ஆபீஸ் ஸ்பேஸ்...
1:08:00 AMஐ டி துறையினர் மத்தியில் இந்தப் படம் ரொம்பவுமே பிரபலம். நான் வேலை செய்ய ஆரம்பித்த புதிதில் "ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்கிற மாதிரி இருக்கு. அதையும் நூறு தடவை முடிச்சாச்சா, முடிச்சாச்சா ன்னு பல பேர் வந்து கேடுக்கிடே இருக்காங்க. இப்படியே போச்சுன்னா அவ்வளவுதான்.செம கடுப்பா இருக்கு. போர் அடிக்குது" என்று புலம்ப ஆரம்பித்திருந்த சமயம் எனக்கு ரெக்கமண்ட் செய்யப்பட்டு நான் பார்த்த படம் ஆபீஸ் ஸ்பேஸ்.
1991 வருடத்தின் இறுதி. அடுத்து வரப்போகும் 2000 ஆண்டின் தேதிப் பிரச்சனையான Y2K பெரும் தலைவலியாக உருவெடுத்திருந்த நேரம். INITECH என்னும் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் ப்ரோகிராமராக வேலை செய்கிறான் பீட்டர். அவனுக்கும் அவன் அலுவலக நண்பர்களுக்கும் நடப்பவை தான் ஆபீஸ் ஸ்பேஸ் கதை.
பேங்க் சாப்ட்வேர் ஒன்றை Y2K பிரச்சனைக் கேற்ப மாற்றி அமைப்பது பீட்டரின் வேலை. ஆனால் அவன் அதைச் செய்யாமல் சும்மா வெறுமனே கம்ப்யூட்டரை வெறிக்க வெறிக்க பார்த்து கொன்டிருக்கிறான். ரிப்போர்ட் ஒன்றை அனுப்பாததற்கு ஆபீஸ் வந்தவுடன் குறைந்தது 10 பேர் இவனை நேரிலும் போனிலும் விசாரிக்கிறார்கள். 'மெமோ கிடைத்ததா?' என்று வெறுப்பேற்றுகிறார்கள்.
இன்னொருவன் பெயரை யாரும் சரியாக உச்சரிக்காமல் கடுப்பேற்ற, மற்றொருவன் பெயர் அவனுக்குத் துளியும் பிடிக்காத ஒரு பிரபல பாப் பாடகனின் பெயராக இருக்க எல்லோரும் அவனை விடாமல் அந்த பாடகனைத் தொடர்புபடுத்தியே பேச அவனும் வெறுப்பில் இருக்கிறான்.தன் வேலை பொய் பல நாள் ஆனது கூடத் தெரியாமல் சதா புலம்பித் தீர்க்கும் மரம் கழன்றது போன்ற தோற்றமுள்ள இன்னொரு சகா. இது எல்லாவற்றிற்கும் மேலாக பார்த்தவுடனேயே முகத்தில் ஓங்கி குத்திவிடலாமா என்று தோன்றும் அளவிற்கு இரிடேடிங் மேனேஜர்.
போதாதகுறைக்கு இவர்கள் வேலைக்கு உலை வைக்க கம்பெனி 'தி பாப்ஸ்' என்று இருவரை அழைத்து வருகிறது. தி பாப்ஸ் கொடுக்கும் ரிப்போர்ட் வைத்துத்தான் இவர்களது வேலை நிரந்தரம் ஆகும் நிலைமை.
அலுப்பு,விரக்தி, வெறுப்பு என்று பேத்தனமாக திரியும் ஹீரோவிற்கு கலந்தடிக்கும் பிரச்சனையுடன் தன் காதலி தன்னை ஏமாற்றுகிறாளோ என்ற கவலையும் உண்டு. இந்தச் சூழ்நிலையில் காதலன் பப்பரபேன் என்று திரிவதைப் பார்த்து காதலி அவனை ஒரு 'வேலை பளு நீக்க' தெரபிஸ்டிடம் அழைத்துச் செல்கிறாள். தெரபிஸ்ட்டும், பீட்டரின் மன அழுத்தத்தைக் கண்டு, ஹிப்னாடிசம் மூலம் அவனை ஆழ்ந்த அரைநிலை தூக்கத்தில் ஆழ்த்தி மன நிம்மதியை தர முயல்கிறார். அரை மயக்க நிலையில் பீட்டர் கண்மூடத் தொடங்கும் போது, தெரபிஸ்ட் கண்ணை மூடிவிடுகிறார். ஹார்ட் அட்டாக்! தன் முன்னே ஒருவர் செத்து விழுவது கூடத் தெரியாமல் பீட்டர் அரை மயக்க நிலையிலேயே அவரைத் தாண்டிக் கொண்டு வெளியே செல்கிறான். அங்கிருந்து ஆரம்பிக்கிறது தொடர் காமெடி.
கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காதது. செம ஜாலி. 'இந்தப் படத்தில் அப்படி என்ன பெரிசாக இருக்கிறது?' என்று கேட்கிறவர்கள் கண்டிப்பாக ஐ.டி வாசனையில்லாதவர்கள். இந்தப் படம் இன்னும் பேசப்படுவதற்குக் காரணம் இன்றைய ஐ.டி காரன் மனநிலையையும் சேர்த்து அன்றே காட்டியதுதான்.
மந்தரித்து விட்டார் போல் திரியும் ஹீரோ,
பாப் பாடகன் மேலிருக்கும் கோபத்தை பாக்ஸ் மெஷின் மேல் காட்டும் நண்பன்,
சதா சர்வகாலமும் எல்லாத்தையும் கொளுத்திருவேன்னு தனக்குள்ளையே புலம்பித் திரியும் இன்னொருத்தன்,
உன் வேலை மட்டும் இல்ல என் வேலையும் கடுப்புதான்னு வந்து சேரும் ஹீரோயின்,
பதில் பேச விடாமல் 'ய்யா....' என்று கையில் காபி கப்புடன் நீட்டி முழக்கி ஆர்டர் போட்டு விட்டு செல்லும் மேனேஜர்,
'நான் எதையும் கேட்கல' என்று எல்லாவற்றையும் கேட்கும் பக்கத்து வீட்டுக்காரன்.
இப்படி படத்தில் வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கேரக்டரைசேசன் கொடித்திருக்கிறார்கள்.
நம்மைப் பிழியும் கம்பெனியை நாம் பிழிவோம் என்று முடிவெடுக்கும் போதும் அது பெரும் பிரச்சனைக்குள்ளாகும் போது மாட்டிக்கொள்வோமோ என்று பயப்படும் போதும் நண்பர்கள் மூவரும் மூன்று விதமாக தங்கள் மனநிலையைச் சொல்வது அற்புதம்.
ஹீரோ கண்டிப்பாக மாட்டிக் கொள்வான் என்று முடிவு செய்யும் போது கடைசி நிமிடத்தில் வரும் ட்விஸ்ட் கண்டிப்பாக ரசிக்கக் கூடியது.
மொத்தத்தில் ஆபீஸ் ஸ்பேஸ் - டிபிக்கல் ஐ.டி கம்பெனி !!!

0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...