#100நாடுகள்100சினிமா #19. PARAGUAY - 7 BOXES (7 Cajas - 2012)

9:03:00 AM

Juan Carlos Maneglia, Tana Schémbori | Paraguay | 2012 | 110 min.

(***English write-up & Download Link given below***)

1900களிலேயே உலகம் முழுவதும் சினிமா வந்த அதே காலட்டத்தில் பராகுவேவிற்கும் சினிமா அறிமுகமாகிவிட்டது. ஆனால் உலகளவில் கணக்கிட்டுப் பார்த்தா பராகுவே நாட்டிலிருந்து வெளிவரும் படங்கள் மிக மிக குறைவு. காரணம் அதே - சண்டை, சர்வாதிகார ஆட்சியாளர்களின் அடக்குமுறை. 1954 - 1989, Alfredo Stroessner என்ற மிலிட்டரி தலைவரின் சர்வாதிகார ஆட்சிக்கு முதலில் பலியானது சினிமா தான். சினிமாவை முற்றிலும் வெறுத்த இவர் பதவி விலகிய பிறகு, மக்களாட்சி நிறுவப்பட்டு சினிமாவும் கொஞ்சம் கொஞ்சமாக எழுச்சி அடைந்திருக்கிறது. ஆண்டிற்கு 5, 6 படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. வந்த படங்களில் பெரும்பாலானவை குறும்படங்களாகவும், டாக்குமெண்டரிகளாகவுமே இருந்திருக்கிறது. சினிமா மீது அதிகப்பற்றுள்ளாத மக்களுக்கான படத்தை எடுக்க நிதி திரட்டுவதென்பது பெரும் பாடாக இருந்திருக்கிறது. சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார் விருதிற்கு பராகுவே முதன்முதலில் படம் அனுப்பியதே சென்ற ஆண்டு தான். Cloudy Time (2015) என்ற அந்தப் படமும் டாக்குமெண்டரி தான். முழுநீளப்படமல்ல. கடந்த 15 ஆண்டுகளில் 40 படங்கள் பராகுவே தயாரிப்பாக வெளியாகியிருக்கிறது. மொத்தமாக ஆரம்பத்திலிருந்து இன்று வரை 80 தேறலாம். அவ்வபோது சில படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கிட்டு கவன ஈர்ர்பு செய்யும். அப்படி உலகளவில் கவனிக்கப்பட்ட, நல்ல படம் என்று அங்கீகரிக்கப்பட்ட படம் - 7 Boxes.  

பராகுவே நகர் ஒன்றின் பரபரப்பான மார்க்கெட் ஒன்றில் தள்ளுவண்டி வைத்து பிழைப்பு நடத்துபவன் 17 வயதான Victor. நிறைய சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்று எல்லோரையும் போல அவனுக்கும் ஆசை. ஆனால் அன்றைய தினத்திற்கு வியாபாரம் பிடிப்பதே தினம் பெரும் போராட்டமாக இருக்கிறது அவனுக்கு. கனவும் காலி வயிறுமாக போய்க்கொண்டிருக்க, ஒரு நாள் யாருக்கோ கிடைக்க வேண்டிய வேலை ஒன்று இவனுக்குக் கிடைக்கிறது. 7 மரப்பெட்டிகளை ஒரு இடத்திலிருந்து எடுத்து, யார் கையிலும் அது சிக்காமல் ஒரு நாள் முழுவதும் பத்திரமாக வைத்திருந்து இரவு மீண்டும் அதே இடத்தில் வந்து ஒப்படைக்கவேண்டும். இது தான் வேலை. இதை முடித்தால் 100 டாலர் கிடைக்கும்

பாக்ஸ்களை வாங்கிக்கொண்டு மார்க்கெட்டை சுற்றி வரத் தொடங்குகிறான். ஒரு பக்கம் தன் வேலையை விக்டரிடம் பறிகொடுத்த ரெகுலர் ஆசாமி தனது சாக்காக்களுடன் துரத்த, மறுபக்கம் திருதிருவென்று முழித்துக்கொண்டு மார்கெட்டை வட்டமடித்துக்கொண்டிருப்பவனை போலீஸ் சந்தேகிக்க, காதலி இன்னொரு பக்கம் கேள்விகளாக கேட்டுத் துளைக்க - அந்த பெட்டிகளில் அப்படி என்ன இருந்தது? அவை யாருக்குச் சொந்தமானவை? தடைகளை மீறிப் பெட்டிகளை விக்டரால் பத்திரமாக சொன்ன நேரத்தில் ஒப்படைக்க முடிந்ததா இல்லையா?

'10 எண்றதுக்குள்ள' டைபில் ஒரு பரபர ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் இந்தப் படம் (அதை விட நல்ல படம் தான். மிரள வேண்டாம்). எள் போட இடமில்லாத ஜனநெருக்கடியான ஒரு மார்க்கெட் தான் கதைக்களம். பணத்திற்காக எதும் செய்யத் துணியும் மக்கள் தான் கதாப்பாத்திரங்கள். ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் போட்டி போட்டு படத்தைத் தூக்கிப் பிடிக்கிறது.

படத்தை இருவர் இயக்கியிருக்கிறார்கள் - Juan Carlos & Tana Schembori. இதில் முதலாமானவர் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.

தாராளமாக ஒரு முறை பார்க்கக்கூடிய அருமையா க்ரைம் த்ரில்லர்.

******************************

7 boxes is the story of a young boy Victor, working as a pushcart porter in a busy market in Paraguay. Problems start when he accepts to transport 7 anonymous boxes from one place to another for 100$.

Cinema in Paraguay has always been small with number of films so far less than 80. Main reason being lack of funds, public support, equipment and most importantly like anyother Country with poor Cinema history - a tyrant military rule by Alfredo Stroessner  from 1954 - 1989. Paraguay's first Official Submission to the Oscars was only in 2015 which is a documentary, Cloud Time (2015). Now and then Paraguayan movies show themselves in some film festivals and gain attention. 7 Boxes is one among them.

Directors - Juan Carlos Maneglia, Tana Schémbori 
Directed by Juan Carlos Maneglia, Tana Schémbori, 7 Boxes from Paraguay is definitely a watchable Crime Thriller movie.  

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...