

பின் போக்கீமான், பவர் ரேஞ்சர்ஸ் என்று அட்டு கார்டூன்கள் வர, அது கருமம் எனக்கு அடுத்து வந்த ஸ்மால் பாய்ஸ்க்கு பிடித்துப் போக எனது பேவரிட்கள் காணாமல் போனது. நானும் கார்டூன் சேனல் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருந்தேன்.


முற்றிலும் சீன தேசத்துப் பின்னணியில், BOOK I - WATER, BOOK II - EARTH, BOOK III - FIRE என்று மூன்று பாகங்களாக NIKELODEON என்னும் அமெரிக்க சேனலில் 2005 முதல் 2008 வரை மூன்று வருடங்கள் ஓடிய AVATAR - THE LAST AIR BENDER ன் முன்கதைச் சுருக்கம் இதுதான்.


நெருப்பு அரசன் ஒஸாயிடமிருந்து (OZAI) உலகைக் காப்பாற்ற 'ஆங்', நிலம், நீர், காற்று, நெருப்பு என்று நான்கு சக்திகளையும் வசப்படுத்தவும், அவதார நிலையை கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக உலகத்தைச் சுற்றி ஆங் மற்றும் கடாரா-சாக்கா கூட்டணி, தலைசிறந்த ஆசிரியர்களை கண்டுபிடித்து, வெற்றி பெறுவது மீதி முழுக் கதை.

AVATAR கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்...
ஆங் (AANG):

கடாரா (KATARA):

சாக்கா (SAKKA):

டப்ஹ் (TOPH):

ஜூக்கோ (PRINCE ZUKKO):

அஜுலா (PRINCESS AZULA):

ஐராஹ் (UNCLE IROH):


இவர்கள் தவிர, அவதாரின் செல்லப் பிராணிகளான ஆப்பா (APPA), மோமோ (MOMO) இரண்டும் முக்கியமான கதாப்பாத்திரங்கள்.
சாதாரணமாக ஒரு பதிவெழுத எனக்கு 2 மணி நேரமாவது ஆகும். ஆனால் இந்தப் பதிவெழுத்த 3 மணி நேரம் ஆகிவிட்டது. இருந்தாலும் பரவில்லை... ரொம்ப நாட்கள் கழித்து நான் ரசித்த கார்டூனிற்கு இது கூட செய்ய வில்லை என்றால் எப்படி....?
பிரச்சனைக்கு வன்முறை தீர்வல்ல. அன்பே கடவுள் என்பதைத் தான் இந்த அவதார் நமக்குச் சொல்கிறார்....
AVATAR - சிறியவர், பெரியவர் பேதமில்லை. கண்டிப்பாகப் பார்க்கவும்.
டவுன்லோட் லிங்க் கீழே:
http://www.mininova.org/search/?search=avatar+the+last+airbender&cat=0