#100நாடுகள்100சினிமா #WW2Cinema #26. BELARUS - FORTRESS OF WAR (Brest Fortress) 2010
8:57:00 AM
Alexander Konstantinovich Kott | Belarus | 2010 | 138 min.
(*** English write-up & Download Link given below ***)
"Operation Barbarossa"
22 ஜீன் 1941 அன்று தொடங்கிய சோவியத் யூனியன் மீதான படையெடுப்பிற்கு ஜெர்மனியின் நாஜிப்படை வைத்த பெயர் (Code Name). தாக்கப்பட்ட
முதல் சோவியத் யூனியன் பிரதேசங்களில் ஒன்று - Belorussia என்ற இன்றைய Republic of Belarus. முதலில் போலாந்து வசமிருந்தது
Belarus. போலாந்து மீது ஜெர்மனி படையெடுக்க, ஜெர்மனி வசமானது. பெயருக்கு
கையெழுத்திடப்பட்ட ஜெர்மன்-சோவியத் ஒப்பந்தப்படி (German-Soviet non-agressoin Pact-1939) ஜெர்மனி சோவியத் யூனியனிற்கு விட்டுக்கொடுப்பது போல் கொடுத்துவிட்டு 1941 இல் மீண்டும்
தாக்குதலுக்குள்ளானது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்ற பிறகு மீண்டும் சோவியத்
யூனியன் கைக்கு வந்தது. அன்றிலிருந்து
1991 வரை Belarus சோவியத் யூனியன் கட்டுப்பாட்டிலேயே இருந்துவந்திருக்கிறது. 25 ஆகஸ்ட் 1991 அன்று சோவியத்
யூனியன் உடைந்த பிறகு தனி நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது Belarus. இந்த Belarus நாட்டின் Brest நகரில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய கோட்டை (Fortress) தான்
இந்தப் படத்தின் கதைக்களன். 19 நூற்றாண்டில் கட்டப்பட்ட சுமார் 1.8 கி.மீ தூரத்திற்கு 4 பிரதான வாசல்களும் 12,000 பேர் தங்கக்கூடிய 500 அறைகளைக் கொண்ட மிகப்பிரம்மாண்ட கோட்டை இந்த Brest Fortress.
படத்திற்கு
வருவோம்.
15 வயது Sasha Akimov பார்வையில் சொல்லப்படுகிறது
படம். 21 ஜீன், 1941. கோட்டையின் இசைப்படையில் ட்ரம்பெட் வாசிப்பவனாக இருக்கிறான் Akimov. இவனது தோழியின்
தந்தை Commander Andrey Kizhevatov. தனது குடும்பத்துடன் கோட்டையில் தங்கிவருகிறார். அமைதியாக இருக்கிறது Brest Fortress. தங்களது குடும்பங்களுடன் அங்கு தங்கியிருக்கும் சோவியத் படை வீரர்கள் அந்த அமைதியான
சனிக்கிழமையை ஆடலும் பாடலும் சினிமாவுமாகக் கொண்டாடிக்கழிக்கிறார்கள். தனது குடும்பத்தை
இங்கு கூட்டி வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் Commander Yefim Fomin, இரண்டு போர்களில்
பங்கேற்ற எந்நேரமும் ஜெர்மனி தாக்கலாம் என்று தீர்க்கமாக நம்பும் Commander Gavrilov ஆகியோரும் அங்கிருக்கும் முக்கிய ஆட்கள். அன்றைய இரவு சோவியத் படை வீரர்களைப் போன்ற உடையணிந்த
நாஜிப்படை வீரர்கள் (Wermacht) ஆயுதங்களுடன் கூட்டம் கூட்டமாக ரயிலில் வந்திறங்குகின்றனர். Brest Fortress இல் திடீர் மின் வெட்டு ஏற்படுகிறது. மறுநாள் காலை சுமார் 3.58 மணியளவில்
பெரும்பான்மை மக்கள் தூங்கிக்கொண்டிருக்கும் நேரம் பார்த்து, யாரும் எதிர்பாராதவிதமாக
வானிலிருந்து குண்டுமழை பொழிகிறது ஜெர்மன்படை. கட்டிடங்கள் வெடித்துச் சிதறுகின்றனர். கொத்துக்கொத்தாக
மக்கள் செத்துவிழுகின்றனர். பிழைத்தவர்கள் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு பதுங்குக்குழிகளை
நோக்கி ஓடுகின்றனர். தனது தோழியுடன் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் Akimov இதைப் பார்க்கிறான். எங்கும் மரண
ஓலம். அன்றைய
தினத்திலிருந்து Brest Fortress வீழ்ந்த 29 ஜீன் 1941 வரை நடக்கும்
சம்பவங்கள் தான் இந்தப் படம்.
படத்தின்
ஒளிப்பதிவும், இசையும், கலை இயக்கமும், நடிகர்களது
பங்களிப்பும் பார்த்து பார்த்து வியக்க வேண்டிய அற்புதம். சண்டைப்படமாக இருந்தாலும் படத்தில் இருக்கும்
காதல், குடும்பம், தேசப்பற்று, நட்பு, வீரம், தியாகம் என்று
அனைத்தும் கலந்த மிகவலுவான திரைக்கதை, ஆக்ஷன் தாண்டி படத்தோடு நம்மை ஒன்றைவைத்து விடுகிறது. Brest கோட்டையை அப்படியே
கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். வெடித்துச் சிதறும் கட்டிடங்கள் அவ்வளவு ஒரிஜினலாக இருக்கிறது. பொதுமக்கள்
பதுங்கியிருக்கும் இடமும், பாலங்களும், ஏரிகளும், ஆயுதங்களும் அவ்வளவு தத்ரூபம்.
வயதான Akimov குரலில், 15 வயதில் அன்றைய
தினம் அவர் கண்ட காட்சிகளை விவரிப்பதாக நீள்கிறது படம். 1.9 கிமீ நீளமுள்ள கோட்டையை மூன்று பகுதிகளாகப் பிரித்து, தங்களது உயிரைக்கொத்துக்
காத்த சோவியத் வீரர்களது உண்மைக்கதை இந்தப் படம். கோட்டையின் ஒரு பிரதான வாசலாக இருக்கும் பாலத்தை
தனது குழுவுடன் காக்கும் Commander
Fomin, பொதுமக்களைக் காப்பாற்றி சிறு குழு அமைத்து மறுபுறம்
ஜெர்மனியர்களைத் தடுத்து நிறுத்தும்
Commander Kizhevatov, தடுப்புச்சுவர்களையும்
வீடுகள் அமைந்துள்ள பகுதிகளை தனது படையுடன் காக்கும் Commander Gavrilov ஆகிய மூவரும்
தான் இந்தப் படத்தின் ஹீரோக்கள். உண்மையில் வாழ்ந்த வீரர்கள். இவர்களை இணைக்கும் பாலமாக கோட்டையைச் சுற்றி
சுற்றி வந்து அங்கு நடப்பவற்றைக்கண்ட சாட்சியாக, கதைசொல்லியாக சிறுவன் Akimov.
போர்
திரைப்படங்கள் எனது பேவரிட். ஒன்றை விடமாட்டேன். நான் சொல்கிறேன் - Steven Spielberg இன் Saving Private Ryan (1998) படத்திற்கு சற்றும் குறையாத, நான் பார்த்த போர் திரைப்படங்களிலேயே One of the BEST என்ற சொல்லக்கூடிய அதியற்புத திரைப்படம் - Fortress of War (2010). படத்தை இயக்கியிருப்பவர் Alexander Kott.
பெரும் பொருட் செலவில் உண்மைச் சம்பவங்களின்
அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த நல்ல படம் உலகளவில் பார்க்கும் போது போதிய கவனம் பெறாமல்
இருப்பதில் ஒரு சினிமா ரசிகனாக எனக்குப் பெரும் வருத்தம். நமது இந்த #100நாடுகள்100சினிமா தொடரில் Belarus ஐயும் ஒரு நாடாக சேர்க்க முக்கியக்காரணம் இந்தப்
படம். இத்தனைக்கும்
இந்தப் படத்தின் தயாரிப்பில் ரஷ்யாவும் பெரும்பங்காற்றியிருக்கிறது. ஆனாலும் அமெரிக்கா, யூ.கே உள்ளிட்ட
எந்த நாட்டிலும் இந்த படம் வெளியாகவில்லை. எந்த திரைப்பட விழாக்களிலும் பங்குபெறவுமில்லை.
இந்தப்
படம் மட்டுமல்ல. உலகளவில்
பல நாடுகளிலிருந்து பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட எத்தனையோ பிரம்மாண்ட போர் திரைப்படங்கள்
அதிக கவனம் பெறாமல் ஒதுங்கி பதுங்கி குவிந்து கிடக்கிறது. அவற்றை எல்லாம் தொகுத்து #100நாடுகள்100சினிமா போல
போர் திரைப்படங்களுக்கென எக்ஸ்க்ளூசிவ் ஆக ஒரு தொடர் எழுத வேண்டும் என்ற ஆர்வம் கட்டுக்கடங்காமல்
பீறிட்டுக்கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான வேலையைத் தொடங்க வேண்டும்.
எனக்குத்
தெரிந்து www.warmovieblog.com என்ற தளத்தில் ஒரு தல உலகில் வெளியாகும் அத்தனை போர் திரைப்படங்களயும்
அறிமுகப்படுத்தி பதிவெழுதி வருகிறார். அந்த மகாணுக்கு ஒரு ராயல் சல்யூட்! மறக்காமல்
இந்தத் தளத்தை ஒரு ரவுண்ட் அடித்துவிடுங்கள்.
சினிமாவில்
மட்டுமே இத்தகைய பிரம்மாண்டங்கள் சாத்தியம். Belarus இன் Fortress of War (2010) படத்தை கண்
இமைக்காமல் இரு முறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு சினிமா ரசிகனும் பார்த்தே தீர வேண்டிய படம்.
அவசியம் பார்த்தே தீர வேண்டிய
Epic War Movie.
பிடித்திருந்தால்
லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)
*****************************************
Operation Barbarossa - Code name for German Nazi's invasion of Soviet
Union began on 22 June 1941 starting from the invasion of Brest City in
Belorussia (now Republic of Belarus). The story follows the incredible bravery
of the people of 'The Brest Fortress' narrated in 15 year old boy's
perspective. Built during the 19th Century Russians, Brest Fortress is 1.8 KM
in length with 4 entries, 500 rooms which can occupy 12,000 soldiers. Belarus
which was initially a part of USSR was taken over by Poland which was again
taken over by the Germans at the beginning of WW2. After the namesake
German-Soviet non-agression pact on 1939, part of Belarus went again to Soviet
Union which was again captured by the Nazis during this June 1941 battle.
15 year old Sasha Akimov is a trumpeter in the Music Bank of the 333rd
Rifle Regiment of the Soviet Red Army. His girlfriend's dad, Commander Andrey
Kizhevatov lives with his family in the fortress. Meanwhile another Commander
Yefim Fomin is trying hard to bring his family to the Fort. Another Senior
Commander Gavrilov who has seen 2 wars already strongly believes the Germans
will attack anytime and the Fort will fall due to Arms shortage and poor
communication with the Capital.
21 June 1941 everything is calm
and the residents of Brest Fortress, the army men and their families are
enjoying the Saturday having fun and watching movies. That night a large group
of German soldiers dressed in Soviet Army uniforms get down in trains and enter
Brest City. 22 June 1941 @ 3.58 AM to everyone's shock and surprise the German
Nazi's artillery attacks the Fortress with full power killing many Soldiers and
Civilians. The German infantry then enters the fort and starts killing
everyone. The families escape to the secret dungeons and the army is gathered
here and there in groups and start fighting defence.
Commander Andrey Kizhevatov rescues a group of civilians and defends
with his men at one end of the Fort. Commander Fomin defends a bridge entry to
the port named Kholm Gate with his soldiers. Commander Gavrilov and his men
defend the Eastern areas on the barracks. 15 year Old Sasha Akimov is the link
between these three groups as he travels from one to another carrying
information and searching for his missing girlfriend in the Caos.
Dir. Alexander Kott |
Directed by Alexander Kott, 'Fortress
of War (2010)' is easily one of the BEST war movies that I have seen so far in
par with Steven Spielberg's Saving Private Ryan (1998). This mega production
from Belarus with Russian help is comparitively a lesser know Epic War movie
which is a shame.
Based on actual events and characters this heroic event of
Russians defending their Fort desereves much more than what it has till date.
Cinematography, Art Direction, Acting, Music, Editing and Everything is top
notch making it a Contemporary Epic.
War movies are my favorites. But sadly many gems from different
countries are lesser known to the World Audience. www.warmovieblog.com is a
wonderful site for fellow-war movie lovers. This guy introduces each and every
war movie that releases in this planet and so this site is a treasure.
Fortress of War is a classic, my all time favorite and a must watch
movie.
Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie
watching :)
0 comments
மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...