படத்தின் முன்கதைச் சுருக்கம் இதுதான்.புது மணத்தம்பதிகளான க்ளிஃப் (Cliff), சிட்னி (Cydney) ஜோடி தங்களது தேனிலவைக் கொண்டாட ஹவாய் அருகே ஒரு கடற்கரைக்கு கிளம்புகிறார்கள். இளமைக் குதூகலத்துடன் சுற்றி வரும் இவர்களிடம் வழியில் லிஃப்ட் கேட்டு வழிமறிக்கிறது க்ளியோ (Cleo) - கேல் (Kale) ஜோடி. அவர்களை எப்படியாவது தட்டிக்கழிக்க முயற்சி செய்கின்றனர் இவர்கள். கேல் சிட்னியிடம் பேசி சரி செய்வதற்குள் க்ளியோ கோபப்பட்டு க்ளிஃபை திட்டி விட்டு, கேலைக் கூட்டிக்கொண்டு போய்விடுகிறான். குறிப்பிட்ட தூரம் காரில் போய், பின் அங்கிருந்து ஒத்தையடி மலைப் பாதை (?) வழியாக அந்தக் கடற்கரைக்குப் பயணப்படுகிறார்கள். குறுகிய மலைப்பாதையைக் கடக்கும் போது இவர்களுக்கு நிக் (Nick) என்பவன் உதவுகிறான். முன்னாள் ராணுவ வீரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் நிக் தன் தலையில் டைட்டானியம் ப்ளேட் வைத்திருப்பதாகவும், தன்னை சாவு அவ்வளவு சீக்கிரம் நெருங்காது என்று முதல் சந்திப்பிலேயே கிலியைக் கொடுக்கிறான். அப்போது அந்தப் பக்கமாக வரும் ஒரு குடும்பம், ஊருக்குள் ஒரு சைக்கோ ஜோடி திரிவதாகவும், தனிமையில் கண்ணில் படும் ஜோடிகளைக் குறிவைத்து தாக்கிக் கொலை செய்வதாகவும் சொலிகிறார்கள். பரஸ்பரம் பயம் தொற்றிக்கொள்கிறது. வழியில் ஒரு அமைதியான, அழகான சிறு அருவியைக் கொண்ட தோட்டத்திற்குப் போகிறார்கள். அங்கு இவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள் நிக்கின் நீண்ட நாள் காதலியான கினா (Gina). தான் முன்னதாக ஒரு கசாப்புக் கடையில் வேலை செய்ததாகக் கூறுகிறாள். சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று காட்டுப் பகுதிக்குள் நிக்குடன், க்ளிஃப் போகும் போது முன்னதாக லிஃப்ட் கேட்டு வழிமறித்து, பின் கோபமாக விலகிச் சென்ற க்ளியோ-கேல் ஜோடி அங்கு இருப்பதைப் பார்க்கிறான். இவர்கள் எப்படி இங்கே என்ற குழப்பம்/சந்தேகம் ஏற்படுகிறது. அங்கிருந்து நகர்ந்து பின்னர் சிறிது நேரம் அருவியில் குளித்துவிட்டு கடற்கரையை வந்தடைகிறார்கள் இரண்டு ஜோடிகளும். கிட்டத்தட்ட பாதிக் கதையை சொல்லிவிட்டேன். மிச்சத்தைப் படத்தில் பார்க்கவும்.படத்தின் டெம்ப்போ கடைசி வரை குறையாமல் இருப்பதற்கு பெருமளவில் முயற்சி செய்திருக்கிறார்கள். அதேபோல் கேமரா கோணங்கள், காட்சியமைப்புகள்! மிகவும் நன்றாக படம் பிடித்திருக்கிறார்கள். சைக்கோ ஜோடியின் கடந்த காலத்தை கருப்பு-வெள்ளையில் காட்டுவது, டைட்டில் போடும் போதே தம்பதியின் முகத்தைக் காட்டாமல் அவர்கள் திருமணத்திற்கு வந்தவர்களை இவர்கள் ஹேண்டி கேமால் படம் பிடித்துக்கொண்டே போவது போல் கொண்டு செல்வது, இயற்கையின் உச்சக்கட்ட அழகைக்காட்டும் முயற்சியாக அருவியில் ஆடையில்லாமல் கினா படுத்திருப்பது, ஆண்கள் இருவரும் படகில் செல்லும் ஒரு குகையின் காட்சியமைப்பு என்று கண்களுக்குக் குளிர்ச்சி, அதிர்ச்சியான காட்சியமைப்புகள்.
படத்தில் மொத்தம் ஆறே கேரக்டர்கள் என்பதால் சைக்கோ ஜோடி யார் என்பதை முன்னமே நாம் யூகிக்க முடியும் சாத்தியம் அதிகமாகயிருக்கிறது. அதுவும் என்னைப் போன்ற த்ரில்லர் விரும்பிகள் படம் ஆரம்பித்த முப்பதாவது நிமிடத்திலேயே கண்டுபிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அமெச்சூர் காட்சிகள் ஆங்காங்கே வந்து காட்டிக் கொடுத்து விடுகிறது. மற்றபடி நேரம் கிடைக்கும் போது ஒரு த்ரில்லர் பார்க்கலாமே என்று தோன்றினால் இந்தப் படம் நல்ல சாய்ஸ் என்றே கூறுவேன்.
http://rapidshare.com/files/384347694/AXXO-APG_-_Jcberry526_-CW-.part1.rar
http://rapidshare.com/files/384347458/AXXO-APG_-_Jcberry526_-CW-.part2.rar
http://rapidshare.com/files/384347205/AXXO-APG_-_Jcberry526_-CW-.part3.rar
http://rapidshare.com/files/384345533/AXXO-APG_-_Jcberry526_-CW-.part4.rar