலக சினிமா என்று உலகத்தார் எதைக்கூறுகிறார்கள் என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய மொழிகள் அல்லாத பிற மொழிப் படங்களே உலகத் திரைப்படங்கள். அப்படிப்பார்த்தால் பெரும்பாலான உலக சினிமாக்கள் ஆங்கிலத்தில் தான் வெளிவந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றும். அப்படி இல்லை. ஆங்கிலப் படங்களும் உலக சினிமாக்கள் தானே தவிர அவை மட்டுமே 'உலகம்' அல்ல. உலகத் தரம் என்பது வேறு விஷயம். அதைப் பற்றி நான் சொல்லவே இல்லை. அது ஒரு மிகப் பெரிய குழப்பம் என்று உலக நாயகன் விஜய் டிவியில் சொல்வதைக் கேட்டேன். அவருக்கே அந்த நிலைமை என்றால் நாமெல்லாம் அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. அப்படி உலக சினிமாவை இயக்கிய, என்னகுப் பிடித்த சில இயக்குனர்களையும் அவர்களது படங்களைப் பற்றிய எனது கருத்துகளும்...
கயுசெப்பே டோர்ணடோரே (GIUSEPPE TORNATORE)பிரபல இத்தாலிய இயக்குனரான இவர் பிறந்தது மே மாதம் 27 ஆம் தேதி, 1956. பிறந்த இடம் பகேரியா. Le minoranze etniche in Sicilia என்னும் ஆவணப் படத்தின் (டாக்குமெண்டரி) மூலம் தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர், தனது முதல் முழு நீளப் படமாக, II Camorrista என்ற தனது நாவலையே 1986 ல் 'தி ப்ரொபசர்' என்ற பெயரில் எடுத்தார். தனது இரண்டாவது படத்திலேயே ஆஸ்கார் விருதை வென்றவர் இவர். ஒளிப்பதிவும் (Camera), பின்னணி இசையும்(Re-Recording) இவரது இவரது படங்களில் அற்புதமாக இருக்கும் என்பது உலக சினிமா ரசிகர்களின் கருத்து.
சினிமா பேரடைசோ (1989)

தி ஸ்டார் மேக்கர் (1995)

மலீனா (2000)

தி ப்ரொபசர், தி லெஜன்ட் ஆப் 1900, தி அதர் வுமன் போன்ற டோர்ணடோரேவின் பிற படங்களையும் பார்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். டவுன்லோட் லிங்க், DVD என்று எது கிடைத்தாலும் பரவில்லை என்று காத்துக்கொண்டிருக்கிறேன்; கிடைக்க மாட்டேன்கிறது....
5 comments
The legend of 1900
ReplyDeletehttp://www.torrentz.com/9d51dc48ad12894ae6aeffa79baf43dbb0da9955
ஆனந்தன் நிங்க ரசிச்ச வியந்த டைரக்டர் எடுத்த த ஸ்டார் மேக்கர் படத்தை பத்தி எனது பதிவுல எழுதி இருக்கேன் போய் பாருங்க...
ReplyDeleteமுதல் ஆளா படிச்சிட்டேன் ஜாக்கி ஸார்...
ReplyDeleteநன்றி சுப.தமிழினியன்...
ReplyDeleteநான் அந்த பெல்லுசி காகவே பார்த்தேன் பா என்னம்மா இருக்கா
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...