101 ஆவது பதிவு...

5:34:00 AM


 100 ஆவத பதிவு என்று பெருமையாகப் போட்டு பெரும் பிரச்சனையை (நெனசுக்கவேண்டியதுதான்) கிளப்பி விட்டேன். அது அடங்குவதற்கும் பல நாட்கள் ஆனது (அப்படியா?). பலர் தங்களது கருத்துகளை தெளிவாகப் பதிவு செய்தனர். அதன் மூலம் நானும் நிறையவே தெரிந்து கொண்டேன். அடுத்த பதிவு எழுத ஒரு மாதத்திற்கு மேல் ஆக்கிவிட்டேன். அதற்கு முக்கிய காரணம், அவ்வபோது வந்து எட்டிப் பார்த்துக் (ஆக்சுவலா, முட்டிப் பார்த்துக்) கொண்டிருந்த எனது முதுகு வலி, திடீரென்று விஸ்வரூபம் எடுத்ததால்தான். கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களின் (mime) போது இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முறை தாவி விழுந்து எழுந்தது, எங்களது முதல் இரண்டு குறும்படங்களில் நடித்த போது, காட்சி யதார்த்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக என்னைவிட பலமடங்கு கடோத்கஜத்தனமாக இருப்பவர்களிடம் சலிக்காமல் அடி வாங்கியது, பின் பிறந்த நாள், கல்லூரி கடைசி நாட்கள் என்ற பெயரில் என் மேல் விழுந்த சில பாச மொத்தல்கள் போன்ற இன்பியல் சம்பவங்கள், இப்போது பெரும் துன்பமாக அமைந்துவிட்டன. போதாத குறைக்கு .டி துறையில் வேலை வேறு. பெண்டு கொஞ்சம் கொஞ்சமாக கழண்டு உருண்டோடிவிட்டது. ஒரு மாதம் ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் ஃபுல் ரெஸ்ட். படுத்த படியே விட்டத்தை முறைத்துக் கொண்டிருந்ததால் இப்போது வலி வெகுவாகவே குறைந்திருக்கிறது. ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் அந்தக் காலக்கட்டத்தில் எனக்குப் பெரிதும் உதவியது வலையுலகம் தான். பல புதிய வலைதளங்களின் அறிமுகம் கிடைத்தது. பல நாட்களாக படிக்காமல் விட்டிருந்த பலரது வலைப்பக்கங்களை முழுவதுமாக படிக்க அதிக நேரம் கிடைத்தது. பதிவுலகிற்கு எனது நன்றி...

என்னடா ஒருத்தன் விடாம அது இதுனு எதையாவது கிறுக்கிக்கிட்டு இருந்தானே, அவன பல நாளா காணலியே என்னாச்சோ, ஏதாச்சோ னு ஒருத்தரும் கவலைப் பட்டாமாதிரி தெரியல. ஹும்ம்ம் பரவாயில்ல, நாங்களும் ஒரு நாள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ரவுடியாவோம், அன்னிக்கு வச்சிக்கிறோம்.

சரி விஷயத்திற்கு வருவோம். நான் ஓய்வில் இருந்த நாட்களில் பல படங்கள் பார்த்துவிட்டேன். அதையெல்லாம் வரிசையாக ஒவ்வொன்றாக எழுதுகிறேன்


 அதற்கு முன் இன்னொரு விஷயம். பல நாட்கள் கழித்து (எந்திரனுக்குப் பிறகு) தியேட்டரில் ஒரு படம் பார்த்தேன். அது 'மைனா'. ஆற்புதமான லொக்கேஷனில் (எங்க ஊர் 'போடி'க்கு மேலதான் இந்த குரங்கனி இருக்கு) யதார்த்தமான அதே சமயம் அழகான காதல் கதை. "விடியறவர எதும் புடிக்கல, விடுகத இது விடகிடைக்கல ஏனோ..." என்று திரையில் மைனாவைத் கையில் தூக்கிக் கொண்டு சுருளி சுற்றும் போது அவன் அடைந்த அதே சந்தோஷத்தை திரையரங்கில் உட்கார்ந்திருந்த நானும் அடைந்தேன். கடைசில் இருவரும் இறப்பது போலான க்ளிஷே ஃபார்மேட்டாக இருந்தாலும், அந்த புது மாப்பிள்ளை போலீஸ் கதாபாத்திரத்தை வைத்து படத்தை கம்ப்ளீட் செய்திருப்பது நிறைவு. கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன் 'மைனா' நல்ல படம்.

 ைனா பார்த்த் ிறகு மேலும் பல நாட்கள் கழித்து இன்று 'ரத்த சரித்திரம்'. படம் முழுவது தெறிக்கவிட்டிருக்கிறார்கள். இது போலான ஒரு பெர்ஃபெக்ட் கேங்ஸ்டர் படத்தை ராம் கோபால் வர்மாவை விட்டால் யாராலும் எடுக்க முடியாது. அவரது வழக்கமான மேக்ரோ கோணங்கள், டீடெய்ட் வயலென்ஸ், பார்ப்பவர்களுக்கு நன்றாக புரியும்படியாக ஸ்லோ மோஷனில் நடந்தேறும் ரத்தம் தெறிக்கும் கொலைகள், அமைதியாக தலையசத்து ஆணை பிறப்பிக்கும் தலைவன் என்று ஓரே அதகளம். படம் முழுவதும் ரத்தச் சகதியாக யாராவது, யாரையாவது அடித்துக் கொண்டும், வெட்டிக்கொண்டும், சுட்டுக்கொண்டும் இருக்கிறார்கள் என்ற போதும் நம் ஊரில் வரும் 'தாதா' படங்களுக்கெல்லாம் இது "தாத்தா" வாக அமையப்போவது நிச்சயம். இவ்வளவு ரத்தத்தை, இவ்வளவு அழகாக நான் இதுவரை பார்த்ததேயில்லை(RGV காட்டிய அந்த வன்முறையின் அழகியலை நான் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்). படம் ஓடும் ஓடாது என்பது பற்றி என் கருத்து யாருக்கும் பிரயோஜனமில்லாத ஒன்று. எனக்குப் பிடித்திருந்தது. அவ்வளவு தான்...

ான் போன வருடத்திலிருந்து பார்க்க ஆசைப்பட்ட படம் 'நந்தலாலா'. இங்கு பெங்களூரில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. எப்படியும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்ற முடிவோடு இருப்பதால், அமைதியாகக் காத்திருக்கிறேன்.

இன்னொரு முக்கியமான செய்தி, பெங்களூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பதிவர், நண்பர் ஹாலிவுட் பாஸ்கரனை (http://worldcinemafan.blogspot.com/) சந்தித்தேன். பல நாட்கள் நாயாக பேயாக நான் அலைந்து திரிந்து தேடிய படங்கள் அனைத்தும் அவர் வசமிருந்தன. அள்ளிக்கொண்டு வந்துவிட்டேன். போனது புத்தகக் கண்காட்சிக்கு ஆனால் வாங்கியது என்னவோ டிவிடி க்கள் தான். Z, Tin Drum, War Photographer, Before the Rains என்று அவர் சிபாரிசு செய்த படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். திரு பாஸ்கரன் அவர்களின் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

கூடிய விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்...    

You Might Also Like

2 comments

  1. நண்பரே,

    ஐ ஆம் பேக் போஸ்டர் அட்டகாசம் :) தொடருங்கள்..

    ReplyDelete
  2. ஐ ஆம் பேக் போஸ்டர் நெட்டில் சுட்டது நண்பரே :-)

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...