இளைய திலகம் பிரபு ஒரு 'A-V-A-T-A-R' ?

7:06:00 AM

"I am the KING of the World" - 1992 ஆம் ஆண்டு டைட்டானிக் படம் 11 ஆஸ்கர்களைக் குவித்தவுடன் ஜேம்ஸ் கேமரூன் சொன்ன வாக்கியங்கள் இவை. விமர்சகர்கள், பத்திரிக்கைககள், தொலைகாட்சிகள் என்று அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள், உலகம் முழுவதும் முதல் வாரத்திலேயே 230 மில்லியன் வசூல் என்று சந்தேகமில்லாமல் ஹாலிவுட் வரலாற்றின் அல்டிமேட் ஹிட் ---- >> A-V-A-T-A-R. சரியாக 12 வருடங்கள் கழித்து, தான் தான் மீண்டும் 'கிங்' என்று நிரூபித்து விட்டார் கேமரூன். தான் நினைத்ததைத் திரையில் கொண்டு வரும் அளவிற்கு டெக்னாலாஜி இன்னும் வளரவில்லையென்பதால் பொறுமையாகக் காத்திருந்து மாபெரும் வெற்றியடைந்த இந்த மனிதரின் உழைப்பு, ஈடுபாடு, சினிமா மீது கொண்ட காதலுக்கு இதெல்லாம் ரொம்பவும் சாதாரணம். சரி இதற்கும் நம் இளைய திலகம் பிரபுவிற்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறதே...

அவதாரின் கதை என்ன? - பண்டோரா என்னும் தனி கிரகத்தில் வாழும் 'வி என்னும் ஆதிவாசி இனத்தை(?) அங்கிருந்து நைசாகப் பேசி வெளியேற்ற அவர்களைப் போலவே தோற்றம் மாற்றப்பட்ட ஒருவன் தலைமை ஏற்றுச் செல்கிறான். அங்கு சென்றதும் 'வி இனத்தவரின் ஒற்றுமை, மனிதர்களின் வஞ்சக எண்ணம் ஆகிவை மனதைப் போட்டுக் குழப்ப, இடையில் காதலும் வர, தன்னை அனுப்பிய மனிதர்களுக்கு எதிராகத் திரும்புகிறான், 'வி இன மக்களின் உதவியுடன்.

இந்தக் கதையை எங்கோ கேட்ட மாதிரி இல்லை? அடிக்கடி கே டி.வியில் பார்த்த மாதிரி இல்லை? சரி நியாபகத்திற்கு வரவில்லை என்றால் இப்படி கம்பேர் செய்து பாருங்கள்

1) பண்டோரா கிரகத்திற்கு பதில் ஒரு காலனி

2) வித்யாச 'வி இனத்திற்கு பதிலாக பெரும்பாலும் அடித்தட்டு மக்களும், ரவுடிக்கும்பலுமாக இருக்கும் அந்தக் காலனி மக்கள்

3) மனிதர்களுக்கு பதில் அந்தக் காலனியை விலைக்கு வாங்கி அந்த மக்களை வெளியேற்றத் துடிக்கும் கம்பெனிக்காரர்கள்

4) நேத்ரிக்கு பதிலாக வினிதா

5) மக்களோடு மக்களாகக் கலந்து அவர்களை வெளியெற்றும் பொறுப்புடைய ஹீரோ ஜேக் பதிலாக 'ஐயர்' பிரபு

கரெக்ட், அந்தப் படம் வியட்னாம் காலனி. யோசித்துப் பார்த்தால், AVATAR படத்தில், பெயரில் ஆரம்பித்து, நம் ஊர் கிருஷ்ணன் போல் நீல நிற உடல், தலையில் நாமம் அனுமன் போல் நீண்ட வால் என்று 'வி களின் தோற்றம் வரை நிறைய இடங்களில் இந்தியத்தனம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் கதையிலும் இந்தியத்தனம் இருப்பதைக் கண்டதும் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை? விழுந்து விழுந்து சிரிக்கத்தான் முடியும்...

AVATAR - வியட்னாம் காலனி - ஒரு கம்பேரிசன் (ஜாலி இல்ல சீரியஸ்)

காட்சி 1:ஆரம்பத்தில் பிரபுவின் 'திறமை' மேல் கம்பெனிகாரர்களுக்கு சந்தேகம் வரும், ஆனால் பின்னட்களில் பிரபு பெர்பாமன்ஸில் பட்டையைக் கிளப்புவார். அதே போல், அவதாரில் ஆரம்பத்தில் கால்களை இழந்த ஹீரோவைப் பார்த்து நக்கல் விடும் 'மனிதர்கள்', பின் நாட்களில் சேம் பெர்பாமன்ஸ் ஃபக்டரில் 'ம்ம்ம் நீ பெரிய ஆளுதான்' என்று பாராடுவார்கள்.

காட்சி 2:

பிரபு காலனிக்குள் என்ட்ரி கொடுக்கும் போது, ஆட்டோக்காரன் ஒருவன் மீட்டருக்கு மேல் பணம் கேட்டுத் தகராறு செய்ய பிரபு, நான் இதுக்கெல்லாம் பயப்படமாட்டேனாக்கும் என்று சவுண்ட் விட்டுக்கொண்டிருக்கும் போது, திடீரென்று சுவிட்ச் ஆப் செய்த மாதிரி ஆட்டோக்காரன் ஆட்டோவை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆக பிரபு தன்னைப் பார்த்து தான் அவன் பயந்து ஓடுகிறான் என்று நினைத்து வீரப் பார்வை பார்ப்பார். திரும்பிப் பார்த்தால், பின்னால் அந்த காலனியின் 'பெரிய' தாதா நின்று கொண்டிருப்பான். அவதாரிலும் இதே போல் ஒரு சீன் உண்டு. பண்டோராவில் என்ட்ரி கொடுக்கும் ஜேக், காண்டாமிருகம் போன்ற விலங்கிடம் 'ஏய் வந்து பாரு, நாங்கெல்லாம் யாரு' என்று ரவுசு செய்ய, அதுவும் பயந்து ஓடும், திரும்பிப் பார்த்தால், மிகப்பெரிய சிங்கம் போல ஒரு மிருகம் நின்று கொண்டிருக்கும்.

காட்சி 3:காலனிக்குள் வந்த பிறகு எவரோடும் பிரபுவிற்கு செட் ஆகாது. 'ஜுஜுலிப்பா' என்று வினிதா தான் ஆசையாய் ஆதரவு கொடுப்பார். அதே போல் தான் ஜேக் வந்தது யாருக்குமே பிடிக்காது, நேத்ரி மட்டும் ஆதரவு கொடுப்பார். பின்னாட்களில் இவன் டகால்ட்டி, உட்டாலக்கடி வேலை செய்யத்தான் நம் கூட்டத்தோடு கலந்திருக்கிறான் என்று தெரியும் போதும், அங்கு வினிதா பிரபுவிற்கு ஆதரவு, இங்கு நேத்ரி ஜேகிக்கிற்கு ஆதரவு.

காட்சி 4:

கிளைமாக்ஸில் உங்களுக்கு இனிமேல் வேலை செய்ய முடியாது என்று பிரபு கையை விரித்த பிறகு, கம்பெனிக்காரர்கள் காலனிக்குள்ளே வருவார்கள். அதேபோல் இவர்களுக்கு நான் ஒன்னும் உதவப்போவது இல்லை என்று ஜேக் தன் வீடியோவில் சொல்வதக் கண்டுபிடித்த பிறகு, 'மனிதர்கள்' பண்டோராவிற்குள் வருவார்கள்.

இப்படி ஏகப்பட்ட காட்சிகள் உண்டு. அதற்காக 'அவதார்' 'வியட்னாம் காலனி' படத்தின் தழுவல் என்று நான் சொல்லவில்லை. கேமரூனின் திறமைக்கு இதே அவதாரையோ, அல்லது இதற்கு முந்தய டைட்டானிகியோ மறுபடியும் ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகு இவரே 'ரீமேக்கினாலும்' அதன் பழைய சாயல்கள் இருக்காது என்பது தான் உண்மை. இது ஜஸ்ட் ஒரு கம்பெரிஸன் தான். மோகன்லால் நடித்து இதே பெயரில் மளையாலத்தில் சித்திக் இயக்கி 1993 ல் வெளிவந்த படத்தை தான் 1994 ல் சந்தான பாரதி பிரபுவை வைத்து இயக்கினார். அது தான் காப்பி, இது இல்லை.(டிஸ்க்: ஒருவேளை கேமரூன் வியட்னாம் காலனி பாத்திருப்பாரோ? இருக்கலாம்...)

அவதார் படம் வெளிவந்து பல நாட்கள் கழித்து ஏன் இந்த கம்பேரிசனை எழுத வேண்டும், படம் பார்த்தவுடனேயே எழுதியிருக்கக்கூடாதா என்று நீங்கள் கேட்க்கலாம். நான் படம் பார்த்து விட்டு படம் பார்க்காத சிலரிடம் இதைச் சொல்ல, அவர்களுக்கு படம் பார்க்கும் போது 'வியட்னாம் காலனி' நினைவிற்கு வந்ததாகவும், கதையை பெரிதாக ரசிக்க முடியவில்லை என்றும் கூறினர். ப்போது தான் நான் செய்த தவறு எனக்குப் புரிந்தது. அவர்களது எதிர்பார்ப்பைக் குறைத்து அவர்களை படத்தை ரசிக்க விடாமல் செய்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. படம் பார்த்து விட்டு அவர்களே 'வியட்னாம் காலனி' தெரிவதைக் கண்டுபிடித்திருந்தால் அது வேறு விஷயம்.இதே தவறு தான் இப்போது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கும் நடந்து கொண்டிருக்கிறது. படம் பார்த்தவர்கள் படம் பார்க்காதவர்களுக்கு கொடுக்கும் 'மிக்சட் ரெவியு' அவர்களை ுழப்புகிறது என்பது என் கருத்து. அடுத்தவர்களது ரசனையில் மூக்கை நீட்டுவது, தலையை நுழைப்பது போன்றவை மட்டமான செயல்கள் என்பதும் எனது கருத்து. உங்களுக்குப் படம் பிடிக்கவில்லை, இதே காட்களை நீங்கள் ஏற்கனவே வேறு சில படங்களில் பார்த்திருக்கிறீர்கள், இதைவிட பிறமாதமான கிராபிக்ஸ் எல்லாம் பலப்பல பார்த்தாச்சு என்று படம் உங்களுக்குப் பிடிக்காமல் போவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருக்கும். அதை விமர்சனம், கருத்து, கமெண்ட் என்று மற்றவர்களுக்குள் திணிக்கக் கூடாது. 'நீ பார்க்கப் போகும் படம் சரியில்லை. போகாதே, பணத்தை விரயம் செய்யாதே, திருட்டு வீசிடிக்குதான் இது லாயக்கு' என்று சொல்வதற்கும் உங்கள் 'விமர்சனங்களுக்கும்' பெரிய வித்யாசமில்லை. 'தாராளமாகப் பார், நல்லாத்தான் இருக்கு' என்று சொல்வதனால் உங்களிடம் படம் எப்படி என்று கேட்பவர்களுக்கு 32 கோடி விரயம் ஆகப்போவதில்லை. 100ரூ? 200ரூ அதிகபட்சம். ஆகிவிட்டுப் போகட்டுமே. நீங்கள் ஒரு 10 பேரிடம் சொல்ல, அவர்கள் ஆளுக்கு ஒரு 10 பேரிடம் சொல்ல இப்படி பத்து பத்து பத்து என்று யாரும் படம் பார்க்கப் போகாமல் தியேட்டரை விட்டே படம் ஓடிவிடும். ஏற்கனவே நாம் அன்பே சிவம், நான் கடவுள் இன்னும் பலப்படங்களை நாம் இழந்து விட்டோம். அதில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்றாகிவிடும் ஆபத்து இருக்கிறது. படம் பார்க்காவதர்கள் தயவு செய்து படம் பார்த்தவர்களிடம் 'கமெண்ட்' கேட்க்காதீர்கள். படம் பார்ப்பதென்பது ஒவ்வொருவரது ரசனை சம்பந்தப்பட்டது. உங்கள் ரசனையை யாரோ ஒருவரிடம் 'அடகு' வைக்காதீர்கள்...ப்ளீஸ்.


ரொம்ப சீரியஸா பேசிட்டேனோ? ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வரும் விமர்சனங்கள் தான் காரணம். நல்ல படம் ஓடாமல் போய்விடுமோ என்கிற வருத்தம் தான். இந்தப் படம் ஓடவில்லை என்றால், கமல் 'மருதநாயகம்' படத்தை தொடர்வதற்கு கண்டிப்பாக யோசிப்பார். தலைவர் அந்த மாதிரி பயப்படுபவர் இல்லையென்றாலும், சான்ஸஸ் ஆர் தேர்... 'ஹே ராம்' போல ஒரு 'ஹெவியான' சப்ஜெக்ட் அடுத்து வரவில்லை. 'தசாவதாரம்?' என்று கேட்க்காதீர்கள். அது 'ஹெவி' சப்ஜெக்ட் இல்லை... சரி, அத விடுங்க. டென்ஷன் தான் எகிறுது. ஒரு நல்ல தமிழ் படம் வெளியாகி இனி ஒரு பத்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு தான் நான் விமர்சனம் எழுதப் போகிறேன். பிரதீப் சொல்லிடான்டா... படம் சரியில்லை. போக வேண்டாம் என்று இனி எவரும் சொல்ல மாட்டார்கள். அது மட்டும் சத்தியம். சரி, அவதாருக்கே திரும்பி வருவோம். கேமரூன் இளைய தளபதி டாக்டர் விஜயை வைத்து அவதாரையே ரீமேக்கினால் எப்படி இருக்கும்... இப்படி இருக்கும்....

You Might Also Like

4 comments

  1. இந்தப் பதிவும், Old Boy-யும் ரீடரில் அப்டேட் ஆகலை பிரதீப். என்னன்னு பார்க்கறீங்களா??
    ---

    இந்தப் பதிவில் ஆயிரத்தில் ஒருவனு-க்கு உங்களோட சப்போர்ட்டை, அல்லது அதை சொன்ன விதத்தை ஏத்துக்க முடியலை. கிட்டத்தட்ட இதே ரேஞ்சில்தான்.. எல்லோரும் எழுதறாங்க.

    எனக்குப் பேராண்மை பார்த்தப்ப (2-3 நாள் முன்னாடி) ஜனநாதன் மேல இருந்த மரியாதை போய்டுச்சி. அந்தப் படம் வெற்றிங்கறது இன்னும் கொடுமை.

    ஆ.ஒ.. டிவிடி வரும் வரை எனக்கு பார்க்க முடியாது. அதனால் படம் எப்படின்னு தெரியாம தொடர்ந்து பேசுவது நல்லாயில்லை.

    இருந்தாலும்... ‘நல்லாயில்லை’-ன்னு ஒரு படத்தைப் பத்தி சொன்னா... அது ரசனை தலையீடுங்கறீங்க. சரி.....

    அப்ப.. ‘நல்லாயிருக்கு’-ன்னு சொல்வது என்ன??
    --

    மத்தவங்க இப்படி எழுதினப்ப.. அவங்ககிட்ட சொல்ல விரும்பலை. உங்களிடம் இருந்து இப்படி ஒரு கருத்து வந்தவுடன் சொல்லாம இருக்க முடியலை. Didn't mean to hurt! :)

    ReplyDelete
  2. வாங்க தல...
    இந்த அப்டேட் பிரச்சன பல நாளா இருக்கு... என்னன்னே தெரியல.

    பேராண்மை படத்துல நிறைய ஓட்டை இருக்கு. ஒத்துக்குறேன். இந்த மாதிரி படம் சான்சே இல்லைனு நான் ஒரேடியா அதை தூக்கிவச்சுக் கொண்டாடல. அந்தப் படத்திற்கான எனது விமர்சனத்தைப் பார்த்தா உங்களுக்குத் தெரியும். படத்தின் இரண்டாம் பாதி ஒரு நல்ல முயற்சி. அதைதான் பாராட்டனும்னு சொல்றேன்.

    ஆயிரத்தில் ஒருவனுக்கு வருவோம். ஒரு வித்யாசமான முயற்சிக்கு எதற்கு இத்தனை விமர்சனங்கள்? கார்த்திக்கு 3 வருடம் வேஸ்ட், பார்த்திபன் கேரக்டர் வேஸ்ட், ரீமா சென் வேஸ்ட், ஜி.வி வேஸ்ட் என்று ஆளாளுக்கு இப்படி எல்லாரையும் வேஸ்ட் வேஸ்ட்னு சொல்லிகிட்டு இருந்தா, இந்த மாதிரி படமெல்லாம் எப்ப தான் வர்றது?

    ஹாலிவுட் படத்தோட கம்பேர் பண்ணிப்பண்ணியே நம்மாளுகல ஒன்னும் இல்லாம பண்ணிடுராங்க. ஒரு ஆண்டிப்பட்டி பெருசு கிட்ட 'ருத்ரம்' சூப்பரா இல்ல 'ஆ.ஒ' வானு கேட்டா அவன் ருத்ரம்னு சொல்லுவான். அவனுக்கு ஹாலிவுட் என்ன, பாலிவுட் என்ன, எல்லாமே ஒரே சினிமா தான், கம்பேரிசனே கிடையாது இதே கேள்விய நம்மள மாதிரி ஆள்கள்கிட்ட கேட்கும் போது நாம என்ன சொல்லனும்? நமக்குத் தெரிய வேணாமா?
    பத்து பேரில் ஆறு பேருக்கு படம் பிடிக்காமல் போகலாமென்றே வைத்துக் கொண்டாலும் மிச்சம் நான்கு பேர் இருக்கிறார்களே; அவர்களையும் இந்த மாதிரி விமர்சனங்களால் தியேட்டருக்குப் போகவிடாமல் திருட்டு வி.சி.டி க்குள் அடைத்துவிடுவார்கள் போலிருக்கிறதே. அதுதான் வருத்தம். இப்படி சின்னச் சின்னச் முயற்சிகள் வரும் போதும் நாம் ஹாலிவுட்டை வைத்து கம்பேர் பண்ணா அடுத்தடுத்து பல வேட்டைக்காரன் தான் வரும். "நல்லா பண்ணிருக்கான். டைம் இருந்த போய் பாருனு" விமர்சனம் பண்ணலாமே. எந்த சினிமா யாருக்குப் பிடிக்கும்னு சொல்ல முடியாது. அதைவிட்டுட்டு "பணம் வேஸ்ட்,சி.ஜி மட்டம், ஆங்கிலப்படக் காப்பி" இப்படி எதையாவது சொன்னா அடுத்த அவனது நல்ல முயற்சி பாதிக்கப்படுமே... ஆங்கிலத்தில் Troy, Gladiator, Troy, Apocalypto என்று இந்த மாதிரிப் படம் எத்தனையோ இருக்கிறது. நமக்கு? மருதனாயகம்? மர்மயோகி?... 'அவதாரம்'- இதே போன்றதொரு கதைகளத்தில் நாசர் நடித்த படம். எத்தனை பேர் பார்த்திருப்போம்?

    என்னதான் மாமியார் வீட்டில் தங்கத்தட்டில் சாப்பாடு போட்டு பஞ்சு மெத்தையில் புரள விட்டாலும், தாய்மடியோடு அதை கம்பேர் செய்தால் ஈடாகுமா? இங்க நான் மாமியார் வீடு என்று சொல்வது ஹாலிவுட்டை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை...

    யார் எங்கிட்ட கேட்டாலும் ஒரே பதிலைத்தான் சொல்லிகிட்டு இருக்கேன். ஆ.ஒ தமிழில் இதுவரை வராத ஒரு பெரிய முயற்சி. இந்தப் படத்தின் வெற்றி இன்னும் பல நல்ல படங்களை தமிழில் வர்றதுக்கு ஒரு நல்ல ஆரம்பம்...

    அக்கறை எடுத்து கேட்டதுக்கு ரொம்ப நன்றி.ஓவரா பேசியிருந்தா மன்னிச்சிக்கோங்க... ஆயிரத்தில் ஒருவனை பற்றி ஒரு டீடெயில் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன். படிச்சிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க..

    ReplyDelete
  3. neenga solradhum sari thaan Pradeep...

    ReplyDelete

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...