#100நாடுகள்100சினிமா #12. BOSNIA - FUSE (aka) Gori Vatra (2004)

7:25:00 AM

Pjer Zalica | Bosnia and Herzegovnia | 2004 | 105 min.

(*** Engligh write-up & Download Link given below ***)


இதுவும் ஒரு ஜாலியான படம் தான். யுகோஸ்லாவிய யுத்தம் முடிந்து 2 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறிய போஸ்னிய ஊரில் நடக்கும் 'பாமா விஜயம்' டைப் கதை.

Tesanj - போஸ்னிய செர்பிய எல்லையில் இருக்கும் ஒரு சிறிய ஊர். போர் முடிந்து 2 வருடங்கள் ஆகியிருந்தாலும் இன்னும் எதுவும் கட்டுக்குள் வராத சூழல். வறுமை, ஊழல், போதை மருத்து, விபச்சாரம், ஆயுதக்கடத்தல் / பதுக்கல் என்று இல்லாத அக்கிரமங்கள் எல்லாம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. குற்றங்கள் அனைத்திலும் அங்குள்ள அரசு அதிகாரிகளுக்கும் பங்கு உண்டு. எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் போது வருகிறது ஒரு அறிவிப்பு – ‘அமெரிக்க அதிபர் க்ளிண்டன் இந்த ஊருக்கு வரலாம்!’ 

திடீர் அறிவிப்பால் ஊரே பரபரப்பாகிறது. அமெரிக்க அரசு அதிகாரிகள் ஊருக்குள் வந்து தங்களது நாட்டாமையை செய்யத் தொடங்க, உள்ளுக்காரர்கள் பாடு பெரும்பாடாகிறது. உள்ளது அனைத்தையும் மறைத்து அதிபர் முன் நல்ல பிள்ளைகளாக நடிக்க வேண்டிய கட்டாயம். போதாதகுறைக்கு பக்கத்து ஊர் செர்பியர்களுடன் பகை மறந்து நட்புடன் இருப்பதாக வேறு காட்டிக்கொள்ள வேண்டும். என்ன நடந்தது? க்ளிண்டன் வந்தாரா இல்லையா

தனது மூத்த மகனை செர்பியாவுடனான போரில் தொலைத்துவிட்டு இப்போது அவனது ஆவியுடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு தந்தை, தீயணைப்பு வீரனான அவரது இளையமகன், அவனது காதலி, ஊர்த்தலைவர், போலீஸ் உயரதிகாரி, ஒரு உள்ளூர் தாதா, பக்கத்து ஊர் தீயணைப்பு வீரர் இருவர், ஒரு பாடகி - இவர்கள் தான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள். அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிளைக்கதை உண்டு. அந்தக் கதைகளுக்கு பின்னால் போரினால் ஏற்பட்ட இன்னும் ஆறாத வடுக்களின் தடம் பொதுவானதாக இருக்கிறது. க்ளிண்டன் வருகை இவர்களது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்தது என்பதை அழகாக நூல் பிடித்தார் போல் சொல்லி கிளைமாக்ஸில் அனைவருக்கும் ஒரு முடிவை (finishing) கொடுத்திருக்கிறார்கள்.

'பாமா விஜயம்' டைப் கதைகள் உலகளவில் பிரபலமான வகைமையாக இருக்கிறது. Albania நாட்டின் Slogans (2001) படமும் கிட்டத்தட்ட இதே கதை தானே. என்றோ வரப்போகும் தலைவர்கள் கண்ணில் படவேண்டும் என்பதற்காக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை விட்டு மலைச்சரிவில் கோஷங்களை டிஸ்ப்ளே செய்யச் சொல்வார்கள். Pope's Toilet (2007) போப் ஆண்டவர் வருகைக்காக நடக்கும் அலப்பறைகளைச் சொல்லும் Uruguay நாட்டுப் படம். 'அம்மா' வருகையை வைத்து தமிழில் அருமையான படங்கள் எடுக்கலாம் :)

இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது எங்கள் பள்ளியில் D.E.O வருகைக்காக செய்யப்படும் அலப்பறைகள் நியாகத்திற்கு வந்தது. பத்து பேரை வைத்து சைக்கிள் ஸ்டாண்டை நேர்படுத்தி, ஒவ்வொரு கிளாஸிலும் பளிச் என்று பிளாக் போர்டை தண்ணீர் ஊற்றித் துடைத்து, கலர் சாக்பீஸ் கொண்டு அலங்காரங்கள் எல்லம் செய்து, அனைவரையும் டை, பேட்ஜ், பிளாக் ஷீ சகிதம் அது சனிக்கிழமையாக இருந்தாலும் ஃபுல் யூனிபார்மில் வரவழைத்து, அவசரவசரமாக இருக்குற நோட்டு புக்குகளுக்கெல்லாம் புதிய அட்டை போட வைத்து, நாள் முழுக்க வெளியே ஒன்னுக்கு போகக் கூட விடாமல் பெஞ்சில் நிமிர்ந்தே உட்கார வைத்து - ஒரு சாதாரண D.E.O வருகைக்கே இல்லாத அலப்பறைகள் அரங்கேறும் பொழுது, போர் சமயம் வைக்கப்பட்ட இன்னும் அகற்றப்படாத கன்னிவெடிகள் அவ்வபோது வெடித்துக்கொண்டிருக்கும் மோசமான சூழலில் இருக்கும் ஏழை நாட்டிற்கு அமெரிக்கப் பிரதமரே வரப் போகிறார் என்னும் பொழுது எவ்வளவு அலப்பறைகள் இருக்கும். அத்தனையையும் படத்தில் பக்காவாகக் காட்சியப்படுத்தியிருக்கிறார்கள், காமெடியாக

வசனங்கள் படத்தின் ஹைலைட். ஒவ்வொன்றிலும் நக்கலும் நையாண்டியும் தெறிக்கிறது. க்ளிண்டன் வரும் நாள் நெருங்க நெருங்க அந்த டென்ஷன் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. கிளைமாக்ஸ் முடிவு சூப்பர்.

அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.

யுகோஸ்லாவிய யுத்தத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளhttps://goo.gl/pQS2tW

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தை பரிந்துரை செய்யுங்கள்

****************

Movie is set 2 years after the civil war in Tesanj, a small town in Bosnia where each and everyone is involved in some illegal activity which involves corruption, drugs, prostitution and organized crime. One fine day, Its announced that the U.S President Bill Clinton will pay a visit to the town. American bureaucrats arrive to supervise the preparations and the laugh riot begins.

With wonderful characters and their back stories this movie is a must watch. The climax is worth the hype and the 'finishing' given to the main characters is highly convincing.

Overall, its a must watch film.
Dir. Pjer Zalica Hit Like & Share. Share your suggestions in comments. Happy movie watching :)   

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...