மறைந்த இயக்குனர் ஜீவாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது படங்களில் ஒரு உயிரோட்டம் இருக்கும். தனது முதல் படமான 12 B யிலேயே multiple lives என்னும் ஒரு வித்யாசமான திரைக்கதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப் படுத்தினார் (Sliding Doors என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல் தான் 12 B என்றாலும் தமிழுக்கு அது புதுசு. வழக்கம் போல அந்த நல்லப் படமும் இங்கு ஓட வில்லை ) . அப்படி 12 B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் என்று அவரது நான்கு படங்களிலும் எதாவது ஒரு விஷயம்.. மற்ற படங்களில் இல்லாத ஒரு விஷயம் இருக்கும். அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை . இந்தப் பதிவு மறைந்த அந்த நல்ல இயக்குனருக்கு அர்ப்பணம்.
இப்படிஎல்லாம் கூட திரைகதை அமைக்க முடியுமா என்று நான் மலைத்துப் போனபடங்கள் ஏராளம் உண்டு...நமக்கெல்லாம் அப்படி யோசிக்கக் கூட முடியாது. அப்படி நான் மலைத்துப் போன படங்களில் ஒன்று Perfume - The Story of a Murderer. அந்தப் படத்தின் இயக்குனர் Tom Tykwer. ஆக எனக்குப் பிடித்த மற்றுமொரு இயக்குனரைப் பற்றி இனி ...
Tom Tykwer
பிரபல ஜெர்மானிய இயக்குனரான இவர் பிறந்தது, 23 மே, 1965 . பிறந்த ஊர், வுப்பெர்டல், ஜெர்மனி. சினிமா மீது இவருக்கு ஆசை வந்து காமெராவைக் கையில் எடுத்த போது இவருக்கு வயது 11. அப்படி இப்படி ஏதேதோ செய்து ஏதாவது ஒரு பிலிம் ஸ்கூலில் சேர்ந்து விடலாம் என்று நினைத்தவருக்கு சினிமா கற்றுக் கொள்ள கிடைத்த வாய்ப்போ வேறு விதத்தில் தான். தியேட்டர் ஆப்பரேட்டராக ஆரம்பித்து படிப்படியாக 22 வயதில் 'மூவிமெண்டோ சினிமா' என்னும் ஜெர்மனியின் மதிக்கத்தக்க சினிமா சங்கம் ஒன்றிக்கு 'ப்ரோக்ராமேர்' ஆக உயர்ந்தார்.
1990 இல் Because என்ற குறும்படத்தின் மூலம், தன்னை ஒரு படைப்பாளியாக அறிமுகம் செய்து கொண்டார். 1993 இல் Deadly Maria என்னும் படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குனராக அறிமுகம் செய்து கொண்டார். 1998 Run Lola Run படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றி இயக்குனராக நிரூபித்தார். இவரது படங்கள் சில...
Run Lola Run (1998)
தனது காதலனைக் காப்பாற்ற 20 நிமிடத்தில் ஜெர்மன் பணம் 100000 ரூபாய் வேண்டி ஓடும் ஒரு பெண்ணின் கதை தான் Run Lola Run. இந்தச் சாதாரணக் கதையை multiple lives கான்செப்டில் அற்புதமாகச் சொல்லியிருப்பார்கள். தன் தந்தையிடம் பொய் அவள் பணம் கேட்பாள். 1) அவர் கொடுக்க மறுக்கிறார், 2) அவரை மிரட்டி பணம் பறிக்கிறாள், 3) வேறு வழியில் பணம் சேர்க்கிறாள். (12 B யில் வருமே, பஸ் பிடித்தால் ஒரு கதை, பஸ் பிடிக்காவிட்டால் ஒரு கதை என்று. அதுபோலத்தான்)
12 B யில் காட்டியது போல் இரண்டையும் (இரண்டு கதையையும்) ஒரே சமயத்தில் காட்டாமல் இதில் மூன்றையும் தனித் தனியாகக் காட்டியிருப்பார்கள். தேவையான இடங்களில் அழகாக 2D அனிமேஷன் மூலம் காட்டியதும் இன்னொரு சிறப்பு.
Perfume - The Story of a Murderer (2006)
18 ஆம் நூற்றாண்டு பிரான்ஸ் பின்னணியில், நுகர் சக்தி அதிகம் கொண்ட ஒருவானின் கதை. Art Direction என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள பார்க்க வேண்டிய படம். இந்தப் படத்தைப் பற்றி விலாவாரியாக நான் ஏற்க்கனவே எழுதியுள்ளேன்.
அதைப் படிக்க இங்கே கிளிக்கவும் .
The International (2009)
தீவிரவாதிகளுக்கு பல வழிகளில் உதவும் ஒரு வங்கியைப் பற்றி துப்பு கண்டு பிடிக்க வரும் ஒரு இன்டெர்-போல் ஆபிசரைப் பற்றியக் கதை. (கேட்க நம்ம ஊர் கதை மாதிரியே இருக்குல்ல?). தனக்கு உதவும் அனைவரும் அடுத்தடுத்து கொல்லப்பட, நாயகன் (clive owen) போராடி குற்றவாளியைக் கண்டு பிடிப்பது மீதிக் கதை. படம் முழுவதும் பிரம்மாண்டம். அதுவும் அந்த மியுசியம் சண்டைக் காட்சி, மறக்கவே முடியாதது. Tom Tykwer இன் முதல் நேரடி ஆங்கிலப் படம். அதுவும் பிரம்மாண்ட பட்ஜெட்.
நான் இதுவரை பார்க்காத இவரது பிற படங்கள்...
Wintersleepers (1997)
The Princess and The Warrior (2000)
Heaven (2002)
(மேலுள்ள மூன்று படங்களின் லிங்க் கிடைத்தால் கொடுத்து உதவவும்)