#‎100நாடுகள்100சினிமா‬ #17. EGYPT - 678 (2010)

8:15:00 PM

Mohamed Diab | Egypt | 2010 | 100 min.

(*** English write-up & Download Link given below ***)


பல முறை பேருந்துகளில், ரயில்களில், ஷாப்பிங் மால்களில் சம்பந்தமே இல்லாமல்  சில பெண்கள் சில ஆண்களை முறைத்துக்கொண்டே போவதை தினம் தினம் பார்க்கிறோம். சம்பந்தமே இல்லாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் நம்மையும் சில பெண்கள் முறைப்பதையும், அதைப் பார்த்து நம் அருகில் நிற்கும் சிலர் விஷமச் சிரிப்பு சிரிப்பதையும் பார்க்கிறோம். இவை நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள்.

இது போன்ற சம்பவங்கள் நடக்காத நாடு என்று ஒன்று இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும், “கட்டுப்பாடுகள் அதிகம் நிறைந்த அரபு நாடுகளில் தான் அது சாத்தியம். ஏனென்றால் இது போன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் அறுத்து’  விடுவார்கள்என்று நினைத்திருந்தேன். ஆனால் அரபு நாடுகளில் தான் தினம்தினம் இவ்வகையான sexual harassment பிரச்சனைகளை பெண்கள் அதிகளவில் எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்தப் படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்!

எகிப்தில், வெவ்வேறு வயது, பொருளாதாரச் சூழல்களில் இருக்கும் மூன்று பெண்களின் கதை தான் இந்த 678. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தக் கதாப்பாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அப்பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என்ன என்பது தான் 678 படத்தின் கதை. இதில் படத்தின் பிரதான கதாப்பாத்திரமான ஃபைஸா (Fayza) தினம் செல்லும் பேருந்து எண் – 678.

ஃபைஸா (Fayza): 
ஃபைஸா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளுக்குத் தாயான, அரசு வேலைக்கு தினம் கூட்ட நெரிசலான பேருந்தில் (No: 678) செல்லும் ஒரு சாதாரண குடும்பப்பெண். பேருந்தில் தினம்தினம் பல்வேறு வகைகளில் பாலியல் துன்பறுத்தல்களுக்கு ஆளாகிறாள். வெளியே சொல்ல பயந்துகொண்டு தன் கணவனிடம் கூட இதைப் பற்றிச் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கிச் சாகிறாள். தினம் முகம் தெரியாத பல்வேறு ஆண்களால் அவதிக்குள்ளாவதால் தன் கணவனுடனான தாம்பத்தியதிலேயே வெறுப்பு கொள்கிறாள். வேண்டுமென்றே அவனை ஒதுக்குகிறாள். தினம் கடுமையாக உழைத்து வீடு திரும்பும் அவளது கணவன் இதனால் கோபமடைகிறான்.

செபா (Seba):
டாக்டரை திருமணம் செய்த பணக்காரப் பெண். செப்புக்கம்பிகளாலானலங்கார நகைகள் செய்து விற்பது இவளது தொழில். ஒரு முறை கணவனுடன் எகிப்து விளையாடும் கால்பந்து போட்டிக்குச் செல்லும் செபா, வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் பல ஆண்களால் கும்பல் வன்மத்திற்கு ஆளாகிறாள். அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் செபாவிடம் அவளது டாக்டர் கணவனும், “உனக்கு நடந்ததை என்னால் மறக்க முடியவில்லை. உன்னுடன் இனி என்னால் வாழ முடியாதுஎன்று சென்று விடுகிறான். விரக்தியில் இருக்கும் செபா, பாலியல் வன்முறையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதைப் பற்றிய கலந்துரையாடல்களை நடத்த ஆரம்பிக்கிறாள். பல பெண்கள் வருகிறார்கள், இவள் சொல்வதைக் கேட்கிறார்கள். ஆனால் யாரும் தாங்கள் பாலியல் துன்பதிற்கு ஆளாக்கப்பட்டதை ஒத்துக்கொள்ளக்கொள்ள மறுக்கிறார்கள் -  ஃபைஸா உட்பட.

நெல்லி (Nelly)
வளர்ந்து வரும் ‘Stand-Up Comedian’ நெல்லி. இவளது காதலன் எகிப்தின் முன்னனி Stand-Up Comedian. நெல்லியைத் திருமணம் செய்துவதற்காக அவளது பெற்றோர் விருப்பப்படி தனக்குப் பிடித்த இந்த வேலையை விட்டுவிட்டு பிடிக்காத வங்கி வேலைக்குச் செல்லத் தயாராக இருப்பவன். ஒரு முறை வீட்டில் வந்து இறங்கும் நெல்லியை டாக்ஸி டிரைவர் ஒருவன் அவளது சட்டையை பிடித்து இழுத்து அப்படியே காரையும் செலுத்தி கீழே தள்ளி விடுகிறான். அவனை விரட்டிப் பிடிக்கும் நெல்லி போலீஸில் ஒப்படைத்து sexual harassment என்று புகார் செய்கிறாள். ஆனால் போலீஸ் வேறு ஏதாவது கேஸில் இவனை உள்ளே வைக்கிறோம் பாலியல் கேஸ் போட முடியாது என்று சொல்கிறார்கள். நேரே நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்கிறாள் நெல்லி; செபா இதற்கு ஆதரவு தருகிறாள்.

இம்மூன்று பெண்களுக்குள் வெவ்வேறு காலகட்டங்களில் அறிமுகமாகி, தங்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஃபைஸா அதனை ஏற்கனவே ஆரம்பித்து விட்டிருக்கிறாள். பேருந்தின் கூட்ட நெரிசலில் தன்னிடம் தவறாக நடக்க முயலும் ஒரு இளைஞனை கொண்டை ஊசி போன்ற ஒன்றை வைத்து அவனது ஆணுறுப்பில் ஓங்கி குத்தி விட்டு ஓடிவிடுகிறாள். 678 பேருந்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நான்கு பேர் தொடையிடுக்கில் கையை வைத்து ரத்தசகிதம் அலறிக்கொண்டு கீழே விழுவதால் போலீஸும் உஷார் ஆகிறது. சிறப்பு அதிகாரியும் நியமிக்கப் படுகிறார்.

இது ஆரம்பம் மட்டுமே. ஆரம்பம் முதல் இறுதி வரை படம் அருமை என்றால், கடைசி பதினைந்து நிமிடங்கள் அதகளம். பொது இடத்தில் யாருக்கும் தெரியாமல் பெண்களை தீண்டும் காமுகர்களை அதே பொது இடத்தில் வைத்தே அறுக்க இந்த மூன்று பெண்களும் வெறிகொண்டு தேடுவதும், வெவ்வேறு சூழல்களில் வளர்ந்தவர்கள் என்பதால் இம்மூவருக்குமிடையே சில சமயம் பிரச்சனைகள் வருவதும், போலீஸில் மாட்டும் போது அவரவர் பாணியில் பதில் சொல்வதும் என்று படத்தில் பல காட்சிகள் மறக்க முடியாதவை.

எகிப்தில் வேலை இல்லாத, வறுமை கோட்டிற்கு கீழே பல ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் என்பது கனவில் மட்டும் தான். எனவே தங்களது இச்சைகளை இது போல பொது இடத்தில் தீர்த்துக்கொள்கிறார்கள் என்கிறார் படத்தின் இயக்குனர் - Mohamed Diab.

எகிப்தில் இருக்கும் அடக்குமுறை, வன்முறை, வறுமை, அறியாமை இவையெல்லாம் சேர்ந்து தான் பெண்களுக்கு எதிரான sexual harassment என்னும் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்பது இவரது வாதம்!

செபா கதாப்பாத்திரம் நடிக்க வேண்டிய கால்பந்துப் போட்டியை காட்சியப் படுத்திய போதே அந்த நடிகை கும்பல் வன்மத்திற்கு ஆளாக்கப்பட்டாள் என்று சொல்லும் இயக்குனர், நிலைமை இவ்வளவு கேவலமாக இருக்கும் போது இறையான்மை, கலாச்சாரம்என்று அரசாங்கம் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்.

மதம் சார்ந்த கட்டுப்பாடுகள் அதிகமிருக்கும் இந்நாடுகளில், வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் ஒவ்வொரு பெண்ணும் தான் என்ன உடை அணிகிறோம், அது மற்றவர்களை ஈர்க்கும்படி வெளிப்படையாகவோ இறுக்கமாகவோ இருக்கிறதா, பேருந்தில் போகலாமா அல்லது நடந்தே போய்விடலாமா, ஆள் நடமாட்டமில்லாத ரோடுகளில் தனியாகப் போகலாமா, இல்லை துணைக்கு யாரையேனும் அழைத்துக்கொண்டு செல்லலாமா என்றெல்லாம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்த பிறகு தான் வெளியே காலெடுத்து வைக்கிறார்கள். காரணம் ரோட்டில் கட்டவிழ்ந்து கிட்டவிழ்ந்து கிடக்கும் வக்கிர மிருகங்கள். கடும் விதிகள் நடப்பில் உள்ள இந்நாடுகளில் அவ்விதிகளே இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்குக் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ‘தன்னிடம் ஒருவன் கீழ்தரமாக நடந்து கொண்டான் என்று ஒரு பெண் வெளியில் சொன்னாலே அது அவளது குடும்பதிற்கும், நாட்டின் இறையான்மைக்கும் செய்யும் இழுக்கு என்றே இன்று வரை நம்பவைத்துக்கொண்டிருக்கின்றன சில நாடுகள்!
Noha Roushdy

22-10-2008 - எகிப்தின் முதல் sexual harassment வழக்கு, Noha Roushdy என்ற பெண்ணால் பதிவு செய்யப்பட்ட தினம். குற்றவாளியின் பெயர் - Sherief Gomaa Gibrial, கார் டிரைவர். பல்வேறு எதிர்ப்புகள், கண்டன்ங்கள், மிரட்டல்களுக்கிடையில் குற்றவாளிக்கு மூன்று வருட கடுங்காவல் தண்டனை வாங்கிகொடுத்திருக்கிறார் Noha. அதே 2008 ஆண்டு, Egyptian Center for Women's Rights என் அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பில் நடத்தி, எகிப்தில் இதுவரை 98% சதவிகித வெளிநாட்டுப் பெண்கள், 83% சதவிகித எகிப்துப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தியிருக்கிறது! இந்தப் படத்தில் நடித்த ஒரு நடிகையே படப்பிடிப்பின் போது கூட்டநெரிசலில் இது போன்றதொரு வன்முறைக்கு ஆளானார் என்கிறார் இயக்குனர்.

இறையான்மை, நாட்டின் பழம்பெருமை என்று பழையதைக் காட்டிக்காட்டியே இன்றும் பெண்களை அடிமைகளாகவும், கைபொம்மைகளாகவுமே நடத்திவருகின்றன் இந்நாடுகள். 2011 இல் எகிப்த் மன்னர் முபாரக்கிற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கூட, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். புரட்சி செய்தாலும் பெண்ணை சீண்டாமல் இருக்கமுடிவதில்லை ஆண்களால். புரட்சி சமயத்திலும் இப்படி நடந்திருக்கிறது என்பது வெளியே தெரியக்காரனமாக இருந்தது ஒரு அமெரிக்க ரிப்போர்ட்டரால். CBS நியுஸ் சேனல் ரிப்போட்டரான அவர் செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு அடித்து உதைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தப் படத்தை நான் முதலில் கண்டது பெங்களூரு திரைப்பட விழாவில். அப்போதே எனது வலைதளத்திலும் இந்தப் படத்தைப் பற்றி எழுதினேன். இப்போது 100-100 தொடருக்காக மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்த்தேன்.

படத்தின் Tagline
“Ask yourself three questions:
Have you been sexually harassed?
How many times?
How did you react?”

படத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்தப் படம் பார்க்க வேண்டிய ஒன்று. மொத்தத்தில் 678 என்னைப் பொறுத்த வரை

"நீட்டினால் அறுத்துவிடு!"

இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் நண்பர்களுக்குப் பரிந்துரையுங்கள். பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிருங்கள்.
**********************************
678 is about 3 Egyptian women of different age, social and financial status. They have one thing in common – They are all victims of Sexual Harrasment.

Fayza is a middle-class working woman. She travels in bus no: 678 to her workplace daily. That is where she gets victimized, daily.

Seba is a young wife married to a Doctor. She is gang-raped by a group of men during a football match celebration which convinces her husband to leave her.

Nelly is a young stanup comedian. One night when she gets out of a taxi she is brutally harassed by the taxi driver. She goes to the Police for filing a complaint but they refuse to file a sexual harassment case

How these women meet and how they deal with their problems forms the rest of the story.

The film’s Tagline says,
“Ask yourself three questions:
Have you been sexually harassed?
How many times?
How did you react?”

This is an important film from Egypt where violence against women is a its peak. The first sexual harassment was filed only 22-10-2008 before which it was reported that 98% of foreign and 83% Egyptian women are sexually victimized in Egypt.
Dir. Mohamed Diab

Mohamed Diab – the Director has a clear view of the issue and accuses the government for caring more about Religious beliefs than women safety.

Other Recommended Egyot movies:
    1) The Square (Documentary) – This is a very important award winning documentary which      gives an iside view of the 2001 People’s revolution againgt Hosni Mubarak
     2) Asmaa (2011)

Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching 

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...