இந்த வாரக் குறும்படம் - வன்னி மௌஸ்

10:21:00 AM

"ஈழம்" - தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டேயிருக்கிறது. தலைவன் உயிர்த்தெழ நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருப்பவர்களும் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். அந்தப்பக்கம், ராவண வாரிசுகள் கிளிநொச்சியில் சிறப்பு பூஜையெல்லாம் நடத்துகிறதாம். நான் உங்களில் ஒருவன் என்று காட்டிக் கொள்வதற்கு, த்தூ... மொத்த உலகமும் தூங்கிக்கொண்டிருக்கிறது. அப்போதும் சரி இப்போதும் சரி, என்ன நடகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. எண்ணை வளமிருந்திருந்தாலவது இலங்கைக்கு அமெரிக்கா வந்திருக்கும். அங்கு இருப்பது கருப்புத் தமிழர்கள்தானே. வரமாட்டார்கள். ராஜீவ் காந்தி என்ற ஒரே ஒரு தனி மனிதனுக்கு, முன்னாள் பிரதமர் என்கிற ஒரே ஒரு தகுதி மட்டும் இருப்பதால் லட்சக்கனக்கான மக்களை பலியாவதை வேடிக்கை பார்க்கும் நிலையில் நம் நாடு இருக்கிறது. பார்த்துப் பார்த்து முகம் திருப்பிக்கொண்டது போதும். ரத்த ஆற்றை சாக்கடை என்று நினைத்து தாண்டிக்குதித்துச் சென்றது போதும். மீதமுள்ள சில ஆயிரம் பேரையாவது காப்பாற்ற முயற்சி செய்வோம். வெறுமனே புலம்பிக்கொண்டும், இப்படி எழுத்திக்கொண்டு மட்டுமே இருக்கும் என் கையாளாகாதனத்தை நினைத்து நினைத்து எரிச்சல் தான் வருகிறது.
எஞ்சியுள்ள புலம்பெயர் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை, ஏதாவது ஒரு வழியில் நியாயம் கிடைக்காதா என்று உலகத்திற்கு சொல்லிக்கொண்டே வருகிறார்கள். அப்படி ஒரு வழி தான் குறும்படம். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முன்னிருத்தி எத்தனையோ ஆவணப்படங்கள், குறும்படங்கள் வந்துள்ளது என்றாலும் "வன்னிமௌஸ் (Vanni Mouse)" என்கிற இந்தக் குறும்படத்தின் டிரைலரே மிரட்டுகிறது. நார்வே திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தயாரித்து, ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருப்பவர் 'தமிழியம்' சுபாஷ். இவர் ஏற்கனவே Can I Have a Dream என்ற குறும்படத்தை இயக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அரங்கில் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள வன்னிமௌஸ் குறும்படம், பல சர்வதேச குறும்பட விழாக்களில் விருதுகளைக் குவித்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று 11th International Short and Independent Film Festival (ISIFF) - Dhaka இல் Best Film Award in Fiction Category பரிசு.
இரண்டு சுண்டெலிகளின் பயணம் தான் வன்னிமௌஸ். இணைபிரியாத ஜோடியான இரண்டு சுண்டெலிகள், எதிர்பாராத விதமாக சிங்கள ராணுவம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் வவுனியாவிளுள்ள இன்டர்மெண்ட் கேம்ப் (Internment Camp - Manik Farm) வழியே செல்ல நேரிடுகிறது. கம்பிவேலிகளுக்கு அப்பால் ஆதாரம் ஏதுமில்லாமல் அப்பாவித் தமிழினம் அழிக்கப்படுவதை அவை காண்கின்றன. அங்கு நடப்பதை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரே சாட்சி, இந்த சுண்டெலிகளே. இவை இரண்டும் அந்த நரகத்திலிருந்து தப்பித்தனவா என்பது தான் கிளைமாக்ஸ்.

முழு படம் கிடைக்கவில்லை. கிடைத்தால் தயவு செய்து லிங்க் கொடுக்கவும். டிரைலரைக் காண இங்கே கிளிக்கவும்.

You Might Also Like

6 comments

 1. anpulla anandan-
  please find vanni mouse review at inioru.com
  http://inioru.com/?p=11750
  yamuna rajendran

  ReplyDelete
 2. நண்பரே,

  அந்த இரு எலிகளையும் அடைபட்டவர்கள் கொன்று தின்றிருப்பார்கள்.

  ReplyDelete
 3. @yamuna rajendran: வருகைக்கு நன்றி யமுனா. உங்கள் விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது.
  I have a Dream குறும்படம் மட்டுமே நெட்டில் கிடைத்தது. வன்னி எலி பார்க்க ஏதேனும் வழி இருக்கிறதா?

  @கனவுகளின் காதலன்: சரிதான் நண்பரே!

  ReplyDelete
 4. கதை மிக அருமையாக இருக்கிறது . . பொட்டில் அடித்தாற்போல் இப்படம் இருக்கும் என்பது எனது அனுமானம் . .அவசியம் பார்க்க வேண்டும் . . பை த வே, யமுனா ராஜேந்திரனை (உயிர்மை) இங்கு பார்ப்பது மகிழ்ச்சி . .

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி கருந்தேள்!

  ReplyDelete
 6. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...